Tuesday, September 3, 2013

அணுஉலையை எதிர்ப்பது

மக்கள் தலைவர் #வைகோ அணுஉலையை எதிர்ப்பது நியாயமானதே!

கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ தொலைநோக்குப் பார்வையோடு குரல் கொடுப்பது முற்றிலும் நியாய மான தே!

கூடங்குளம் பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள், அணுஉலைக்கு எதிராக, 700 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அறவழியிலும், அமைதி வழியிலும்
போராடி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கூடங்குளத்தில் அணுஉலை நிறுவ அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி, 1998 நவம்
பர் 21 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் அறிவித்த மறுநிமிடமே, மக்கள் தலைவர் வைகோ இத்திட்டத்தால் தென் தமிழக மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுச் சூழல்
என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப் படுவர் என்று இத்திட்டத்திற்கு உடனடி யாக கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். மத்திய அரசு, பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் எதிர்ப்புகளுக்குச் செவி சாய்க்காமல் அணுஉலைப் பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.

மக்கள் தலைவர் வைகோ அவர்களும்,அணுஉலையை எதிர்த்துப் போராடும்
மீனவ மக்களோடும் பொதுமக்களோடும் போராட்டங்களில் கலந்துகொண்டு
அவர்களது வாழ் வாதாரங்களைப் பாதுகாக்க, அவர்களின் நியாயமான கோரிக் கைக்குத் துணை நின்று அணுஉலைக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.

அணுஉலை எதிர்ப்பு நியாயமானது

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு, நிலவியல் தன்மையைக் கருத்தில் கொள்ளாமல், இடம் தேர்வு செய்தது முதல் உலகில் இதுவரை ஏற் பட்டுள்ள அணுஉலை பேராபத்துகளும், அவற்றின் கடுமையான கொடுமை யான கடல் நீர், நிலவள சுற்றுச் சூழல் பாதிப்புகளும், அணு உலைக் கழிவு களால் ஏற்படும் அபாயமும், நிறுவப்பட்டுள்ள அணு உலை ரகங்களின் மோச மான வடிவமைப்பு, உரிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்காத அணு உலை கள், நிறுவப்பட்டுள்ள இதே ரக அணுஉலைகள் குறித்து பிற நாடுகளில் பல் வேறு சர்ச்சைகள், பின்னடைவு களைச் சந்தித்த உண்மைகளே மக்கள் தலை வர் வைகோ அணுஉலைகளை எதிர்ப்பதற்குக் காரணங்களாகும்.

அணுஉலைகளால் ஆபத்து

ஆபத்து நிறைந்த அணுமின் நிலையங்களை நிறுவத் துடிப்பது பைத்தியக்காரத் தனமான வெறியாகும்.நாட்டுப்பற்று கொண்ட எவரும் வலதுசாரி-இடதுசாரி அல்லது நடுநிலை யாளர்கள்-அணுஉலைகளை ஆதரிக்க மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட புகழ்மிக்க விஞ்ஞானி
எட்வர்ட் டெல்லரின் மாணவர் ஹான்ஸ் பீட்டர் டியூர் என்பவர். ஜெர்மனி நாட் டின் இயற்பியல் விஞ்ஞானி. இவர் நோபல் பரிசுபெற்ற சிறந்த விஞ்ஞானி ஆ வார்.அவரும், “அணுமின் சக்தி எக்காலத்திலும் பாதுகாப்பற்றது. அணு உலை களின் பாதுகாப்பிற்கு உத்தர வாதம் அளிக்க முடியாது. பாதுகாப்பு அம்சங் களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அணுஉலைக்கழிவுகள் ஆபத்தானவை. கழிவுகளை அப்புறப்படுத்துவது அதைவிடப் பெரிய பிரச்சி னையாகும். அணுக்கழிவுகள் தவறான கைகளுக்குக் கிடைத்து விட்டால் அணு குண்டு செய்வதற்கும் அக்கழிவுகளைப் பயன்படுத்தக் கூடும்” என்கிறார்.

அணுமின் நிலைய இடம் தேர்வு

பிரான்சு நாட்டின் அணுசக்திக் கழகத் தலைவர் பெர்னார்டு பிகாட், அணுமின்
நிலையம் நிறுவுவதற்கு இடத்தைப் பற்றிய முந்தைய 1000 ஆண்டுகளின் புவி யியல் தன்மையின் புள்ளி விபரங்களையும், தகவலையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க இந்த விதி பின்பற்றப்பட்டதா?

