Thursday, September 5, 2013

பாபரும் மதுவிலக்கும்!

பாபரும் மதுவிலக்கும்!

ஜவுஹுருத்தின் முகம்மது பாபர் 14.02.1483 - 26.12.1530. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர். அவரது விரிவான வரலாற்றை இந்திய வரலாற்றிலும் முகலாயர் வரலாற்றிலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அவரது மதுவிலக்கு கொள்கை குறித்து அவர்தரும் தகவல்கள் மட்டும் இதோ:

ராணாசங்கா

ராஜபுத்த அரசர் வீரத்தின் இலக்கணம் இராணாசங்காவுடன் 1527 மார்ச் 17 ஆம்
நாள் கான்வாப் போர் நடத்தி வெற்றி கண்டவர் பாபர். அவர் அந்தப் படையெ டுப்பிற்கு செல்லும் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இதோ:

பாபர் ‘சிக்ரி’யில் இருந்தார். தனது பகைவரான இராணாசங்காவின் நிலையை
அறிய 1500 படைவீரர்களை அனுப்பி வைத்தார். அப்படை மிகக் கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டது.படைவீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.படைவீரர்கள் தங்களது கொடிகளையும் இழந்தனர். ராணாசங்கா கான்வாவில் தற்போதைய (பாரத்பூர்) இருந்தார்.பாபரின் நிலை மிக அபாயகரமாக இருந்தது. அவரது படை வீரர்கள் இராஜபுத்திரவீரர்களின் ஆற்றலையும் வீரத்தையும் கண்டு அஞ்சினர்.

இந்த நிலையில் காபூலிலிருந்து வந்த ஜோதிடன் ஒருவர் பாபர் தோல்வியுறு வார் என்று முன்னறிவித்தார்.இதுவும் முகலாயப் படைகளை மேலும் பீதிக்கு உட்படுத்தியது. அப்போது பாபர் செய்தது என்ன?

மது ஒழிப்பு

தமது அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் முன்னிலையில் மது அருந்துவ தைக் கைவிட்டு விடுவதாக எல்லோரும் வியக்கும்படி அறிவித்தும், தமது கையிலிருந்த மதுவைக் கீழே கொட்டியும், தமது விலை உயர்ந்த மதுப்பாத்தி ரங்களை உடைத்தும் பாபர் தனது வீரர்களுக்கு உற்சாக மூட்டினார்.வரலாற்று ஆசிரியர் ஏ.சி.வத்ஸா எழுதுகிறார்:

“It became necessary for Babar to raise their spirits by dramatically renouncing wine, pouring his store of
liquor on the ground and breaking his precious vessels before an assemblage of his officers and troops”.

பாபர் நாமா

வாழ்க்கை போராட்டம்தான்;பன்னிரண்டு வயது முதல் பாபருக்கு அது பெரும் போராட்டம். இந்தியாவில் முகலாயப் பேரரசு ஒன்றை உறுதியாக நிறுவுவதற் காக அவர் நடத்திய போரின்போது அவர் எவ்வாறு நடந்து கொண்டார். அவரே தனது வாழ்க்கைச் சரித்திரமான ‘பாபர் நாமா’வில் சொல்கிறார்:

1527 பிப்ரவரி 25

“குடிப்பது குறித்த வருத்தம் என் மனதில் இருந்து வந்ததை நினைத்துக்கொண் டேன். இந்த முறையற்ற செயலைச் செய்வதால் என் உள்ளத்தில் தொடர்ந்து வருத்தம் சூழ்ந்திருப்பதை எண்ணி நான் சொன்னேன், என் ஆன்மாவே, மனமே இன்னும் எத்தனை நாட்களுக்குப் பாவத்தைச் சுமந்து கொண்டு இருப்பாய்? உணவு,பானக்கட்டுப்பாடு சுவையற்றதல்ல.

சுவைத்துக் கொண்டே இரு, எத்தனை நாளைக்கு நீ பாவத்தால் மாசு படப்போ கிறாய்? இந்த இடர்பாட்டில் எத்தனை நாள் நீ செளகர்யமாக இருந்து விட முடி யும்? எத்தனை நாளைக்கு இன்னும் ஆசை வழியில் அலையப் போகிறாய்? எத்தனை நாள் இன்னும் வாழ்க்கையை வீணாக்கப் போகிறாய்?

நான் இந்த ஒழுக்கத்திலிருந்த மாறுபட்ட செயலைவிட்டு விட்டேன்

மதுவை ஒழித்தேன்; மனதுக்கு ஓய்வு கொடுத்தேன்

மது அருந்தியதிற்கு வருந்தினேன்.பொன், வெள்ளிப்பாத்திரங்கள் மது கோப் பைகள், விருந்துக்கான பொருள்கள் என்று நான் கொண்டு வந்தவற்றை எல் லாம் உடைத்து விட்டேன். ‘மதுவை ஒழித்துவிட்டு என் மனதுக்கு ஓய்வு கொடுத்தேன்’உடைக்கப்பட்ட பொன், வெள்ளிப் பாத்திரங்களை ஏழைகளுக்கு
விநியோகிக்கப்பட்டன.

கைவசமிருந்த மது கீழே ஊற்றப்பட்டது.மதுவை தரையில் ஊற்றிய இடத்தில்
ஒரு படிக்கிணறு தோண்டப்பட்டது.அதைக் கல்லினால் கட்டவும், அதைய டுத்து ஒரு தருமச் செயலுக்கான கட்டடம் கட்டவும் திட்டமிட்டேன் என்று
பாபர் நாமாவில் பாபர் குறிப்பிடுகிறார்.தொடர்ந்து பாபர் எழுதுகிறார்...

‘மது அருந்துவதிலிருந்து விடுபட்டு திருந்த வேண்டும் என்ற இதய வீட்டுக்
கருவூலத்தின் மறைந்திருந்ததை தேடி எடுத்த, முத்தின் உள்ளத்து உழைப் பைச்செயல்படுத்தினேன். என் மகிழ்ச்சி கரமான உத்தரவுக்கு இசைய என் பணி
ஆட்கள் உருவபொம்மைகளை துண்டு துண்டாக உடைத்து எறிவதுபோல்
உடைத்து எறிந்தார்கள் (மதுப் பாட்டில்கள் உடைக்கப்பட்டதை இவ்வாறு எழுது கிறார்)

இந்த மனமாற்ற மகிழ்ச்சியால் விரைவில் உரிய மதிப்புமிக்க பரிசு பெறப்போ கிறார்கள். முழுமையாகப் போதைப்பொருட்களை விட்டொழித்தார்கள்.

பாபரின் ஆணை

இதன் பின்னர் பாபர் ஆணை ஒன்றை பிறப்பித்தார். முழுமையாக, எவரும்
போதையூட்டும் பொருட்களை அருந்துதல், பெறுவதற்கு முயற்சி செய்தல், தயாரித்தல், விற்றல்,வாங்குதல் வைத்திருத்தல், அதை அனுப்பி வைத்தல் ஆகிய பாவங்களைச் செய்யக்கூடாது. நீ வளமாய் வாழ அவற்றை விலக்கு (பாபர் நாமா, தமிழில் ஆர்.பி.சாரதி, பக்கங்கள் 516, 518, 519)

வளமாய் வாழ விலக்கு

மனிதன் வளமாய் வாழ மதுவை விலக்கு என்று பாபர் ஐந்நூறு ஆண்டுகளுக்கு
முன்பே ஆணையிட்டார். அவ்வாறே செயல்பட்டார்.

தமிழினத் தலைவர் வைகோ

தமிழகத்தில் ‘முழு மதுவிலக்கு; அதுவே நமது இலக்கு’ என்று தமிழர் தலைவர்
வைகோ நித்தமும் உழைத்து வருகிறார்; அவரின் தூய எண்ணம் வெல்லட்டும்.

கட்டுரையாளர்:- செ.திவான்

No comments:

Post a Comment