07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
இதோ இறுதிநேரம் வந்துவிட்டது. தூக்கில் போடப்பட வேண்டிய நாள் 24. 22 ஆம் தேதி வரை ஆணை வரவில்லை. 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறை யில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஆறு மணிக்குத்தான் கைதிகள் கொட்டடிக்கு உள்ளே செல்ல வேண்டும்.
திடீரென்று 4 மணிக்கு கத்தார் சிங் வந்து, ‘எல்லோரும் அறைக்குச் செல்லுங் கள் அறைக்குச் செல்லுங்கள். நாங்கள் எல்லா பிளாக்கையும் பூட்டப் போகி றோம்’ என்கிறார். எப்பொழுதும் ஆறு மணிக்குத்தான் செல்லைப் பூட்டுவார் கள், இன்றைக்கு 4 மணிக்கே பூட்டப் போகிறோம் என்கிறார்களே என்று ஒரு வருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தலைமை வார்டன்மேல் அனைவருக்கும் மரியாதை. அவர் சொன்னால் சரியாக இருக்கும். அவர் நல்ல மனிதர். எல்லோரும் கொட்டடிக்குள் சென்று விடுகிறார்கள்.
அப்பொழுது பிரேம்நாத் மேத்தா என்கின்ற பகத்சிங்கின் வக்கீலுக்கு அங்கே நேர்காணலுக்கு அனுமதி கிடைக்கிறது. அவர்தான் பகத்சிங்கைக் கடைசி யாகச் சந்தித்தவர். அவர் இண்டர்வியூ அறையில் இருக்கிறார். பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் கடைசி சந்திப்பு. பிரேம்நாத் தான் பகத்சிங்கை தூக்கில் போடுவதற்கு இரண்டுமணி நேரத்துக்கு முன் சந் தித்தவர்.
பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். வந்த உடன் பகத்சிங், ‘நான்
கேட்ட புத்தகம் கிடைத்ததா?’ என்கிறார். என்ன புத்தகம்? கேட்டார் என்றால், Lenin the revolutionary ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
கேட்ட புத்தகம் கிடைத்ததா?’ என்கிறார். என்ன புத்தகம்? கேட்டார் என்றால், Lenin the revolutionary ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
‘புத்தகம் கிடைத்தது’ என்று கையில் கொடுக்கிறார் வழக்கறிஞர் மேத்தா. உட னே பகத்சிங் மிகவும் மகிழ்ச்சியுற்று அங்கேயே அதைப்படிக்க ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, சொல்கிறார் ‘அநேகமாக நாளைக்குக் காலையில் தூக்கில் போட் டாலும் போட்டுவிடுவார்கள்’ என்று சொல்கிறபோது, ஜவஹர் லால் நேருவுக் கும், சுபாக்ஷ் சந்திர போசுக்கும் அவர்கள் நான் சிறையில் இருந்தபோது கவ லைப்பட்டு என் வழக்கில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இரண்டு பேருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங் கள்’ என்று வக்கீலிடம் சொல்லிவிடுகிறான் பகத்சிங். திரும்ப கொட்டடிக்கு கொண்டு போனார்கள் பகத்சிங்கை.
அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறார். அப்பொழுது, ‘சாகேப் சா கேப்’ என்கிறார்கள்.சிறையில் எல்லாம் கம்பிபோட்ட கதவு கிடையாது. இப் பொழுது எங்களுக்கு எல்லாம் கொட்டடியில் கம்பி போட்ட கதவு இருந்தது. எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதில் கதவைத் தகரத்தைப்போட்டு மூடி விட்டான். உள்ளே இருக்கிறார். பகத்சிங் இருக்கின்ற அறைக்குவந்து, ‘சாகேப் சாகேப் கதவைத் திற’ என்கிறார்கள். பகத்சிங்கோ, ‘இப்பொழுது என்னை இடை யூறு செய்யாதே. நான் ஒரு புரட்சிக் காரனைச் சந்தித்துக் கொண்டு இருக்கி றேன்’ என்கிறார்.
முக்கியமான புரட்சிக்காரனை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்றவுடன் பயந்து, மேலே சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு ஓடி, அங்கு இருந்து பெரிய படை அணிகளோடு வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் திறந்து பார்க்கிறார்கள் புரட்சிக்கார லெனின் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறார் பகத் சிங். என்னவென்று கேட்கிறார். ‘உங்களைத் தூக்கில் போடப்போகிறோம்’ என்கிறார்கள். ‘நாளைக்குக் காலையில்தானே எங்களுக்குத் தூக்கு. இன்னும் பதினொரு மணிநேரம் இருக்கிறதே?’ என்கிறார். ‘இல்லை பைனல் ஆர்டர் வந்து விட்டது. இன்றைக்கே தூக்கில் போடவேண்டும்’ என்கிறார்கள்.
No comments:
Post a Comment