Wednesday, September 4, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 3

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

அந்த மாவீரன் பகத்சிங் பிறந்தது செப்டம்பர் 28 என்று சொல்பவரும் உண்டு. ஆனால், பலரும் அக்டோபர் 7 என்று பதிவு செய்துள்ள காரணத்தால், அந்த அக்டோபர் 7 என்பது, புரட்சி இயக்கத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் என்பதால், Oh October thy name is Lenin என்று அக்டோபர் 7 ஐ அகிலம் கொண்டாடு கிற காரணத்தால், பெரும்பாலானோரின் கருத்தை ஏற்று, அந்த அக்டோபர் 7 ஆம் நாளையே பகத்சிங்கின் பிறந்த நாளாகக் கருதி, நூற்றாண்டு நிறைவு பெறுகிற நேரத்தில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துகிறோம்.

பகத்சிங்கின் குடும்பத்தில் தந்தை பாட்டனார் அனைவருமே போராட்ட உணர் வுக்காரர்கள். நாட்டின் விடுதலைக்குத் தங்களைத் தந்தவர்கள். பகத்சிங்கின் தந்தை கிக்ஷ்ன் சிங், அவருடைய சகோதரர் அஜீத் சிங், பாட்டனார் அர்ஜூன் சிங், அனைவருமே நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள். வழி வழியாக ஏறத்தாழ ஜமீன்தார் குடும்பம்தான். பகத்சிங் பிறந்த அன்றுதான் தந்தையின் சகோதரர் அஜீத் சிங் மகிழ்ச்சியோடு நீண்ட நாட்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரு கிறார்.

வித்யா கெளர் என்கின்ற பகத் சிங்கின் தாயார் மடியிலே குழந்தை கிடக்கிற
போது, இது அதிர்க்ஷ்டக்காரன் என்று இரண்டு மூன்று பெயர்களைச் சொல் கிறார்கள். அதிர்க்ஷ்டக்காரன் என்ற பெயரில், பகத் சிங் என்று பெயர் சூட்டு கிறார்கள்.

பகத்சிங்கின் 12 வயதிலே ஒரு பைசாகி நாள். 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13. மைக் கேல் டயர் என்கின்ற லெப்டினட் கவர்னர் உத்தரவின்பேரிலே, ஜெனரல் டயர் ஜாலியன் வாலாபாக்கில் 1650 ரவுண்டுகள் சுட்டான். 400 க்கும் மேற்பட்டவர் கள் அந்த இடத்திலேயே குண்டடிபட்டு இறந்தனர். கிணற்றுக்கு உள்ளே குதித் துச் செத்துப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் காயமுற்றார்கள். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது ஜாலியன் வாலா பாக் கில்.

அந்த இரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு ஜாடியில் போட்டுக் கொண்டு,12 வய துச் சிறுவன் பகத்சிங் வீட்டுக்கு வருகிறான். சிறியவயது. அந்த ஜாடிக்கு மேல் பூக்களை வைத்துக் கொண்டு வருகிறான். ஒரு பூங்கொத்தைப் போலக் கொண் டுவருகிறான். தன் தங்கையை அழைக்கிறான். ‘இந்த ஜாடியைத் தொட்டு பூஜித் துக் கும்பிடு’ என்கிறான். கடவுளின் படத்தைப் பார்த்துக் கும்பிடுவதைப்போல, வணங்குவதைப்போல, பூஜிப்பதைப்போல, அவள் வணங்குகிறாள். இவனும் வணங்குகிறான். இரத்தம் தோய்ந்த மண்ணை ஜாடியில் வைத்து வணங்கச் சொன்னானே, அந்த பகத்சிங்கின் நிகழ்ச்சியை ஆயுதபூஜை நேரத்தில் நடத்து வது தானே ரொம்பப் பொருத்தம்.

ஆயுத பூஜைக்காக ஆங்காங்கே தெருக்களில் வாழை மரங்களைக் கட்டி எல் லாவிதமான ஏற்பாடுகளும் செய்து, கோலமிட்டு நமது மங்கையர் நவராத்திரி விழா கொண்டாடுகிறபோது, அவரவர் தங்கள் கருவிகளைப் பூஜை செய்வ தற்கு ஆயுதம் வாங்குகிறார்கள் என்றால், இந்திய விடுதலையின் மகத்தான ஆயுதத்தின் பெயர்தான் பகத் சிங். ஆகவேதான், நாங்கள் நல்லநேரத்தில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அதற்குப்பிறகு 2 ஆண்டுகள் கழித்து, 14 ஆவது வயதில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்ட எழுத்துகளைக் கையால் எழுதி, அந்தக் காகிதங்களைக் கொண்டு போய் சுவர்களில் ஒட்டுகிறான் பகத்சிங். போலிஸ் பிடித்துக் கொண்டுபோய் காவல் நிலையத்தில் நையப் புடைக்கிறார்கள். ஆனால், கைது செய்து சிறை யில் அடைக்கவில்லை. அவனை அடித்துச் சித்ரவதை செய்து அனுப்பி விடு கிறார்கள். இப்படித்தான் தயராகிறான் பகத்சிங். சின்ன வயதிலேயே தயாரா கிறான் பகத் சிங்.

தொடரும்......

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment