07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார்கள். மே 7 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. ஜூன் 12 ஆம் தேதி தீர்ப்பு. ஆயுள் தண்டனை. அந்தமானுக்கே அனுப்பலாம். ஆயுள்தண்டனை வந்து அந்த தண் டனையைத்தான் அனுபவிக்க இருக்கும் என்று கருதுகிற அந்த காலகட்டத் தில், ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றதில் பகத்சிங் குற்றவாளி என்று வழக்கு வருகிறது.
இதில் பல சாட்சியங்கள் - ஆவணங்கள் -பயன்படுத்திய பிஸ்டல். நாடாளு மன்ற வளாகத்தில் வைத்து ஒப்படைக்கிறானே அதே பிஸ்டலை வைத்துத் தான் ஷாண்டர்ஸ்சைச் சுட்டான். அதற்கு அடுத்து, 1929 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆயுள் தண்டனை. ஜூலை 10 இல் ஷாண்டர்ஸ் கொலைவழக்கு விசாரணை. இந்த விசாரணையின்போதுதான் அவர்கள் போராடுகிறார்கள். கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். நீதிமன்றத்தில் வந்து புரட்சி ஓங்குக என்று முழக்கமிடுகின்றனர்.
எங்களுக்கு விலங்கு போடக்கூடாது என்று எதிர்க்கிறார் பகத்சிங். பலாத்கார மாக விலங்கு போடுகிறார்கள்.கோஷம் எழுப்புகிறான்.இருவரையும் உதைத்து அடிக்கிறார்கள். நீதிபதியின் கண் முன்னால் அடிக்கிறார்கள். நீதிமன்றத்தில் இருந்து வெளியே இழுத்துக் கொண்டுவந்து குண்டாந் தடியால் அடிக்கிறார்கள் பகத்சிங்கையும் அவனுடைய தோழர்களையும். லாகூருக்கு மாற்றி லாகூர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அங்குதான் உதம் சிங்கைச் சந்திக்கிறான் பகத்சிங். ஜாலியன் வாலா பாக்கில் இத்தனைபேரைச் சுட்டுக் கொல்வதற்குக் காரணமாக இருந்தானே லெப்டினட் கவர்னர் மைக்கேல் டயர், அவனை இலண்டனிலே சுட்டுக்கொன்ற உதம் சிங் கைச் சிறையில் சந்திக்கிறான்.
இந்தக் காலகட்டத்தில் பகத்சிங் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடு கிறார். எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று அவர் போரா டுகிறார். உண்ணாவிரதம் இருக்கிறார்.இந்த உண்ணாவிரதம் முதலில் கூடாது என்று சொன்ன ஜதீந்திரநாத் அவரே உண்ணாவிரதத்தின் மகத்தான தியாகி ஆனார்.
தோழர்களே, 63 நாள் கழித்து ஜதீந்தர்நாத் இறந்துபோனார். வங்கத்தில் அவன்
ஒரு சிங்கம். இறந்து போன ஜதீந்தர்நாத்தின் சடலத்தை, கல்கத்தாவுக்குக் கொண்டு வருவதற்கு 600 ரூபாயை சுபாக்ஷ் சந்திர போஸ் அனுப்பி வைக் கிறார். அன்றைக்கு 600 ரூபாய் என்றால் இன்றைக்கு இலட்சத்தைத் தாண்டும். 6 இலட்சம் பேர் ஹவுரா ஸ்டேசனில் வழியெங்கும் கல்கத்தாவில் திரண்டு இருந்தனர். ஜதீந்தர்நாத்தின் உடலை வாங்குகிறபோது வங்காளத்தில் 6 இலட்சம் பேர் திரண்டு இருந்தார்கள்.
ஒரு சிங்கம். இறந்து போன ஜதீந்தர்நாத்தின் சடலத்தை, கல்கத்தாவுக்குக் கொண்டு வருவதற்கு 600 ரூபாயை சுபாக்ஷ் சந்திர போஸ் அனுப்பி வைக் கிறார். அன்றைக்கு 600 ரூபாய் என்றால் இன்றைக்கு இலட்சத்தைத் தாண்டும். 6 இலட்சம் பேர் ஹவுரா ஸ்டேசனில் வழியெங்கும் கல்கத்தாவில் திரண்டு இருந்தனர். ஜதீந்தர்நாத்தின் உடலை வாங்குகிறபோது வங்காளத்தில் 6 இலட்சம் பேர் திரண்டு இருந்தார்கள்.
97 நாள்கள் ஐரீக்ஷ் விடுதலை இயக்கப் போராட்டக்காரன் உண்ணாவிரதம் இருந்த ரிகார்டு இருந்தது. பகத்சிங் உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை. காங் கிரஸ் இயக்கம் மீது அவருக்கு கருத்து வேறுபாடு உண்டு, காந்தியார் மீது. ஆனாலும்கூட, காங்கிரஸ் இயக்கம் பகத்சிங்கின் தந்தையாரை அழைத்து, இந்த வேண்டுகோளை தீர்மானமாக உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டும் என்று கொண்டு போய்க் கொடுத்தார்கள். சில கோரிக்கைகளை அரசு ஏற்கச் செய்ய முடியும் என்று வற்புறுத்தினார்கள்.தந்தையார் கொண்டுபோய் கொடுத் தார். 116 ஆவது நாள் பகத்சிங் உண்ணாவிரதத்தை முடித்தார்.
அதற்குப்பிறகு, 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 7 இதே அக்டோபர் 7. வரலாற்றில் வேடிக்கையான விசித்திரத்தைப் பாருங்கள்.எந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன் று பகத்சிங் பிறந்தானோ, எந்த அக்டோபர் 7 ஆம் தேதியை 2008 ஆம் ஆண்டு இந்த மயிலாப்பூரில் நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோமோ, இதே அக்டோ பர் 7 ஆம் தேதி தான் மரணதண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
No comments:
Post a Comment