Wednesday, September 4, 2013

வைகோ தனி நபரல்ல..

#வைகோ தனி நபரல்ல...திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி...!

“வைகோ ஒருவரை வைத்துத்தான் இந்த இயக்கம் வாழ வேண்டும் என்றால்,
அந்த விதையை வைத்து எல்லா செடிகளும் முளைத்துத் தீர வேண்டும். வைகோ -வை வைத்துதான் இந்த உலகம் விடிய வேண்டும் என்றால், அவர்
விடியலாகவே இருக்க வேண்டும்.வைகோ-வை வைத்துதான் இரவுகள் பூர்த்தி யாகவேண்டும் என்றால், அவர் நட்சத்திரமாக இருந்து தீர வேண்டும்.இது கவிதை அல்ல, தோழர்களே! உண்மையைச் சொல்லுகிறேன்.
வைகோ-வை வைத்து வாழ முடியாதவன் மறுபடியும் இன்னொரு இயக்கத் தைச் சந்திக்கப்போகிறான் என்றால், அந்த இயக்கத்தை எவன் சந்தித்தாலும், அந்த இயக்கத்தில் அவன் அடிமையாக இருந்து தீர வேண்டியது தான் - நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எனக்கு முக்கியம் இந்த இயக்கம் தானே தவிர,தனி நபர்களல்ல; வைகோவை தனி நபராக நான் பார்க்க வில்லை! நான் பயின்று வளர்ந்த இயக்கத்தின் தொடர்ச்சியாகவேப் பார்க்கி றேன்!”

யார் சொன்னது? எங்கே சொன்னது? எப்போது சொன்னது? என்ற வினாக்குறி
எழுவது இயல்புதான். இந்தக் கருத்தைச்சொல்லிய அவரை,

கவிஊற்று என்பதா? கவி அருவி என்பதா? கவிமேகம் என்பதா? கவிச்சுரங்கம் என்பதா? கவிச்சுரப்பி எனச் சொல்வதா? இதைவிட உயர்வாக எப்படிச் சொன் னாலும் அந்த வித்தகருக்குப் பொருந்தும். தாழ்த்தப் பட்ட இனத்தில் பிறந்து-தவழ்ந்து வளர்ந்த-கவிமுரசு-ஒடுக்கப்பட்டோர் மத்தியில் உலாவந்த உயர்ந்த மனிதர்-சேற்றில் மலர்ந்த செந்தாமரை என பலவகைப் பாராட்டுக்கும் பாத்தி ரமான தத்துவக்கவிஞர் குடியரசு அவர்கள்தான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் பேசிய பெருந்தகையாளராவார்.

“தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்பதற்காக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தாரே-உத்தமத் தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாள் கூட்டத்தில்தான் 17 ஆண்டுகளுக்கு முன் (13.10.1996) கவிஞர் குடியரசு இவ்வாறு கர்ஜித்தார்.

எவ்வளவு, அர்த்தமும்-ஆழமும் நிறைந்த அழுத்தமான கருத்துகள்; தெளிவும்-தீர்க்க தரிசனமும் உடையவரின் உண்மை வெளிப்பாடு; “நா” நயம் மிக்கவர் மட்டுமல்லநாணயமிக்கவரின் நம்பிக்கை நாற்றங்கால்!

தன்னை உருக்கிக் கொண்டு மண்ணுக்கு ஒளிதரும் மெழுகு வர்த்தியாய் உழைக்கும் உன்னதமான தலைவர் வைகோவைப் பற்றி - உயர்ந்த தியாக சீலர் ஒருவரின் நினைவு நாளில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமான ஒன்றுதானே! தமிழ் இனம் - இனத்தின் நலம்; தமிழ்மொழி-மொழியின் வளம்; தமிழ் கலாச் சாரம்-கலாச்சாரத்தின் கட்டுக்கோப்பு; இவை அனைத்திற்கு மான விதையாக விழுந்து-விருட்சமாக வளர்ந்து நிற்பவர் அல்லவா தலைவர் வைகோ!

“இரவில் சுதந்திரம் வாங்கினோம், விடியவில்லை” என்று பொதுவாக எல்லோ ரும் சொல்வதுண்டு. விடிந்தது என்னமோ உண்மைதான். குல்லாய் போடுபவர் களையும், குழிபறிப்பவர் களையும், குதர்க்கம் பேசித்திரிபவரையும், விடிய லின் வெளிச் சத்தில் வேறுபடுத்தி - நல்லவர் களையும், வல்லவர்களையும் வரிசைப்படுத்தி - அவர்களின் வழி நடக்க வேண்டியது நமது கடமைதானே!

அந்த விடியலின் முடிசூடா மன்னனாக நமது அண்ணனாக -தமிழ் இனத்திற் காக முகிழ்த்த “வேர்” தான் வைகோ என்பதை இப்போதுதான் இந்த நாடு உணரத் தொடங்கி உள்ளது.

மின்மினிப் பூச்சியுமல்ல, மேனா மினுக்கியுமல்ல - தொலைநோக்குப் பார்வை யுடன் துவளாமல் தொண்டாற்றும் தமிழ் மக்களுக்கான நம்பிக்கை நட்சத்திரம் தான் தலைவர் வைகோ என்பதைப் புரியத் தொடங்கி உள்ளது இந்தப் பூமி!

பெரியார்-அண்ணா வழிநடத்திய திராவிட இயக்கத்தின் தொடர்ச்சிதான் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்பதைப் பக்குவமாகப் பறை சாற்றும் கவிஞர் குடியரசின் கூற்றினை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இருபதாம் ஆண்டில்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.இயக்கத்தில் பதவிகள், உள்ளாட்சிப் பதவி கள், சட்டமன்றப் பதவிகள், நாடாளுமன்றப் பதவிகள், அமைச்சர் பதவிகள் என யார் யாரோ அலங்காரப் பதுமைகளாய் ஆலவட்டம் போட்டவர்கள் ஒரு கட் டத்தில் “ஆணி”வேரையேப் பிடுங்கி எறிய முனைந்தார்கள்! முயற்சியில் தோற்ற தால், கூனிக் குறுகிப் போனார்கள்.

வைகோவின் நேசக் கரங்களை நெட்டித் தள்ளிவிட்டு, எங்கிருந்தோ நீண்ட
மோசக்கரங்களில் முகம் புதைத்துக் கொண்டார்கள். இவர்களை எல்லாம்
அடையாளம் கண்டு புறந்தள்ளிவிட்டு, புன்முறுவலுடன் இன்முகம் காட்டி
இயக்கத்தையும், இயக்கத் தோழர் களையும் காத்து வருகின்றார் கலப்பட
மில்லா தாய்ப்பாலுக்கு நிகரான உள்ளம் கொண்ட நம் தலைவர் வைகோ!

கன்னியாகுமரி முதல் சென்னை வரை; பூம்புகார் முதல் கல்லணை வரை;
திருவைகுண்டம் முதல் தூத்துக்குடி வரை; திருநெல்வேலி முதல் சென்னை
வரை; உவரி முதல் மதுரை வரை; கோவளம் முதல் மறைமலை நகர் வரை;
பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகளு டன் உடம்பை வருத்திக்கொண்டு சரியான உறக்கமின்றி-ஓய்வின்றி-கால்கள் கொப்பளிக்க நடந்தாரே எதற்காக? ஏன்? இளைஞர்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

இந்தக் கணினி யுகத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து நாட்டின் அவலங் களைப் பேசி, மக்களின் சிந்தனையைத் தூண்டும் தலைவர் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலாவது உண்டா வைகோவைத் தவிர?

தனது பொதுவாழ்வுப் பயணத்தின் வழியில் சந்தித்த தேர்தல் தோல்விகள்-கூடி இருந்து குழிபறித்த துரோகங்கள் -நிர்வாகத்துக்கான நிதி நெருக்கடிகள்-நட் பின் விசுவாசத்திற்கான பரிசாக “விலா நோக”அடித்த விந்தை மனிதர்கள் -இவ் வளவையும் தாங்கிக் கொண்டு - மறுமலர்ச்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்க முடியும் என்ற தளராத நம்பிக்கையுடன் நம்மில் ஒருவராக நாள் தோறும் உழைக் கின்ற தலைவர் வைகோவின் பின்னாலே வாருங்கள் தமிழர்களே!

தொடர்ச்சியாக 19 மாதம் “பொடா” சிறைவாசம் உள்ளிட்ட சுமார் நான்கரை
ஆண்டுகால சிறைவாசம்; யாருக்காக இத்தனை இன்னல்களை ஏற்றார்?

“போர்க்குறி காயமே -புகழின்காயம்!
யார்க்கது வாய்க்கும்?
புண்ணோ? அதுவும் புகழின் கண்ணே!”

08.11.1996 சங்கொலி கடிதத்தில் தலைவர் வைகோ இப்படி குறிப்பிட்டு உள்ளார் கள். தமிழ்நாட்டின் உயர்வுக்காக- தமிழ் நாட்டின் புகழுக்காக எத்தகைய விழுப் புண்களையும், காயங்களையும் ஏற்றுக்கொண்டு பணியாற்றும் துணிவுமிக்கத் தலைவர் வைகோவின் தலைமையில் அணிவகுத்து வாருங்கள் இளைஞர் களே!

“தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என் றான் முண்டாசுக்கவிஞன். அந்த முறுக்கு மீசைக் கவிஞன் உலவிய மண் ணின் மைந்தர்தான் வைகோ.ஆனால் தனியொருவருக்கு உணவு மட்டுமல்ல; எத்தகைய பாதிப்பு ஏற்படினும் அதனைக் களைந்திட முனைவாரே தவிர, எவரையும்-எதையும் அழித்திட விரும்பாதவர் வைகோ.

“கேடு செய்வாருக்கும் பீடு (பெருமை) சேர்க்கின்ற பெருந்தகையாளரன்றோ
வைகோ!” 10.08.1996 இல் கரூர் நகரில், மக்களிடம் வசூலான பணத்திலிருந்து
வாங்கப்பட்ட “கார்”-கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் இயக்கப்பணிக்காக வழங்கப்பட்டது.அப்போதைய நகர செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், “இந்தக் கார் உங்களை (வைகோ)ச் சுமக்கவில்லை; தொண்டர்கள் உங்களைச் சுமக் கிறார்கள்” என்று பேசினார்.

ஏற்புரை வழங்கிய நமது இனமானத் தலைவர் வைகோ, “தொண்டர்கள் என் னைச் சுமக்கவில்லை; தொண்டர்களை நான் சுமக்கிறேன்” எனப் பதில் உரைத் தார்கள். வயதில் இளையவரான,திருஞான சம்பந்தரைப் பல்லக்கில் அமரச் செய்து, தோளில் சுமப்பது பெரும் பாக்கியம் என்றெண்ணிய திருநாவுக்கர சரை, திருவருட் செல்வராகப் போற்றி வணங்குகின்ற நாடல்லவா இது!

அன்றைக்குக் கரூரில் சொல்லியவாறே,இன்றுவரை தொண்டர்களை மட்டு மல்ல, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக் காக எல்லாவிதமான இன்னல்களையும்,
இடையூறுகளையும், இழப்புகளையும் சுமந்து கொண்டு தமிழ் மக்களுக்காக
தொண்டாற்றும் வைகோவை-கோட்டை “அரியாசனம்”சுமக்கும் காலம் வரும்.

“முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று!” நீண்ட நெடிய யோசனைக்கு
பிறகு வைகோ உதிர்த்த வார்த்தைகள். “கரூரில் உருவானது இந்தக் கரு”.முழு வடிவம் பெற்றிட, செயலாற்றிட முந்தி வாருங்கள்; முனைப்புடன் வாருங்கள்! விருதுநகர் நோக்கி! 

தாயகம் பா.செல்வராஜ்

No comments:

Post a Comment