Wednesday, September 25, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி -பகுதி 2

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!

மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள்



திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் 5.9.2013 அன்று பல் லடத்தில் ப.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ரத்தினசாமி
வரவேற்புரை ஆற்றினார். என்.ஈஸ்வரன், ப.மணி, சிவக்குமார், மு.சுப்பிர மணி யம், மா.பாலு, அப்புக்குட்டி, எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். மாவட்டச்
செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்தி லதிபன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், இளைஞர் அணித் துணைச் செயலாளர் பி.வி.செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். ர.பெரியசாமி, க.முத்திரத்தினம், கவின் நாகராஜ், ஆர்.சின்னசாமி, தமயந்தி கந்தசாமி, ஈஸ்வரன்,சு.சிவபாலன், ஆர்.எஸ்.கோவிந்தராஜ், இ.என்.கந்தசாமி, முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கா.வீ.பழனிசாமி நன்றி கூறினர்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது. அந்த அமைப்பில்
இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும்; திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் 5000 இளைஞர்களை புதிதாக இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என்றும்; விருதுநகர் மாநாட்டில் திருப்பூர் மாவட்ட இளைஞர் அணியினர் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானங்கள்
 நிறைவேற்றப்பட்டன.


சிவகங்கை மாவட்டம்


சிவகங்கை மாவட்டக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், 29.8.2013
அன்று திருக்கோட்டியூரில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன் தலைமை தாங்கினார். ஏ.கே.முத்துசாமி, சி.த.மணிமாறன்,
எஸ்.முருகேசன், வே.முத்துசாமி, மல்லிகா, மனோகரன், குணசேகரன் முன் னிலை வகித்தனர். க.பாண்டியராஜன் வரவேற்புரையாற்றினார்.

இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், கொள்கை விளக்க அணிச் செய லாளர் க.அழகுசுந்தரம், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி,
தணிக்கைக்குழு உறுப்பினர் ம.கார்கண்ணன், இளைஞர் அணித் துணைச் செய லாளர்கள் கராத்தே பழனிசாமி, வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.
அழகர் நன்றி கூறினர்.

விருதுநகர் மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 2000 இளைஞர்கள்
சீருடையுடன் பங்கேற்பது என்றும்; கழகம் நடத்திய போராட்டங்களின் விளை வாக 2013 இரயில்வே நிதிநிலை அறிக்கையில், காரைக்குடியில் இருந்து திருப் பத்தூர் வழியாக மதுரைக்கும்; காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக
திண்டுக்கல்லுக்கும் இரயில்பாதை அமைப்பதற்கு ஆய்வுப்பணிகள் மேற் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டும், இதுவரை எவ்விதப்பணிகளும் மேற் கொள்ளப்படவில்லை. எனவே ஆய்வுப்பணிகளை விரைந்து ஆரம்பிக்க வேண் டும் என இரயில்வேதுறையைக் கேட்டுக்கொண்டும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.


மதுரை மாவட்டம்


மதுரை மாவட்டக் கழக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் 9.9.2013 அன்று
மதுரையில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.கே.எம் பெரியசாமி
தலைமையில் நடைபெற்றது. துணை அமைப்பாளர்கள் எம்.பாரதிதாசன்,சோ.பு கழேந்தி, எம்.பி.மருதுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.குமரதேசி கன் வரவேற்புரை ஆற்றினார்.

இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், மதுரை கிழக்கு மாவட்டச் செய லாளர் வீர.தமிழ்செல்வன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகு சுந்தரம், மதுரை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் த.முனியாண்டி, தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, இளைஞர் அணித் துணைச் செயலா ளர் வி.வேல்முருகன், மாணவர் அணித் துணைச் செயலாளர் பொடா கணே சன், ப.சுப்பாராஜ்,ஜெ.சக்திவேல், டாக்டர் பா.சரவணன், எஸ்.மகபூப்ஜான்,

அ.க.சாமி, துரை.செழியன், சி.ஜெயச்சந்திரன், புஷ்பலதா சீனிவாசன், ம.செல் வம், எஸ்.சின்னகந்தசாமி, வ.கதிரேசன், எஸ்.முருகேசன், ஆர்.ராமநாதன், டி.ராமநாதன், கே.அறிவழகன், சி.பூப்பாண்டி, எஸ்.சுந்தரபாண்டி, பூ.கா.ராஜா, டி.கே.பி.ஆர்.ராமு, டி.எஸ்.கே.ராஜாங்கம், சுப.ஆனந்த், என்.ஏ.செல்வபாண்டி, ஆறுமுகம், சு.பஞ்சுராசன், தண்டலை ரமேஷ், டி.ராஜேந்திரன், குரு.பால முரு கன், எஸ்.பேச்சியம்மாள், ஆர்.மணவாளகண்ணன்,கரு.சுந்தர், திராவிட தாமோ தரன், ஆர்.கருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டக் கழகத்தின் இளைஞர் அணி சார்பாக புதிதாக 10,000 இளை ஞர் களை கழகத்தில் சேர்ப்பது என்றும்; இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும்;காமன்வெல்த் அமைபிலிருந்து இலங்கையை நீக்க இந்தியா நடவடிக்கைகள் மேற்கொள்ள
வேண்டும் என்றும்; 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவைத் திரும்பப்பெற வேண்டும் என்றும்; எழுச்சியுடனும் உவகையுடனும் நடைபெற உள்ள விருதுநகர் மாநாட்டில் மதுரை மாவட்ட இளைஞர் அணியினர் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை மாவட்டம்


கோவை மாவட்டக் கழக இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் சீனியூர் ஸ்ரீதர்
தலைமையில் நடைபெற்றது. இளைஞர் அணித் துணைச் செயலாளர் ஆர்.ஆர். ரத்தினசாமி, கே.பி.சரவணன் முன்னிலை வகித்தனர். ஆ.யுவராஜ் வரவேற் புரை ஆற்றினார்.

கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்
குகன்மில் செந்தில்குமார், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். டி.டி.அரங்க சாமி,வெ.கா.இராமசாமி, விவசாய அணிச் செயலாளர் சூலூர் பொன்னுசாமி,
பி.என்.ராஜேந்திரன், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், சூ.பெ.கருணாநிதி, டாக்டர்
கே.வரதராஜன், பாக்கியலட்சுமி, செந்தில்கண்ணன், ஈ.கா.சி. பொன்னுசாமி,
மா.உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ப.கணேசமூர்த்தி நன்றி கூறினர்.

கோவை மாவட்டத்தில் இருந்து 10,000 இளைஞர்களை புதிதாக கழக உறுப் பினர்களாக சேர்ப்பது என்றும்; காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை யை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும்; விருதுநகர் மாநாட்டில் சீருடையுடன் 3,000 இளைஞர் அணியினர் கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment