Saturday, September 28, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 1

#வைகோ உரை வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்” உரை நூல் வெளியீட்டு விழா -திருநெல்வேலி - 22.08.2008

இந்த நாள் என் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். தியாக மணிவிளக்காக காலங்களைக் கடந்தும் ஒளிவீசிக் கொண்டு இருக் கின்ற ஒரு மாபெரும் தலைவன் வழங்கிய நூல்களுள் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வருகின்ற அரிய பணியில் திவான் ஈடுபட்டு இருக் கின்றார். செக்கு இழுத்த செம்மல்- ஒரு சிறந்த இலக்கியவாதியும்கூட என்ப தை இன்னும் எண்ணற்றவர்கள் அறிகின்ற வகையில், வரவேண்டிய பல நூல் கள் வரலாற்றின் பார்வையில் வராமலே இருக்கின்ற கவலையோடு, அவற் றை வெளியே கொண்டுவரும் முயற்சியில் திவான் ஈடுபட்டு இருக்கிறார்.

இங்கே திரளான கூட்டத்தைப் பார்க்கிறேன். ஒரு இலக்கிய விழாவுக்கு இவ்வ ளவு திரளாக மக்கள் வந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது என்று திவான் அவர் கள் என்னிடம் சொன்னார்கள். செக்கு இழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர் களுக்கு பிடித்தமான நூல்கள் மூன்று.

1.நீதி நூலான “திருக்குறள்”. 
2. சித்தாந்த நூலான “சிவஞான போதம்”.
3. வேதாந்த நூலான கைவல்ய சுவாமிகளின் “நவநீதம்”.

இந்த மூன்றும் அவருடைய உள்ளத்தை ஈர்த்தன.இந்த “சிவஞான போதம்” என் பது, மெய்ப்பொருளை உணர்த்துகிற நூல். இது 12 சூத்திரங்களை உள்ளடக்கி யது. 40 வரிகளைக் கொண்டது. 216 சொற்கள் நிரம்பியது. காப்பு உள்ளிட்டு, 12 சூத்திரங்கள். அவன் அவள் அது அவை எனும் .......யாலும் ஆலயம் தானும் .................. தொழுமே என்று தொடங்கி முடிகின்ற இந்த 12 சூத்திரங்களைப்பற்றி எண்ணற்றவர்கள் விளக்கங்கள் தந்து இருக்கிறார்கள்.

இந்தத் தெற்குச்சீமையில்தான், நதிகள் பாய்கின்ற நம் மண்ணில்தான், பொதி
கைத் தென்றல் வீசுகின்ற இத்தென்னகத்தில்தான் மிகச்சிறந்த ஞானிகள் தோன்றினார்கள். மாதவ சிவஞான முனிவர் விக்கிரம சிங்கபுரத்தில் பிறந்த வர். அவர் தந்தது ‘சிவஞான மாபாடியம்.’ அதைத் ‘திராவிட மாபாடியம்’ என் பாரும் உண்டு. இதோ அமர்ந்து இருக்கின்ற அடிகாளரைப்போலத் தமிழுக்குத் தொண்டு செய்த துறவியாக உலவிய அன்றைய குன்றக்குடி அடிகளார் அவர் கள், சிறந்த தமிழ் அறிஞர்.

கடைசி வரையிலும் குடத்து விளக்காகவே இருந்து மறைந்த, என்றும் என் உள் ளத்தைவிட்டு அகலாத அண்ணன் சிசு மணி அவர்கள் தீட்டிய, ‘திராவிட மாபா டியம்’ என்கின்ற நூலை, 14 ஆண்டுகளுக்கு முன்பு 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் நாள், நெல்லை சங்கீதா சபாவில், குன்றக்குடி அடிகளார் வெளி யிட்டார்கள். அந்த விழாவுக்குத் தலைமை ஏற்கின்ற பெரும்பேறு எளியவனா கிய எனக்குக் கிடைத்தது.

வீர சிதம்பரம் பிள்ளை எழுதிய “சிவஞான போத” உரையை திவான் பதிப்பித்து இருக்கிறார். அவர் நன்றி சொல்லும்போது, ஒரு சில வார்த்தைகளில் முடித் துக் கொண்டார். 15 ஆவது நூலாக, வ.உ.சி.யின் நூலாகத் தருகிறேன் என்றார். இன்னும் வெளிவராத வ.உ.சி. நூல்கள் பல உள்ளன.

சிவஞான போதத்தைத் தந்த மெய்கண்ட தேவனார் பிறப்பு வளர்ப்பு வரலாற் றை அடிகளார் சொன்னார். தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடைப் பட்ட நடுநாடாகிய திருமுனைப்பாடி நாட்டில்,பெண்ணாகடம் என்கின்ற ஊரில் அச்சுதகளிப்பர் தவம் இருந்து பெற்ற பிள்ளையாகப் பிறந்த அவருக்குச் சூட்டப் பட்ட பெயர் ஸ்வேதனப் பெருமாள். அவர் திருவெண்காட்டில் தவம் இருந்து பெற்ற பிள்ளை என்றாலும், தாய்மாமன் ஊரில் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தார். அங்கோ அவருக்கு பரஞ்சோதி முனிவர் அருள் செய்தார். மெய்ப் பொருளை உணர்த்தினார். ‘மெய்கண்ட தேவன்’ என்று பெயரும் சூட்டினார். அந்த மெய்கண்ட தேவன் தந்து இருக்கின்ற சூத்திரங்கள் 12.

இந்த 12 சூத்திரங்களுக்கும் எண்ணற்றவர்கள் விளக்கம் தந்து இருக்கிறார்கள். அதனுடைய நுண்மான் நுழைபுலப் பொருளை ஆய்ந்து அதைப் பகுத்துச் சொல் லக் கூடிய ஆற்றல் எனக்குக் கிடையாது. சுவாமிகள் போன்றவர்கள்தான் தர முடியும். ஆனால், அந்த மெய்ப்பொருளில் என் மனதைக் கவர்ந்த சூத்திரங்கள் இரண்டு. ஒன்று ஆறாவது சூத்திரம். இன்னொன்று பத்தாவது சூத்திரம்.

ஆறாவது சூத்திரம், ‘அறிவு என்கின்ற மெய்ப்பொருளே, உண்மை கடவுள் என் பதுதான் ஆறாவது சூத்திரத்தின் சாரம். பத்தாவது சூத்திரம், ‘யான்’ என்பதை விட்டு விலகிய உடன், நான், எனது, என்னைச் சார்ந்தது என்ற நிலையில் இருந்து விடுபட்டவுடன் அந்த உயிரே இறைவன் என்கின்ற நிலையை அடைந் து விடுகிறது என்பதாகும்.

பெரியாழ்வார் சொன்னார்.பிரபஞ்சத்தை உள்ளடக்கிய கோடான கோடி கிரகங் களை இயக்குகின்ற இறைவனும் என் நெஞ்சத்துக்கு உள்ளே இருப்பதால், நானே பெரியவன் என்று சொன்னார். ஞான் என்பதை மறுப்பது எப்படி? ..............

தொடரும் .....

No comments:

Post a Comment