Monday, September 16, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 17

நாள்:- 24.11.2006

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கொல்வது அன்றாட நிகழ்வாகி
வருகிறது. இந்த மிக முக்கியமான பிரச்சினையை, தாங்கொணாத் துயரத் தோடும், மிகுந்த மனவேதனையோடும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கைக் கடற்படையினர், அன்றாடம் தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர் களது மீன்பிடி படகுகளை உடைத்து, வலைகளை அறுத்து, மீனவர்களையும் சுட்டுக் கொன்று குவித்து வருகின்றனர். இந்தியக் கடற்படையும் இந்தியக் கட லோரக் காவல்படையும், இந்திய மீனவர்களுக்கு எதிரான இந்தக் கொலை வெறித் தாக்குதலை, கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

அப்படியென்றால், இந்திய மீனவர்களைத் தாக்குவதற்கு இந்தியக் கடற்படை யும், கடலோரக் காவல்படையும் இலங்கைக் கடற்படையோடு இரகசிய உறவு கொண்டு உள்ளார்களா? என்ற கேள்விதான் தமிழர்கள் மனதில் எழுகிறது.

இன்று, இராமேஸ்வரம் அருகில் நமது இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கண்மூடித்தனமாகச் சுடப்பட்டு உள்ளார்கள். நூற்றுக்கும 
மேலான குண்டுகள் நமது மீனவர்களின் படகுகளைத் துளைத்துச் சென்று
உள்ளன. கிறிஸ்டோபர் என்ற ஒரு மீனவர் கொல்லப்பட்டு உள்ளார். மேலும்
இருவர் படுகாயம் அடைந்து உள்ளனர். நமது இந்திய மீனவர்களின் பாதுகாப் புக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை.

எனவே, இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இலங்கை அரசுக்குத்
தாங்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டுகிறேன். மேலும்,நமது கப்பல்படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் இருந் து இந்திய மீனவர்களைப் பாதுகாக்குமாறு உத்திரவிட வேண்டும் என்றும் பணிவுடன் வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment