Monday, September 30, 2013

விவசாய தேவைக்கு மழை நீர் சேகரிக்க பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்துக

ஊராட்சிகள்  தோறும் விவசாய தேவைக்கு மழை நீர் சேகரிக்க புதிய  ண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்த இயந்திரங்கள் மூலம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென #மதிமுக விவசாய அணி வலியுறுத்தல்.

இது குறித்த மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். தவிர கால்நடைகள் மற்றும் மக்கள் குடிநீருக்காக பல மைல் தொலைவு செல்லவேண்டிய நிலை ஏற் பட்டது. 

இந்நிலையில் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் வரக்கூடிய வடகிழக்கு பருவ மழையின் போது கிடைக்கும் மழை நீரை சேமித்து வைக்க தமிழகம்முழு வதும் சுமார் 5ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

ஒவ்வொரு ஊராட்சிற்கும் குறைந்தபட்சம் 10 முதல் 15 பண்ணை குட்டைவரை அமைப்பதற்கு அரசு உத்திரவிட்டுள்ளது. இப்பண்ணை குட்டைகள் நீளம் 15மீ, அகலம் 15மீ, ஆழம் 1.5மீ அளவுடையதாகும். இது ரூ.40 ஆயிரம் செலவில் அமைக்கப்பட உள்ளது. 

இடைவெளி விட்டு மழை தாமதம் ஏற்படும் போது இக்குட்டைகளில் சேமித்து வைத்துள்ள நீரை மோட்டார் மூலம் பாய்ச்சி வாடிய பயிர்களுக்கு உயிரூட்டம் அளிப்பதற்காகவும், தவிர பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்கு இக்குட்டையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரை எடுத்து பயன்படுத்து வதற்காகவும், பூமிக்கு அடியில் உள்ள உப்பு நீரின் தன்மையை மாறுபட செய்து விவசாய பயன்பாட் டிற்கு கொண்டு வருவதற்காகவும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தர விட்டுள்ளது. 

இக்குட்டைகள் தோண்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை கொண்டு பணியினை மேற்கொள் ள அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதிக அளவு ஆழம் தோண்டுவதற்கு மனித சக்தியை பயன்படுத்த முடியாது ஏனெனில் மண்பாங்கு மிகவும் கடினமானதாக இருக்கும் ஆதலால் இப்பணி களை செய்ய 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்துவது இய லாத காரியமாகும். தவிர வரக்கூடிய பருவ மழைக்கு முன் பண்ணை குட்டை அமைக்க வேண்டுமென்பதால் அதற்கான கால அவகாசமும் மிக குறைவாக உள்ளது. 

எனவே புதிய பண்ணை குட்டைகள் அமைக்க இயந்திரங்கள் மூலம் தோண்டு வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டுமென என கோரிக்கை வைக்க படு கிறது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment