Tuesday, September 3, 2013

பேசும் சக்தி இருக்கும் வரை

தமிழகம் பெரிய அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது 

எனக்கு பேசும் சக்தி இருக்கும் வரை தமிழுக்காக பேசுவேன் எனக்கு போராடும் சக்தி இருக்கும் வரை தமிழருக்காக போராடுவேன்-#வைகோ 

தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துவக்க விழா நேற்று தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல் தலைமையில் நடந்தது. சங்கரகோபால், டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் எபநேசர் தாஸ் வரவேற்றார்.

மதிமுக தொழிற்சங்க கொடியை பொதுச்செயலாளர் வைகோ ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;
மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தொழிற்சங்க கொடியேற்று விழாவிற்கு இங்கு வந்துள்ள கூட்டமே இதற்கு சாட்சி . பெண் ஊழியர்கள் உட் பட அதிகமானோர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே மாற்றத்திற் கான அறிகுறியாகும்.

2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணிக்கு வந்தவர்களுக்கு பென்ஷன் கிடையாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அரசு ஊழியர்களுக்கு செய்துள்ள மிகப் பெரிய அநீதியாகும். புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து பார்லிமெண்டில் விவாதம் நடந்து வருகிறது. இதனை மதிமுக எதிர்க்கிறது. ஐ.மு. அரசு அவசர சட்டம் மூலம் இதனை நிறைவேற்ற முற்பட்டு கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களுக்குரிய உரிமையை கொடுக்க வேண்டும். முன்பு இருந்தது போல் பென்ஷன் திட்டத்தில் பழைய நிலையே தொடர வேண்டும். இதற்காக மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் சிகிச்சை பெற 24 மணி நேரமும் டாக்டர்கள் இருந்து செயல்படக் கூடிய ஆஸ்பத்திரி வேண்டும். ஒப் பந்த தொழிலாளர்களுக்கு 350 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.மின்வாரி யத் தில் 60 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதனை நிரப்பும் போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன் னுரிமை கொடுத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதிமுக சார்பில் அரசுக்கு இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

தொழிலாளர்கள் இல்லாமல் எதுவும் இயங்காது. அப்படிப்பட்ட தொழிலாளர் களின் பிரச்னைக்கு மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்க மதிமுக பாடுபடும். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித் துள்ளது. இதனை எதிர்த்து இன்னும் நான்கு நாளில் சுப்ரீம் கோர்டில் மதிமுக வழக்கு தாக்கல் செய்ய உள்ளது.தமிழகத்தில் மதுவால் பல குடும்பங்கள் அழிந்து வருகிறது. இதனால் மது அரக்கனை ஒழிக்க வேண்டும் என்று மதிமுக நடைபயணம் உள்ளிட்ட போராட்டங்களை மக்களுக்காக நடத்தி வருகிறது. இருபது ஆண்டுகளாக மதிமுக மக்களுக்காக போராடி கொண்டிருக்கிறது. 20 ஆண்டு பட்ட கஷ்டம் நிச்சயமாக வீண் போகாது. மக்களிடம் நம் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலை இவர்களால் தான் விரட்ட முடியும் என்று மக்கள் நினைக்க துவங்கியுள்ளனர்.எனக்கு பேசும் சக்தி இருக்கும் வரை தமிழுக்காக பேசுவேன் எனக்கு போராடும் சக்தி இருக்கும் வரை தமிழருக்காக போராடுவேன் ,இவ்வாறு வைகோ பேசினார்

No comments:

Post a Comment