Friday, September 6, 2013

மஞ்சள் வளர்ச்சி நிறுவனம்

ஆன்லைன் வர்த்தகத்தால் மஞ்சள் விவசாயிகளுக்குப் பாதிப்பு...
மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்துக!

பிரதமரிடம் #மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி., கோரிக்கை

தேசிய பண்டக வகையீடு சந்தையில் (NCDEX) முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.
விசாரணை கோரியும், மஞ்சள் விவசாயிகளுக்கு தனியாக மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்தித் தரவேண்டியும் 26 ஆகஸ்டு 2013 ஆம் நாள் ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி இந்தியப் பிரதமரிடம்
அளித்த கோரிக்கை மனு வருமாறு:
மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயி களுக்கு கட்டுப்படியாகக்கூடிய  விலை
கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதே சம், கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநில மஞ்சள் சாகுபடி யாளர்களை ஒன்றிணைத்து இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

உலகத்தில் உற்பத்தியாகிற மஞ்சளில் 80சதவிகித அளவு மஞ்சள் இந்தியா உற் பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் மஞ்சளில் 41 சதவிகிதம் ஆந்திராவிலும், 21 சத விகிதம் தமிழ்நாட்டிலும், மகாராஷ்டிராவிலும், கர்நாடகத்திலும், ஒரிசாவிலும் முறையே 7 சதவிகிதமும் மஞ்சள் உற்பத்தி செய்யப் பட்டு, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத், தமிழ்நாட்டில் மஞ்சள் நகரம் என்றழைக் கப்படும் ஈரோடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சங்கிலி ஆகிய இடங்களில் மஞ்சள் சந்தை
உருவாக்கப்பட்டு ஏல முறையில் மஞ்சள் விற்பனை நடைபெறுகிறது.

மஞ்சள் சாகுபடியாளர்களுக்கு தாங்கள் உற்பத்தி செலவைவிட குறைவான
விலையே கிடைக்கிறது. உதாரணமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு உற் பத்திச் செலவு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,000 ஆன நிலையில், மஞ்சள் 1 குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 2012 ஜனவரி மாதம் குவிண்டாலுக்கு 2500 ரூபாயாக குறைத்து விற்கப்பட்டது. இது போன்ற நிலையற்ற தன்மையினால் மஞ்சள் உற்பத்தியாளர்கள் மிகவும்
பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மஞ்சள் உற்பத்தி என்பது மிளகாய்க்கு அடுத்தபடியாக உற்பத்தி
செய்யப்படும் மசாலா நறுமண வகைகளில் ஒன்றாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் மஞ்சள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மஞ்சள் உற்பத்தியாளர்கள் ஒரு வருடம் மிகவும் சிரமப்பட்டு உழைத்து மஞ்சளை விளைவித்து கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்காது சிரமப்படுகிறார்கள்.

மஞ்சள் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் மூலமாக எனக்குக்கிடைத்தத் தகவலின் அடிப்படையில் தேசிய பண்டக வகையீடு சந்தை நடத்தும் ஆன் லைன் வர்த்தகத்தில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளால் மஞ் சள் விலை பாதிக்கப்படுகிறது. தேசிய பண்டக வகையீடு சந்தைக் கிடங்கு களில் இருப்பு வைக்காமல் பெரும் முதலாளிகளுக்கு குறைந்த விலைக்கு
விதிமுறைகளை மீறி மஞ்சளை விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் விவசாய கூலித்தொழி லாளிகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மஞ்சள் உற்பத்தி செய்யும் விவ சாயியும் மஞ்சளை மூலப் பொருளாகப் பயன்படுத்தும் நுகர்வோராக இருக் கும் நிறுவனங்களும் நேரடியாக வர்த்தகச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தில் ஈடு படுவதில்லை.

இதன் காரணமாக பொருளாதாரத்தின் அடிப்படைத் தத்துவமான தேவை மற் றும் விற்பனை இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் இங்கு உண்மையாக
இல்லை.

எனவே,மஞ்சளை தேசிய பண்டக வகையீடு சந்தை(NCEX)பட்டியலில்  இருந்து நீக்க வேண்டுமென்றும்,மஞ்சளுக்கென்று தனியாக மஞ்சள் வளர்ச்சி நிறுவ னம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தித் தரவும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தேசிய பண்டக வகையீடு சந்தையில் நடைபெறும் ஆன்லைன் வர்த்தக ஊழலை இந்திய சிறப்பு புலனாய்வு (சி.பி.ஐ.) மூலமாக ஆய்வு நடத்த வேண்டு மெனவும்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர் களை ஈரோடு நாடாளுமன்றக் கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை யில்,தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமோ
நாகேஷ்வர் ராவ் மற்றும் ராத்தோடு ரமேஷ் ஆகியோர் மனுவை நேரில் வழங்கி ஆவன செய்யக் கேட்டுக் கொண்டார்கள்.

இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, ஆந்திர
மாநில மஞ்சள் விவசாய சங்கத் தலைவர் நரசிம்ம நாயுடு, கணேசன், வாசு சீனிவாசன், அ.பொ.கந்தசாமி,கொடுமணல் குழந்தைசாமி மற்றும் பலர் உடனி ருந்தனர்.

இந்தியப் பிரதமர் கவனத்துடன் மஞ்சள் விவசாயிகளின் குறைகளைக் கேட்டு
அறிந்தார். இது குறித்து தொடர்புடைய அமைச்சர்களைத் தொடர்புகொண்டு
விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment