மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு
நாட்டை திவாலாகும் நிலைக்குத் தள்ளி விட்டது
#வைகோ அறிக்கை
காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறது. ஜூன் மாதத்தில் இருந்து 6ஆவது முறையாக பெட்ரோல் விலையை யும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக டீசல் விலையை யும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன.
மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு, ஒரு டாருக்கு ரூபாய் 68.82 ஆக சரிந்துவிட்டது. பொருளாதார நிபுணர் என்று சொல் லப்படும் மன்மோகன்சிங், 1991 ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது.
இந்தியா விடுதலை பெற்றபோது, ஒரு ரூபாயின் மதிப்பு, ஒரு டாலராக இருந் தது. கடந்த 66 ஆண்டுகளில் டாருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூபாய் 66 ஐ தாண்டி இருக்கிறது. இதுதான் காங்கிரஸ் அரசின் சாதனை.
பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ரூபாய் மதிப்பு சரிவாலும்,
சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்வாலும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி நட்டம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.
அலைக்கற்றை ஊலில் 1.76 இலட்சம் கோடியும், நிலக்கரி ஊலில் 1.86 இலட் சம் கோடியும், காங்கிரஸ் அரசு நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தியது என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பெரும் நிறுவனங்களுக்கும் ரூபாய் 5 இலட்சம் கோடி வரிச் சலுகை அளித்துள்ள காங்கிரஸ் அரசு, கச்ச எண்ணெய் விலை உயர்வை காரணமாக்கி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் செப்டம்பர் 6 இல் முடிந்தவுடன் டீசல் விலை ரூபாய் 5 ம், சமையல் எரிவாயு விலை ரூபாய் 50 ம், மண்ணெய் விலை ரூபாய் 2 ம் உயர்த்தப்படும் என்ற அபாய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தாறுமாறான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு மக்கள் மீது சம்மட்டி அடி கொடுப்பது போன்று பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற் உரியதாகும். எனவே, இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
01.09.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment