Thursday, September 26, 2013

விருதுநகர் மாநாட்டு வரவேற்பு உரை

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைக் குவிக்கபம்பரமாய்ச் சுழன்று பணி யாற்றுவோம்!

விருதுநகர் மாநாட்டு வரவேற்பு உரையில் ஆர்.எம்.சண்முகசுந்தரம்

விருதுநகரில் செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற மாபெரும் கழக மாநாட்டில்,
விருதுநகர் மாவட்டச் செயலாளர்ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆற்றிய வரவேற் புரை:

வரலாற்று சிறப்பு மிக்க பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 வது பிறந்த நாள் விழா கழக மாநாட்டின் தலைவர் கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர் பெரு மதிப்பிற்குரிய இமயம் ஜெபராஜ் அவர்களே; மாநாட்டின் திறப்பாளர் சிவகங் கை மாவட்டச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய புலவர் செவந்தியப்பன் அவர் களே; மாநாட்டுக் கொடி ஏற்றி வைத்த மதிப்புமிகு சிப்பிப்பாறை இரவிச்சந் திரன் அவர்களே;அண்ணா சுடர் ஏற்றிவைத்த மதிப்புமிகு டாக்டர் சதன் திரு மலைக்குமார் அவர்களே;


மாநாட்டில் அரியதோர் நிறைவு பேருரை ஆற்ற இருக்கின்ற தமிழ் இனத்தின்
காவலர் தலைவர் வைகோ அவர்களே; கழகத்தின் அவைத்தலைவர் மதிப்புக்
குரிய திருப்பூர் துரைச்சாமி அவர்களே; கழகத்தின் பொருளாளர் மதிப்பிற்குரிய
டாக்டர் மாசிலாமணி அவர்களே; கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் மதிப்பிற்குரிய நாசரேத் துரை அவர்களே; மதிப்பிற்குரிய மல்லைசத்யா அவர் களே; மதிப்பிற்குரிய துரை பாலகிருஷ்ணன் அவர்களே; ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு கணேசமூர்த்தி அவர்களே; அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் மதிப்புமிகு மலர்மன்னன் அவர் களே; கழக ஆய்வு மய்யச் செயலாளர் மதிப்புமிகு செந்திலதிபன் அவர்களே;
உயர்நிலைக்குழு உறுப்பினர்களே; ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களே; மாவட் டக் கழகச் செயலாளர்களே; தலைமைக் கழகச் செயலாளர்களே; பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் கழகத் தோழர்களே; பெரியோர்களே; தாய் மார்களே; உங்கள் அனைவருக்கும் விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உளமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

கழகத்தின் வலிமை வாய்ந்த கோட்டையாக விளங்குகின்ற விருதுநகர் மாவட் டத்தில், கழகத் தோழர்களின் இருபது ஆண்டு காலக்கனவை நனவாக்கிடும் வகையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டை இம்மண்ணில் நடத்துவதற்கு அனுமதி அளித்து அரிய ஆலோசனைகள் வழங்கி முன்னின்று இம்மாநாட்டை நடத்தி, எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கின்ற பொதுச்செயலாளர் மதிப்புமிகு வைகோ அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் இதயமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்மாநாட்டுப் பெருமை எல்லாம் நமது பொதுச்செயலாளர் வைகோ அவர் களையே சேரும். எண்ணற்ற எத்தனையோ சிறப்புகளை எங்கள் மாவட்டம் கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் எங்கள் மாவட்டத்தில்
அமைந்துள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் கோபுரமாகும். 

தென் திருப்பதி என்று போற்றப்படும் திருவண்ணாமலை எங்கள் மாவட்டத் தில் அமைந்துள்ளது.இலட்சோபலட்சம் பக்தர்கள் வழிபடுகின்ற இரமணம கரிசி அவதரித்த திருச்சுழி இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஈடு இணையற்ற விடுதலைப் போராட்டநாயகர்களான சிவகங்கைச் சீமையை
கட்டியாண்ட மருதுபாண்டியர்கள் பிறந்தது இந்த மாவட்டத்திலே தான். திரா விட இயக்க இலட்சிய வேங்கை வாலிபப்பெரியார் ஏவிபி ஆசைத் தம்பியை தந்ததும் இந்த மாவட்டம் தான்.

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களும்; நாட்டு மக்களுக்கு
தன் சொத்துகளை அளித்த பெருமகன் குமாரசாமிராஜா அவர்களும் முதல்வர் களானார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்அவர்கள் அருப்புக்கோட்டை தொகு  தியில் முதல் முறை முதல்வர் ஆனது இந்த மாவட்டத்தில்தான் என மூன்று முதல்வர்களை மக்கள் பிரதிநிதிகளாக தந்த மாவட்டமும் விருதுநகர் மாவட் டம்தான்.

தென்பாண்டி மண்டலத்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய உத்தமத்தலை வர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மக்கள் பிரதிநிதியாக திகழ்ந்த மாவட்டமும் இந்த மாவட்டம்தான். 

இந்த மூன்று பெருமக்களின் வழி யில் நாடே வியக்க நாடாளுமன்ற உறுப்பி னராக; மக்கள் பிரதிநிதியாக நமது பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பணி யாற்றிய பெருமைக்குரிய மாவட்டமாக நமது விருதுநகர் மாவட்டம் விளங்கு கிறது. அதே போல்

தமிழ்நாட்டிலேயே பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் மாவட்டம் எங்கள் விருதுநகர் மாவட் டம்.

உலகப்புகழ் பெற்ற பட்டாசுத் தொழிலும் அச்சுத் தொழிலும் சிறந்து விளங்கி வரும் மாவட்டம்.

வேளாண்மைத் தொழிலும், நெசவுத் தொழிலும் பெரு வணிகத் தொழில்களும்
அமைந்துள்ள மாவட்டம் எங்கள் விருதுநகர் மாவட்டம்.

இத்தனை சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்ற எங்கள் மாவட்டத்தில் விருது நகர் இதுவரை கண்டிராத இந்த மாநாட்டை நமது பொதுச்செயலாளர் அவர் களே திட்டமிட்டு முன்னின்று, பெருந்துணையாய் இருந்து முழுக்க முழுக்க முழுக்கவனம் செலுத்தி நடத்துகின்ற இந்த மாநாட்டிற்கு திரண்டு வந்திருக் கின்ற அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்.

மக்களே வியந்து பாராட்டுகின்ற இந்த மாநாட்டின் சிறப்பு ஒவ்வொன்றிற்கும்
பொதுச்செயலாளர் அவர்களே காரணமாவார்கள். குறைகள், சிரமங்கள் ஏதும் இருப்பின் அவை என்னையும், என்னோடு பணியாற்றிய தோழர் களையும் சாரும் என்பதைச் சொல்லி மீண்டும் ஒருமுறை வருக! வருக வென வரவேற் கின்றேன்.

பொதுமக்களின் கவனம் நம் பக்கம் திரும்பி இருக்கின்றது. தலைவர் வைகோ
அவர்களின் அரும்பணியைப் பயன் படுத்தத் தவறிவிட்டோமே என்று மக்கள் ஏங்கிக் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கிக் கொண்டு இருக் கிறது. இழந்த பெருமையை மீட்டெடுப்போம் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இடும் கட்டளையை ஏற்று விருதுநகர் மாவட்டம் மறுமலர்ச்சி திமுக வின் கோட்டை என்பதை நாட்டுக்கு நிருபிக்கும் வகையில் பம்பரம் என சுழன்று பணியாற்றி வெற்றியைக் குவிக்க இம்மாநாட்டில் உறுதி ஏற்கிறோம்.

இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகி கள்,ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாநாட்டுக்கு இடம் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களையும் பாராட்டிப் போற்றி நன்றி தெரிவித்து எனது
வரவேற்பு உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி! வணக்கம்!

ஆர்.எம்.சண்முகசுந்தரம் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment