தஞ்சாவூர் - சென்னை இடையே இன்று அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயிலுக்கு, "உழவன் விரைவு ரயில்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது."தஞ்சாவூர் - சென்னை இடையே புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கை போராட்டம் வெற்றி நோக்கி இன்று ரயில் அறிமுகம் செய்யப்பட்டது ..
தஞ்சை மாவட்டத்தில் திமுகவினர் வழக்கம் போல இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு இத்திட்டத்தை கொண்டுவந்தது டி.ஆர் பாலு என்று கூறி நன்றி அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர் ...
எதிர் கோஷ்டி பழனிமாணிக்கத்துக்கு நன்றி என்று போஸ்டர்கள் ஒட்டி யுள்ளனர்.
உண்மையில் இந்த திட்டத்தின் ஆரம்ப புள்ளியாக செயல்பட்ட முன்னாள் மதிமுக வல்லம் நகர செயலளார் பசீர் அவர்கள் தெரிவித்தது ..
எங்க ஊரில் இருந்து இன்று முதல் சென்னைக்கு புதிய இரயில் இயக்கப்படு கிறது , இதற்கு எங்கள் பகுதியில் ஒரு கட்சியில் உள்ள ஒரு பிரிவு ஆதரவா ளர்கள் ஒரு தரப்பிற்கு நன்றி என்றும் ,மற்றொரு பிரிவினர் மற்றொரு தரப் பிற்கு நன்றி என்றும் போஸ்டர் ஒட்டிவிட்டார்கள் . ஆனால் உண்மையாவே நன்றி சொல்லவேண்டியது என்னுடன் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களுக்கும் போராடிய அனைத்து மக்களுக்கும தான் .
அன்றைய நாளில் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே அமைச்சரா இருந்தப்போ கூட்ட நெரிசலை சமாளிக்க மூன்று மாவட்டத்துக்கு மையமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்துக்கு கூடுதல் இரயில் இயக்க வேண்டும் என்று கையெ ழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை கடிதத்துடன் கையெழுத்து பெறப்பட்ட பிரதி யையும் அப்போதைய ராஷ்டிய ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநில தலைவர் சஞ்சிவி யாதவ் மூலம் லாலு அவர்களிடம் கொண்டு சேர்த்தோம் அதன் விளைவு அடுத்த இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தபோது தமிழகத்திற்கு நான்கு புதிய இரயில்கள் அறிவிக்கப்பட்டது .
இந்த காங்கிரெஸ் கூட்டணி அரசு எந்த திட்டமா இருந்தாலும் ,நியமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் உடனே ஏற்பது இல்லையே ! அதிலும் குறிப்பா தமிழ்நாட்டுக்குன்னு சொன்னா உடனே நிறைவேற்ற்றிடவா போகி றார்கள் , சட்டமன்ற தீர்மானங்களையே கண்டுகொள்வதில்லை ?
அப்போ லாலு வால் அறிவிக்கபட்ட இரயில் ,வெறும் அறிவிப்பாகவே தான் இப்போது வரை இருந்தது ,இன்றைய நிலையில் அந்த ரயில் ஓட தொடங்கி யது மகிழ்ச்சியே ,மக்களுக்கு தெரியும் , யார் இதை திட்டத்தின் ஆரம்ப புள்ளி என்று , நாங்கள் நன்றி எதிர்பார்க்குறது இல்லே , நாங்கள் வைகோவின் வார்ப்பு , இருந்தாலும் வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்படுகிறது. என்று தனது ஆதங்கத்தை வெளிபடித்தினார் பசீர் .
நாமும் வல்லம் பசீர் அவர்களை வாழ்த்துவோம்.
வாழ்துக்கள் பசீர்.மக்களுக்கு தெரியும்.
ReplyDeleteஉளமார பணி செய்த அன்பு உள்ளம் பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...பாராட்டுகளுக்கு மயங்குபவர்கள் நாம் இல்லை என்றாலும் உழைப்புக்கு மதிப்பு கொடுக்க தெரிந்தவர்கள் நாம் ....
ReplyDelete