Tuesday, September 10, 2013

உணர்த்தும் உண்மைகள்!

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; பொருளாதார வீழ்ச்சி; உணர்த்தும் உண்மைகள்!

பொருளாதாரப் புலிகள் என்று வர்ணிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பதவியை விட்டு வெளியேறும் போது, ‘நாடு திவால்’ ஆகி “மஞ்சள் கடுதாசி” கொடுக்க வேண்டிய நிலைமைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டு விட் டது. விடுதலை பெற்ற இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை வகித்த காங்கிரஸ் கட்சி,இந்தியப் பொருளாதாரத்தை மலை உச்சியிலிருந்து உருட் டித் தள்ளி இருக்கின்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 68 ஆக வீழ்ச்சி
அடைந்து விட்டது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டிருப்பதால் பொருளாதாரத் தின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.அத்தியாவசியப் பண்டங்கள், உணவுப் பொருள்களின் விலை இறக் கை கட்டிப் பறக்கின்றது. சாதாரண, ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர்
வாழ்வதற்கான உரிமைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தொழில்கள் முடங்கிக் கிடப்பதால் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் வேலை
இழப்புக்கு ஆளாகி உள்ளனர். உற்பத்தித் தொழிற்துறை பெரும் சரிவைக்கண் டிருப்பதால், நிரந்தரத் தொழிலாளர் களும் பணி இழக்க வேண்டிய சூழல் உரு வாகி விட்டது. கடந்த மே மாதத்திலிருந்து இந்தியப் பொருளா தாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.


ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து


ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்து, ஓய்வுபெற இருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

“நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு தவறியதன் கார ணமாக, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து பொருளாதார சிக்கலுக்கு வழி வகுத் துள்ளது. ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு இந்தியாவுக்கு வெளியே நிகழும் காரணிகளை, முக்கிய காரணமாகக் கூற முடியாது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான உள்நாட்டுக்காரணங்களின் அடிப்படையைக் கண் டறிந்து ஆய்வு செய்து, அதற்குத் தீர்வு காண வேண்டும். கடந்த மூன்று ஆண்டு களாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாங்கிக்கொள்ளும் அளவைவிட அதிக மாக உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிக ரிப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றபோதிலும், இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கியின்
அதிகார வரம்புக்குள் வராது.” ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவ், ஓய்வு பெறும் தருணம் என்பதால் உண்மை நிலையை உடைத்துப் போட்டுவிட்டார்.
இந்தியாவை ஆளும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுதான், பொருளாதார
வீழ்ச்சிக்குக் காரணமாகி உள்ளது என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெளிவாக்கி விட்டார்.

ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே என்று சமாளிக் கப் பார்க்கிறார்கள் பிரதமரும், நிதி அமைச்சரும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள விளக்கம் வெண்டைக்காயை வெட்டி விளக் கெண்ணெயில் போட்டது போல இருக்கின்றது.


பிரதமரின் விளக்கம்


நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 30-ஆம் தேதி, இந்தியப் பொருளாதார நிலை மை கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்த பிரதமர் மன்மோகன் சிங், அவரும் கவ லைப்படுவதாகக் கூறினாரே தவிர,ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியிலிருந்து காப் பாற்ற உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கான வாக்குறுதி எதையும் அளிக்க வில்லை.

“சில எதிர்பாராத வெளிக் காரணங்கள், சந்தையில் ரூபாயின் மதிப்பு அதிரடி
யாக வீழ்ச்சி காணச் செய்துள்ளன.அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியி லி ருந்து மீண்டு வருகிற நிலையில், கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகளைத்
தளர்த்தியதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளப் போவதாக அமெரிக்க ரிசர்வ் வங்கி மே 22-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இதனால் வளர்ந்து வருகின்ற நாடுகளுக்கு வந்த முதலீடுகள் குறையத் தொடங்கின.இந்திய ரூபா யின் மதிப்பு மட்டுமல்ல; பிரேசில் ‘ரியல்’, துருக்கி ‘லிரா’, இந்தோனேஷியா ‘ரூபியா’, தென் ஆப்பிரிக்கா ‘ராண்ட்’ மற்றும் பல நாடுகளின் நாணய மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளன.

சிரியா பிரச்சினையில் ஏற்பட்டுள்ள பதற்றம், அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் தளர்த்தியதைப் படிப்படியாகத்திரும்பப் பெறு வது ஆகியவை வளர்ந்து வரும் நாடுகளின் நாணய மதிப்பில் பொதுவான பலவீனத்தை ஏற்படுத்தி விட்டன. குறிப்பாக ரூபாய் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இதற்கு நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பெருகியதும், பிற உள் நாட்டுக் காரணங்களும் வழிவகுத்து விட்டன.”


நடப்புப் பற்றாக்குறை


“தங்கத்தின் இறக்குமதி பெருகியதும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக
விலை கொடுக்க வேண்டி வந்ததும்,சமீபகாலமாக நிலக்கரிக்குக் கூடுதல் விலை தரும் தேவை ஏற்பட்டதும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைப் பெருக்கி விடடது. ஏற்றுமதியைப் பொறுத்தமட்டில், நமது முக்கிய சந்தை களில் கிராக்கி குறைந்து விட்டது. இரும்புத் தாது ஏற்றுமதி மிகவும் பாதித்துள் ளது.இவையெல்லாம் சேர்ந்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எகிற
வைத்து விட்டன.

இந்த ஆண்டு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 70 பில்லியன் டாலருக்குக் குறைவாக (சுமார் 4.76 இலட்சம் கோடி) கொண்டு வந்து விடுவோம் என நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். நாளடைவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.5 சதவீத அளவுக்குக் குறைப்பதே எங் கள் நோக்கம்.”

“கடந்த 20ஆண்டுகளாக இந்தியா தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது. நாம் அதனால் பலன் அடைந்துள்ளோம்.முதலீடு சந்தை யிலும், செலாவணி சந்தையிலும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்காக இந்தக் கொள்கைகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. செலாவணிச் சந் தையில் ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு கண்டிருப்பது நிச்சயம் அதிர்ச்சிதான். முதலீடு கட்டுப்பாடு அல்லது சீர்திருத்த நடவடிக்கை களைத் திரும்பப் பெறு தல் போன்றவற்றைச் செய்ய மாட்டோம்.”

“கடந்த காலத்தில் எளிய பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மானியங்களைக் குறைத்தல்,காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் சீர்திருத்
தங்கள்,சரக்குகள் சேவைவரியை அமல்படுத்துதல் போன்ற கடினமான பொரு ளாதார சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியது இருக்கின்றது. இவையெல் லாம் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள கனிகள் அல்ல.”

பிரதமர் அளித்த விளக்கங்களிலிருந்து ரூபாயின் மதிப்பைத் தூக்கி நிறுத்திட
உடனடியாக எதையும் செய்யும் நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இல்லை என்று கைவிரித்து விட்டதை உணர முடிகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் மிகவும் துல்லியமாகக் கூறியுள்ள கருத் து, “வெளிக் காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரியவில்லை; மத்திய அரசு
நடப்புப் பற்றாக்குறையைக் குறைக்கத் தவறிவிட்டது. இதற்காக ஏற்றுமதியை
அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை,” போன்றவை குறித்து பிரதமர் உரையில் கண்டு கொள்ளவே இல்லை.


புதிய பொருளாதாரக் கொள்கை


நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டதற்கு 1991-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா
நடைமுறைப்படுத்தி வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிந்தபோதிலும், பிரதமரும் நிதி அமைச்ச ரும் திரும்பத் திரும்ப மாய உலகிலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றார் கள்.

மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பி.வி.நரசிம்மராவ் காலத்தில் பொறுப்பேற் றபோது நடைமுறைப் படுத்திய ‘உலகமயம் - தாராள மயம் - தனியார் மயம்’ கொள்கைகள்தான் இப்போது விஸ்வரூப மெடுத்து இந்தியாவின் பொருளா தாரத்தை அதல பாதாளத்திற்கு வீழ்த்தி இருக்கின்றது.உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்றவற்றின் உத்தரவுகளை ஏற்று செயற்பட்டதன் விளைவைத் தான் இன்று நாடு அனுபவித்து வருகின்றது.

நாட்டின் பொருளாதார தற்சார்பை அழித்து, பொதுத்துறை நிறுவனங் களைத் தனியாரிடம் தாரைவார்த்துக்கொடுத்து,ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறை வளர்ச் சியைத் தடுத்து,இறக்குமதிகளைச் சார்ந்து இருக்கின்ற நிலைக்கு நாட்டைச் சீரழித்ததற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம். ஆனால், இவ் வளவுக்கும் பிறகும் ‘பொருளாதாரச் சீர்திருத் தங்களைத் திரும்பப் பெற மாட் டோம்; இன்னும் கடுமையான முடிவுகளை அரசு எடுக்கும்’ என்று பிரதமர் நாடாளு மன்றத்தில் கூறுகின்றார் என்றால்.மக்களைப் பற்றியோ, நாட்டின் எதிர்கால நலனைப் பற்றியோ கிஞ்சிற்றும் அவருக்கு அக்கறை இல்லை என் பது அப்பட்டமாகத் தெரிகிறது.


நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏன்?


பொருளாதார தடுமாற்றத்திக்குக் காரணமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பற்றி ஆய்வு செய்யும் முன்பு, இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ந்தது என்று முதலில் பார்ப்போம்.

1947-இல் இந்தியா விடுதலை பெற்ற போது ஒரு டாலர் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1966-இல் ஏற்றுமதியை அதிகரிக்க ரூபாயின் மதிப்பைக் குறைத்த போது ஒரு டாலர் மதிப்பு ரூ. 6.35 ஆகவும், 1973-இல் அன்னிய செலாவணி மோசடியைத் தடுக்கத் திட்டம் கொண்டு வந்தபோது ஒரு டாலர் மதிப்பு ரூ. 7.67 ஆகவும் இருந்தது.

1975-இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது ஒரு டாலர் மதிப்பு ரூ.8.41 என்ற அளவிலும், 1991-இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலகட்டத் தில் இந்தியா தங்கத்தை அடமானம் வைத்தபோது ஒரு டாலர் மதிப்பு 22.69 என்ற அளவிலும் இருந்தது.

1996-இல் இறக்குமதி உரிமம் ரத்து செய்யப்பட்ட நேரத்தில் ஒரு டாலர் மதிப்பு ரூ. 35.43 ஆகவும், 1997-இல் வரிகுறைப்பு பட்ஜெட்டை ப. சிதம்பரம் தாக்கல் செய்த போது ஒரு டாலர் மதிப்பு ரூ. 36.32 ஆகவும், 2002-இல் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை கொண்டு வந்தபோது ஒரு டாலர் மதிப்பு ரூ. 48.60 ஆகவும் இருந்தன.

2004-இல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சி அமைந்தபோது, ஒரு டாலர் மதிப்பு ரூ. 45.32; 2009-இல் மீண்டும் காங் கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபோது ஒரு டாலர் மதிப்பு ரூ. 48.40; 2012-இல் வரி சீரமைப்பு நடவடிக்கை என்று அறிவித்தபோது ஒரு டாலர் மதிப்பு ரூ. 53.32; 2013-இல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஒரு டாலர் ரூ. 68.33 ஆக இருக்கின்றது.இது மேலும் 70-ஐ நோக்கி சரிவுப்பாதை யில் போய்க் கொண்டு இருக்கிறது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பதன் பொருள் என்ன? இந்தியாவில் இருந் து உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன்மூலம்
ஈட்டப்படும் வருமானத்தை விட இறக்குமதிக்கு ஆகும் டாலர் செலவு அதிக மாவதால் ஏற்படும் பற்றாக்குறை அல்லது ஏற்றுமதிப் பொருள்களின் டாலர்
மதிப்பிற்கும் இறக்குமதியாகும் பொருள்களின் டாலர் மதிப்புக்கும் இடையே உள்ள இடைவெளிதான் (Balance of payments) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது.தற்போதைய நிலையில் நமது இறக்குமதி மதிப்பு, ஏற்று மதி மதிப்பை விட அதிகமாக இருப்பதால் நடப்புக் கணக்குப் பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


டாலர் மதிப்பீடு


ஒரு டாலர் இந்திய ரூபாயின் மதிப்பு 53-லிருந்து 68 ஆக உயர்ந்தது என்றால்
டாலர் தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளது எனவும், தேவைக்கு ஏற்ப டால ரின் வரவு இல்லை என்று பொருள். டாலரின் தேவை அதிகரிப்பதற்கு என்ன காரணம்? உலகம் முழுவதும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அனைத்தும் டாலர் மூலமாக மட்டுமே நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் இந்திய ரூபாய் போன்று பணப்புழக்கம், ‘ரியல்’, ‘லிரா’,
‘ரூபியா’, ‘ராண்ட்’, ‘பவுண்டு’, ‘யூரோ’ என்று பலவாறு இருந்தாலும், பிற நாடு களுடனான பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்கப் பணமான டாலரில் தான் நடக்கும். அமெரிக்க டாலர் மட்டுமே உலகின் எல்லா நாடுகளிலும்
செல்லுபடியாகும் பணம்.அமெரிக்காவை “டாலர் தேசம்” என்று அழைப்பதன் பொருள் இப்போது விளங்கும்.

அமெரிக்க டாலருக்கு இருக்கும் மதிப்பு எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் கைமாற்றி விட்டு நமக்குத் தேவையான வற்றைப் பெற்றுக் கொள்ளலாம். என வே தான் உலக நாடுகளின் பொருளாதாரச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படும் பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் நிலக்கரி, தங்கம் போன்ற வற்றுக்கு இந்தியா, டாலர் பணமாகத் தான் 012-13 நிதி ஆண்டில் நடப்புக்கணக் குப் பற்றாக்குறை 9420 கோடி அமெரிக்க டாலர் (5,65,200 கோடி ரூபாய்) என்ற அளவுக்கு அதிகரித்து உள்ளது. 

இந்திய அரசிடம் சுமார் 29,000 கோடி அமெரிக்க டாலர்கள் அந்நிய செலாவணி கையிருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இத னைக் கொண்டு நடப்புக் கணக் குப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியுமா என்றால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்நிய சக்திகளிடம் பெற் றுள்ள 17,200 கோடி டாலர்கள் குறுகிய கால கடனை,2014 மார்ச்சு மாதத்திற்குள் அடைக்க வேண்டும். இத னால், அமெரிக்க டாலர் கையிருப்பு காலியானால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து விடும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை ஆனால், இந்திய அரசு தொழிற்துறைக்கு ஏற்படுத்திய நெருக்கடி களால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. 2012-13 பொருளாதார ஆய் வின்படி,வராக்கடன் நிறுவ னங்களாக 12,000 தொழில் நிறுவனங்கள் அறிவிக் கப்பட்டு உள்ளன. தாராளம யத்தை மீறி பிற துறைகள் வளர்ந்தாலும் உற்பத்தித் துறை முன்னேற்றம் காணவில்லை.

ஆனால்,அரசு இதைப் பற்றி கவலைப்படாமல் அந்நிய முதலீடுகளைக் குவித் து பொருளாதார தேக்க நிலையைச் சரிசெய்து விடலாம்என்று பகல் கனவில் மிதக்கிறது. இதன் விளைவாகவே தொலைபேசித் துறை, இராணுவத் தளவாட உற்பத்தித் துறை,காப்பீடு, விமானப் போக்குவரத்து, மின்சார உற்பத்தித் துறை, தேயிலைத் தோட்டங்கள், கூரியர் சேவை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, சில் லறை வணிகம் உள்ளிட்ட 13 தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளில் அந்நி ய மூலதனம் புதிதாக நுழையவும் அல்லது முன்பே உள்ள தமது மூலதனப் பங்கை அதிகரித்துக் கொள்ளவும் மன்மோகன் சிங் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும்,ஓய்வூதியத் துறையிலும் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது.

அந்நிய மூலதனம் இல்லாத தொழில் இனி எதுவுமே இருக்க முடியாது என்ற
நிலைமையை காங்கிரஸ் அரசு உருவாக்கி விட்டது. பொருளாதார நெருக்கடி களைக் காரணமாகக் கூறி,நாட்டின் இயற்கை வளங்களும், பொதுத் துறை நிறு வனங்களும், சொத்துகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப் படுகின்றன.பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால், உள் நாட்டு உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதிக்கான வாய்ப்பு முற்றிலும் விழுந்தது.


எங்கே வளர்ச்சி?


காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளால், இந் தியப் பொருளாதாரம் 8-லிருந்து 9 சதவீதம் வளர்ச்சி கண்டது என்று கூறப்படு வதில் உண்மை இல்லை.பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இல்லா மல், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாகத்தான் இருக்கிறது. ஒரு விழுக்காடாக இருக்கின்ற மேல்தட்டு வர்க்கத்தினர் பல நூறு மடங்கு வளர்ச்சிபெற்றனர். நடுத்தர வர்க்கத்தினர் 10 சதவீதம் பேர் ஓரளவு பொருளாதார வளர்ச்சி கண்ட னர்.

ஆனால், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த 20 ஆண்டுகளில் சீர்தி ருத்தங்கள் நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு உள் ளனர். இன்னமும் நாட்டில் 70 சதவீத மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதம்
இல்லை. எனவே, உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று காங்கிரஸ் அரசு தம்பட்டம் அடிப்பதில் இருந்து ஓர் உண்மை அம்பலம்
ஆகிவிட்டது. அதாவது பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்தியாவில் 70 சதவீத
மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை.ஆனால், வளர்ச்சி வளர்ச்சி என்று
கூப்பாடு போட்டு பிரதமரும், நிதி அமைச்சரும் உண்மையை எத்தனை காலம் குழிதோண்டிப் புதைக்க முடியும்?

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மைத் துறையை சீரழித்தது
காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கை. மூன்று இலட்சம் விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டு மடிய வேண்டிய துயரம் நிகழ்ந்ததும், புதிய
பொருளாதாரக் கொள்கைகளால்தான் என்பதை மறுக்க முடியாது. ரூபாயின்
மதிப்பு சரிந்துள்ள நிலையில் நடப்பு நிதி ஆண்டில் (ஏப்ரல்-ஜூன்) முதல் கா லாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதமாகக் குறைந்து விட்டது. 4.7 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித் தனர். ஆனால், வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே போகிறது. இதன் காரண மாக பணவீக்க விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.


பணவீக்கம்


கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மொத்த விலை பணவீக்கம் சராசரி யாக 10 சதவீதமாக இருந்தது. இதனைக் கட்டுப்படுத்திட ரிசர்வ் வங்கி 2010 மார்ச்சு மாதம் முதல் 2011 அக்டோபர் வரையிலான 20 மாதங்களில் முக்கிய கடனிற்கான வட்டியை 13 முறை உயர்த்தியது. இதன் காரணமாக நிறுவனங் களின் வட்டிச் செலவினம் அதிகரித்தது. மேலும், நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கின.இதனால் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்தது.

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த பணப்புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக் கையில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. கடனுக்கான வட்டி விகிதம் அதிக மாக உள்ளதால் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக ஜூலை மாதத்திலும் கார் விற்பனை சரிந்தது.

இதுபோன்ற காரணங்களால் தொழிற்துறை உற்பத்தியைக்கணக்கிடுவதால் 75 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள சிமெண்ட், உருக்குப் பொருள்கள், நுகர் வோர் சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் முதல் காலாண்டில் பின் னடைவு ஏற்பட்டது. எனவே,நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் தொழிற் துறை உற்பத்தி 1.1 சதவீதம் சரிவடைந்தது. தொழிற்துறை உற்பத்தி சரிவடைந் தால் பிறகு எப்படி ஏற்றுமதி நிலையாக இருக்கும்? ஏற்றுமதி பாதிக்கப் படும் போது தொடர் விளைவாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கிறது.

முதலாளித்துவப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற சீனாவின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் தொழிற்துறையின் பங்கு 51 சதவீதம் ஆகும்.ஆனால், இந்தியாவில் தொழிற்துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.4 சதவீதமாக 2001-இல் இருந்தது.பத்து ஆண்டு காலத்தில் 2011-இல் இது வெறும் 22 சதவீதமாகக் குறைந்து விட்டது.


வேளாண் துறை


நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்களைச் சார்ந்துள்ளனர்.எனினும், பொருளாதார வளர்ச்சியை
எடுத்துக்காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product -G D P) வேளாண் துறையின் பங்கு 14.1 சதவீதம் மட்டுமே. ஆனால், 1983-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 37 சதவீதமாகவும், விவசாயத் துறையின் வளர்ச்சி 3.1 சதவீதமாகவும் இருந்தது.ஆனால், தற் போது விவசாயத் துறை வளர்ச்சி என்பது 0.6 சதவீதமாக விழுந்து விட்டது.

காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் இன்றியமை
யாத தொழிற்துறையும், விவசாயத் துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
ஆனால், நாட்டின் பெரும்பாலான மக்களுக்குப் பயனளிக்காத சேவைத்துறை மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 சதவீதமாக உயர்ந்து இருக்கின் றது.


சேவைத் துறை


சேவைத் துறைகளில், தகவல் தொழிற்நுட்பம், நிதித்துறையின் பெருக்கம்,வீடு
மனை விற்றல் - வாங்கல் பிரிவுகளின் வளர்ச்சி, காவல்துறை மற்றும் இராணு வத்தின் வளர்ச்சி, இவை எதுவும் மக்களுக்கு நேரடியாகக் குறிப்பிடத்தக்க நன் மைகளையும் அளிக்கவில்லை.சேவைத் துறையின் வளர்ச்சியால் பல்வேறு தொழில்கள் இப்பட்டியலில்இணைக்கப்பட்டு, அரசின் கஜானாவிற்குப் பெரும் தொகை சேவை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுவும் கடந்த 20 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறை படுத் தியதுதான். 20 ஆண்டுகளுக்கு முன்பு, சேவை வரி (Service Tax)  410 கோடி ரூபா யாக இருந்தது. இது தற்போது ரூ. 1,80,000 கோடி ரூபாய் அளவுக்குப் பெருக்கம் கண்டிருக்கின்றது. சேவை வரியின் காரணமாக மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டு விலைவாசி கூடுதல் ஆகி வருவதைப் பற்றி நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கவ லைப்படுவதாக இல்லை.

சேவை வரி நடைமுறைக்கு வந்த காலத்தில் 5 சதவீதமாகத்தான் இருந்தது. பின்னர் 10 ரூ, 12.36 ரூ என்ற அளவிலும், கல்வி வரியாக 2 ரூ மற்றும் தொடக் கக் கல்வி வரியாக 1 ரூ என்று சேர்த்து சேவை வரியின் அளவு உயர்ந்து  கொண்டே போகிறது.


நிதிப் பற்றாக்குறை


நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவினத்திற்கும் மொத்த வரு வாய்க்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். பிப்ரவரி மாதத்தில் 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் ப.சிதம் பரம், நிதிப் பற்றாக்குறையை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகக் கூறினார். ஆனால், ரூபாயின் மதிப்பு சரிவடைந்து,இறக்குமதிச் செலவினம் அதிகரித்ததால் கடந்த
ஏப்ரல்-ஜூலை மாதத்தின் நடப்புக் காலாண்டின் நிதிப் பற்றாக்குறை ரூ. 3.41
இலட்சம் கோடி என்ற அளவை எட்டிவிட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 4.9 சதவீதம் ஆகும். நிதிப் பற்றாக்குறையின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும் போது சர்வதேசக் கடன் தகுதி தர நிறுவனங்கள் இந்தியா வில் கடன் பெறும் தகுதியைக் குறைத்து விடும் அபாயம் இருக்கின்றது.

1990-களின் தொடக்கத்தில் இந்தியா,இதே போன்ற நடப்புக் கணக்குப் பற்றாக் குறை நெருக்கடியில் சிக்கிய போது, சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந் தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்தன.இதனால், இந்தியா தனது கையிருப்பில் இருந்த தங்கத்தை அடகு வைத்துக் கடன் பெறும் நிலைக்குத் தள்ளப் பட்டது.

2013-லும் தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்கும் இந்தியா தள்ளப்பட்டு இருப் பதுதான் மன்மோகன் சிங்கின் ‘பத்தாண்டு பொற்கால’ ஆட்சியின் (?) மாபெரும் சாதனையாக இருக்கும்.

நாட்டின் எதிர்காலத்தையே சூறையாடி விட்ட இந்த ஆளும் கூட்டத்தின் கையி லிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறிப்பது மட்டுமே நம்முடைய முழு முதற் கடமை என்பதை இந்திய ரூபாய் மதிப்பு சரிவும், பொருளாதார வீழ்ச்சியும்
உணர்த்திக் கொண்டு இருக்கின்றன.

கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி

No comments:

Post a Comment