விருதுநகரில் நாளை நடைபெறும் #மதிமுக மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். #வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை (15–ந்தேதி) விருதுநகர், சாத்தூர் ரோடு சூலக்கரையில் மதிமுக மாநில மாநாடு நடக்கிறது. மாநாடு காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெபராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் கணேச மூர்த்தி எம்.பி. உள்பட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள். நிறைவாக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த மாநாட்டில் 2 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் அனைத் து மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் பஸ், வேன், லாரிகளில் வருகிறார் கள்.
இந்த மாநாடு தொடர் பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியது
இதுவரை நடந்த அனைத்து மாநாடுகளையும் விட இந்த மாநாட்டில் சரித்திரத்
தில் இடம் பெறும் வகையில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். ஆடம் பரம் இல்லாமல் எளிமையாக மக்கள் மனம் கவரும் வகையில் இந்த மாநாடு அமையும். அண்ணா, ஈ.வெ.ரா., பெரியார் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பேனர் மற்றும் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
தில் இடம் பெறும் வகையில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். ஆடம் பரம் இல்லாமல் எளிமையாக மக்கள் மனம் கவரும் வகையில் இந்த மாநாடு அமையும். அண்ணா, ஈ.வெ.ரா., பெரியார் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பேனர் மற்றும் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. பாராளு மன்ற தேர்தலை மையமாக வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மருத்துவ அணி சார்பில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர் களின் கார், வேன்கள், பஸ்கள் ஆகியவற்றை நிறுத்த தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர் முழுவதும் ம.தி.மு.க. கொடி தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வாழ்வாங்கு வாழும் திரு வைகோவே ஒரு உண்மையான மக்கள் தலைவன்........... கட்சி ஆரம்பித்து 20 வருடங்கள் ஆனாலும் இன்னும் ஓய்வில்லாமல் & தோய்வில்லாமல் , மக்களின் நலம் காக்கும் எந்த பிரச்சனையாலும் களம் இறங்கிபோராடும் வேறு தலைவரை நாம் பார்க்கமுடியாது......... அதுவும் கடந்த 2 வருடங்களில் வைகோ & மதிமுகவின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்து உள்ளது..... அது வாக்குகளாக மாற வேண்டும்.............. விருதுநகர் மாநாடு அதற்க்கு வழிசெய்யும் ..........
ReplyDelete