மத்திய அரசு ஆட்டம் காண்கிறது விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்
#வைகோ சூசகம்
#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களைச் சந்திக்கும் மறு மலர்ச்சிப் பயணத்தை இன்று (30.09.2013) தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல் லூரில் மாலை 3 மணிக்கு தொடங்கினார். இரவு 8 மணிக்கு நாசரேத்தில் நிறைவு செய்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் தன்னலமற்ற நேர்மையாலும் தந்தை பெரியாரின் சுய மரியாதையோடும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய பாதையில் தமிழக நலனுக்காக பாடுபட்டு, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட் சத்தி உறுதி என மக்களிடம் விதைத்து, நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. மக்களை சந்திக்கின்ற பயணத்தை தாமிரபரணி ஆற்றங் கரையில், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் என் எண்ணத்தைச் செயல் படுத்துவதில் ஈடு இணையற்றவராக திகழ்கிற தம்பி ஜோயல் ஏற்பாட்டில் தொடங்க இருக்கிறது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் போராடி வரு கிறோம். “செய் அல்லது செய்து மடி” என்று அண்ணல் மகாத்மா காந்தி அறி வித்தார். அப்படிப்பட்ட வைர வரிகளுக்குச் சொந்தர்காரர்கள் நாங்கள். முல் லைப் பெரியாறு ஆகட்டும்; கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகட்டும்; காவி ரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையாகட்டும்; பாலாற்றுப் பிரச்சினையாகட்டும்; மணல் கொள்ளையாகட்டும் அத்தனைக்கும் போராடியவர்கள் நாங்கள்.
மக்களைச் சந்திக்கின்ற மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தை தொடங்குவ தற் கு செய்துங்கநல்லூரை நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம், பொதிகை அடிவா ரத்திலிருந்து, செங்கோட்டை , அம்பாசமுத்திரம், சிவகிரி, பாபநாசம் பகுதிகளி லில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போவதற்கு மக்கள் வரு வார்கள். வருகிறபோழுது அவர்கள் பசியாறுவதற்கும் இளைப்பாறுவதற்கும் இடம் வேண்டும். அவர்கள் உணவு உண்டு செல்வார். செய்து, உண்டு உறங்கி விட்டுச் செல் என்பதே செய்து உண்க நல்லூர் என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.
இங்குள்ள மரக்கிளைகளில் தொட்டில் கட்டுவார்கள். அந்தத் தொட்டிகளில் பாட்டுப்பாடி தங்களது குழந்தைகளை தூங்க வைப்பார்கள். சேய் என்றால் குழந்தை. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தூங்க வைத்து, கோவிலுக்கு அழைத்துச் செல்வதனால் சேய் தூங்கநல்லூர் என்றும் பெயர் வந்ததாகக் கூறு வார்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக போராடுபவன். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அக்கறைகொண்டவன். தாய்மார்கள், குழந்தை களின் நலனைக் காக்க மதுவிலக்கு பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்ட வன்.
நேற்றைய தினம் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. அந்த விவசாயிகள் மாநாட்டில் பேசுகிறதுபோது, தரமிரபரணி நதி மிகவும் பழமையானது என்று சொன்னேன். தாமிரபரணிக்கு ஈடான நதி இந்தியாவில் இல்லை.
காமராஜர் நெய்யாறு இடதுகரை சாணலை அமைத்தார். ஆனால் கேரளம், குமரி மாவட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுப்ப தில் லை. கேரளாவினால் முல்லைப் பெரியாறு, ஆந்திராவினால் பாலாறு, கர்நா டகத்தால் காவிரி என மூன்று பக்கத்திலும் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வருகிறது.
தாமிரபரணி நதி பொதிகையில் தோன்றி காயலில் கலக்கின்ற நதி இது. தமிழ் நாட்டிலே தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டு நதி இது. இந்த நதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழக வாழ்வாதரங்களுக்கு வஞ்சகம் செய்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
ஆட்சியாளர்களின் கண்டுகொள்ளாத செயலால் ஆற்றுமணலை சுரண்டப்படு கிறது. கோடான கோடி மக்களின் எதிர்காலம் பாலைவனம் ஆகிற அளவுக்கு ஆற்று மணல் சுரண்டப்படுகிறது. தாது மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை கடந்த தி.மு.க. ஆட்சியும், தற்போது ஆளுகிற அ.தி.மு.க. அரசும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.
ஆகையினால், நேர்மையான ஊழற்ற அரசியலை உருவாக்க மக்களுக்கு தொண்டாற்றுகிற எங்களை அரசியலில் நீங்கள் எங்களை ஊக்குவிக்க வேண் டும். உங்களுக்குகாகப் பாடுபடுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்த ராஜபக்சே அரசை கேள்வி கேட்பார் இல்லா மல் போய்விட்டது. இதற்கு முழுக்கக் காரணம் காங்கிரஸ் அரசுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் இதற்கு காரணம். கொழும்பில் காமன் வெல்த் மாநாடு நடப்பதற்கும் இந்தியாவில் காங்கிரஸ்தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் காரணம். இப்பொழுது நாட்டுக்காக பாடு படுகிற ஒரே இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க. தான்.
மதுவின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துக்கூற உவரியில் முதல் மதுரை வரை முதல் கட்டமாக என் தொண்டர்களுடன் பிரச்சாரம் பயணம் செய்தேன்.
அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 6 நாட்கள் நடந்தோம். அந்த நடைப் பயணத்தில் எந்த இடத்திலும் அரசியல் பேசவில்லை. மதுக் கொடுமை வருங் காலத்தைஅழித்துவிடும் என்று சொன்னே.
நாதியற்றவர்களுக்கு குரல்கொடுக்கிறோம். ஏழை எளியோருக்காகக் குரல் கொடுக்கிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காகக் குரல் கொடுக்கிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை.ஆனால் நாங்கள் மக்களுக்காக பணிகள் செய்வதை நிறுத்தவில்லை. மீனவர்கள் பிரச் சினை, முல்லைப் பெரியாறு உரிமைப் பிரச்சினை, ஈழத் தமிழரக்கான பிரச்சி னை, ராஜபக்சே எதிராக நான்கு மாநிலங்களைக் கடந்து சாஞ்சி வரை சென்று கருப்புக்கொடி போராட்டம், டெல்லியில் பிரதமர் வீடு முற்றுகை, திருப்பதி யில் முற்றுகை என எங்கள் போராட்டம் வீறுகொண்டதைத் தவிர சோர்ந்து விட வில்லை.
கடந்த இரண்டு ஆண்டு காலமும் நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் பல் வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு வந்திருக்கிறோம்.
மத்திய அரசு ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் காலத்தில் உங்களை சந்திக்க நேரம் இருக்கிறதோ இல்லையோ. அதனால்தான் இப்பொழுதே உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
எங்களிடம் காசு இல்லை. வெளிப்படையாக நிதி கேட்டோம். அதை பலபேர் பாராட்டி இருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து மக்களுக்காகப் பாடுபட்டு வரு கிறோம்.
மறுமலர்ச்சி தி.மு.க. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்.முதன் முதலாக செய்துங்கநல்லூரில் உங்களைச் சந்திக்கிறேன். நடுநிலையாளர் களே, இளைஞர்களே, மாணவர்களே, தாய்மார்களே யோசிங்கள் சாதி மத பேத மற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு வாய்ப்புத் தாருங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக் காக, சிறுபான்மை இன மக்களுக்காக பாடுபட வாய்ப்பு தாருங்கள். தமிழக மக் களின் உரிமைக்குரல் ஒலிக்கவேண்டும் என்பதற்காக எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.
பொதுமக்களை நாடி வந்திருக்கிறேம். பணம் மலையாக குவிக்கப்பட்டிருக் கிறது. அது உழைத்து சேர்க்கப்பட்ட பணம் இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட பணம்.
வீட்டுக்கு வீடு அயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்தவுடன் முடிந்துவிடும். பிறகு மக்களை அவர்கள் மறந்துவிடுவார்கள். ஐந்தாண்டு காலம் நீங்கள் ஏமாறத்தான் வேண்டும். அப்படிப்பட்ட நிலை மாற எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்.
இளைஞர்களிடம் புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மாற்றம் எ ன் பதே சாத்தியம் இல்லை என்ற கருத்துக்கு முடிவின் பெயர்தான் மாற்றம்.
நாங்கள் வெற்றி பெற்றால், மணல் கொள்ளை, நதி நீர் பிரச்சினை, வாழ்வா தா ரப் பிரச்சினை போன்ற சூழலிலிருந்து தமிழகம் விடுபடும். அந்தத் தகுதியோடு ம.தி.மு.க. மக்களை சந்திக்கிறது. தாய்மார்கள் கண்ணீரை துடைப்பதற்காக பாடுகிறோம்.
நேற்று முந்தைய நாள் செய்தியை பார்த்த அனைவரின் மனமும் படபடத்திருக் கும். பச்சை குழந்தை தேவி, ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடி, பின்பு இறந்துபோனது.
இதே போன்று சென்ற வருடம் சென்னையில் ஆதித்தனார் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரிக்குச் சென்றுகொண்டிருந்தோம். செல்லும் வழியில் கலையில் ஒரு கார் விபத்து விபத்தில் சிக்கி இருந்தது. அதில் இசுலாம் சமுதயாத்தைச் சேர்ந்த அண்ணா மலைப் பல்கலைக் கழக எம்.பி.ஏ.துறைத் தலைவர் பேராசிரியர் முண்டியப் பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவரும் அவரது மனைவி மற்றும் ஒருமகன் உட்பட மூவர் இறந்துவிட்டார்கள். இன்னொரு மகன் ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு அவரச ஊர்த்தி ஏற்பாடு செய்து, உயரிய சிகிச்சைக்கு அனுமதித்து அவரை நான் காப்பாற்றின்ன்.
பஹ்கிரின் பாரதி தமிழ் சங்கத் தலைவர் சேக் பசீர் அவர்ககள் பஹ்கிரிலிருந்து என்னிடம் பேசினார், இறந்து போனவர் என் மனைவியுடைய அக்காவும் அவ ரது கணவரும். நீங்கள் கொஞ்சம் முன்பு சென்றிருந்தால் காப்பாற்றியிருக் கலாம் என்றார்.
பரமக்குடி செல்கிறபோது பரிட்சை எழுத சென்ற இரண்டு இளைஞர்கள் விபத் தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றி யிருக்கிறேன்.
கடலூரில் கழகத் தோழரின் இல்லத் திருமணத்திற்குச் செல்லும்போது, விபத் தில் காயமுற்ற திமுக தோழர் அர்ஜூணன் காப்பாற்றினோம். நேர்மை யான அரசியலை நிலைநாட்ட போராடுகிறோம்.
நடைப்பயணத்தை வெற்றிகரமாக நடத்தியகாட்டிய ஜேயால் கழகத்தை கட்டி காக்கிறார். என் எண்ணங்களை எல்லாம் விரைந்து செயல்படுத்துகிறார். மக் களை நாடிச் செல்லும் மறுமலர்ச்சிப் பயணத்தையும் வெற்றிகரமாக நடத்து வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த மண்ணில் நம் இயக்கத்தை கட்டிக் காத்து வளர்ப்பதற்கு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்ட துணைப் பொதுச்செயலாளர் நாசரேத் துரை, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நெல்லை ப.ஆ.சரவணன், தென் சென்னை -வேளச்சேரி மணிமாறன், நெல்லை மாநகர் -எஸ்.பெருமாள், கன்னியாகுமரி- தில்லை செல்வம் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், குருமத்தேயு ஜெபசிங், விஜயகுமார் பாக்கியம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டனர்.
செய்திகள் & படங்கள் மின்னல் முகமது அலி அவர்கள்
No comments:
Post a Comment