Friday, September 6, 2013

உப்பனாற்றில் தடுப்பணை

கடலில் தண்ணீர் வீணாவதை தடுக்க உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்:  #மதிமுக வலியுறுத்தல்

தடுப்பணை ஏன் ?

சீர்காழி அருகே தேனூர் புதுமண்ணியாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து கொண் டல், பனமங்கலம், துறையூர், சட்டநாதபுரம், காரைமேடு, புதுதுறை, திருநகரி வழியாக சென்று திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது.

இந்த ஆறு மழைக்காலங்களில் வடிகாலாக இருந்து வருகிறது.கோடைகாலங் களில் திருல்லைவாசல் கடலில் இருந்து உப்பு தண்ணீர் ஆற்றின் வழியாக சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள பனமங்கலம் வரை சென்று விடுகிறது. 
இதனால் பனமங்கலம், சட்டநாதபுரம், புதுதுறை, திருநகரி, வெள்ளப்பள்ளம், கீராநல்லூர், வழுதலைக்குடி, சீர்காழி நகரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிரா மங்களில் நீலத்தடி நீர் உப்பு நீராக வும், காவிநிறமாக மாறி தண்ணீரை பயன் படுத்த முடியாத நிலை கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் மழைக் காலங்களில் சுமார் 5 டி.எம்.சி தண்ணீர் முழுவதும் வீணாக கடலில் கலக்கிறது. இதனை தடுக்கும் வகையில் சட்டநாதபுரம் உப்பனாற்றில் தடுப்பணையுடன் கூடிய பெட்டேம் கட்ட வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மார்கோனி:- 

நாகை மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள் வாய்கால்கள் சீரமைக்க தமிழக அரசு
சுமார் ரூ.1200 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் சட்டநாதபுரம் உப்பனாற்றில் கடல்நீர் உள்ளே புகாமல் தடுக்கவும், மழை காலங்களில் ஆற் றில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதையும் தடுக்கும் வகையிலும் தடுப்பணை கட்ட வேண்டும்.

அப்போது தான் நீலத்தடி நீர் மாசு நீங்கி நீர்மட்டம் வெகுவாக உயரும். தேக்கிய நீர்ரை பயன்படுத்தி சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்ய முடியும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டு மென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்கள், விவசாயிகளின் நலன் கருதி உப்ப னாற்றில் தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு மார்கோனி அவர்கள்  கூறினார்.

No comments:

Post a Comment