Monday, September 9, 2013

நிலம் கையகப்படுத்துதல்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது அரசு...
நாட்டின் விளைநிலங்களை தனியாரிடம் ஒப்படைக்கவே இச்சட்டம் பயன் படும்!

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் வரும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி மக்கள வையில் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பேச்சு
நிலம் கையகப்படுத்துதல், மீள் வாழ்வு அளித்தல் மற்றும் மீள் குடியமர்த்தல் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் அ.கணேசமூர்த்தி, 29 ஆகஸ்ட் 2013 அன்று ஆற்றிய உரை

நிலம் கையகப்படுத்துவதற்காக தற்போது கொண்டு வரப்படும் இச்சட்ட மசோ தா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தவிர்க்க முடியாத பொது நலனுக்காக நிலம் கையகப்படுத்தும் நிலை ஏற்படும் போது தவிர மற்ற எந்தக் கட்டத்திலும் விவசாய நிலங்களை அரசு கையகப் படுத்தக் கூடாது. அதிலும் குறிப்பாக புதிய கட்டமைப்பு என்றும் மேம்பாட்டுப் பணி என்றும் விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் என உணவு
உற்பத்திக்குப் பயன்படும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எந்த
நிலையிலும் அனுமதிக்காத வகையில் இச்சட்டத்தில் வழி செய்ய வேண்டும்.

தனியார் மயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டு, அதற்காக சலுகைகளை
வழங்கி வரும் இந்த அரசு,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளது. எனவே இப்போது பொதுத்துறைக்கென கையகப் படுத்தும் நிலம் தனியார் மயமாக்கலால் தனியாருக்கும் அதன் மூலம் அந்நிய
முதலீட்டாளர்களுக்கும் கைமாறும் வாய்ப்பே அதிகம். எனவே, நாட்டின்
விளை நிலங்களை மறைமுகமாக தனியாருக்கு தாரை வார்க்கவே இந்தச்
சட்டம் பயன்படும் அபாயம் உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் போது உள்ளாட்சிமன்றம் போன்ற உள்ளாட்சி அமைப் புகளின் ஒப்புதல் இல்லாமல், விவசாய நிலங்களை பயன்படுத்தக் கூடாது.

தற்போது நடைமுறையில் உள்ள நிலம் கையகப்படுத்தவும், நில பயன்பாட் டிற்காக எடுக்கவும் உள்ள சட்டங்கள் மூலமாகவும் நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல்,நில உபயோகத்திற்காகவோ, நிலத்தை கையகப்படுத் தவோ நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் இச்சட்டத்தில் வழி செய்திட வேண்டும்.

தொலை தொடர்புத் துறை, பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்றவற்றைக்
கொண்டு செல்ல என விவசாய நிலங்களைக் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதற்கென தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் போன்ற பொதுப் பயன்பாட்டில் உள்ள பகுதிகளை ஒட்டி அதற்கென தனி வழி அமைத்திட வேண்டும்.

தமிழகத்தில் ‘கெயில்’(Gail) நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க முற்பட்ட போது, விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகளின் நிலை யினை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், ‘மக்களுக்காகத்தான் திட்டமே தவிர, திட்டத்திற்காக மக்கள் அல்ல’ என அறிவித்து, எரி வாயு குழாய்களை மாற்று வழியில் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பதித்து, அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென அறிவித்தார்கள்.

மாற்று வழி பற்றி ஆய்வு கூட மேற்கொள்ளாமல், இத்திட்டத்திற்காக குழாய் கள் வாங்கி விட்டோம், பணம் செலவு செய்துவிட்டோம் என கெயில் நிறுவ னம் தற்போது வழக்குமன்றம் சென்றுள்ளது. வழக்குமன்றத்தில் சட்டத்தில் உள்ள சரத்துகளை ஆய்வு செய்வார்களே தவிர, மக்களின் சங்கடங்களை எந்த அளவு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாது.

எனவே இந்த அரசு குறிப்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர், கெயில் நிறுவ னத்தின் இந்த அடாவடிச் செயலைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.அதற்குரிய வகையில் தற்போதுள்ள The Petroleum and Minerals Pipeline Amendment 2011  சட்டத்தை திருத்தம் செய்து விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதைத் தடுத்து
நிறுத்திட வேண்டும்.

அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment