Monday, September 9, 2013

பன்னாட்டு இளைஞர் மாநாடு

பல்வேறு மாண வர் இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும், #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உட்பட்ட அரசியல் தலைவர்களும் எழுத்தாளர் களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு மாநாட்டு கோரிக்கை களுக்கு வலு சேர்த்தனர்.

சேவ் தமிழ்ஸ் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 7 சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் 

1) 1971 சிங்கப்பூர் சாற்றுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களைக் காலில் போட்டு மிதித்து கொண்டி ருக்கும் சிங்கள பெளத்த பேரினவாத இலங்கையில், காமன்வெல்த் அரசுக ளின் தலைவர்கள் மாநாட்டினை நடத்தக்கூடாது என காமன்வெல்த் அமைப்பு நாடுகளையும் , இந்திய அரசையும் கேட்டுகொள்கிறோம் 

2) ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்து இன்றும் கட்டமைப்பு ரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

3) ஏழு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களின் சனநாயக கோரிக்கைகளை ஏற்று, இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டினை கொழும்பிலிருந்து வேறொரு காமன்வெல்த் தலை நகரத்திற்கு மாற்றும் படி கேட்க வேண்டும். இடமாற்றம் இல்லையென்றால் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் அரசாங்கத் தலை வர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். 

கனேடிய பிரதமர் இம் மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்கிறோம்  இதைப் போன்று இந்திய பிரதமரும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என இம்மாநாடு கேட்டுகொள்கிறோம்.

4) 2008-2009ஆம் ஆண்டு இலங்கைப் போரில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் ஆகியன குறித்து ஒரு சுயாதீன பன்னாட்டு விசாரணை ஒன்றை நிறுவ வலியுறுத்தி காமன்வெல்த் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

5) இன்றும் இலங்கையில் இராணுவமயமாக்கலாலும், சிங்களமயமாக்கலா லும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழர்களைக் காக்கும் பொருட்டு தமி ழர்களின் தாயகப்பகுதியான இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகத்தினை நிறு வப்பட சர்வதேச நாடுகள் ஆவண செய்ய வேண்டும்.

6) கடந்த 60 வருடங்களாக சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசினால் இன அழிப்புக்குள்ளாகப்படும் ஈழத்தமிழர்கள் சனநாயக அடிப்படையில் தங்க ளுக்கான அரசியல் தீர்வினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் , இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெ டுப்பு நடத்தப்பட வேண்டும்.

7) இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதில் இந்திய பிரத மர் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மா னம் ஒன்றினை நிறைவேற்ற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

மேலும், ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ”இலங்கை மீதான பொருளாதார தடை கோரும் தீர்மானத்தினை தமிழகத்திலும் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




No comments:

Post a Comment