தமிழக அரசுக்கு #வைகோ கோரிக்கை
தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்றவர்கள் ஆசிரியர் களாக தகுதி பெற குறைந்தபட்சமாக 40 சதவிகித மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்.தமிழக அரசின் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல் லூரி மாணவர்களும், பட்டதாரிகளும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் அணுகி இருக்க வேண்டிய தமிழக அரசு, கண்டுகொள்ளாமல் பார்வையற்றவர்கள்தானே என்று அலட்சி யப்படுத்தி, காவல்துறையைக் கொண்டு கடுஞ்சொல்லால் காயப்படுத்தியும், தாக்கியும் குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தி, திக்குத் தெரியாத காட்டில் விடுவதென்று முடிவெடுத்து, போராடும் பார்வையற்றவர்களை முதலமைச் சரைச் சந்திக்க வாருங்கள் என்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னை புறநகர் பகுதிகளில் இறக்கிவிட்ட செயல் மிகவும் கண்டத்திற்கு உரியதாகும்.
தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு அலட்சிப்படுத்தி அவமதித்ததால் இனி நிரந் தரத் தீர்வை தமிழக முதலமைச்சரால்தான் தர முடியும் என்ற நம்பிக்கை யோடு தொடர்ந்து தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலமாக நிருபித் துக்கொண்டு வருகிறார்கள்.
நாகரீக சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் நடத்தப்படும் விதம் கவலை அளிப் பதாக உள்ளது.
உடலில் ஏற்படும் ஊனங்களை குறைபாடுகளை மனிதனைத் தவிர, ஏனைய உயிரினங்கள் பொருட்படுத்துவது இல்லை. எனவேதான் இவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பை உலகப் பொதுமன்றம் சட்டமாக்கி, Make the Right Real அவர்களின் உரிமைகளை உண்மையாக்கிட பணித்தது.
கடந்த நான்கு ஆண்டு காலமாக தங்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட
துறையின் அமைச்சருக்கும்,அரசு செயலாளருக்கு தெரிவித்தும் அவர்கள் எதிர்பார்த்த பயன் இல்லாததால், கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினார்கள். அப்போதாவது அரசு விழித் துக்கொண்டு அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டு கலைந்திருக்க வேண்டும்.
துறையின் அமைச்சருக்கும்,அரசு செயலாளருக்கு தெரிவித்தும் அவர்கள் எதிர்பார்த்த பயன் இல்லாததால், கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினார்கள். அப்போதாவது அரசு விழித் துக்கொண்டு அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டு கலைந்திருக்க வேண்டும்.
ஆனால், போராடுபவர்களை காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவ தால், பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிடாது.
கடந்த இரண்டுவார தொடர் சாலை மறியல் போராட்டங்களால் ஊடகங்கள் மூலமாக சர்வதேச சமூகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு கையாளும் முறையில் பின்தங்கி உள்ளதை எடுத்துக்காட்டியது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் உலவிய பூமியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கையாளுவதில் அரசு மிக வும் பின்தங்கி உள்ளதை வேதனையுடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பெற்றோராலும், குடும்பத்தினராலும் சுமை என்று புறக்கணிக்கப்பட்டு, பல் வேறு நிலைகளிலும் அலைக்கழிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கு ஆளாகி, வாழ் வோடு போராடிக்கொண்டு வருகிறார்கள்.
பார்வையற்றவர்கள் ஒன்பது பேர், ஒன்பது அம்ச கோரிக்கையை வென்றெடுக் க மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் குன்றி, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த காலங்களில் மேலை நாடுகளில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட வர் கள் ஊன்றுகோளுடன் நின்றுகொண்டு தன் தலையில் இருந்த தொப்பியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு உதவி கோரினார்கள். இதைத்தான் கேன்டி கேப் (Hand in cap) என்று அழைத்தார்கள்.
ஆனால், இன்று கல்வி, அறிவு, ஆற்றல், திறமை, தகுதியுடன் இருக்கும் அவர் கள் பிச்சை கேட்கவில்லை, அடிப்படை உரிமையைக் கேட்கிறார்கள். எனவே, போராடிக்கொண்டு இருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரி களை அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கனிவுடன் அவற் றைக் களைந்திட முதலமைச்சர் அவர்கள் ஆவண செய்ய வேண்டும்.
இவர்களில் அனுபவம் வாய்ந்த, அக்கறைகொண்ட திறமையான அதிகாரி களை ஆலோசகர்ளாக நியமித்து, அவர்களைக் கொண்டே அவர்களின் தேவை களை பூர்த்தி செய்து பணி நியமனம் செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றுச் சேர்கிறதா? என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
விழி இழந்தோரின் விடிவெள்ளி பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டிய தாரகை தன் வாழ்வில் அலைஅலையாக வந்த இன்னல்களை இடுக்கண்களைஎதிர்த்து நின்று போராடி வெற்றி கண்ட வீராங்கணை கெலன் கெல்லரின் தாரக மந்தி ரம், ‘என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடிலும், என்னாலும் சில வற்றைச் செய்ய முடியும்’ என்பதைப் போன்று உறுதி குலையாமல் போராடிக் கொண்டு வரும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் மாற்றுத் திறனாளிகள் என்பதையும் கருணைமிக்க அணுகுமுறைக்கு உரியவர்கள் என் பதையும் மனதில்கொண்டு தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறை யைக் கைவிட்டு பிரச்சனையை அணுக வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
27.09.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment