Sunday, September 1, 2013

மாற்று அரசியல் கருத்துக் களம்

இனஎழுச்சி பிறந்த ஈரோட்டில்....

இளைய தலைமுறையினரின்
மாற்று அரசியல் கருத்துக் களம்...!

வாலிபர்கள் துணிவு கொள்ள வேண்டும். எந்தக் காரியமானாலும் சரி, நம் இலட்சியத்திற்கு ஒத்ததா என்று பார்க்க வேண்டும். மாறுபட்டதாயின் அதை எதிர்த்து வேலை செய்தாக வேண்டும்படியான துணிவு உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்று ஈரோட்டிலிருந்து தந்தை பெரியார் குடி அரசு ஏட்டில் 1944-ம் ஆண்டு எழுதுகிறார். மாறுபட்ட முரண்பாடுகள் நம் சமூகத்தில் இருக்குமா யின், அதிலிருந்து நம் மக்களை விடுவித்து நல்ல சமூக மாற்றத்தை உரு வாக் க வாலிபர்கள் போராட வேண்டும் என்பதையே குடி அரசு ஏட்டின் வாயி லாக தட்டி எழுப்பினார் தந்தை பெரியார். அந்த உணர்வு மங்கிட வில்லை.

அரசியலில் மாறுபட்ட சூழல் நிலவும் போது, நமக்கு ஒரு நல்ல மாற்று வேண் டும். அந்த மாற்று ஊழலற்ற,ஆதிக்கத் திமிர் அற்ற, அனைவரையும் சமமாக நடத்துகின்ற நல்ல தலைமையின் கீழ் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற் காக வே மரணம் தழுவும் வரை மூத்தரப் பையுடன் தமிழகத்தின் மூலை, முடுக் கெல்லாம் சென்று சுயமரியாதை பிரச்சாரம்  மேற்கொண்ட நம் அய்யாவின் உள்ளத் துணிவோடு அவரின் தாயகமாம் ஈரோட்டில், 25-ந் தேதி ஞாயிற்றுக்
கிழமை இனஎழுச்சி பிறந்த மண்ணாம் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்
அ.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் இணையதள இளைய தலை முறை யினர் மாற்று அரசியல் கருத்துக் களம் நிகழ்வை சிறப்பாக நடத்தினார் கள்..

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூழ்ந்திருந்த அந்த அரங்கத்தில் நம் தலைவர் கீழ் அமர்ந்திருக்க இணைய தள அணியை ஒருங்கிணைக்கும் இளைஞர்கள் மேடையில் அமர்ந்திருந்து நிகழ்வுகளை நடத்தினார்கள்.இதுவே தற்போதுள்ள அரசியலில் நல்ல மாற்றம் தான். அடி வாழை வளர்வதற்காக, தாய் வாழை தள்ளி நிற்பதைப் போல, நம் தலைவர் இளைய தலைமுறையினரை மேடை யேற்றி அவர்கள் உரையாற்றுவதைக் கேட்டு, கேட்டு புளகாங்கிதம் அடைந் தார்.

முதலில் வந்திருந்த அனைத்து இளைஞர்களும் ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வு நடந்து முடிந்தது. அடுத்து தொடக்க ஆட் டக்காரராக உரையாற்ற வந்தார் திருப்பூர் முத்துகிருட்டிணன்: நம் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்துவதற் காகவே இங்கு கூடியுள்ளோம். இது பல மாற்றங் கள் நிகழ்ந்த பூமி. ஆதலால், நாம் எடுத்து வைக்கும் வாதங்களும், நமது நோக்க மும் நிறைவேறும் எனச்சொல்லி தலைவர் வைகோதான் அரசியலுக்கு உகந்த மாற்று என அவர் எழுதி வைத்திருந்த பக்கங்களை படித்து அனைவரின் கை யொலி பாராட்டையும் வெகுவாகப் பெற்றார்.



ராஜ்மோகன்: தமிழகத்தில் திமுக,அதிமுகவுக்கு மாற்றாக இருக்கும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக மட்டுமே.இந்த இயக்கத்தின் தலைவர் வைகோ ஒருவரால் மட்டுமே இந்த சமூகத்திற்குத் தேவையான மாற்றத்தை நிகழ்த்த முடியும். அந்த அரசியல் மாற்றத்தை அரங்கேற்ற கடுமையாகப் போராடுவோம்.

ஈரோடு பிரபு: இணைய தளத்தை பயன்படுத்துகின்ற நாம் இன்று ஆயி ரக்கணக் கில் கூடியுள்ளோம். நாம் புரிந்து கொண்ட மாற்று அரசியல் புரிதலை
இனி நம்மிடம் விவாதிப்பதைத் தவிர்த்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

இரவிச்சந்திரன்: திமுக, அதிமுக என நம்மை ஆண்ட கட்சிகள் மாண்டு போ னது. என் இளைய மகள் கேட்டாள், அப்பா நீங்கள் அரசியலுக்கு செலவு செய் வதற்குச் சமமாக எனக்கு புது செல் போன், தங்கச் செயின் இவையெல்லாம்
வாங்கித் தரவேண்டும் என்றாள்.

அப்போது என் மகன் சொன்னான். அப்பா அரசியலுக்குப் போகாம நம் வேலை யை மட்டும் பார்த்தால் நம் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால், அவர் பய ணிக்கும் அரசியல் தலைவர் வைகோ ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள 7.5 கோடி மக்களும் நன்றாக இருப்பார்கள் என்றான். இப்படி நம் வீடுகளில்
உள்ளவர்களை நம் கருத்துக்கு ஆதரவாகப் பேசும்படியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். தனக்காக ஜெயலலிதாவும், கருணாநிதியும் வாழ்ந்து கொண்டிருக் கும்போது எனக்காகவும், என் சமூகத்திற்காகவும் வாழும் வைகோ ஒருவரே நல்ல மாற்று.அந்த மாற்றத்தை உருவாக்குவோம்.

வேணுகோபால்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலே, துனிசியாவிலே புரட்சி நடந்தது மல்லிகைப் புரட்சி. நாமும் ஒரு புரட்சியில் ஈடுபடப் போகி றோம். மதிமுக இருபது ஆண்டுகள் கடந்து இன்று மொட்டாக உள்ளது. அந்த மொட்டை இளைஞர்களாகிய நாம் மலரச் செய்ய வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயிரம் நாட்கள் இருக்கிறது. இங்கு ஐநூறுக்கும் அதிகமான இளைஞர்கள் இருக்கின்றோம்.

நாம் அய்யா வைகோவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண் டும்.தொடர்ந்து இந்தப் பணியைச் செய்வதன் மூலம் அய்யா வைகோ அவர் களை 2016-ல் முதல்வராக ஆக்க முடியும்.கையை உயர்த்துங்கள் வைகோ
முதல்வராக ஆக்கப் போராடுவோம் என்று. (கூட்டத்தில் இருந்த அனைவரும் கையை உயர்த்தி ஆரவாரம் செய்தனர்) ஒரு கனவு கண்டேன் வைகோ முதல் வராக ஆகின்றார், ஆனபின்பு அவர் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடு கின்ற முதல் உத்தரவுக்கு கையெழுத்து போடு கின்றார். இரண்டாவது கையெ ழுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுகின்ற உத்தரவு, மூன்றாவது கையெ ழுத்து கூடங்குளம் அணு உலையை மூடுகின்ற இந்த மூன்று கையெழுத்துக் களையும் அவர் போடுவதாக கனவு கண்டேன். அது கனவல்ல, நிஜமாகும் காலம் 2016.அதை நோக்கி பயணிப்போம்.

திலீபன்: இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க
வேண்டும். இந்தியா அதற்கான பணிகளை உடனடியாகச் செய்ய வேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை தமிழீழப் பிரச்னையில் மாறாத கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருபவர் வைகோதான். இவர் ஒருவர் மட்டுமே எம்மையும், எம் சமூகத்தையும் ஆளத் தகுதி படைத்தவர்.வைகோவை வெற்றி பெறச் செய்வோம், வசந்த வாசல் கதவைத் திறப்போம்.

கரூர் செந்தில்குமார்: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும், அதுபோல
வைகோ இயக்கத்து பிள்ளைகளும் பேசுவார்கள். தமிழின் ஆளுமை என்ற
தலைப்பில் கல்லூரியில் பேசப் போனேன். அப்போது எனக்கு தெரிந்த ஆளு மையான வைகோவின் பேச்சுகளே பெரிதும் பயன்பட்டன. இரண்டு தலை முறைகளையும் ஈர்க்கும் வைகோவின் ஆற்றல் பலம். நமது பலவீனம் என்ன வென்றால் அமைப்பு ரீதியாக நாம் பலப்பட முடியாததுதான். 

நாம் நமது இயக் கத்தை வளர்க்க வேண்டுமென்றால் வட்டச் செயலாளர், பகு திச் செயலாளர் களோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனை பேர் நாம் மதிமுகவில் உறுப்பினர்களாக இருக்கின்றோம், முதலில் உறுப்பினரா வோம் - நம்மில் பலரையும் உறுப்பினர்களாக்குவோம். எங்களுக்கு இயக்கம் தொடர்பான பயிற்சிப் பாசறை நடத்தி திராவிட இயக்க வரலாற்றை கற்றுத் தரவேண்டும். பெண்களை நமது இயக்கத்தின் பால் ஈர்க்கின்ற நடவடிக்கை யில் நாம் இறங்க வேண்டும்.

வால்டர் வில்லியம்ஸ்: இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றவர்களின்
முதல்வர் வைகோதான். கொடியவன் ராஜபக்சேவை எதிர்த்து சாஞ்சியில்
போராடி வெற்றி பெற்றவர் வைகோ.ஆண்ட கட்சி, ஆளுங்கட்சி தலைவர்கள்
முன்னால் நான் பேச இயலாது. ஆனால், மறுமலர்ச்சி திமுகவில் இருப்பதால்
எளியவனான நான் பேச முடிகின்றது.இந்த மாற்றம் அறிவாசான் பெரியாரிட
மிருந்து வந்தது. மாற்று அரசியலுக்கு அடையாளம் வைகோதான். மாற்றத்தை
உருவாக்குவோம்.

சிவஞானம்: கேடுகெட்ட அரசியலுக்கு மாற்றாக அரசியலை மாற்றுவதே மாற்றும் அரசியல். இந்த மாற்றத்தை மாற்றிக் காட்டுபவர் வைகோதான். வட் டக்கழக மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகளோடு சேர்ந்து இந்த இயக்கத்தை வளர்த்தெடுப்போம்.இயற்கை வளங்கள் அற்றுப்போய் நம் நிலங்கள் வறண்டு போகின்றது. அதை மாற்றும் சக்தி வைகோவிடம்தான் உள்ளது. நம்மால் முடி யும், நம்மால் முடியாவிட்டால் வேறு எவரால் முடியும் என்று நமது கொள்கை விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம் குறிப்பிடுவதைப் போல நாம் மாற் றத்தை நிலைநாட்டுவோம்.

நாமக்கல் சங்கர்: சாதி வெறியைத் தூண்டும் கேவலமான அரசியல் தலைவர் களுக்கு மாற்றாக ஒரு அரசியல் தலைவர் தேவை. குடும்ப ஆட்சியை வளர்த் து வரும் கருணாநிதி, ஆடம்பரம்,அதிகாரத் திமிர் பிடித்த ஜெயலலிதாவிற்கு மாற்றாக வைகோ வரவேண்டும். அப்போதுதான் மாற்று அரசியல் மலரும். பெரியாருக்கு அடுத்த தலைவர் வைகோ.ஒத்தக்கருத்துள்ள தமிழ் இன அமைப் புகளுடன் சேர்ந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

தோகா நாட்டிலிருந்து இணையதளம் மூலமாக பேசிய ஹரி மணிகண்டன்:
மாற்று என்ற சொல்லுக்கு மறுமலர்ச்சி என்று போட்டுப் பாருங்கள், பொருத்த மாக இருக்கும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தொடர்ந்து போராடிய இயக்கம் மதிமுக. இன்றைய தன்முனைப்பு அரசியல்வாதிகளின் மத்தியின் தன்னலம் சிறிதும் இல்லாத தலைவராக வைகோ ஒருவரே நம்மிடம் உள் ளார். தன்முனைப்பு அரசியலுக்கு மாற்றாக மதிமுக சிந்திக்கும். மறுமலர்ச்சி
என்பதே மாற்றத்தின் அடையாளம். இந்த மாற்றத்தை உருவாக்கப் பாடுபடும் இணையதள நண்பர்களின் பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்.

கரூர் பாரி: இலக்கியக் குழுக்கள்,மாணவர் நண்பர்களை ஒன்றிணைக்க வேண்டும். மாவட்ட அளவில் நாம் ஒருங்கிணைந்து, மதிமுக நிர்வாகிகளோ டு சேர்ந்து பணியாற்றுவோம். நம் சக்திக்கு ஏற்ற வகையில் உழைப்போம்.
மாற்று அரசியல் தலைவராக வைகோவை கொண்டு வருவோம்.

ஈரோடு சதீஸ்: மாற்று அரசியல் மலர வேண்டிய நல்ல தருணம் வருகின்றது.
அதை வைகோ நிச்சயம் வென்றெடுப்பார். மாற்று அரசியலை மக்கள் மனங் களில் விதைத்திடப் பாடுபடுவோம்.

திருநெல்வேலி கார்த்திகேயன்: போராடு கின்ற தலைவர் வைகோ.இவரின்
போராட்டங்கள் அண்மைக் காலமாக வெற்றி பெற்று வருகின்றது. நம்மு டை ய ஒவ்வொருவரின் போராட்டமும் ஒன்றுதான். அது வைகோவை நல்ல
மாற்று அரசியல் தலைவராக அதிகாரத்திற்கு கொண்டு வருவதுதான். அந்தப் போராட்டத்திலும் நாம் வெற்றி பெறுவோம்.

ஈரோடு கவின்: பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசியலுக்கு விட மறுக்கிறார்கள். தைரியமாக பெற்றோர் களிடம் சொல்லுங்கள் போதைப் பழக் கத்திற்கு அகப்படாத ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து போராடுகிறோம் என்று, அந்தத் தகுதி நம்மிடமும், நமது இயக்கத்திற்கும் மட்டுமே உண்டு. இன்னும் தைரியமாகச் சொல்லுங்கள் தன்மான அரசியலை வென்றெடுக்கும் தகுதி யான, நேர்மையான ஒரு நல்ல அரசியல் தலைவரின் பின்னால் இருந்து
செயல்படுகின்றோம் என்று. அப்படிச் சொல்லும் போது நமது பெற்றோரும் நம்
வழியைத் தொடர்வார்கள். நம்மில் பலரும் தடையின்றி நல்ல அரசியல் நோக்கி வரவேண்டும். அப்போதுதான் நம் சமூகத்திற்கு விடிவு.

சாத்தூர் பாலகிருஷ்ணன்: மற்றவர்களை பழி சொல்லாமல், வழி சொல்லும்
அரசியல் தலைவர் அண்ணன் வைகோ. சட்டப் போராட்டத்தில் தாமே வழக் காடி போராடும் தலைவர் அண்ணன் வைகோ. விமர்சனங்கள் வேண்டாம்,
மற்றவர்களை வசைபாட வேண்டாம். இளைஞர்களுக்கு நிச்சயம் சட்ட அறிவு
வேண்டும். மாணவர்களுக்கு சட்டத்தைக் கற்றுக் கொடுத்து அடித்தட்டு மக்க ளின் உரிமைக்காகப் போராட வேண்டும். அண்ணன் வைகோ இன்று நம்பிக் கையாக எங்களுக்குத் தெரிகின்றார்.

சென்னை வைகோ கார்த்திக்: நமது இமயம்தொலைக்காட்சியில் ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமை தோறும் மறுமலர்ச்சி நேரம் ஒளிபரப்பப்படுகிறது. நாடாளு மன்றத் தேர்தல் வரும்போது இன்னும் அதிகமாக ஒளிபரப்ப வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு காங்கிரஸ் காரன் கூட வெற்றி பெறக் கூடாது. வைகோ, நான் முதல்வராக விரும்பவில்லை என்கிறார், நாங்கள் விரும்பு கிறோம் நீங்கள் முதல்வராக வேண்டும் என்று.

நாமக்கல் நவீன்: இராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்பு, விடுதலைப் புலி களையும், பிரபாகரனையும் பற்றி வைகோவைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் பேச முன்வரவில்லை. பிரபாகரனுக்கு நிகராக போராடும் வைகோ பின்னால் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகின்றோம்.

மணவை தமிழ்மாணிக்கம்: விதையில் மாற்று, கதையில் மாற்று, நடையில்
மாற்று, நாம் அணியும் உடையில் மாற்று,உணவில் மாற்று, நம் கனவில் மாற் று, கற்பனையில் மாற்று, ஒப்பனையில் மாற்று என அனைத்திலும் மாற்று
காணும் இந்த சமுதாயம் ஏன்?அரசியலில் மாற்றம் கொண்டு வர தயங்குகிறது. மிகப்பெரிய மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யர் சொல்லுகிறார் என்னு டைய தேர்வு தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், கருணாநிதியும் அல்ல.சிறந்த நாடாளுமன்ற அனுபவங்களைப் பெற்ற வைகோதான் என்று. ஆம், தோழர்களே கருணாநிதிக்கு உகந்த மாற்று ஜெயலலிதா. ஜெயலலிதா விற்கு சிறந்த மாற்று கருணாநிதி. இவர்கள் இருவருக்கும் ஒரே மாற்று வைகோ தான்.அவர் வெல்லும் பாதை, தமிழர்கள் செல்லும் பாதையாகும்.

கோவை சட்டக்கல்லூரி மாணவர் சதாசிவம்: தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக மறுமலர்ச்சி திமுக மட்டுமே வளரமுடியும். மாற்று அரசியலுக்குத் தகுதியான தலைவர் வைகோ மட்டுமே. எங்கள் இலட்சியத்தில் இருந்து மாற மாட்டோம்.வைகோவை தமிழக முதல்வராக ஆக்காமல் ஓயமாட்டோம். இன்று நாங்கள் போராடுவதற்கு தைரியத்தை அளித்தத் தலைவர் வைகோ தான்.அந்தத் தலைவரை விட்டால் எங்கள் தலைமுறைக்கு வேறு நல்ல தலை வர் இல்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத தலைவர்
வைகோவின் தலைமையில் அணி திரள்வோம். மாற்று அரசியலைத் தீர்மா னிக்கும் காலம் நெருங்கிவிட்டது.உங்கள் குடும்பத்திலிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்.

திருச்சி ஈ.வெ.ரா.கல்லூரி மாணவர் சுடலைமுத்து: மாணவர்களின் போராட் டங்களில் அரசியல் கூடாது என்றவர் வைகோ. தமிழ் ஈழத்திற்கு பொதுவாக் கெடுப்பு வேண்டும் என்றவரும் வைகோதான். எங்கள் போராட்டத்தை ஆத ரித்து பல அரசியல் கட்சிகள் வந்தன. ஆனால், தொடர்ந்து எங்களோடு மறு மலர்ச்சி திமுக மட்டுமே பயணித்து வருகிறது. அந்த நன்றிக் கடனுக்காக மதிமுகவை மாற்று சக்தியாக வளர்த்தெடுப்போம். மதிமுக தலைவர் வைகோ வின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வகையில் மாணவர் சமுதாயம் கள மாடுவோம்.

குவைத் ஐயப்பன் காந்தி (இணையதள காணொளிக் காட்சி வாயிலாக): மற்ற
அரசியல் தலைவர்களைக் காட்டிலும் மாறுபட்டு குன்றின் மீது இட்ட விளக் காக இருப்பவர் வைகோ. ஏன்? எப்படி? மாற்று அரசியல் மலரும். இணைய தளங்களின் மூலம் நமது கருத்துக்களை, வைகோவின் இலட்சியங்களை முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இனி வரும் காலத்தில் சட்ட மன் றத் தேர்தலில் குற்றப் பின்னணி இல்லாத, நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை கொண்ட மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோவை, அவரது சகாக் களை வெற்றிபெறச் செய்வோம். அதற்கு எல்லா வகையிலும் இணையதள
இளைஞர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

சேலம் மணிகண்டன்: மாற்று அரசியல் வேண்டும் என்கிறீர்கள், மாற்று அர சியல் வந்தாச்சு, அதற்கான அங்கீகாரம் மட்டுமே கிடைக்கவில்லை.கூடங் குளம் வேண்டும் என்கிறார்கள். ஆனால், அது ஆபத்தானது வேண்டாம் என் பதுதான் மாற்று அரசியல். இன்றைய இளைஞர்கள் டாஸ்மாக் மதுபானக்
கடையில் கிடப்பதை எண்ணி வருத்தப் படுகிற தலைவரின் செயல்பாடுதான்
மாற்று அரசியல்.

இன்றைக்கு உள்ள அரசியல் தலைவர்கள் 60வது பிறந்த நாள், 70வது பிறந்த நாள், 90வது பிறந்த நாள் என கொண்டாடுகிறபோது, தன் பிறந்த நாள் கொண் டாட்டத்தை தவிர்க்கும் ஒருவரின் உன்னதமான அரசியல்தான் மாற்று அரசி யல். அந்த மாற்று அரசியலை வென்றெடுப்போம். அதற்கான அங்கீகாரத்தை
வைகோவிடம் பெற்றுத் தருவோம்.

தி.மு.இராசேந்திரன் (மாணவர் அணி செயலாளர்): இணைய தள மின்னஞ்சல்
சேவையை தமிழில் உருவாவதற்கு உயிரூட்டிய விருதுநகர் மாவட்டத்தைச்
சேர்ந்த சாதனையாளர் சிவ.அய்யாத்துரை ஒரு கல்லூரியிலே வேதனை யோடு பேசினார். 

இன்றைக்கு இளைஞர்கள், மாணவர்கள் திரைப்பட நடிகர்களின் படத்தை வைத்துக் கொண்டு திரிகின்றார்கள் என்றார். இல்லை ஈரோட்டில் என் மாண வத் தம்பிமார்கள் இந்த ஞாயிற்றுக் கிழமை பொழுதுகளிலும் மாற்று அரசியல் வேண்டும் என்று வைகோவை நெஞ்சில் சுமந்து வந்து இருக் கின்றார்கள். நமது அரசியல் குடும்ப அரசியல், தான்தோன்றித் தனமான அரசி யல், மத அர சியல், சாதி அரசியல், ஊழல் அரசியல் என வேறுபட்டிருக்கிறது. இந்த ஐந்திற் கும் மாற்றாக, ஒரு மாறுபட்ட அரசியலை உருவாக்கும் உன்னதமான தலை வர் வைகோ ஒருவரே. அவர் மாறுபட்டவர் மட்டுமல்ல, ஆறாவதாக அவரு டைய ஒரு குணம் உண்டு. அது இலட்சிய தாகம்.அந்த இலட்சிய தாகம் கொண் ட வரை அரசியலில், அதிகாரத்தில் அடையாளம் காட்டுவோம்.

சென்னை சீனிவாசன்: மதிமுகவின் பொதுச்செயலாளர் திமுகவின் நாடாளு
மன்ற உறுப்பினராக பணியாற்றிய போது இந்தியாவையே திரும்பிப் பார்க்கச்
செய்தவர் வைகோ. அவர் கடந்த ஆண்டு நடத்திய மிக முக்கியமான போராட் டம் சாஞ்சிப் போராட்டம்.அந்தப் போராட்டத்தில் ஈடுபட வில்லையே என்ற ஏக்கம் எனக்கு ஏற்பட்டது. நமக்கு மீடியா பலம் இல்லை.

தமிழகத்தில் சாகும்போது சட்டை பாக்கெட்டில் 120 ரூபாய் வைத்து மறைந்த வர் காமராசர். அமைச்சராக இருந்தபோதும் பேருந்தில் பயணித்தவர் கக்கன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் குடிசை வீட்டில் வாழ்ந்தவர் ஜீவா. அவர்களுக்குப் பின்பு இந்திய அரசியலில் எளிமையாக வாழும் தலைவர் மதி முக பொதுச்செயலாளர் வைகோ மட்டுமே. அரசியல் ஒரு சாக்கடை என்ற மனோபாவம் மறைந்து நல்ல அரசியலை, அதுவும் மாற்று அரசியலை வைகோவின் தலைமையில் மலரச்செய்வோம்.

ஈரோடு சமற்பா குமரன்: இடையிடையே கனியிடை ஏறிய சுளையும் என்ற
பாவேந்தரின் பாடலையும், வருவான் தம்பி பிரபாகரன் போன்ற தமிழ் ஈழப்
பாடல்களைப் பாடி அனைவரையும் பரவசப் படுத்தினார். இசைக் கருவிகள்
ஏதுமின்றி இலட்சியத் தாகத்தோடு சமற்பா பாடிய பாடல்கள் நம் உணர்வை
உசுப்பியது.

பாரிமைந்தன் (தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு): மக்கள் சார்ந்த பிரச்னை யில் மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்படுகின்றது. காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், வைகோ முதல்வராக வர வேண்டும் என்கிறார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மாற்று அரசியலை வைகோ வின் தலைமையில் முன்னெடுக்க வேண்டும் என்கிறார்.

இலட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள் வைகோ முதல்வராக
வேண்டும் என்று. 2016-ஐ பொறுத்த வரை மறுமலர்ச்சி திமுக மாற்று அரசிய லை முன்னெடுக்கும் ஆண்டு.இணையதளத்தில் மட்டுமே மாற்று அரசியலை மலரச்செய்ய முடியாது.மக்கள் வாழும் களத்திற்கு மாற்று அரசியலைக் கொண்டு சேர்ப்போம்.அதிமுக, திமுகவை எதிர்த்து நாம் களம் அமைக்க மிகப் பெரிய கட்டமைப்பு தேவை. அந்தக் கட்டமைப்பைப் பலப்படுத்துவோம், வைகோவை மாற்று அரசியல் தலைவராக உருவெடுக்கச் செய்வோம்.

மும்பையிலிருந்து ஆனந்தராஜ் (காணொளிக் காட்சி வாயிலாக): மாற்று
அரசியல் மலர வேண்டும் என்று இணையதளத்தில் இருப்பவர்களில் பெரும் பாலோனோர் விரும்புகின்றனர்.மக்கள் மன்றத்திலும் அந்த மாற்றத்தை விதைத்திட நாம் ஒவ்வொருவரும் களமாடுவோம்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பிரபாகரன்: புது வாக்காளர்களை நமது இயக் கத்தில் சேர்க்க வேண்டும். அவர்களிடம் நமது கொள்கை - செயல்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.வைகோவை மாற்று அரசியல் தலைவராக்கப் பாடுபடு வோம்.

திருநெல்வேலி ரவிசங்கர்: எந்த ஒரு பிரச்னையிலும் முன்னின்று போராடு
கிறவர் வைகோ. சக மனிதர்களின் சுக - துக்கங்களில் பங்கேற்பவர் அவரே.
மாற்று அரசியலின் விடிவெள்ளி வைகோதான். மாற்றி, மாற்றி திமுக -அதி முகவை தேர்ந்தெடுப்பதால் நமக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஓட் டுச் சீட்டு என்கிற பெரிய அதிகாரம் நம்மிடம் உள்ளது. அந்த அதிகாரத்தை நல் லவர்களை அடையாளப்படுத்த முன்வரவேண்டும். ஜனநாயகத்தைக் காப்ப தற்கு நல்ல அரசியல் மாற்று வைகோ ஒருவரே. நல்ல மாற்றத்தை அவரால் மட்டுமே தரமுடியும். ஆகவே, மாற்று அரசியலை மக்கள் மனங்களில் விதைப் போம்.

கொள்கைவிளக்க அணிச்செயலாளர் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம்: திருப்ப ரங்குன்றத்தில் மாற்று அரசியலை முன்மொழிந்த இணையதள இளைஞர்கள், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் அதே மாற்று அரசியலை வழி மொழிந்துள் ளனர். காலம் ஒரு நாள் நம் தலைவரை ஆட்சி பீடத்தில் அமரச் செய்யும். அதற் கான கால்கோள் விழாவை செய்யும் இணையதள இளைஞர்களின் சேவை வர லாற்றில் பதியம் போடும்.

மாநில இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன்: திமுக,அதிமுக விற்குள் நுழைபவர்கள் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் நுழை கின்றனர். ஆனால், இன்று காலையில் இருந்து உரையாற்றுபவர்களின் பேச்சு எதை உணர்த்துகின்றது என்றால் அது நல்ல நோக்கத்திற்காக கூடிய கூட்டமாகவே உணர்த்துகின்றது.

தமிழ்நாட்டின் அசைக்க முடியாத அடித்தளத்தை திராவிட இயக்கம் அமைத்
துள்ளது. இந்த மண்ணிலே பிறந்த தந்தை பெரியார் மக்கள் மனங்களில் மாற் றத்தை விதைத்தார்.இயற்கை வாழ்வாதாரங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக காலையிலே பேசிய இளைஞர்கள் ஆதங்கத்தோடு குறிப்பிட்டனர். நதிகள் இணைப்புக்காக தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தலை வர் வைகோ.மாற்று அரசியலை நாம் எப்படி முன்னெடுப்பது? மக்கள் மனங் களில் மாற்று சிந்தனை இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அதை ஒருமுகப்
படுத்த வேண்டும். அப்போதுதான் மாற்று அரசியல் தமிழகத்தில் சூல் கொள் ளும். ராஜஸ்தான் மாநிலத்தில் தன்னந்தனி பெண்மணியாக நின்று அருணா ராய் தகவல் உரிமை பெறும் சட்டத்தை பெற்றுத் தந்தார். இந்தியா முழுவதும் அந்த சட்டத்தை பயன்படுத்த அவரால் உருவாக்க முடிந்தது என்றால், தொடர்ந்து தமிழின மேன்மைக்காகப் போராடிய வைகோவால் ஏன்? மாற்று அரசியலைக் கொண்டு வரமுடியாது. வைகோவால் மட்டுமே மாற்று அரசி யலை நிலைப்படுத்த முடியும்.

அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா: ஒரு அரசி யல் இயக்கம் நினைத்தால் மட்டுமே மாற்று அரசியலைக் கொண்டு வரமுடி யாது.பொதுமக்களும் - அந்த அரசியல் கட்சியும் இணைந்தால் மட்டுமே மாற்று அரசியல் சாத்தியம். தலைவர் வைகோ மாதிரி பேசுவதில் காட்டுகிற ஆசையை, அக்கறையை அவரைப் போல இயக்கத்திற்காக உழைக்கக் கற்றுக்
கொள்ள வேண்டும். மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே மது விலக்கு நடைபயணம் போனார்.தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களை நேரடி யாகச் சென்று சந்தித்த தலைவர் வைகோ ஒருவரே.

வெறும் பேச்சால் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. நமது செயலால் மட் டுமே அந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். கத்தி நல்லவர் கையில் இருந் தால் நல்லதைச் செய்ய முடியும், தீயவர் கையில் இருந்தால் தீதை மட்டுமே அறுவடை செய்ய முடியும்.ஆகவே, நல்லவர் வைகோ கையில் மாற்று அரசி யலை ஒப்படைக்க வேண்டும். நாளைய சமூகப் புரட்சியாக மாற்று அரசியல் மாறும். 

அரசியல் ஆய்வுமையச் செயலாளர் மு.செந்திலதிபன்: 1981-ம்ஆண்டு ஜீலைத் திங்களில் கடலூர் மாநாட்டில் தலைவர் வைகோவைப் பார்த்து கைகுலுக்கிய காலம் தொட்டு இன்று வரை அவரை மட்டுமே நான் தலைவராக ஏற்றுக் கொண்டவன்.தலைமுறைகளைக் கடந்த தலைவர் வைகோ என்பதை இளை ய தலைமுறை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இது போன்ற சிந்தனைத் தெளிவு மிக்க இளைஞர்கள் கூட்டம் வேறு அரசியல் இயக்கத்தில் இருக்க முடியாது. நாம் மாற்று அரசியல் என்கிறோம். அதை பகத்சிங் புரட்சி என்கிறான். உடனடி யாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தீர்வு.

எந்த ஒரு புரட்சிகர கட்சிக்கும் ஒரு தெளிவான கொள்கைத் திட்டம் இருத்தல் வேண்டும்.ஒரு செயல் திட்டத்தை வகுப்பதற்கு ஒருவர் மூன்று முறைகளைக் கையாள வேண்டும்.ஒன்று இலக்கு, மற்றொன்று எங்கிருந்து தொடங்க வேண் டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை எப்படி செயல்படுத்த முடியும் என்ற மூன்றையும் கடைபிடித்தால் வைகோவைத் தவிர வேறு எந்தக்கொம்ப னாலும் மாற்று அரசியலைக் கொண்டு வரமுடியாது. கட் அவுட் கலாச்சாரத் தை, காலில் விழுவதை மாற்றிய தலைவர் வைகோ. சிலருக்கு முதல மைச் சராக இருந்தால் மட்டுமே மக்களிடம் இடம் உண்டு. ஆனால், வைகோ ஒருவ ரே தமிழ் மக்கள் மனதில் மாறாத நிரந்தரமான இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

2004-ம் ஆண்டு கர்பியன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களின் அபயக் குரலைக் கேட்டு அந்த 153 தமிழர்களையும் அமெரிக்காவில் இருந்த பிரதமரி டம் பேசி காப்பாற்றிய தலைவர் வைகோதான் மாற்று அரசியல் மகுடம் தரிக்க முடியும். நிச்சயம் அவர் 2016-ல் முதல்வராக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்வார். வாருங்கள் இணையதள நண்பர்களே கரம் கோப்போம், தமிழ்நாட்டு அரசியலை வென்றெடுப்போம்.

அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி: திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின்
செயல்பாடுகள் மக்களிடம் திருப்தி கரமாக இல்லை. பேச்சாற்றல்,நினை வாற் றல், தனிநபர் ஒழுக்கம் இவையனைத்தும் பெற்ற வைகோ ஒருவரே மாற்று அரசியலின் அடையாளம். அவரை மாற்று அரசியலின் தலைவராக முன்னெ டுப்போம். அதில் வெற்றி பெறுவோம்.

அந்தியூர் தமிழ்ச்செல்வன் (நன்றியுரை):நிகழ்ச்சிகள் முழுவதையும் தொகுத் து வழங்கும் வாய்ப்பை தலைவர் வைகோவின் முன்னிலையில் நான் பெற்ற தில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். நிச்சயம் மாற்று அரசியல் மலரும். நமது மனஓட்டத்தை மக்களின் மனஓட்டமாக மாற்றும் வரை நாம் ஓய்வதில்லை. உறங்குவதில்லை.வெல்வோம். தலைவர் வைகோ உள்படவருகை தந்த அனைவருக்கும் நன்றி.

நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி (தலைமை உரை): அரசியல் மாற்றம் என்பது எது? அன்புச் சகோதரி ரொஹையா குறிப்பிட்டதைப் போல மக்களிடத்தில் இருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும். இணையதள நண் பர்கள் - இளைஞர்கள் நன்றாக பேசி இருக்கிறீர்கள். இது போன்ற கூட்டத்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது.திண்ணைப் பேச்சின் மூல மும், சாமானியர்களிடத்தில் நீங்கள் இந்தக் கருத்தை கொண்டு செல்வதன்
மூலம்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக இந்தக் கருத்துக்களம் அமையும். மாற்று
அரசியலை முன்னெடுப்போம். உங்கள் முயற்சி வெல்லட்டும்.

நிறைவாக தலைவர் வைகோ பேசும் போது, உரையாற்ற என்னை அழைத்த
போது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள்.அது பொருத்தம்தான்.என் னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த
நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட் டிய வரலாறு நமக்குள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத் தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும்.அப்படி நீதியை நிலை நாட்டிய மற்றொரு வழக்கு ஒருவன் பெயர் மாணிக்கம், மற்றொருவன் பெயர் முத்து. முத்துவின் நிலத்தை மாணிக்கம் வாங்கினான்.அவன் உழுகின்றபோது அந்த நிலத்தில் விலை உயர்ந்த தங்கப் புதையல் இருந்தது.உடனடியாக முத்து விடம் சென்று நான் உன்னிடம் நிலத்திற்கான தொகையை மட்டுமே செலுத்தி னேன்.ஆனால், அதில் உள்ள புதையல் உனக்குத்தான் என்றான். அதற்கு முத்து, எப்போது உன்னிடம் என் நிலத்தை விற்றேனோ அப்போதிலிருந்து அது உன் உடைமை ஆகவே, புதையல் உனக்கே சொந்தம் என்றான். இந்த வினோத மான வழக்கு வயதால் இளையவனான கரிகால் சோழனிடம் வருகிறது.மன்ன வனோ வயது முதிர்ந்த மாற்று வேடத்தில் வந்து நியாயவான்களான இருவ ரின் வாதத்தையும் ஏற்று, உங்களில் இருவருக்கும் மணமாகும் வயதில் பிள் ளைகள் இருக்கிறார்களா எனக்கேட்டு முத்துவின் மகளை,மாணிக்கத்தின் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களிடம் இந்தப் புதையலை கொடுத்து விடுங்கள் என்றான் கரிகாலன்.

ஆகவே, என்னை கரிகாலனுக்கு ஒப்பாகக் கூறவில்லை. இளையவர் களாம் இணையதள நண்பர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் மாற்றத்தை எவரும் எளிதில் நகைத்துவிட முடியாது.இளையவர்களாகிய நீங்கள் கரிகாலனைப் போன்று ஒரு மாற்றத்தை விதைக்க முற்பட்டிருக்கிறீர்கள். மாற்றம் தான் மாற்று அரசி யல். அனைத்துத் துறைகளிலும் மாற்றம் வளர வேண்டும்.இருபது ஆண்டு களுக்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நான் தூக்கி எறியப் பட்டபோது திராவிட இயக்கத்தில், அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ப தற்காகவே மறுமலர்ச்சி திமுக என இயக்கத்திற்கு பெயர் சூட்டினோம். மறு மலர்ச்சி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் ஞானத்தை கற்றுத் தந்த அறிவாசான் பெரியார் பிறந்த மண்ணில் கருத்துக் களம் நடைபெறுகிறது.

கைதட்டல்கள் எழவில்லை என்று சகோதரி ரொஹையா பேசினார். பின்னர்
செவிப்பறை கிழியும் வகையில் நீங்கள் கைதட்டினீர்கள். கைதட்டல்கள் அதி கம் கிடைத்தால் அது சில நேரம் ஆபத்தாகிவிடும். திருச்சியிலே நடந்த திமுக மாநில மாநாட்டில் உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்னும் தலைப்பில் நான் பேசிய பேச்சுக்கு எழுந்த கையொலிகள் ஏராளம். எமது கருத்துக்களை எடுத்துச் செல்ல இளம் தலைமுறையினர் வந்து விட்டீர்கள்.ஆகவேதான் நானும், அவைத் தலைவரும் உங்களை பேசவைத்து விட்டு கீழ் அமர்ந்து கேட்டோம். சரி மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடு என்ன? என்ற பெரும் கருத்து நிலவும்
நேரத்தில் இந்தக் கருத்துக் களம் நடந்து கொண்டிருக்கிறது. மிகுந்த கட்டுப் பாடுகளுடன் நீங்கள் மிகவும் நேர்த்தியாக உரையாற்றி இருக்கிறீர்கள். மறும லர்ச்சி திமுகவிற்கு இது முக்கியமான காலகட்டம்.

இப்போது உடனடியாக இந்திய அரசியலில் மாற்றம் உருவாக வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும். கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. திருச்சியிலே நடந்த மதிமுக முதல் மாநில மாநாட்டிலே தமிழீழம்தான் நமது
இலக்கு என்று தீர்மானம் போட்டவர்கள் நாம்.

கடந்த ஆண்டு கரூரில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடந்த பின்பு, 17-ந்
தேதி தந்தை பெரியார் பிறந்த நாளில் 1500 தோழர்களுடன் நாம் சாஞ்சிக்குப்
போனோம்.

தெர்மோபிளே கணவாயில் 300 வீரர்கள் சாதித்தனர். மெட்ராஸ் கபே என்னும்
திரைப்படம் திரையிடக் கூடாது என்று போராடிய மாணவர்களைப் பாராட்டு கிறேன்.

பராக் ஒபாமாவை சந்தித்தபோது அவ்வளவு நெருக்கடியான நேரத்திலும்அவர் பேனாவை எடுத்து ஒப்பமிடுவதற்குள், அமெரிக்க வரலாற்றை, ஒபாமாவின் பின்னணியை விவரித்து விட்டேன். ஆம் நம்மால் முடியும் என்று அவர் கை யொப்பமிட்டார். ஆம், அவரால் முடிந்தது.இனி நம்மாலும் முடியும் என்று பேசி வந்திருந்த இளைஞர்களின் மொத்தக் கவனத்தையும், கருத்தையும் தலைவர் வைகோ கவர்ந்தார்.

கடந்த 17-ந் தேதி தலைநகர் சென்னையில் நடந்த மாணவர் அணி கலந்துரை யாடல் நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர், மாணவர் அணியை மாடக்கூடல் மாநகரில் மாண்புக்குரிய அணியாக மாற்றி வரும் சகோதரர் புகழ்முருகன் பேசும்போது, நம் தலைவர் வைகோ இளைஞர்களை -மாணவர்களை சந்திக்கும்போது இளைஞராகவே மாறி விடுகின்றார்.இளையவர்கள் மத்தியில் அவர் உரையாடும்போது மிகுந்த உற்சாகத் தோடும், கம்பீரத்தோடும் காணப்படுகின்றார் என்றார். ஆம், திருப்ப ரங்குன்றத்தில் கூடிய மாற்று அரசியல் கருத்துக் களம் நிகழ்வின் போது
தொலைபேசியில் 45 நிமிடங்கள் உற்சாகமாகப் பேசிய தலைவர் வைகோ,
ஈரோட்டில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஒன்றே கால் மணி
நேரம் மிகுந்த உற்சாகத்துடனும்,இடையிடையே விட்டலபட்டர் கதை சொல் லி நகைச்சுவையோடும் அந்த நாளை வெல்லும் நாளாக மாற்றினார்.வரும் நாளும் தலைவர் வைகோ வெல்லும் நாளாக நாமும், நமது சகோதரர்களும் மாற்றும் விதமாக மாற்று அரசியலை முன்னெடுப்போம்...!

தொகுப்பு :- மணவை தமிழ்மாணிக்கம்
மாணவர் அணித் துணைச் செயலாளர்

No comments:

Post a Comment