மேலும், புவியியல் சோதனைகளில் தவறுகள் நடந்துள்ளது எனக் கூறப்படு கின்றது. அணுஉலைக்கான இடத்தில் பாறைகள் கொண்ட நில மேல் ஓடு 40
ஆயிரம் மீட்டர் தடிமன் இருக்க வேண்டும் என்பது அவசியம் என்ற நிலையில், இங்கு 110 முதல் 150 மீட்டர் தடிமன் மட்டுமே இருப்பதாக 2010 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த முக்கியமான பல்கலைக் கழ கங்கள் இணைந்து நடத்திய கருத்தரங்கின் ஓர் ஆய்வுக் கட்டுரையில் வெளி யாகியுள்ளது.

அணுஉலை அமைக்கப்பட்டுள்ள இடம் சிறிய அளவிலான எரிமலை வெடிப்பு கள் உருவாக வாய்ப்புள்ள இடம் என்றும்; இங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலை வில் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் மிகப்பெரிய நிலச் சரிவு ஏற்படுத்தும் வாய்ப்புள்ள வண்டல் குவியல்கள் இருப்பதாகவும், இவற் றால் 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சுனாமி உருவாகும் அபாயம் உள் ளதாகவும் கூறப்படுகிறது. 1982 இல் சர்வதேச கடல்துறை நிபுணர்களால் மேற் கொள்ளப்பட்ட முக்கியமான ஆய்வு ஒன்று கூடங்குளம் அணுமின் நிலையம்
அமைவிடத்தின் அருகே கிழக்கு குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்
என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு மிகப்பெரிய வண்டல் மண் குவியல்கள்
இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

அணுஉலை இருக்குமிடத்தில் பிதுங்கு எரிமலைப் பாறைகள் இருப்பதை 1987
ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பல்வேறு அறிவியல்
ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.இவை எவையுமே கவனத்தில் எடுத்துக்
கொள்ளப்படவில்லை.

கூடங்குளத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநெல்வேலி
அபிசேகபட்டியில், 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறிய அளவிலான எரிமலை
வெடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட கல், அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க
நிபுணர் குழுவிடம் உள்ளது. இக்கல், பூமியின் ஆழத்திலிருந்து வந்த லாவா வில் உருவானதுதான் என்று 2002 ஆம்ஆண்டு சாஸ்திரா பல்கலை நிலவியல் துறையின் அன்றைய பேராசிரியர் விக்டர் ராஜமாணிக்கம் உறுதிப்படுத்தி யுள்ளார்.

அதேபோன்று கல்பாக்கம் அணு உலைக்கு தென்கிழக்கே 104 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் ஓர் எரிமலை இன்றும் கனன்றுகொண்டு இருப்பதாக ஆய்வுகள் உள்ளனவாம்.உலக எரிமலை ஆய்வு நிறுவனத்தால் 0305-01 என்று குறிப்பிடப்படும் இந்த எரிமலை 1757 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெடித் துச் சிதறியதாக ஆவணங்கள் உள்ளனவாம்.

மேலும் பருவகால மாற்றங்கள்,கொல்கத்தாவிலிருந்து மியாமி வரை கட லுக்கு அருகில் உள்ள பகுதிகளை பெரும் ஆபத்திற்குள்ளாக்கும் என அய். நா. சபை தலைமைச் செயலாளர் பான் கீ மூன் 2011 இல் தெரிவித்து உள்ளார். கடல் மட்ட உயர்வால் கடலுக்கு அருகில் உள்ள நகரங்கள், புயல் காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களுக்கு இலக்காகும் நிலை ஏற்படும். பாண்டியர்களின் துறைமுகம் கொற்கை, சோழர் துறைமுகம் பூம்புகார், பல்லவர் துறைமுகம் மாமல்லபுரம் ஆகியவை வங்கக் கடலில்தான் இருந்தன. தற்பொழுதும் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக் கடலில்தான் சுனாமி வந்து பேரழிவை
ஏற்படுத்தியது. பூம்புகார் நகரம் வங்கக் கடலில் கடல் கோளால் மூழ்கியதாக
இலக்கியங்கள் மற்றும் கடல் அகழ்வாய்வின் தடயங்கள் மூலம் அறிகின் றோம்.

ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவிற்கு எந்த ஒரு
புவியியல் கோளாறும் இல்லை என்று தேசிய கடல் ஆய்வு நிறுவனத்தின்
ஆய்வறிக்கைக்கு மாறாக தெரிவிக்கப் பட்டது. ஆனால், கடற்கரையின் நில வியல் ஏற்படுத்திய கோளாறுகள் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள படிவுகளை (Sediments) பாதித்துள்ளது.

‘‘The Vijayadurg Fault’ என்று அழைக்கப்படும் ஒரு நிலவியல் கோளாறு அணுமின் நிலையத்திற்குக் கீழேயே உள்ளது. ஜெய்தாப்பூர் பகுதியில் அமெரிக்க நில வி யல் நிபுணர் ரோஜர் பில்ஹாம் நிலநடுக்கம் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளார். ஆனால், அவர் இந்தியாவிற்கு வருவதற்கு தடை
விதிக்கப்பட்டது.

1524 ஆம் ஆண்டில் ஜெய்தாப்பூரில் இருந்து 100 கி.மீ. வடக்கில் பெரிய சுனாமி ஏற்பட்டுள்ளது.

அணுஉலைக் கழிவுகளால் ஆபத்து

அணுஉலைக் கழிவுப் பொருட்களின் ஆயுட்காலம் 50,000 ஆண்டுகளுக்கும் அதி கம் எனக் கூறப்படுகிறது. இன்றைய விஞ்ஞானத்தால் கழிவுகளைப் பதுக்கி
வைக்க மட்டுமே முடியும். கழிவுகளை அப்புறப்படுத்தவோ, நச்சுத் தன்மையை
மாற்றவோ குறைக்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ தொழில் நுட்பம் இதுநாள் வரை கண்டுபிடிக்கப் படவில்லை.

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தின் நீதிமன்றம் அணுக்கழிவு சம்பந்த மான ஒரு வழக்கில் “அணுக் கழிவுகள் பேராபத்தை உண்டாக்கு பவை. நீண்ட காலத்திற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தும். மனிதர்கள் நினைத்துப் பார்க்க இயலாத காலம் வரை அதன் பேராபத்து நிலவிக் கொண்டு இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே கூடங்குளத்தில் ஏற்படும் அணுஉலைக் கழிவுகளை பத்திரமாக பல்லா யிரமாண்டுகள் பாதுகாக்க வேண்டும்.கடல்நீர், இக்கழிவு களால் மாசுபடும். கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாகப்பாதிக்கப்படும்.அணு உலையிலிருந்து வெளிவரும் நீராவி,மனிதர்களின் சுவாசம், வியர்வையில் கலந்து சுகாதாரக் கேடு விளைவிக்கும்.அணுஉலையில் வெடிப்பு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக 140 கி.மீ. வரை பாதிப்பு ஏற்படும். கேரள மாநில எல்லை முதல் மதுரை வரை பாதிப்புகளை விளைவிக்கும். மனிதர்கள் மட்டும் அன்றி கால் நடைகள் உள்ளிட்ட விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப் படும். விவசாய நிலங்கள், கடல், ஏரி,குளங்கள், கிணறுகள் அனைத்தும் பயன்படுத்தத் தகுதி யற்றதாகிவிடும்.

கூடங்குளம் - பால், நெல் மற்றும் விவசாயப் பொருட்கள் உற்பத்தியாகும் பகு தி. மக்கள் தொகை அதிகம் கொண்ட கிராமங்கள் உள்ளன. கடல் பகுதி மீன் வளம் நிறைந்தது. விவசாயத்திலும் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டுள்ள மக் களே அப்பகுதியில் அதிகம் வாழ்கின்றனர். அணுஉலையில் ஏதேனும் அசம்பா விதம் ஏற்பட்டால்,தென்தமிழ்நாடே அழிந்துவிடும்.எனவே, மக்கள் தலைவர் வைகோவின் அணுஉலை எதிர்ப்பு முற்றிலும் நியாயமானதே!

அணுஉலை விபத்துகள்

அணுஉலைகளில் விபத்துகள் ஏற்பட்டு,மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு
உள்ளனர் என்பதற்கு உதாரணங்கள் உண்டு. அணுஉலைகளை குளிர்விப்பதில் கோளாறு ஏற்பட்டதால்,1957 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கிஷ்டிம் என்ற இடத்தில் அணுஉலை விபத்து ஏற்பட்டது. 70 முதல் 80 டன்கள் அளவு கதிர்வீச்சு ஏற்பட்டு, காற்றில் கலந்ததில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் இறந்தனர்.பலவித உடல உபாதைகளாலும் உடல் ஊனங்களாலும் மக்கள் பாதிக்கப் பட்டனர்.

அதே ஆண்டில் இங்கிலாந்து விண்ட்ஸ் கேல், 1961 இல் அமெரிக்காவில் இதா கோ தொழில்நுட்ப ஆய்வு மையத்தில்,1979 இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, 1986 இல் ரஷ்யாவின் செர்னோபில், 1989 ஜப்பானில் டொகாய்முரா, 1993
ரஷ்யாவில் செவர்ஸ்க், 2004 இல் ஜப்பானில் மிகாமா, 2011 இல் ஜப்பானில் புகுஷிமா டெய்ச்சி,2011 இல் பிரான்சில் மார்குலே என அணு உலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அணுஉலை விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

செர்னோபில்: ரஷ்யாவின் செர்னோபில் (1986, ஏப்ரல் 26) விபத்தில் ஹிரோசி மாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 400 மடங்கு அதிக சக்தி வாய்ந்த கதிர் வீச்சு உருவாகி, 3,88,000 ச.கி.மீ.பரப்பளவிற்கு அய்ரோப்பிய நாடுகளையும் தாண்டிய பகுதிகளிலும் கூட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கி லாந்து நாட்டின் மொத்த நிலப்பரப்பைப் போல் இருமடங்கு நிலப்பரப்பு - 1000 க் கும் மேற்பட்ட கிராமங்களடங்கிய பகுதி -பாழாகி மனிதர்கள் வாழத் தகுதி யற்ற நிலப்பரப்பாகிவிட்டது.

கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளைச் சுமந்த அதிகமான வாக னங்கள் 5 ஆண்டுகள் ரஷ்யா முழுவதும் சுற்றி அலைந்தன. காரணம், அனைத் துப் பகுதியிலும் உள்ள நிர்வாக அமைப்புகள் கதிர்வீச்சால் மடிந்த கால்நடை களைத் தங்கள் பகுதியில் புதைப்பதற்கோ அல்லது அழிப்பதற்கோ அனுமதிக் கவில்லை. இறுதியில் அவற்றைப் புதைப்பதற்கு செர்னோபில் பகுதிக்கே கொண்டுவரப்பட்டு, 10 ச.கி.மீ. பள்ளம் தோண்டி, அதில் கதிர்வீச்சால் தாக்கப் பட்ட லாரிகள், ரயில்,ஹெலிகாப்டர்ர்கள் மற்றும் மடிந்த கால்நடைகள் புதைக் கப்பட்டன.

பெளடிம்கா என்ற கிராமத்தில் அனைத்து குழந்தைகளும் தைராய்டு நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். செர்னோபில் அணுஉலை விபத்தின் கதிர்வீச்சால்  ஏற் பட்ட இவ்வியாதியை அப்பகுதி மக்கள் கிண்டல் கலந்த கோபத்தில் ‘செர்னோ பில் நெக்லஸ்’ என்று அழைத்தனர்.

ரிவ்னே என்ற பகுதியில் உள்ள கதிர்வீச்சு பாதுகாப்பு மய்யத்தின் மூத்த மருத்து வர் பாடியானா என்பவர், 1985 ஆம் ஆண்டில் வருடத்திற்கு நான்கு இரத்தப் புற் று நோயாளிகள் அங்கு வந்ததாகவும், அணுஉலை விபத்துக்குப்பின் நோயா ளி
களின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். அதே போன்று அரிதான எலும்புப் புற்றுநோய் தாக்கம் கொண்ட நோயாளிகள் முன்பு அங்கு இருந்த தில்லை எனவும் அணுஉலை விபத்துக்குப்பின் 5 முதல் 8
நோயாளிகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு பிரசவங்களில் அங்கு வளர்ச்சியற்ற குழந்தைகள் பிறந்த தாகவும், குழந்தைகள் சிறுவயதிலேயே இறப்பதாகவும், தாய்ப் பாலில் சீசியம் மற்றும் ஸ்டிரோன்டியம் போன்ற நச்சுப் பொருட்கள் இருப்பதைக் காண முடிந் ததாகவும் தெரிவித்துள்ளார்.36 சதம் குழந்தைகள் தைராய்டு நோயால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டு இருந்ததையும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமான குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு மற்றும் இரத்தம் சம்பந்த மான நோய்களும், உடல்,தலைகள் வளர்ச்சியற்ற குழந்தைகள்,தொடைப் பகு தியே இல்லாத குழந்தைகளும் காணப்பட்டனர். எதிர் காலத்தில் இப்படிப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்றும் தெரிவித்துள் ளார்.

கதிர்வீச்சு இன்றும் உள்ளதாகவும்,புற்றுநோய் மற்றும் வேறுவித நோய்களை யும் உண்டாக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அணுஉலை விபத்துக்குமுன் அப்பகுதி மக்களுக்கு ஒரு மில்லி சீவர்ட்ஸ் அளவிற்கு மட்டுமே கதிர் வீச்சு ஏற்பட்டது. தற்போது ஆண்டுக்கு 20 முதல் 50 மில்லி சீவர்ட்ஸ் அளவு வரை கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுகிறது.

புகுஷிமா: ஜப்பானில் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டவுடன் விளைவுகளுக் குப் பயந்து அங்கிருந்து 350 கி.மீ. தொலைவிலுள்ள டோக்கியோ நகரத்தையே காலி செய்வதற்கு ரகசியத் திட்டம் தீட்டப்பட்டது என்று ஒரு செய்தி வந்தது. (International Herald Tribune) Feb 29, 2012) புகுஷிமா பகுதியில் பறந்த வண்ணத்துப் பூச்சி களுக்குக் கூட மரபணுக்களில் திரிபும் மாற்றமும் ஏற்பட்டுள்ளதாக ஆய் வுகள் தெரிவிக்கின்றன.

புகுஷிமா அணுமின் நிலையத்தை முற்றிலும் செயல் இழக்கச் செய்வதற்கு ஜப்பான் அரசுக்கு 40 ஆண்டுகளுக்கு 14.6 பில்லியன் டாலர் செலவும் ஆகும்
என்று கணக்கிடப்பட்டுள்ளது.அணுமின் உலையில் சிக்கிய எரிபொருளை வெளியே எடுப்பதற்கு மட்டுமே 40 ஆண்டுகள் பிடிக்கும்.அவ்வாறு வெளியே எடுக்கப்பட்ட கதிரியக்கம் கொண்ட எரிபொருளை சுற்றுச் சூழலுக்குப் பாதிப் பின்றி அப்புறப்படுத்துவதற்கு வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண் டும் என்பது அடுத்துள்ள பெரிய பிரச்சினை.

அணுஉலைக்கு அடியில் தங்கியுள்ள எரிபொருளை மேலே கொண்டு வருவ தற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு மட்டும் 10 ஆண்டுகள் ஆகுமாம். மேற் கண்ட இத்தனை பணிகளைச் செய்வதற்கான ரோபாக்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும். கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்து
விடாது என்றும் கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட செலவு எரிபொருளை வெளி யே கொண்டுவருவதற்கு மட்டும் தான். ஏனைய செலவுகளை கணக்கில்
எடுக்கவில்லையாம்.

புகுஷிமா அணுஉலை விபத்தால்,அணுஉலைக்கு 60 கி.மீ. அப்பாலுள்ள நிலத் தின் மண் முழுவதுமாக கெட்டுப் போய்விட்டது. அம்மண்ணில் அனுமதிக் கப் பட்ட சீசியத்தின் அளவான 1000 பெக்கரல் அளவை விட 46,540 பெக்கரல் இருந் துள்ளது. கதிர்வீச்சு வெப்பத்தால் மனித உயிர்கள் பலியாயின. கதிர்வீச்சால் இன்றுவரை மக்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப் பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடுமையான கதிர்வீச்சால் தண்ணீர் மற்றும் உண வுப்பொருட்கள், காய்கறிகள் யாவும் நச்சுத் தன்மையடைந்து விட்டன.

அமெரிக்காவின் மூன்று மைல் தீவு விபத்துக்குப்பின்அப்பகுதிகளையும்,உலை யையும் சுத்தம் செய்வதற்கு 14 ஆண்டுகள் ஆயிற்றாம். செலவு இரண்டு கோடி டாலர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்பும் 100 கோடி டாலர் செலவழிக்கப் பட்டுள் ளது. கொட்டப்பட்ட கான்கிரீட் கலவையை மீறிக் கதிர்வீச்சு உள்ளதாகக் கூறப் படுகிறது. இவ்விபத்துக்குப் பின் அமெரிக்கா அணுமின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தவில்லை. ஆய்வுகளும் அதற்குண்டான நிதி ஒதுக்கீடு களும் நிறுத்தப்பட்டன.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி வாழும் மீனவப் பெண்கள் தைராய் டு, பிரசவ காலப் பிரச்சினைகள்,சிசு மரணம் போன்ற கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வந்துள்ளன. புற்று நோயால் பாதிக்கப் பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாகக் கூறப் படுகிறது.மகாபலிபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கிடைக்கும் மீன் களை விரும்பிச் சாப்பிடுவதில்லை எனவும், அங்குள்ள மீன்கள் மீது ஈக்கள்
மொய்க்காமல் இருப்பது சற்று வித்தியாசமாக இருப்பதாகவும் செய்திகள் வந் துள்ளன.

ராஜஸ்தானில் கோட்டா அணுமின் நிலையத்தின் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள 5 கிராமங்களிலும் அணுமின் நிலையத்திற்கு 50 கி.மீ. தொலைவில் உள்ள கிரா மங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டது. அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிராம மக்களுக்கு பிறவிக் கோளாறுகள், கருச் சிதைவுகள், குழந்தைகள் இறந்து பிரசவித்தல், உடலில் கட்டிகள் போன்ற பாதிப்புகள் இருந்தனவாம்.

அணுஉலைக்கு எதிர்ப்புகள்

அணுஉலைகளை நிறுவுவதிலும் பராமரிப்பதிலும் செயல்படுத்துவதிலும்
பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. இவற்றின் ஆயுள் முடிவில்
அணுஉலைகளை அகற்றும் பணிகளுக்கான செலவு, நிறுவும் செலவுகளை விட மிக அதிகம். கதிர்வீச்சு அபாயம் கொண்ட அணுமின் கழிவுகளை அப்புறப் படுத்துவதிலும் சிக்கல்களும், ஆபத்துகளும் உள்ளன. ஆகையால் தான், இங் கிலாந்து நாட்டின் அணுமின் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க அன் றையப் பிரதமர் மார்கரெட் தாட்சர் அழைப்பு விடுத்த போது அத்திட்டத்தை ஏற்க யாரும் முன்வரவில்லை.

நம் நாட்டில் குஜராத் மாநிலத்தில் பவநகர் மாவட்டம் - ஜஸ்பரா கிராமத்தில்
8000 மெகாவாட் அணுமின் நிலையம் அமைப்பதற்கு நிலங்களைப் பார்வையிட வந்த அரசு அலுவலர்களை 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3000க் கும் அதிகமான மக்கள் எதிர்த்துப் போராடியதில், நிலத்தைப் பார்வையிடாம லேயே அலுவலர்கள் திரும்பிவிட்டனர்.

ஆந்திரா மாநிலம் - சிரிகாகுளம் மாவட்டம், செவ்வடா கிராமத்தில் 1594 மெகா வாட் கொண்ட ஆறு அணு உலைகளை ஒரு இலட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கும் திட்டத்தை அப்பகுதி மக்களும் எதிர்த்து வருகிறார்கள்.

ஜெய்தாப்பூர் மக்களும் அங்கு அணுஉலை அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஹரிபூரில் அணுமின் நிலையம் அமைக்கும் முயற்சிகளை மேற்கு வங்க அரசு நிராகரித்துவிட்டது.

பிரேசில் நாட்டில் அமேசான் பகுதியில் பெலோமோண்டே (Belo Monte) என்ற
அணைக்கட்டு கட்டுவதற்கு அப்பகுதி மக்களைக் கலந்தாலோசிக்காமல் பணி கள் தொடங்கப்பட்டன.இம்முயற்சியை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “சர்வாதிகார அமைப்பில் தான் மக்களைக் கலந்தாலோசிக்காமலேயே அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு ஒப்பு தல் அளிக்கும்” எனக் குறிப்பிட்டது. அமெரிக்காவில் ஷோர்ஹாம் அணுமின் நிலையத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால், அந்த அணு உலை எரிவாயு மின் சக்தி உற்பத்தி செய்யும் நிலையமாக மாற்றப்பட்டது.

அணுஉலைகளை மூடும் நாடுகள்

பல அணுஉலைகளில் விபத்துகள் ஏற்பட்ட பின்னர், பல நாடுகளில் அணு உலைகளுக்குஎதிராக மக்களின் குரல் எழும்பியது. இதன் விளைவாக அணு மின் சக்தியைப் பயன்படுத்தி வந்த பல நாடுகள் தங்கள் அணுமின் நிலையங் களை மூடவும், படிப்படியாகஅணுமின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்திக்கான முதலீடு செய்யத் திட்டங்கள் தயாரித்துவிட்டன.

அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுஉலை விபத்துக்குப்பின் அங்கு அணு மின் நிலையங்கள் நிறுவப்பட வில்லை. அணுமின் சக்தி சம்பந்தமான ஆய்வு களையும் நிறுத்திவிட்டது.சைபீரியாவில் செவர்ஸ்க் நகரத்தின் அருகே இயங் கிவந்த இரண்டு அணு உலைகளை மூடுவதற்கு 2008 ஆகஸ்ட் மாதத்தில் ஒப்பு தல் அளிக்கப்பட்டது.நெதர்லாந்தில் உள்ள ஒரே ஒரு அணுமின் நிலையத்தை யும் மூட முடிவு செய்யப்பட்டது. கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக அணு மின் சக்தியைப் பயன்படுத்தி வந்த பெல்ஜியம் அணுமின் சக்தியைக் கைவிட் டுக் கொண்டு வருகிறது.

ஜெர்மனி தனது அணுமின் நிலையங் களை 2022 ஆம் ஆண்டிற்குள் மூடிவிட
முடிவு செய்துள்ளது. தனது 17 அணுஉலைகளின் உற்பத்தியை 2033 ஆம் ஆண்டுவரை நீட்டிக்கும் திட்டத்தையும் கைவிட்டுவிட்டது.ஜெர்மனி தனது மின்சாரத் தேவையில் 53 சதம் அணுமின் மூலம்தான் பெற்று வருகிறது. இந்த நிலையிலும் தனது அணுமின் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள முடிவு அணுஉலைகளால் ஏற்படும் பேரழிவுகளை உணர்த்தி உள்ளது. ஆனால், நம் நாட்டில் வெறும் 2.26 சதம் மின்சாரம் மட்டுமே அணுமின் நிலையங்கள் மூலம் பெறுகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

உலகளவில் உற்பத்தியாகும் அணுமின் சக்திக்குத் தேவையான எரிபொருள்
யுரேனியம் ஆஸ்திரேலியாவில் அதிகம் கிடைக்கிறது. தெற்கு ஆஸ்திரே லி யாவில்தான் உலகின் மிகப்பெரிய யுரேனியச் சுரங்கம் உள்ளது. அவ்வாறு இருந்தும் ஆஸ்திரேலியா ஒரு அணுமின் நிலையத்தைக்கூட அமைத்துக் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சுவிட்சர்லாந்து அரசும் தனது நாட்டிலுள்ள 5 அணுமின் நிலையங்களையும் 2022 க்குள் மூட முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல், இந்தோனேசியா, இத்தாலி நாடுகளும் அணுமின் நிலையங்களை
மூடிவிட முடிவு செய்துவிட்டன. பிரான்சு தனது 24 அணுஉலைகளை மூடி விட்டு, 75 சதம் அணுமின்சக்தி பயன்பாட்டை 25 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஜப்பான் 2040 இல் தனது 50 அணுஉலைகளை மூடிவிட முடிவு செய்துள்ளது. சீமென்ஸ் என்ற மின்நிறுவனம், அணுமின்
தொழிலிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டது. துருக்கி, சிரியா, ஜோர் டன், போலந்து, எகிப்து, அரபுக் குடியரசு நாடுகளும் அணுமின் உலைகளே வேண்டாம் என முடிவு செய்துள்ளன.

அணுஉலைகளின் வடிவமைப்புக் கோளாறுகள்

அனைத்து அணுஉலைகளிலும் விபத்துகள் ஏற்படக் காரணம் வடிவமைப்புக் கோளாறுகள்தான்.மூன்று மைல் தீவு விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய அன்றைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், கெம்னி விசாரணைக்குழு வை  (The Kemney Commission) நியமித்தார்.விசாரணையில் அணுஉலை வடிவ மைப் பாளர்களும் அவற்றை வழங்கிய பாப்காக் அண்ட் வில்காக்ஸ் (Bobcock and Wilcox) என்ற நிறுவனமும் பொறுப் பாவார்கள் என்று தெரிவிக்கப்ட்டது.

செர்னோபில் அணுஉலை விபத்துக்குப் பின் ரஷ்ய அணுஉலைகளின் தரம்
கவலையளிக்கக்கூடியதாகவே உள்ளது.2011 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர்
புடினுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ரஷ்ய அணுஉலைகள் பற்றிய ஆய்வு அறிக்கை யில், ரஷ்யாவில் உள்ள பெரும்பாலான அணுஉலைகள் இயற்கைச் சீற்றங் களை யும் மனித தவறுகளையும் சமாளிக்கும் நிலையில் இல்லை என்று தெரியப்படுத்தப் பட்டுள்ளது.

கூடங்குளத்திற்கு VVER ரக அணுஉலைகள் ரஷ்ய அணுசக்திக் கழகமான ரோசாட்டம் தயாரித்து, அதன் துணை நிறுவனமான ஆட்டம்ஸ்டோரி எக்ஸ் போர்ட் மூலம் வழங்கியுள்ளது.VVER ரக உலைகள் முற்றிலும் பாதுகாப்பா ன வை என உறுதியாகக் கூறமுடியாது. இதற்கு முன்பு வேறு நாடுகளில் நிறுவப் பட்டுள்ள இதே ரக அணுஉலைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2006 மார்ச் மாதம் முதல் நாள் பல்கேரியாவில் உள்ள கோலுடக் அணுஉலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த ரக அணுஉலைகள் நூறு சதம் பாதுகாப்பானவை எனக் கருதினால், அணு உலைகளை வழங்கியவர்கள்,உலைகளில் விபத்து ஏற்பட்டால் தங்களைப் பொறுப்பாளியாக்கக் கூடாது என்று ஏன் கடுமையாகப் போராட வேண்டும்? நாடுகளுக்கிடையில் இது சம்பந்தமாக சிறப்பு உடன்படிக்கைகள் ஏன் செய்து கொள்ள வேண்டும்? அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படு பவர் கள் உலைகளை வழங்கிய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர முடியாது என ஏன் முடிவு செய்யப்பட்டது?

பல்கேரியா, தான் ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள VVER ரக உலைகளில்
பொருத்தப்பட்டுள்ள பொருட்கள் பற்றிய முழு விபரங்களையும் தெரிவிக்கு மாறு ரஷ்ய நிறுவனத்துடன் கோரியுள்ளது என்பது VVER ரக உலைகளின் தரத் தின் மீதும் பாதுகாப்பு அம்சங்கள் மீதும் பல்கேரியா நாட்டிற்கு சந்தேகம் எழுந் துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதேபோன்று சீனா தனது டயான்வான் அணுமின் நிலையத்திற்கு வாங்கியுள் ள VVER உலைகளில் அமைக்கப்பட்டு உள்ள தரமற்ற உதிரிப் பொருட்களைப்
பற்றிப் பல்வேறு கேள்விகளை உலைகள் வழங்கிய நிறுவனத்திடம் எழுப்பி யுள்ளது.

ஜெய்தாப்பூர் அணுஉலையிலும் சிக்கல்

ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்திற்கு 1650 மெகாவாட் உற்பத்தி செய்யும்
சக்தி கொண்ட ஆறு EPR(European Pressurised Reactors) உலைகளை பிரான்சு நாட்டின் நுனுகு EDF (Electricty de France) நிறுவனமான அரேவாவிடம் இருந்து வாங்குவ தற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. வர்த்தக ரீதியில் EPR உலைகள் உலகில் உற்பத்தி செய்யப்படவில்லை.

மேலும் பிரான்சு, பின்லாந்து நாடுகளில் அரேவா நிறுவனத்தின் அணுஉலை கள் கட்டுமானத்தில் பெரும் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டுள்ளனவாம். பிரான்சு நாட்டில் பிலாமின்விலே எனும் இடத்தில் EPRஉலைகள் நிறுவும் பணி குறித்த காலம் கடந்து மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அரேவா நிறுவ னம் 2.77 பில்லியன் யூரோ கடனில் தத்தளிக்கிறது. 2011 இல் இந்நிறுவனம்
2 பில்லியன் யூரோ நஷ்டமடைந்து உள்ளது.

இவ்வுலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணு பாதுகாப்பு முகமைகள்
கவலை தெரிவித்துள்ளன. பிரான்சு நாட்டின் அணுமின் உற்பத்தித் தொழிற்
கொள்கைக்கான தணிக்கை அறிக்கை அரேவா நிறுவனத்தின் மீதும் EDF மீதும்
குறை கூறியுள்ளது.தேவையற்ற மற்றும் மிகவும் குழப்பம் நிறைந்த வடிவ மைப்பு கொண்ட வையாக EPR உலைகள் உள்ளன என்றும் சுட்டிக் காட்டி உள் ளது.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத கார ணத்தால் EPR  உலைகளை, பென்லி (Penly) அணுமின் நிலையத்தில் நிறுவுவ தற்கு பிரான்சு காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளது. அரேவாவின் தொழில் நுட்பப் பார்ட்னராக உள்ள சீமென்ஸ் நிறுவனம் அணுமின் உற்பத்தித்
தொழிலிலிருந்து தான் வெளியேறுவதாகவும் மாற்றுமுறை மின்சாரம் தயா ரிக்கும் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டதாகவும் அறிவித்துவிட்டது.

ஆனால், இந்திய அரசு இவற்றில் எதையும் கண்டுகொள்ளவில்லை. கூடங் குளம் பொதுமக்களின் நியாயமான அச்சங்களைப் போக்குவதற்கும்,அவர்கள் அமைதியாகத் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள் வதற்கும் உரிய நடவடிக்கையாக அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு அணுஉலைப் பேரழிவுகளிலிருந்து மத்திய அரசு எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ள வில்லை.

கட்டுரையாளர் :- ஆர்.ஞானதாஸ்

No comments:

Post a Comment