Tuesday, September 10, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 14

நாள்:- 24.11.2006

செய்திக் குறிப்பு:

பிரதமர் மன்மோகன்சிங்குடன், #வைகோ- #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு குறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

நானும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் டாக்டர் சி. கிருஷ்ணன், சிப்பிப்பாறை அ. இரவிச்சந்திரன் ஆகியோ ரும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை இன்று (24.11.2006) மாலை 5.00 மணிக்குத் தில்லியில் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு 30 மணித்துளி கள் நீடித்தது. எங்களுடைய விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டு உள்ள கோரிக் கைகளை பிரதமரிடம் விளக்கிச் சொன்னோம்.

நாங்கள் கூறிய அனைத்தையும் பிரதமர் கவனத்தோடு கேட்டுக்கொண்டார்.
அதில் நாங்கள் வலியுறுத்திக் கூறியது :

இலங்கை விமானப்படை விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக்
கூடாது. அப்படிக் கொடுத்தால், தமிழர்களைக் கொல்வதற்காகத்தான் பயிற்சி
கொடுப்பதாகக் கருத முடியும்’ என்று சொன்னோம்.

‘அவ்வாறு பயிற்சி எதுவும் கொடுக்காமல் தடுக்க, நான் நேரடியாக இந்தப்
பிரச்சனையில் கவனம் செலுத்துகிறேன்’ என்று பிரதமர் சொன்னார்.

‘ஏ - 9 நெடுஞ்சாலையைத் திறந்து விட்டதாகக் கூறினார்களே?’ என்று பிரதமர்
கேட்டார்.

‘உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களால், உணவுப் பொருள்களை அனுப்பு வதற்காக, ஒரு நாள் மட்டுமே திறந்து வைத்தார்கள். தற்போது மூடி விட்டார் கள்’ என்றோம்.

அப்போது பிரதமர், ‘நாங்கள் அனுப்பி இருக்கின்ற உணவுப் பொருள்கள்
யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக மட்டுமே அனுப்பி இருக்கிறோம். இலங்கை
அதிபர் இங்கே வருகிறபோதும் இதை வலியுறுத்துவோம்’ என்று கூறினார்.

‘இலங்கை அதிபரின் வருகையை எதிர்த்து நாங்கள் உண்ணாநிலை அறப்போர் நடத்தப் போகிறோம்’ என்று தெரிவித்தோம்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில், உச்சநீதிமன்றம் எல்லாவற்றை யும் பரிசீலித்துத்தான் தீர்ப்புக் கொடுத்து இருக்கிறது. இரு மாநிலங்களும் பேச வேண்டும் என்றால், அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காகத்தான் பேச வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையை, கடற்படையினர் எதற்காக ஆய்வு செய்யச்
சென்றார்கள்? யாருடைய துhண்டுதலில், துணிச்சலில் இவ்வாறு சென்றார் கள்? இதன் பின்னணியை நீங்கள் விசாரித்துக் கண்டு அறிய வேண்டும். இது போன்ற நிகழ் வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆகிவிடும்’ என்று சொன்னோம்.

‘142 அடிக்குத் தண்ணீரை உயர்த்துவதைத் தவிர வேறு எதைப் பேசினாலும்
பயன் அற்றது - தேவை அற்றது’ என்று கூறினோம்.

அப்போது பிரதமர், ‘இரு மாநிலங்களுக்கும் இடையில் சுமுகமான சூழ்நிலை
வரவேண்டும்’ என்றார்.

முப்பது மணித்துளிகள் இந்தச் சந்திப்பு நீடித்தது.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment