தமிழ் இனத்தைக் காப்பாற்ற...
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அச்சுறுத்தல்களை முறியடிக்க,
#வைகோ வின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தாக வேண்டும்!
விருதுநகர் மாநாடு அதற்கு வழி அமைக்கும்!
விருதுநகர் மாநாட்டுத் தலைமை உரையில் இமயம் ஜெபராஜ்
விருதுநகரில் செப்டம்பர் 15 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - மறுமலர்ச்சி திமுக மாநாட்டுக்குத் தலைமை
வகித்து, கழக உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ்ஆற்றிய உரை வருமாறு:
பெருந்தலைவர் காமராஜர், குமாரசாமிராஜா, ஏ.வி.பி. ஆசைத்தம்பி,சங்கரலிங் க நாடார் போன்ற, இந்த மண்ணிற்கும் மண்ணின் மைந்தர் களுக்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக சீலர்களைத் தந்த தியாக பூமியான விருது நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தமாபெரும் மாநாட்டின் திறப்பாளர்
சகோதரர் செவந்தியப்பன் அவர்களே,
வரவேற்புரை நிகழ்த்திய,இந்த மாபெரும் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் விருதுநகர் மாவட்டச்செயலாளர் சகோதரர் ஆர்.எம். சண்முகசுந்தரம் அவர்களே, கழகக் கொடியினை ஏற்றிவைத்த சகோதரர் சிப் பிப்பாறை ரவிச்சந்திரன் அவர்களே, அறிஞர் அண்ணா சுடர் ஏற்றி வைத்த சகோதரர் சதன் திருமலைக்குமார் அவர்களே,பல்வேறு காட்சிகளை உள்ளடக் கிய கண்காட்சிகளைத் திறந்து வைத்த சகோதரிகள் குமரி விஜயகுமார், டாக் டர் ரொஹையா, பேராசிரியை பாத்திமா பாபு உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகி களே,
இந்த மண்ணிற்காகவும், மொழிக் காகவும், இனத்திற்காகவும், தங்கள் இன்னு யிரைத் தந்த தியாகிகளின் படங்களை திறந்து வைத்த கழக முன்னோடிகளே.... இன்று காலை முதல் பல்வேறு தலைப்புகளில் கழகத்தின் கொள்கைகளை இங்கே உரையாக நிகழ்த்திய சகோதரர் கணேசமூர்த்தி உள்ளிட்ட கழக முன் னோடிகளே...
கழகத்தின் அவைத் தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களே, பொரு ளாளர் டாக்டர் மாசிலாமணி அவர்களே, துணைப் பொதுச் செயலாளர்கள் அண்ணன் நாசரேத் துரை, அண்ணன் மல்லை சத்யா, அண்ணன் துரை. பால கிருஷ்ணன் உள்ளிட்ட கழகத்தின் தூண்களே,
தமிழகம் முழுவதும் கழகத்தினை கட்டிக்காத்து வரும் தலைவர் வைகோ-வின் தளபதிகளான மாவட்டச் செயலாளர்களே, கழகத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளே,இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை தன் காந்தக் குரலால் தொகுத்து வழங்கும் சகோதரர் ஆவடி அந்தரிதாஸ் அவர்களே, இலட் சக் கணக்கில் இங்கே கூடியிருக்கும் தலைவர் வைகோவின் வரிப்புலிகளே...
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களே... உங்கள் அனைவருக்கும்
வணக்கம்...
சாமானியனாகிய என்னை இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனை மாநாட் டின் தலைவராக அறிவித்ததற்காக பொதுச் செயலாளர், வரலாற்று நாயகன் வைகோஅவர்களுக்கும் மற்ற முன்னணி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு எத்தனையோ மாநாடுகள் நடத்தப் பட்டு இருந்தாலும் இன்று நடைபெறுகின்ற இந்த மாநாடு தமிழக அரசியல் வர லாற்றில் மதிமுக பயணிக்கவிருக்கிற புதிய அரசியல் பாதையை உலகிற்கு உணர்த்தப் போகின்ற மாநாடு ஆகும்.
இனி தோல்வி என்பதே நமக்கு கிடையாது. தமிழக அரசியல் வரலாற்றில் மாற் று அரசியலுக்கான தொடக்கம் தான் விருதுநகர் மாநாடு என்பதை உலகிற்கு
உணர்த்தும் வகையில் சிறப்போடு இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கி றது.
சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் தமிழர்களின் உரிமை களை மீட்டெடுப்பதற்காகவும், உலகம் முழுவ தும் பரவிக்கிடக்கின்ற தமிழர் களின் உரிமைகள் எங்கே பறிக்கப் பட்டாலும் உரக்க குரல் கொடுத்து வரும் நம் தலைவர் வைகோ வழியை பின்பற்றி இங் கே கூடியிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை முதலில் தெரி வித்துக் கொள்கிறேன்.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றம் வேண்டி தமிழக மக்கள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக-வுக்கு வாக்களித் தனர்.
ஆனால், கொடிய நோய் நம்மிடமிருந்து அண்ணாவைப் பறித்துக் கொண்ட தால் 1967 இல் நடந்த அரசியல் மாற்றம் பாதை மாறிப் போனது.
இன்று மீண்டும் ஒரு அரசியல் மாற்றம் வேண்டி அதே விருதுநகர் மண்ணில்
நாம் கூடியிருக்கிறாம். 1967-ல் ஏற்பட்ட அண்ணாவின் ஆட்சி 10 ஆண்டுகள்
நீடித்திருக்குமானால் தமிழக அரசியல் வரலாறே மாறிப்போயிருக்கும். தமிழ கத்தின் இந்த 50 ஆண்டுகால சீரழிவு நமக்கு ஏற்பட்டிருக்காது. 10 ஆண்டுகால ஆட்சியிலேயே அடுத்த 50 ஆண்டுகளுக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய வற்றுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து இருப்பார் அண்ணா.
ஆனால், இயற்கை நம்மிடம் இருந்து அண்ணாவைப் பறித்த காரணத்தினால்,
இன்று தமிழன் எல்லா மட்டத்திலும் இழப்புகளைச் சந்தித்து நாதியற்றவனாக
நிற்கிறான்.
சொந்த நாட்டுக்குள்ளேயே பக்கத்து மாநிலங்களால் வஞ்சிக்கப்பட்டு நிற்கி றான். நமது உரிமையைக் கூட பெற முடியாத சூழ்நிலை. காவிரியில் நமக்கு
உரிமையான நீரை உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் நம்மால் பெற முடி யவில்லை. முல்லைப் பெரியாறு அணை நமது உரிமை. நம்முடைய பணத் தில் கட்டப்பட்டது. பென்னிகுக் தனது சொத்தை விற்று கட்டியது. ஆனால் இன்று கேரளமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அணையை இடித்தே தீருவது என பிடிவாதத்தோடு நிற்கிறது. பாலாற்றிலும் தேவையற்ற சர்ச்சைகள். ஆந்திரமும் நம்மோடு மல்லுக்கு நிற்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கிறது. கேரளத்திலே 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற இத் தாலி கடற்படை வீரர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டுமென்பதில் கேரள அரசும் மத்திய அரசும் எத்தனை முனைப்பை காட்டின என்பதை நாடே
அறியும்.
இத்தாலி தூதரை அழைத்துக் கண்டித்ததோடு தூதரக உறவை துண்டிப்பதாக கூட மிரட்டியது மத்திய அரசு. ஆனால் இங்கே சுமார் 600-க்கும் மேற்பட்ட மீன வர்களை நடுக்கடலில் சுட்டுக் கொன்ற பிறகும் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது,மத்தியிலே சோனியா வழிகாட்டுதலில் நடைபெறுகின்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு.
ஏன், தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுடைய உயிர்களுக்கு இந்தி யாவில் மதிப்பில்லையா? அவர்களுக்கும் குடும்பம் உறவுகள் இருப்பார்களே, அவர்களுடைய கதி என்னாவது? இவர்களைப் பற்றி மத்திய அரசு என்றாவது கவலைப்பட்டு இருக்குமா? இரண்டு மீனவர்களின் உயிர் உங்களுக்கு முக்கி யம் என்றால்,தமிழக மீனவர்களின் உயிர்களும் எங்களுக்கு முக்கியம்தான்.
இதை ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. இத்தனை கொடுமை களும் போதாதென்று இப்போது புதிதாக இரண்டு போர்க் கப்பல்களை இலங் கைக்கு வழங்கப் போகிறார்களாம். எதற்காக? மேலும் மேலும் தமிழக மீனவர் களை சுட்டுக் கொல்வதற்காக! என்ன அநியாயம்..தன்னாட்டு பிரஜைகள்,600-க் கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்ற இன்னொரு நாட்டு கடற்படைக்கு உல கத்தில் எந்த நாடாவது இப்படிப்பட்ட உதவியைச் செய்யுமா?
உலகத்திலே இருக்கிற மூன்றாம் தர நாட்டில் கூட இந்தக் கொடுமை நடக் காது. அவன் இந்திய மீனவனைச் சுடவில்லை. தமிழன் என்பதால்தான் சுடு கிறான். தமிழன் அவனுக்கு எதிரி.ஆனால் இந்தியன் அவனுக்கு நண்பன். வட இந்தியர்கள் அனைவரும் எனது உறவுகள் என்று இலங்கை தூதரே சொல் கிறான்.
ஆக, சிங்களவன் நினைப்பது சரியென்றால் இந்திய அரசும் மீண்டும் மீண்டும் அவனுக்கு உதவுவதும் சரியென்றால், தமிழக இளைஞர்கள் நாம் இந்தியர்கள் தானா என்ற சந்தேகம் கொள்வதில் என்ன தவறு?
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதற்காக 5 தமிழக மீனவர் களைச் சுட்டுக் கொலை செய்கிறான் சிங்களவன். அவனுடையை கோபம் நியாயமானது என இந்தியா நினைக்கிறதா..? இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதற்காக படுகொலை செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களுக்காக இந்தியா செய்தது என்ன...? ஒரு கண்டன அறிக்கையாவது இந்தியாவில் எங்கிருந்தா வது தெரிவிக்கப்பட்டதா...?
இந்தியா எதில் வெற்றி பெற்றாலும், உலக வல்லரசாக மாறினாலும் நான் ஏன்
மகிழ்ச்சியடைய வேண்டும்? இந்தியனாகப் பிறந்ததற்காக வெட்கப் படுகி றேன்... தமிழனாகப் பிறந்ததற்கு கர்வப்படும் காலம் வரும்.
இளைஞர்களும் மாணவர்களும், நம்மை இந்திய அரசு இரண்டாம் தர குடிமக்க ளாக நடத்துவதாக நினைப்பதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், மத்திய அர சின் செயல்பாடு உள்ளது. கப்பல் வழங்க இருக்கிறீர்கள். இப்போது கச்சதீவி லும் எங்களுக்கு உரிமை இல்லை என்கிறீர்கள். கச்சத்தீவு தமிழர்கள் ஆண்ட மண். சேதுபதி மன்னர்கள் ஆண்ட அந்த பூமியை இந்திய அரசு தன்னுடைய சுய நலத்திற்காக இலங்கைக்கு தாரை வார்த்தது.
அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி தன்னைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக வாய் மூடி மவுனமாக இருந்தார்.இன்றைக்கு மத்திய அரசு கச்சத்தீவை தமிழகம் சொந்தம் கொண்டாட உரிமையில்லை, அது இலங்கைக்குச் சொந்த மானது என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது.
நான் கேட்கிறேன். அது இலங்கைக்கு சொந்தமானது என்றால், கச்சத்தீவை
இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக எப்படி இந்திராகாந்தி இலங்கையுடன்
ஒப்பந்தம் போட்டார்? தமிழக மீனவர்கள் அங்கிருக்கும் தேவாலயத்திற்குச் செல்லலாம், வலைகளை உலர்த்தலாம் என்ற ஸரத்தை ஒப்பந்தத்தில் எப்படிச் சேர்த்தீர்கள்?
இலங்கைக்குச் சொந்தான கச்சத்தீவை இந்தியா ஆக்கிரமித்து பின்னர் திருப் பிக் கொடுத்ததா? அப்படி எந்தச் சம்பவமும் நடந்ததாக வரலாறு இல்லையே?
அதற்கு ஆதாரங்களைக் காட்ட முடியுமா? இலங்கை அரசே இப்படியொரு கருத்தைச் சொன்னது இல்லை. கச்சத்தீவைத் திருப்பித் தர முடியாது என்று தானே இது வரை சொல்லி வந்தது. திருப்பித் தரமுடியாது என்று சொன்னாலே வாங்கியதை அவர்களாகவே ஒப்புக் கொண்டதாகத் தானே அர்த்தம்.
அவனே ஒப்புக் கொண்ட ஒன்றை நீ ஏன் மறுக்கிறாய்? கச்சத்தீவு எங்கள் மண்.
நம் முன்னோர்கள் ஆண்ட மண். அதை இப்போது இழந்து நிற்கிறோம். தமிழர் களை மத்திய அரசு இளிச்சவாயர் களாக நினைப்பதன் விளைவுதான் இது.
இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. வந்தால் தமி ழகத்தையே கூட அன்னிய நாட்டிற்கு தாரை வார்க்கத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட நமக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பு தான் வருகிற நாடாளுமன்றத் தேர்தல்.
இந்தியக் குடிமக்கள் ஏழு கோடித் தமிழர்களை விட, சிங்களவன் தான் இந்திய அரசுக்கு முக்கியமா? இப்படிப் பட்ட துரோகம் இனி தொடரக்கூடாது.
டெல்லி யிலே ஒரு மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந் த போது, அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை; கேரளாவிலே இரண்டு மீன வர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது அதற்கு கொடுத்த முக்கியத்து வத்தை; இலங்கையிலே பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டபோது, அந்தச் செய்தியை தேசிய ஊடகங்கள் ஒன்றா வது ஒளிபரப்பியதா?
600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திகளுக்கு என் றைக்காவது டெல்லி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் களா. .. தினம்தோறும் சிங்களப் படைகளால் சுட்டுக் கொல்லப்படும், அடித்து விரட்டி
அடிக்கப்படும் மீனவர்களின் துயரத்தை தேசிய ஊடகங்கள் இன்றைக்கும்
கண்டுகொள்ளவில்லையே! மும்பை தாக்குதலுக்குப் பின் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் நாட்டு வீரர்களை சேர்ப்பதில்லை என்ற முடிவை ஐபிஎல் நிர்வாகம் எடுத்த போது, அதை நியாயப்படுத்தி வரிந்து கட்டிக் கொண் டு ஆதரித்தன டெல்லி ஊடகங்கள்.
ஆனால், இறுதி கட்டப் போரில் இலங்கை செய்த கொடூரங்களைக் கண்டும் தலைவர் பிரபாகரனின் மகனாகப் பிறந்ததைத் தவிர எந்தத் தவறும் செய்யாத பாலகன் பாலசந்திரனை சுட்டுக் கொலை செய்த புகைப்படங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வேளையில் அதைக் கண்டு ஒட்டு மொத்த தமி ழகமும் வேதனையில் தவித்தது.
அதற்கு மதிப்பளிக்கின்ற வகையில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளை யாடுவதை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு முடிவெடுத்தபோது அதைக் கேலியும் கிண்டலும் செய்தன வட இந்திய ஊடகங்கள். விளையாட்டு
வேறு வெளிநாட்டுக் கொள்கை வேறு.இந்த விசயத்தில் தமிழக அரசு தவறு
செய்துவிட்டது என பிரசாரம் செய்தன டெல்லி மீடியாக்கள்.
நான் கேட்கிறேன். மும்பை மக்கள் இறந்தபோது உங்களுக்கு ஏற்படுவது துக் கம் என்றால் என் இனம் படுகொலை செய்யப்படுகிறபோது நான் துக்கப்படக்
கூடாதா?
மத்திய அரசு மட்டுமல்ல... வட இந்திய ஊடகங்களும் நம்மை ஓரவஞ்சனை
யோடுதான் நடத்துகின்றன.
ஜனநாயகத்தின் தூணாக வர்ணிக்கப் படுகிற பத்திரிகைகள், மீடியாக்கள் கூட
தமிழனை இரண்டாம் தரக்குடிமக்களாக நினைப்பது நியாயமா?
1983-ஆம் ஆண்டு ஈழத்திலே படுகொலைகள் நடைபெற்றபோது இங்கே மத்தி யிலே இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். தமிழகத்திலே எம்ஜிஆர் முதல்வ ராக இருந்த காரணத்தினால் இவர்கள் இருவரோடும் புலிகள் இணக்கமாக இருந்தனர்.
அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்
என எதிர்பார்ப்பது இயல்பு தானே? ஈழ விவகாரத்தில் அன்று தொடங்கியது
கருணாநிதியின் துரோகம். பிரதமரோடும் முதல்வரோடும் புலிகள் நட்பு பா ராட்டியதால், அவர்களும் முடிந்த வரை உதவிகளைச் செய்தனர். ஆனால்
தமிழ் மக்களால் தாம் மறக்கப்பட்டு விடுவாமோ என்ற அச்சத்தில் தன் இருப் பைக் காட்டிக் கொள்ள குட்டையைக் குழப்பியவர் கருணாநிதி.
புலிகளோடு சிறிய மனக்கசப்பில் இருந்த மற்ற குழுக்களை தன் பக்கம் ஈர்க்க
திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவுவது போல் இந்த விவகாரத்தில் அரசியல்
ஆதாயம் தேடத் தான் டெசோ அமைப்பைத் தொடங்கினார்.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெசோ நாடகத்தை மீண்டும் அரங் கேற்றிக் கொண்டு இருக்கிறார்.ஆக புலிகள் அமைப்பையோ, தலைவர் பிரபா கரனையோ அவர் என்றும் அங்கீகரித்ததில்லை. பிரபாகரனின் வெற்றி தமிழி னத்தலைவர் என்ற அவரது பட்டத்தைப் பறிக்கும் என்பது அவருக்குத் தெரி யும்.
திமுக-வில் இருந்து கொண்டே தலைவர் பிரபாகரனையும் புலிகளையும் ஆத ரிப்பது சிரமமான காரியம். காரணம்,புலிகளையும் தலைவர் பிரபாகரனையும்
வெறுத்த கருணாநிதி தலைவராக இருக்கின்ற திமுக-வில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளால் தான் தமிழீழத்தைப் போராடிப் பெற முடியும் என்பதால் புலிகளை ஆதரித்தவர் தலைவர் வைகோ.
அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கொண்ட கொள்கை யில் உறுதியாக இருப்பவர் தலைவர். ஈழம் என்பது அவரது ரத்தத்தில் ஊறிப் போன ஒன்று. ஆனால் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனது அரசியல் ஆதாயத்துக்காக ஈழ விவகாரத்தை கையிலெடுத்து செயல் பட்டவர். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு எந்த உதவியையும் செய்ய மறுத்து துரோகம் இழைத்தவர் கருணாநிதி.
இன்றைக்கு, ஈழ விடுதலைக்காக பாடுபடுகிறவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு இருப்பவர்கள்,அதற்காக செய்தது என்ன? ஒரு துரும்பைக் கூட தூக் கிப் போட்டது கிடையாது. இவர்களது அதிகபட்ச சாதனையே தலைவர் பிரபா கரனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதுதான்.அதனைக்காட்டியே இன்று அரசியலில் பிழைக்க நினைக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு தலைவர் வைகோ-வை குறை சொல்ல எந்தத் தகுதியும் கிடையாது.
முன்பெல்லாம் சாலையோரங்களில் லேகியம் விற்பவர்களைப் பார்த்து இருப் பீர்கள். பிரபலமான நடிகர் நடிகைகளோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப் படத்தை வரிசையாக வைத்திருப்பார்கள். அது அவர்களது வியாபார தந்திரம். இந்த அரசியல் வியாபாரிகளைப் பார்க்கிற போது எனக்கு லேகியம் விற்ப வர் கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த வியாபார தந்திரம் அரசியலில் வெற்றி பெறக் கூடாது.
என்னைப் பொறுத்தவரை ஈழ விவகாரத்தில் அன்று முதல் இன்று வரை உறுதி மாறாது இருப்பவர்கள் ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தலைவர் வைகோ-வும் மட்டும்தான். தமிழர் களுக்காக பாடுபடுவதாக தன்னை காட்டிக் கொள்ப வர் கள் முதலில் பெரியவர்களை மதித்து நாவடக்கத் தோடு நடக்கட்டும்.
தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க சிலர் சதி செய்கிறார்கள். சில தமிழக
பத்திரிகைகளின் துணையோடு, தென் தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக,யாழ்ப் பாணம் சென்றவர்களை,யாழ்ப்பாணத் தமிழர்கள் மரியாதைக் குறைவாக நடத் தியிருக்கிறார்கள் என,தொடர்ந்து தவறான எண்ணத்தோடு செய்திகளைப் பரப்புகிறார்கள். ஒரு சில இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்திருக் கலாம், இங்கே தமிழகத்தில் கூட இதைப்போன்ற சம்பவங்கள் பல நடந்திருக் கின்றன.அவற்றைப் பேசுவதற்கான சூழல் இதுவல்ல. இது தமிழர்களின் ஒற் றுமையைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட சதியாகும்.
அதைப்போலவே ஈழத்திலிருக்கும் தமிழர்கள் நிம்மதியாக சகலவசதி களோடு, வாழ்வதாகவும், தமிழகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள்தான் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றும் தவறான தகவல்களை சில பத்திரிகைகள் திட்டமிட்டு உண்மைக்கு மாறான செய்திகளை இங்கே பரப்புகிறார்கள்.
ஈழத்திலிருக்கும் தமிழர்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் இராணுவக் கண்காணிப்பில் இருக்கும் மக்கள் தங்கள் விடுதலையைப் பற்றி எப்படி பேசுவார்கள்? அவர்கள் கடுமையான
இழப்பைச் சந்தித்தவர்கள். ஆனால், ஒரு போதும் சிங்களவனுக்கு அடிமை யாக வாழ விரும்ப மாட்டார்கள். துக்க வீட்டிலிருப்பவர்கள் அடுத்து செய்ய
வேண்டிய காரியம் பற்றி, அந்த வேளையில், அந்தச் சூழ்நிலையில் சிந்திப்பார் களா?
தொப்புள் கொடி உறவுகளாகிய நாம்தான் அடுத்தகட்டத்திற்கு அதை நகர்த்திச் செல்லவேண்டும். நமது ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.
ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை நூறாண்டுகளானாலும்
மறக்கக் கூடாது. நாம் நமது பிள்ளை களுக்கும் சொல்லுவாம். அவர்கள் அவர் களது பிள்ளைகளுக்கும் சொல்லட்டும். நான் எனது காலத்திற்குள் ஈழத்தைக் காண வேண்டும் என்ற கனவு உண்டு. என்னை விட ஆயிரம் மடங்கு ஆவலோ டு இருப்பவர் தலைவர் வைகோ. ஈழத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அமைத் தவர் தலைவர் பிரபாகரன்.அதை இன்று துரோகத்தால் இழந்து நிற்கிறோம்.
அர்ஜென்டினாவிலே பிறந்து கியூபாவின் விடுதலைக்காக பாடுபட்ட சேகுவே ராவைப் போல் ஈழத்தில் பிறக்காவிட்டாலும் ஈழத்துக்காக போராடி அதைப் பெற்றுத் தருகிற ஒரு சூழலை தலைவர் வைகோ உருவாக்குவார். அதற்கு தாய்த் தமிழகம் துணை நிற்க வேண்டும். 2004-ஆம் ஆண்டு முதல் நாடாளு மன்றத்தில் தலைவர் வைகோ-வின் குரல் ஒலிக்கவில்லை.
2004-ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் இலங்கை அர சுக்கு இந்தியா செய்த ராணுவ உதவிகளை தோலுரித்துக்காட்டியிருப்பார். 2009-ஆம் ஆண்டும் திட்டமிட்டே குறிவைத்து தோற்கடிக்கப் பட்டார். இனி அப்படி ஒரு சூழல் உருவாகக் கூடாது.ஒட்டு மொத்தத் தமிழர்களின் குரலாக தமிழகத் தைச் சூழ்ந்து இருக்கின்ற அச்சுறுத்தல்களை முறியடித்து தமிழகத்தைக் காப் பாற்ற அவரது குரல் நாடாளுமன்றத்திலே ஒலித்தாக வேண்டும். அதற்கு இந்த
விருதுநகர் மாநாடு தொடக்கமாக இருக்கட்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம். அமையப் போகின்ற
புதிய அரசில் நமது திறமைகளை நிரூபிப்போம். 2016 இல் தமிழக முதல்வராக தலைவர் வைகோ அரியணை ஏற சபதம் ஏற்போம்.வருங்கால முதல்வர் வைகோ என அழைப்பதை தலைவர் இப்போது விரும்பாவிட்டாலும் நாடா ளுமன்றத் தேர்தலுக்குப் பின் வருங்கால முதல்வர் என்றே அழைப்போம். யார் யாரோ தன்னை வருங்கால முதல்வர் என்று அழைக்கும் போது நமது தலை வரை நாம் அப்படி அழைக்க கூடாதா?
தன்னையும் தனது வாரிசுகளையும் மீறி யாராவது கட்சியில் செல்வாக்கோடு
இருந்துவிட்டால் கருணாநிதிக்கு பிடிக்காது. மக்கள் செல்வாக்கோடு இருந்த எம்ஜிஆரின் புகழ் தனது அரசியல் வாழ்வை எந்த வகையிலாவது பதம் பார்த் துவிடும் என்ற பயத்தின் காரணமாகத் தான் எம்ஜிஆர் அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றினார்.ஆனால் இறுதியாக நீதி வென்றது. எம்ஜிஆர் உயி ரோடு இருந்த காலம் வரை கருணாநிதியால் மீண்டும் முதல்வர் நாற்காலி யில் அமர முடியவில்லை.
அதைப் போல, கருணாநிதியின் மகன் என்பதைத் தவிர, எந்தத் தகுதியும் இல் லாத ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பாரோ என நினைத்த தால், தலைவர் வைகோ அவர்களை கொலைப்பழி சுமத்தி கட்சியை விட்டு வெளி யேற்றினார் கருணாநிதி.
கருணாநிதி அவர்களே…! ஒன்றை மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இங்கேயும் நீதி வெல்லும். எந்த மகனுக்காக தலைவர் வைகோ அவர்களை கட்சியை விட்டு நீக்கினீர்களோ அந்த மகன் ஸ்டாலின்ஒருபோதும் முதல்வர் நாற்காலியில் அமர தமிழகம் அனுமதிக்காது.
2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்த நாள் முதல் திட்டமிட்டு ஈழத்தில் இன அழிப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அதற்கு துணை போனவர்கள் தான் திமுக ஆட்சியாளர்கள். மத்திய அரசில் தான் விரும்பிய இலாகாக்களை எல்லாம் பெற்று அதன் மூலம் கருணாநிதியின்
மொத்த குடும்பமும் ஊழல் பணத்தில் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில்
இடம் பிடித்தார்கள். ஆனால் அவை அத்தனையும் ஈழத்தில் நடந்த இனக்
கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம். கருணா நிதி அவர்களே... நீங்களும் உங்கள் குடும்பமும் உண்ணுகிற ஒவ்வொரு அரிசி யிலும் ஈழத் தமிழர்களின் ரத்தம் படிந்திருக்கிறது.அதை மறந்து விடாதீர்கள்.
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகத் தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. முல்லைப் பெரியாறு, காவிரி, மீனவர் பிரச்சனை, இதற் கெல்லாம் உச்ச கட்டமாக உலகில் எந்த இனமும் இதுவரை அனுபவித்திராத கொடுமைகளையெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு செய்தார்கள்.இதற்குக் காரணம் காங்கிரஸ் தலைமையிலான அரசும் அதற்கு உடந்தையாக இருந்த திமுக தலைமையும். இவர்கள் மீண்டும் வெற்றி பெற்று விட்டால் அது உயிர்த் தியா கம் செய்த தமிழர்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.
தன்னையும் மனிதனாக மதித்து, அனைவரையும் சமமாக நடத்தி, கல்வியறி வும் புகட்டியதால்தான் சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப் பட்டிருந்த பல்வேறு சமூக மக்களும் கிறித்தவத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.இதைப் போலத் தான் இஸ்லாத்தைத் தழுவியவர்களும்.தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் இன்று அந்த சூழல் மாறி, ஒடுக்கப் பட்ட மக்களின் நிலை மேம்பட்டு இருக்கிறது.
பிறப்பால் நாம் அனைவரும் தமிழர்கள். மதத்தால் வேறுபட்டு இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை முதலில் நான் தமிழன். அதன் பிறகு தான் மதம்.
ஈழத் திலே படுகொலை செய்யப்பட்ட 1.75 லட்சம் மனித உயிர்களை விட, கொத்துக் கொத்தாக மடிந்த பச்சிளம் குழந்தைகளை விட, நடக்க முடியாத வயதான வக்களை கூட கொத்து குண்டுகளை வீசி கொலை செய்த கொடூரத் தைவிட, வயது வித்தியாச மின்றி பெண்களை கற்பழித்துக் கொலை செய்ததை எல்லாம் பார்க்கிறபோது எனக்கு மதம் ஒன்றும் முக்கியம் இல்லை.இந்த கொடூரத்தை செய்தவர்களுக்கு மதத்தைக் காரணம் காட்டி நான் ஆதரவாக இருந்தேன் என்றால்,அன்பையும் இரக்கத்தையும் போதித்த, நான் வணங்கு கின்ற தெய்வமே அதை ஏற்றுக் கொள்ளாது.
மனித நேயமற்ற மிருக குணமுள்ள சிங்கள நாய்களுக்கும் அவர்களுக்கு துணை போனவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்கள் வீழ்த்தப்பட
வேண்டும்.
அவர்களை வீழ்த்துகிற சக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு நாம்துணை நிற்க வேண்டும். மதவாதம் என்ற வீண் வாதம் இங்கு தேவையற்றது. மதச் சார்பற்ற கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த போதுதான் இன்று வரை ஆறாத வடுவாக இஸ்லாமியர்கள் மனங்களில்
இருக்கும் பாபர் மசூதி உடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
நாட்டில் அங்கொன்றும் இங்கொன்று மாக மனம் வருந்தும்படியான சம்பவங் கள் நடந்திருக்கலாம். அதை நாம் இப்போது பெரிதாக்கி ஈழத்தில் நடந்த இன அழிப்பை, படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர் களின் உயிர் களை நாம் சிறுமைப்படுத்தி விடக்கூடாது.
நம் மன வருத்தங்களையும் கசப்புகளையும் சற்று தள்ளி வைப்போம். எதிரி யை வீழ்த்தக் கிடைத்த ஆயுதம் எதுவாக இருந்தாலும் அதை இப்போது பயன் படுத்துவோம். எந்த குதிரை மீது அமர்ந்தாலும் அதன் கடிவாளம் நம் தலைவர் கையில் இருக்கும்.
அதைக் கட்டுப்படுத்தக் கூடிய தகுதியும் திறமையும் பெற்றவர் நம் தலைவர்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை, பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த
காலத்திலும், அவர் விட்டுக் கொடுத்தது இல்லை என்பதை நாம் நினைவில்
வைப்போம்.
கூட்டணியைப்பொறுத்தவரை நமது தலைவர் உரிய நேரத்தில் நல்ல முடிவை
எடுப்பார். ஆனால், தான் எடுக்கும் கூட்டணி குறித்த முடிவால் கழகத்தில்
இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தொண்டர்களின் மனங்கள்
புண்பட்டுவிடக் கூடாது என தலைவர் கருதலாம்.
நான் என்னுடைய கருத்தை இந்த மாநாட்டின் வாயிலாக இங்கே பதிவு செய் யக் காரணம், மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தன் னிகரில்லா தலைவராகிய நீங்கள் (வைகோ) எந்த முடிவு எடுத்தாலும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, சிறுபான்மை சமூகம் உங்கள் பின்னால் எப் போதும் போல் துணை நிற்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகவே.
இது பெரியார் பிறந்த மண். நாம் எல்லோரும் இன்று ஒரே மேடையில் எந்த விதப் பாகுபாடும் இல்லாமல் அமர்ந்திருக்கிறோம் என்றால் அது பெரியாரின் சாதனை. ஒரு பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு வரும் வேளையில்,பெரியார் பிறந்த மண்ணில் இருந்து அதற்கு ஆத ரவு அளிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அடிமைப்
படுத்தி வைத்திருக்கும் சிங்கள பாசிச அரசுக்கு எந்த வித உதவியும் வழங்கக்
கூடாது. சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று, பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித் தமிழீழம் அமைவதற்கு எக்காரணம் கொண்டும் தடையாக இருக்க கூடாது.
தமிழக வாழ் வாதாரங்களைப் பாதுகாத்திட நமது உரிமைகளை தங்கு தடை யின்றி பெற்றிட உத்தரவாதம் அளிக்கும் கட்சியுடன், தாமரை இலையில் தண்ணீராக இல்லாமல் உண்மையான நட்புடன் இணைவோம்.நமது எதிரி களை வீழ்த்துவோம்.
சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே! உங்களுக்கு துளி யேனும் மனசாட்சி இருக்குமானால் எங்களிடம் வாக்குக் கேட்டு தமிழகத் துக்குள் கால் பதிக்காதீர்கள். இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு அனைத்து உதவி களையும் செய்துவிட்டு, அந்த
கொடூரத்திற்கு துணை போய்விட்டு, தமிழர்களின் ரத்தம் தோய்ந்த கரத்தோடு
எங்களிடம் வாக்கு கேட்க வராதீர்கள். 1 லட்சத்து 75 ஆயிரம் உறவுகளை பலி
கொடுத்த துக்க வீடு தான் தமிழகம்.இனி தமிழன் உங்களிடம் ஏமாற மாட்டான்.
தமிழ்நாட்டு காங்கிரஸ் கனவான்களே... ஈழத்தில் கொடுமைகள் நடந்த போ தெல்லாம் வாய்மூடி அந்த கொடூரத்துக்கு உடந்தையாக இருந்து விட்டு இன் றைக்கு ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி தமிழர்களை ஏமாற் றலாம் என பகல் கனவு காணாதீர்கள். அது இனி பலிக்காது. சோனியா, ராகுல் பெயரைச் சொல்லி தமிழ் நாட்டில் நீங்கள் போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ்காரன் ஜெயிக்க முடியாது.தமிழ்நாட்டிலிருந்து ஒரு காங்கிரஸ்
காரன் கூட எம்.பி. யாக போகக் கூடாது.ஜாதியை மறந்து ஒன்று கூடுவோம்,
தமிழனின் தோல்விக்கு காரணமே பல்வேறு ஜாதிக் குழுக்களாக பிரிந்து கிடப் பதுதான்.
கடந்த 50 ஆண்டு கால தமிழகத்தின் இருண்ட காலத்தை 5 ஆண்டுகளில் தலை வர் நிவர்த்தி செய்வார். அண்ணா இந்த தமிழகத்துக்கு என்ன செய்ய நினைத் தாரோ அதைத் தலைவர் வைகோ நிறைவேற்றிக் காட்டுவார். 50 ஆண்டு கால பொதுவாழ்வில் எதிரிகள் கூட குற்றம் சொல்ல முடியாத அப்பழுக் கற்ற தலை வர். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்த போதும், ஒவ்வொரு நாளும் தமிழர்களுக்காக ஓய்வின்றி உழைத்து வருகிறார்.
அவரை அடையாளம் கண்டு பயன்படுத்திக் கொள்வது தமிழகத்தின் எதிர் காலத்திற்கு நல்லது. அமையப் போகின்ற அடுத்த நாடாளுமன்றத்தில் தலை வர் வைகோ-வின் குரல் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் குரலாக ஒலிக் கட்டும்.
2016 இல் தமிழக முதல்வராக தலைவர் அரியணை ஏறினால்தான் தாய்த் தமி ழகம் சிறக்கும். ஈழம் பிறக்கும்.அதற்கான பணிகளைத் தொடர்வோம்.
வணக்கம்.
இமயம் ஜெபராஜ் இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment