Monday, September 23, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 16

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இந்த ஜெகஜாலபுரட்டு வார்த்தைகளை மாற்றி செய்த தவறுகளை அப்படியே மறைப்பது ரொம்ப நாளைக்கு நடக்காது. ரேடார்களைக் கொடுத்தது இந்தியா என்று உங்களுக்குத் தெரியும். ரேடார்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா? ஆயுதம் கொடுத்தது இந்தியா என்பது உங்களுக்குத் தெரியும். ஆயுதங்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா?

அதெல்லாம் போகட்டும். முதலமைச்சர் அவர்களே, பசியால் சாகிறான், நோ யால் சாகிறான். எங்கள் பிள்ளைகள் பட்டினி கிடக்கிறார்கள். எங்கள் குழந்தை கள் பாலின்றி சாகிறார்கள். எங்கள் தாய்த் தமிழகத்து மக்கள் வேதனைப்படு கிறோம். எங்கள் தமிழ்ச் சகோதர சகோதரிகள் காடுகளில் மரங்களுக்கு கீழே நின்று அகதிகளாக ஏதிலிகளாக கதறித் துடிக்கிறார்கள். உலகம் பூராவிலும் அனுதாபம் பிறக்கிறது. போப்பாண்டவருக்குக் கூட அனுதாபம் பிறந்தது. ஐ.நா.சபை தலைவருக்குக்கூட அனுதாபம் பிறந்தது.

ஆனால், அவர்களுக்கு உணவும், மருந்தும் கொடுக்க வேண்டும் என்று பசி யோடு வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய மணிமேகலை உலவிய இந்தத் தமிழகத்தில் இருந்து பசித்த வயிறுகளுக்கு சோறுபோட வேண்டும் என்ற பண்பாட்டை உலகத்தில் நிலைநாட்டிய எங்கள் தாய்த்தமிழகத்திலே இருந்து எங்கள் சொந்த சகோதர, சகோதரிகள் துன்பத்தில் சாதல் கண்டு நாங் கள் வாளாக இருக்க மாட்டோம் என்று தந்த உணவையும், மருந்தையும் இந்தி யா அனுப்ப மறுத்தது ஏன்? ஏன் அனுப்பவில்லை?

ஒரு பக்கத்தில் குண்டு வீசிக் கொல்கிறான். அப்பாவி மக்களையும் கொல் கிறான்.படை அணிகளை அழிப்பதாகச் சொல்லி குண்டுவீசிக் கொண்டே இருக் கிறான். குண்டு வீசியதைப்போல பட்டினி போட்டுக் கொல்வது எதற்குத் தெரி யுமா? இந்தப் பிள்ளைகள் நாளைக்குப் போராளிகளாக வந்துவிடக் கூடாது என் பதற்காக. இனத்தை அழிப்பது என்பது இதுதான். இனத்தின் கருவை அழிப்பது. இனத்தை பூண்டோடு அழிப்பது.

நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த இனக்கொலையில் உங்களுக்கு பங்கு உண்
டு என்று குற்றம் சாட்டுகிறேன். பட்டினி கிடக்கிற மக்களை குரல்வளையை நெறிப்பதற்கு, உணவும் மருந்தும் அண்ணன் நெடுமாறன் மக்களுக்குத் திரட் டிக்கொடுத்த உணவையும் மருந்தையும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கொடுக் கக்கூடாது என்று தடுக்க நீங்கள் காரணம். மத்திய அரசை சொல்கிறேன். அங்கே உள்ள மக்களை பட்டினிப் போட்டு கொல்வதற்குத்தானே நீ உணவும், மருந்தும் அனுப்பவில்லை. குண்டு வீசி கொல்வதற்கும் இதற்கும் என்ன வித் தியாசம்? பட்டினிபோட்டுக் கொல்ல வேண்டும் என்று இராஜபக்சேவின் திட் டத்துக்கு நீங்கள் உடந்தையாவீர்கள்.

இந்தப் பழியும் பாவமும் உங்கள் தலைமீது விழும் என்று தெரிந்ததற்குப்பிறகு அதிலும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் இந்தியாவின் அரசு கூட்டுச்சதி செய்கிறது. இந்தக் கொலையில் பங்காளிகள் கூட்டாளிகள் என்று சொன்ன பிறகு தமிழக மக்கள் மத்தியில் இனத்துரோகம் முகத்திரை கிழிக்கப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக அவசர அவசரமாக மாங்கொல்லையில் கூட்டம்போட்டு நாம் எல்லோரும் செத்துப்போவோம் என்கிறீர்கள். என்ன சொல்கிறீர்கள்?

நாங்கள் சாகத்தயாராக இல்லை. நாங்கள் ஏன் சாகவேண்டும். அங்கே எங்கள் மக்களைக் காப்பாற்ற நாங்கள் துடிக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மொத்தமாக சாகவேண்டும் என்று என்ன வசனம் பேசுகிறீர்கள்? தமிழ்நாட்டு மக்கள் மொத்த மாக செத்துப்போவோம் என்று ஏன் சொல்கிறீர்கள்? சாகிற தமிழனைக்காக்க இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களைத் திரும்பவாங்கு என்று சொல்வதற்கு வக்கில்லை. வகையில்லை. சூடு இல்லை. சொரணையில்லை.மொத்தத் தமிழ் மக்களும் செத்துப் போகவேண்டும் என்றீர்களே.

ஊரிலே தீவைத்துவிட்டு தீ நன்றாகப் பிடித்திருக்கிறதா என்றுபார்த்து பெட்ரோ லை ஊற்றி தீவைத்து விட்டு நன்றாக காற்றடிக்கின்ற நேரமாக பார்த்து மேற் கே இருந்து கிழக்கு பார்த்து காற்றடிக்கின்ற நேரம் மேற்கே தீயைவைத்து விட் டால் கிழக்கே நோக்கி பிடிக்கும். அங்கு பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு பனைமர உயரத்துக்கு நெருப்பு எழுந்துவிட்டது இனி அணைக்கவே முடியாது என்று தெரிந்த உடன் தீவைத்தவன் ஊர் மந்தைக்குவந்து அய்யோ ஓடிவாருங் கள் ஓடிவாருங்கள் ஊரெல்லாம் தீப்பிடித்து எரிகிறது வீட்டுக்கு ஒருவன் குடத் தை எடுத்துக்கொண்டு வாருங்கள். நானும் ஒரு குடத்தோடு வருகிறேன். தண் ணீர் ஊற்றி அணைப்போம் என்று சொல்வதற்கும் கலைஞர் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் நான் கேட்க விரும்புகிறேன்.

தொடரும் ...........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment