அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், சமயவாதிகள் கூடுகின்ற மாநாட்டில் சிகாகோ நகரில், இந்தியாவில் இருந்து சென்ற விவேகானந்தருடைய ஆடைத் தோற்றத்தைக் கண்டு பலபேர் ஏளனமும் பரிகாசமும் செய்தவேளையில், Ladies and Gentlemen என்று பேசுகின்ற அரங்கில், ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த அவரது குரல் அந்த அரங்கத்தில் அனைவருக்கும் சிலிர்ப்பை ஏற் படுத்தியது.
இராமநாதபுரம் மன்னர்தான் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். விவேகானந்தரின் அற்புதமான கணீரென்ற ஆங்கிலச் சொற்களில் தவழ்ந்து வந்த கருத்துப் பிரவாகத்தில் அனைவரும் சொக்கிப்போனார்கள்.
அப்பொழுது இதைச் சொன்னார்.இந்த பத்தாம் சூத்திரத்தின் கருத்துதான் அந்தக் கருத்து. ‘நான் என்பதை மறுத்துவிடு’என்று அந்த அரங்கில் அவர் ஒருஅருமை யான விளக்கத்தைத் தந்தார். அங்கு இருக்கும் பலகையில் நான் என்று ஒரு கோடைப்போட்டார். நான் என்று ஒரு கோடு, இதை மறுத்துவிடு. குறுக்கே ஒரு கோடைப்போட்டார் ‘This is Cross'. இதுதான் சிலுவை’ என்று சொன்னார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். இன்றைக்குக் கோடான கோடி மக்கள் அந்தச் சிலுவையை வணங்குகிறார்கள், கவலையைப் போக்கு கிறார்கள். எந்தச் சிலுவையில் இயேசு பெருமானின் இரத்தம் வழிந்ததோ, அந் தச் சிலுவையை நெஞ்சில் நினைக்கிறபோது, தங்கள் கவலைகளில் இருந்து விடுபட முடியும் என்று மக்கள் வழிபடுகிறார்களே, அந்தச்சிலுவைக்கு அவர் விளக்கம் தருகிறபோது, ‘நான் என்பதை மறுத்துவிட வேண்டும்’ என்றார். உட னே கூட்டத்தில் இருந்து ஒரு வெள்ளைக்காரன் எழுந்து, ‘இது மிகத்தவறான விளக்கம்’ என்றார். உடனே விவேகானந்தர் சொன்னார், “அவர் கிழக்கில் இருந் து வருகிறார். எங்களைச் சேர்ந்தவர். உங்களைவிட எங்களுக்குத் தெரியும்” என்றார்.
இந்த சிவஞான போத சூத்திர விளக்கங்களுக்கு உள்ளே நான் இன்னும் அதிக மாக செல்ல விரும்பவில்லை. தூத்துக்குடியில் இருக்கின்ற சைவ சித்தாந்த சபையின் செயலாளராகிய சுப்பிரமணிய பிள்ளை என்பவர், ஒருநாள் வ.உ.சி. யைச் சந்தித்தார்.
‘சிதம்பரம் பிள்ளை அவர்களே, நீங்கள் சிறந்த வழக்கறிஞர். உங்கள் வாதங் களைக் கேட்க மக்கள் கூடுகிறார்கள். உங்கள் கருத்துகள் மனித மனங்களைக் கவர்கின்றன. நீங்கள் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களையும் விளக்கமாக பிரசங்கம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்காக இந்த சூத் திரங்களைப்பற்றி இன்னும் ஆழமாகப் படித்து,சைவ சித்தாந்த சபையில் போய் வ.உ.சி. அவர்கள் பேசினார்கள். இதை அவரே எழுதுகிறார்.
நான் பேசினேன். அதற்குப்பிறகு அதை மறந்து விட்டேன். ஆனால், அது ஒரு
ஞானக் கடல். ஞானம் நிறைந்த நூல் என்று நான் உணர்ந்து கொண்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நான் நெல்லையில் வண்ணாரப்பேட்டை பகுதிக்குச் சென்றேன். டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டில் தங்கி இருந்தேன்.அப்போது இந்த சிவஞான போதத்தைப் பற்றிய ஒரு விவாதம் வந்தது. ஒரு வடமொழிப் பண்டிதர் ஒருவர், டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டில் இருந்தார். அவரிடம், வடமொழியில் இருக்கக்கூடிய 12 சூத்திரங்களையும் தமிழில் மொழி பெயர்க்கச் சொன்னேன்.அந்தப் பண்டிதர்க்கு தமிழும் பாண்டித்யம்.வடமொழியும் பாண்டித் யம். அந்த வடமொழிச் சூத்திரங்களை தமிழில் அவர் மொழி பெயர்த்தார். தமி ழில் உள்ளதுதான் வடமொழியில் இருக்கிறது. வடமொழியில் இருக்கிறது தமி ழில் இருக்கிறது என்பதைவிட, தமிழில் உள்ளதுதான் வடமொழியில் இருக் கிறது என்று சொல்லிவிட்டு, வ.உ.சி அவர் மனதுக்குள், ‘ தமிழ்தான் மூலம் என்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது.’ இது என் கருத்து.

ஆனால், அன்றைய காலகட்டத்தில் அதைச் சொல்லாமல், இதில் எது மூலம்? எது அதில் இருந்து வந்தது என்று நான் கருத்துச் சொல்லவிரும்பவில்லை. தமிழில் உள்ளதுதான் வடமொழி சூத்திரத்திலும் இருக்கிறது என்று இந்த சர்ச் சைக்கு உள்ளே போகாமல் கருத்தை வெளியிடுகிறார். மாதவ சிவஞான முனி வர் வடமொழியில் இருந்து சூத்திரங்களின் மொழிபெயர்ப்புதான் இந்த தமிழ் சிவஞான போதம் என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், கா.சு.பிள் ளை அதை ஏற்கவில்லை. மறைமலை அடிகள் அதை ஏற்கவில்லை. சிறந்த தமிழ் அறிஞரான கா.சு.பிள்ளை அவர்களும் - மறைமலை அடிகளும், ‘ இந்த 12 தமிழ் சூத்திரங்கள்தான் மூலம். இதில் வடமொழியில் இது வந்ததல்ல’ என்ப தற்கு நிறைய விளக்கங்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதே கருத்தைத்தான் தமிழ் அறிஞர் சி.சு.மணி அவர்கள், தன் ‘திராவிட மாபாடி யம் என்கின்ற நூலில் விளக்கம் தருகிறார். நடுநாட்டில் திருமுனைப்பாடியில் சுவேதனப் பெருமாளாக இருந்த மெய்கண்ட தேவர், அருமையான சிவஞான போதத்தைத் தந்தாரே அவர் 12 சூத்திரங்கள் தந்து இருக்கிறார்.என்ன ஒற்றுமை பாருங்கள்! திருமுறைகளும் 12 தான். ஞானசம்பந்தர் அருளிய திருமுறைகள் - நாவுக்கரசர் அருளிய தேவாரத் திருமுறைகள் -மாணிக்கவாசகர் அருளிய திரு வாசக திருமுறைகள் - திருமூலர் தந்த திருமந்திரம் - சேக்கிழார் சுவாமிகள் தந்த பெரியபுராணம் - இவை எல்லாமே 12 திருமுறைகளுக்குள் வருவதுதான்.
No comments:
Post a Comment