Wednesday, September 25, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 20

நாள்:-09.12.2007


இந்தியக் கடற்படைக்குக் கண்டனம்!


பிரதமருக்கு #வைகோ கடிதம்

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியக் கடற்படையின் தமிடிநநாடு பொறுப்பாளர், கம்மோடர் வேன் ஹேல் டரென் கூறியதாக, டிசம்பர் 8 ஆம் நாள் நாளிதடிநகளில் வெளியாகி உள்ள, தேவை இல்லாத, உண்மை இல்லாத, நியாயப்படுத்த இயலாத,பொறுப்பு அற்ற கருத்துகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.


திரு வேன் ஹேல்டரென் கூறி இருப்பதாவது:

‘‘பாக் நீரிணையில் ஒருபோதும், இலங்கைக் கடற்படை வேண்டும் என்றே
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை; பன்னாட்டுக் கடல்
எல்லையில், இலங்கைக் கடற்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடை யே நடக்கின்ற துப்பாக்கிச் சண்டையில், இந்திய மீனவர்கள் இடையில் வந்து
மாட்டிக் கொள்கிறார்கள்; மேலும், மீனவர்கள் குற்றம் சாட்டுவதுபோல,இலங் கைக் கடற்படைப் படகுகள் ஒருபோதும் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே வந்து, இந்திய மீனவர்களைத் தாக்கியது இல்லை.’’

என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

2004 செப்டெம்பர் 16 ஆம் நாள், இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி,
அட்மிரல் அருண் பிரகாஷ், இதேபோன்ற கருத்தை கொழும்புவில் தெரிவித் தார். இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘இலங்கைக் கடற்படை இந்திய மீன வர்களைத் தாக்கவில்லை, விடுதலைப்புலிகள்தான் தாக்குகிறார்கள்’ என்று அவர் சொன்னார்.

2004 செப்டெம்பர் 18 ஆம் நாள், நான் தில்லியில் தங்களை நேரில் சந்தித்து,
ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தேன். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர், 900
முறைகளுக்கும்மேல் இலங்கைக் கடற்படை, இந்தியக் கடல் எல்லைக்கு
உள்ளே வந்து, இந்திய மீனவர்களைத் தாக்கி, நுhற்றுக்கணக்கானோரைக்
கொன்று, ஆயிரக்கணக்கானோரைக் காயப்படுத்தி, மீனவர்களின் உடைமை களைக் கொள்ளை அடித்துச் சென்ற நிகடிநவுகளை அதில் பட்டியல் இட்டு இருந்தேன். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதம் நடை பெற்று இருக்கிறது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்தியக் கடற்படைத் தலைவர், தன்னுடைய
எல்லையை மீறிச் சென்று, இலங்கைக் கடற்படைக்கு நற்சான்றிதடிந வழங்கி
உள்ளார் என்பதைத் தங்களிடம் தெரிவித்தேன்.

‘கடற்படைத் தலைவரின் கருத்து தங்களுக்கும் ஏற்பு உடையது அல்ல’ என்ப தைத் தாங்கள் தெரிவித்ததோடு,இது தொடர்பாகக் கவனிப்பதாகக் கூறினீர்கள்.

தற்போது, மற்றொரு கடற்படை அதிகாரி திரு வேன் ஹேல்டெரன், இலங் கைக் கடற்படையின் நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசி உள்ளார்.

மக்கள் ஆட்சி நடைபெறுகிற இந்தியாவில், இதுவரையிலும் பொறுப்பு வகித்த
படைத்தலைவர்கள், செடீநுதியாளர்களிடம் கருத்துகளைக் கூறும்போதும்,
அறிக்கைகள் வெளியிடும்போதும்,மிகவும் கவனமாக, எச்சரிக்கையோடு 
செயல் பட்டு வந்து இருக்கிறார்கள். ஆனால், அண்மைக்காலமாக படைத்
தலைவர்கள், அதிலும் குறிப்பாகக் கடற்படையினர், இலங்கை அரசுக்கு ஆதர வாக அறிக்கைகள் வெளியிட்டும், கருத்துகளைத் தெரிவித்தும் வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

அவர்கள் இந்தியக் கடற்படையில் பணி ஆற்றுகிறார்களா? அல்லது இலங் கைக் கடற்படைக்காகப் பணி ஆற்றுகிறார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்து கிறது.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து,
இந்திய அரசே நாடாளுமன்றத்தில் பலமுறை ஒப்புக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இந்தியக் கடற்படைக்கும், இலங்கைக் கடற்படைக்கும் இடையே,
சட்டத்துக்கு எதிரான மறைமுகத் தொடர்புகள் இருப்பதும், இலங்கைக் கடற் படையினருக்குத் துப்புக் கொடுப்பதும், இலங்கையில் நடைபெறுகின்ற சண் டையில், தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்ற சிங்கள இனவாத இலங் கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற ஒரு துரோகம் ஆகும் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய-இலங்கைக்கடற்படையினருக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செடீநுயப்பட்டதை எதிர்த்தும், என் னுடைய கவலைகளை வெளிப்படுத்தியும், கடந்த 2007 ஆகஸ்ட் 6 ஆம் நாள், நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். 2007 ஜூலை 13 ஆம் நாள், இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றில், இந்திய-இலங்கைக் கடற்படைத் தளபதிகள் சந்தித்துப் பேசி, மேற்கண்ட ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதன் மூலம், சிங்கள இனவாத அரசு விரித்த வஞ்சக வலையில், தெரிந்தே இந்தியா சிக்கிக் கொண்டது என்பதைத் தெரிவித்து இருந்தேன்.

‘இலங்கைக் கடற்படை, இந்திய எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்த வில்லை’ என்று கடற்படை அதிகாரி வேன் ஹேல்டெரன் தெரிவித்து இருக் கிறார். ஆனால், இலங்கைக் கடற்படை கணக்கே இல்லாத அளவுக்கு, எண் ணற்ற முறைகள் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்தி யது உலகம் அறிந்த உண்மை.

எடுத்துக்காட்டாக, 1997 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள்,வேதாரண்யத்துக்கு அருகே ஆறுகாட்டுத்துறை என்ற கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது, இலங்கைக் கடற்படையினர் ஹெலிகாப்டரில் வந்து அந்தப் படகுகள் மீது குண்டுகளை வீசி, ஆறு பேரைக் கொன்றனர்; பலரைப் படுகாயப்படுத் தினர். 1997 ஜூலை 30 ஆம் நாள், அப்போதைய இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களை நான் நேரில் சந்தித்து, இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியையும், வேதனையையும்
வெளிப்படுத்தினேன். இந்திய மீனவர்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இலங்கைக் கடற்படைக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்ட நோக்கத்துடன் இந்தியா செயல்படுவதும், இந்தியக் கடற்படை அதிகாரிகள்,தங்கள் எல்லை யை மீறி கருத்துகளை வெளியிட்டு இலங்கையை ஆதரிப்பதும் எதைக் காட்டு கிறதென்றால், பண்டித நேரு அவர்களால் வகுக்கப்பட்டு, திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் செயல்படுத்தப்பட்ட, இந்தியாவின் வெளியுற வுக் கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்பதைத்தான் காட்டு கிறது.

அதைவிடக் கொடுமை, இந்தியக் கடற்படையினர்,இந்திய மீனவர்களைப் பாது காப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொண்டது இல்லை. ஒரு முறையேனும் இலங்கைக் கடற் படைக்கு எச்சரிக்கைகூட விடுத்ததும்  இல்லை.

எனவே, இலங்கைப் படையினருக்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்தியா
நிறுத்திக்கொள்ள வேண்டும்; ஏற்கனவே இலங்கை விமானப்படைக்கு வழங் கிய ரேடார்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்;தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டு வருகின்ற இந்தியக் கடற்படை அதிகாரிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment