Tuesday, September 3, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 13

நாள் :- 18.11.2006

ஈழத்தமிழரைப் பாதுகாப்போம்!
#வைகோ வுக்குப் பிரதமர் உறுதிமொழி!

‘ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக்க வேண்டும்; பட்டினிச்சாவில் இருந்து ஈழத்தமி ழர்களைக் காப்பாற்ற இந்தியா உணவுப்பொருள்களை அனுப்ப வேண்டும்’ என் று கோரி, இந்தியப் பிரதமருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து இருந்தார். இது தொடர்பாக, நீண்ட விளக்கம் அளித்து, இந்தியப் பிரதமர் மாண்புமிகு டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்,
வைகோவுக்குக் கடிதம் எழுதி உள்ளார். நவம்பர் 12 ஆம் நாள் பிரதமர் எழுதிய கடிதம், 17.11.2006 அன்று தாயகத்தில் பெறப்பட்டது. கடித விவரம் வருமாறு:

அன்புள்ள திரு வைகோ அவர்களுக்கு,

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நிகழ் வுகளில் பல அப்பாவிகளின்
உயிர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள்,பெண்கள்,குழந்தைகளின் உயிர்கள் பலியாகி இருப்பது, நம் அனைவருக்கும் பெருங்கவலை அளித்து உள்ளது. இது போன்ற வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை, நாம் உறுதியாகத் தெரிவித்து வந்து இருக்கிறோம். மேலும், ஏதும் அறியாத அப்பாவி மக்கள், குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே இயலாது.

அப்பாவித் தமிழ் மக்கள் பலர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது குறித்த நமது கவலையை, இலங்கை அரசுக்கு நாம் முறையாகத் தெரிவித்து
இருக்கிறோம். அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்கின்ற வழிமுறைகளைக்
கைவிட்டு, சட்டப்படியும் நியாயப்படியும் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய
உரிமைகளை வழங்குவதற்கு, அமைதிப்பேச்சுகளின் வழியாக ஒரு அரசியல்
தீர்வு காண வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தும்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில், கடந்த அக்டோபர்
மாதம்,ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப்பேச்சு தோல்வி அடைந்ததை நான் அறிவேன். அதனால், இருதரப்பினரும் தங்களது நிலையைக் கடுமையாக்கி உள்ளனர். இது விரும்பத்தகாதது. இதன் விளைவாக வன்முறை வெடித்து உள்ளது.

ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டதால், யாழ் ப்பாணப் பகுதி மக்களுக்கு உணவு
மற்றும் அடிப்படைத்தேவைப்பொருள்கள் கிடைக்கவில்லை என்பது குறித்துத் தங்களின் கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியில் ஏற்பட்டு உள்ள கடுமையான தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அரிசி-சர்க்கரை-பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்கனவே அனுப்பி உள்ளோம். இவை போதாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால், இலங்கை அரசு அதி காரிகள், கடல் வழியாக யாழ் ப்பாணப் பகுதி மக்களுக்குப் பொருள்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய் து வருகிறார்கள் என்று நான் அறிகிறேன்.

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் நிலவுகின்ற இறுக்கமானசூழ்நிலை யையும், அங்கே வாழ் கின்ற தமிழர்கள்-முஸ்லிம்களுடைய நிலைமை யை யும் நாங்கள் நன்கு அறிவோம்.

தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய, உயிர்களைப் பலிவாங்கக்கூடிய
அளவுக்குத் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்களையோ, இராணுவத் தளவா டங்களையோ இலங்கை அரசுக்குக் கொடுக்கக்கூடாது என்பதில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இலங்கையின் குடிமக்களான தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மதித்து
நடக்குமாறு, இலங்கை அரசுக்கு நாங்கள் உறுதியாகத் தெரிவித்து உள்ளோம். இந்தக் கருத்தை அண்மையில் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.

அப்பாவி மக்கள் மேலும் உயிர்ப்பலி ஆவதைத் தடுக்கின்ற வகையில் ஆகக் கூடிய எல்லாவித முயற்சிகளையும், துhதரக நடவடிக்கைகளின் வழியாகவோ அல்லது வேறுவகையிலோ நாங்கள் மேற்கொள்வோம் என்கிற உறுதியைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

மன்மோகன்சிங்

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment