Wednesday, September 18, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 13

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத் சிங் உடனே, ‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிக்ஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தி யைக் கேள்விபட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக்கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசையாக ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள் தூக்கில் போடப்போகிறார்கள் என்று சொல்லி விடுகி றான். அனைவருக்கும் தெரிந்து விட்டது.

அதன்பிறகு, மாலை ஆறரை மணி அளவில் அவர்களை குளிக்கச் சொல்கிறார் கள். கடைசியாக பகத்சிங் அவனுக்கு மிகவும் பிடித்தமான ரசகுல்லா சாப்பிடு கிறார். மூவரையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அதற்குமுன்பு கடைசி யாக தலைமை வார்டன் இருக்கிறார் அல்லவா? அவரும் ராணா .... சிங் மாதிரி அப்பா கடைசியிலாவது நமது கிரந்தங்களின் அடிப்படையில் நீ சாமி கும்பிட்டு விடலாமே என்கிறபோது பகத்சிங் சொல்கிறார், என்ன கத்தார்சிங் உன் கடவு ளே என்னைப்பற்றி மோசமாக நினைத்து விடுவாரே?என்னைக் கோழை என்று நினைத்து விடுவாரே? கடைசிவரை நாத்திகனாக இருந்து, சாவு வருகிறது என் றவுடன் பயந்து ஆத்திகத்துக்குப் போய்விட்டான் என்று என்னைப்பற்றி நினைக்க மாட்டாரா? அப்படி ஒரு பெயர் எனக்கு வராதா?

ஆகையினால், நான் கடைசிவரை மத நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து
விடுகிறேன். ஆனால், 10 ஆவது குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் வாசகங் கள்தான் என் மனதில் இருக்கின்றன. குரு கோவிந்த் சிங் சொன்னார், சிட்டுக் குருவி களை வல்லூறுகளோடு மோதச் செய்யாவிட்டால், எனக்கு குருகோ விந்த் சிங் என்ற பெயர் இருந்து பயன் இல்லை. வல்லூறுகளை எதிர்த்து சிட் டுக்குருவிகளைப் போராட வைக்க முடியும். இந்த வாசகம் குருகோவிந்த் சிங் கின் வாசகம் என் மனதைக்கவர்ந்த வாசகம் என்று சொன்னார்.

தூக்குமேடைக்கு பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு மூவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள். கைகளைப் பின்பக்கமாகக் கட்டினார்கள். கருப்புத் துணியை முகத்தில் போர்த்தினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 21 ஆம் தேதி, கவர்னருக்கு இந்த மூவரும் கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதியிருந் தார்கள். அந்தக் கடிதத்தில்தான் குறிப்பிட்டார்கள்.‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங் கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல் லுங்கள்’ என்று கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்கள். ஆனால், அதை கவர்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இப்பொழுது அவரைத் தூக்குமேடைக்குக் கொண்டுசெல்லும்போது கடைசி விருப்பத்தைக் கேட்கிறான் அதிகாரி. அப்பொழுதும் சொல்கிறான் “நாங்கள் யுத்தக் கைதிகள். எங்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். எங்கள் இரத்தம் இந்த மண்ணில் சிந்தட்டும்.” என்கிறான்.

‘அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை’ என்கிறான் அந்த அதிகாரி.

‘அப்படியானால் எங்கள் கண்களின் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள். நாங்கள் பிறந்த மண்ணை நாங்கள் மகிழ்ச்சியாக பார்த்துச் சிரித்துக்கொண்டே சாக விரும்புகிறோம்’ என்கிறான். மீண்டும் இந்த மண்ணில் பிறக்க விரும்புகிற நாங்கள் இந்த மண்ணைத் தரிசித்தவாறே சாக விரும்புகிறோம் என்கிறான் பகத்சிங்.

உடனே அந்த அதிகாரி, தனக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, கண் கட்டுகளை அவிழ்த்து விடச்சொன்னான். கலகலவெனச் சிரித்தான் பகத்சிங். ‘ஏன் சிரிக்கிறாய்? என்றான். ,மகிழ்ச்சியாக இந்த மண்ணைத் தரிசித்தவாறே நான் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு நாங்கள் சாகின்ற காட்சியைப் பார்க்கின்ற பாக்கியம், உன்னைத்தவிர இந்த உலகத்தில் வேறு எவனுக்கும் கிடைக்க வில்லை’ என்று சொன்னான். மூவரையும் தனித்தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

தொடரும் ...........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment