07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
லாகூர் சிறையில் மரணக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள். இந்தக் கால கட்டத்தில் அவர் படித்த நூல்கள் ஏராளம் ஏராளம். அவருடைய அறிவுப் பசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை விதவிதமான புத்தகங்கள். கம்யூனிச புத்தகங் கள் அவர் மனதைக் கவர்ந்த புத்தகங்கள். லெனினைப் பற்றிய புத்தகங்கள். மார்க்சியத்தைப் பற்றிய புத்தகங்கள். அதைப் படித்தது மட்டுமல்ல ரொம்ப ஆச் சரியமாக இருக்கிறது. சின்கிலேர் எழுதிய ஒற்றன் என்ற ஒரு நாவல் அது கூட அவர் கேட்கிறார்.

அதில்தான் அருமையான கருத்துகளைச் சொல்கிறார்.சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைமை ஒரு விடுதலை இயக்கத்துக்கு ஏற்படும் என்று இவர் சொல்கிறார். சமரசம் தேவையான ஆயுதம் ஆகும் என்று அவர் சொல்கிறார். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சமரசம் தேவைப்படுகிறது என் கிறார்.
அதுவரை எடுத்த முடிவுகளைப்பற்றி ஆய்வு செய்வதற்கு அவகாசம் கிடைக் கிறது. வெற்றி தோல்வி யைப்பற்றி ஆய்வு செய்வதற்கு அவகாசம் கிடைக் கிறது. தொடர்ந்து வலுவாகப் போராடுவதற்கு உரிய களத்தை அமைத்துக் கொள்ள முடிகிறது. ஆகவே, சமரசம் ஒரு போராட்டக் களத்திற்குத் தேவை யான ஆயுதம் ஆகிறது என்கிறார். ஆனால், அடிப்படைக் குறிக்கோளில் இருந்து விலகிவிடக்கூடாது என்று சொல்லி இதற்கு உதாரணம் சொல்கிறார்.
1905 ம் ஆண்டு சோவியத்ரக்ஷ்யாவில் புரட்சி வெடித்தது.உடனடியாக வெளி
நாட்டில் தலை மறைவாக இருந்த லெனின் ரக்ஷ்யாவுக்கு வந்தார். 1906 இல் டூமாவில், ரக்ஷ்ய நாடாளுமன்றத்துக்குச் செல்லக்கூடாது என்று சொன்ன லெனின், ஒரு வருடம் கழித்து 1907 இல், டூமாவில் பங்கேற்கலாம் என்றார். அது ஒன்றும் கொள்கையை விட்டுக்கொடுத்ததாகாது, போர்த்தந்திரம் என்று சொல்லிவிட்டு மீண்டும் சொல்கிறார். 1917 இல் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, ரக்ஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற பிறகு கொடுங்கோலன் என்று உலகம் வர்ணித் துக் கொண்டு இருந்த ஜெர்மனியோடு ரக்ஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டது. பலரும் எதிர்த்தார்கள். லெனினை எதிர்த்தார்கள்.

அக்கிரமம் செய்து கொண்டு இருக்கிற ஜெர்மனியோடு நாம் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று. அவன் கொடியவன். சர்வாதிகாரி. அவனோடு நாம் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றபோது லெனின் சொன்னார் இப்பொழுது தேவை சமாதா னம். போர் ஓய்வு ஏனென்றால் இப்பொழுது ரக்ஷ்யாவில் சில பகுதிகளை இழக் க நேரிட்டால்கூட பரவாயில்லை. ஜெர்மனியோடு போர்மூண்டால் போல்ஸ் விக் ஆட்சியே அழிந்து விடும் என்றார். இதை பகத்சிங் குறிப்பிடுகிறார். அவரு டைய வாதப் பிரதிவாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டு வரு கிறார்.
உரிமைக்காகப் போராடக்கூடிய உணர்வு, உயிர் போவதைப்பற்றிக் கவலைப் படவில்லை பகத்சிங். தனக்குத் தெரியாமல் தந்தை மேல்முறையீடு செய்து விட்டார் என்பதற்காக, பகத்சிங் மிக வருத்தப் பட்டார். நீங்கள் எப்படி மேல் முறையீடு செய்யலாம்? என்று. அதற்கு அவர் உடன்பாடே கிடையாது. தூக்குத் தண்டனை எப்பொழுது நிறைவேற்றப்படும் தெரியவில்லை.
No comments:
Post a Comment