07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
பண்டித ஜவஹர்லால் நேருவும் - சுபாக்ஷ் சந்திர போசும், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மரண தண்டனையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உண்மையான ஈடுபாட்டோடு விரும்பினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் வைஸ்ராய் இர்வினைச் சந்திக்க மகாத்மா காந்தி போனார். என்ன நடந்தது? நான் பேசுவது எல்லாம் ஆவணங்களை வைத்து இருக்கிறேன்.மகாத்மா காந்தி இர்வினுக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார் என் றால்?
நாடு பூராவிலும் இவர்களைப்பற்றிய ஒரு கவலை ஏற்பட்டு இருக்கிறது, இந்த மரண தண்டனைக்கு எதிராக என்பதனால் அதைச் சுற்றி வளைத்துச் சொல்லி விட்டு, ஒரு சிறு பிழை கூட, இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு சிறு தவறு கூட சட்டப் பூர்வமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சட்டப் பூர்வமாக இதை நிறைவேற்றுவது தவறு என்று, ஒரு சிறுவாய்ப்பு இருந்தால் கூட அதை நிறைவேற்றக்கூடாது என்ற அர்த்தத்தில் இவர் எழுதுகிறார். சட்டப் பூர்வமாக சிறுதவறுகூட ஏற்படக்கூடாது. இந்தத் தண்டனையை நிறைவேற்று வதில் என்றுதான் குறிப்பிடுகிறாரேதவிர,இந்தத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கவில்லை.
இர்வினைச் சந்தித்து வந்த காந்தியார் குறித்து, பண்டித நேரு அவரிடத்தில் கோபிக்கிறார். கதவைப் படாரென்று அடைத்துக் கொண்டு வெளியே போகி றார். இன்றைக்கு மெளன விரதம் காந்தி பேச மாட்டார் என்கிறார்கள். இதைப் பற்றி எழுதிக் காட்டுகிறார்கள்.
அப்பொழுது 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு 20 நாட் களுக்கு முன்பு பகத்சிங் குடும்பத்தினர் அவரைப் பார்க்கக் கடைசியாக வரு கிறார்கள். இதைப்படிக்கிறபோதே கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. ஈர உணர்ச்சி உள்ளவர்கள், தியாகத்தை மதிப்பவர்கள். சுகதேவ், ராஜகுருவுக்கு யாரும் வரவில்லை. ராஜகுரு எனக்கு யாரும் உறவினர்கள் இல்லை என் றான். சுகதேவ் என்னுடைய மாமா வருவார் என்று சொன்னான். ஆனால், மாமா வரவில்லை. இரண்டு பேரும் அவர்களது சிறிய கொட்டடி வாயிலில் நிற்கிறார்கள்.
கனத்த இதயத்தோடு, தன்னோடு இருக்கிற இரண்டு சக கைதிகள் தூக்கிலிடப்
போகிறார்கள் அவர்களைப் பார்க்க யாரும் வரவில்லையே என்று மனதில் அழுத்தத்தோடு பகத்சிங் நேர்காணல் அறைக்குப் போகிறார்.சிறையில் இருந் தவர்களுக்குத்தான் அந்த அனுபவம் தெரியும். இண்டர் வியூவுக்குப் போகும் போது, கூட இருக்கின்ற சகாக்கள் எப்படியும் நம்மை அனுப்பி வைப்பார்கள் என்று, நேர்காணல் அறைக்கு வருகிறார் பகத்சிங். அங்கே அவர் தாத்தா அர் ஜூன் சிங் வந்து இருக்கிறார். தகப்பனார் கிஷன் சிங் வந்து இருக்கிறார்.அம்மா வித்யா கெளர் வந்து இருக்கிறார். இரு சகோதரர்கள் வந்து இருக்கிறார் குல்பீர் சிங் - குல்தார் சிங். மூன்று சகோதரிகள் அந்த மூவரும் வந்து இருக்கிறார்கள். அமர் கெளர் - சுமித்ரா கெளர் - கெளசல்யா கெளர் மூன்று சகோதரிகளின் பெயர். இண்டர்வியூ அறைக்கு உள்ளே வந்தவுடன் கூட்டிக் கொண்டு போகிற வர் தலைமை வார்டன் கத்தார்சிங். அவில்தார் கத்தார்சிங்குக்கு அவரை அறி யாமல் பகத்சிங் மேல் ஒரு ஈடுபாடு.
உள்ளே போனவுடன் அவர் தாத்தா கண்களில் கண்ணீர் பொங்குகிறது. அழுகி றார். அவர் தந்தையின் கண்ணீரால் அவரது தாடியெல்லாம் நனைந்து இருக் கிறது அம்மாவைப் பார்க்கிறான், அம்மாவின் கண்களில் கண்ணீர் வட்டமிடு கிறது. இரு சகோதரர்களும் அழுகிறார்கள். சகோதரிகளும் அழுகிறார்கள். அம்மாவிடம் பகத்சிங் சொல்கிறான், ‘அம்மா நீங்கள் என்னைக் கடைசியாகப் பார்க்கிறபோது நீங்கள் அழுது என்னைக் கக்ஷ்டப்படுத்தி விடாதீர்கள். என் மனதுக்குக் கடைசியில் கக்ஷ்டத்தைக் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் அழக்கூடாது. என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும்’ என்றார்.
No comments:
Post a Comment