சிவகங்கை மாவட்ட திருக்கோஷ்டியூரில் #மதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் தலைமை வகித்தார். குரு.தங்கபாண்டி யன், முத்துச்சாமி, சார்லஸ், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியராஜன் வரவேற்புரையாற்றி னார். மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், கொள்கை பரப்புச் செய லாளர் அழகுசுந்தரம், தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கரசேதுபதி, தணிக் கைக்குழு உறுப்பினர் கார்கண்ணன், இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஜனநாயக பூர்வமான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு காவல் துறை இடையூறு செய்யக்கூடாது என மாவட்ட இளைஞரணி கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேல்முருகன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். ஒன்றியத் துணைச் செயலாளர் அழகர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment