எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!
மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்ட ங்கள்
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 26.08.2013 காலை 10 மணிக்கு, தென்காசியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் தலைமையில்
நடைபெற்றது.தென்காசி ஒன்றியச் செயலாளர் இ.குட்டீஸ் வரன், செங்கோட் டை நகர செயலாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி முகமது ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.இராமையா வரவேற்புரையாற்றினார். ஆயிரப்பேரி எம்.முத்துசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன்,இளைஞர் அணித் துணைச் செயலாளர் கராத்தே பழனி சாமி, வழக்கறிஞர் என்.சங்கரநாராயணன் ஆகியோர் உரையாற்றினர். தென் காசி நகர செயலாளர் என்.வெங்கடேஸ்வரன் நன்றி கூறினர்.
நெல்லை மாவட்டத்தில் மதிமுக இளைஞர் அணியை வலிமைப் படுத்தும் வகையில் 10,000 இளைஞர்களை புதிதாக இயக்கத்தில் சேர்ப்பது என்றும்; செப் டம்பர் 15இல் விருதுநகரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுக்கு, மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆயிரத்திற்கும் குறையாத சீருடை அணிந்த இளைஞர்கள் கலந்து கொள்வது என்றும்;
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவதுடன் அங்கு நடை பெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்
என்றும்; தமிழ் ஈழ விடுதலை வீரர்களைக் கொச்சைப் படுத்தும் விதமாக வெளி வந்துள்ள மெட்ராஸ்கபே படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என் றும்;
வரும் நாடாளுமன்றத்தேர்தலில் கழகம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிட இளைஞர் அணித் தோழர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றுவது என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
மதுரை மாநகர் மாவட்டம்
மதுரை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.கழக இளைஞர் அணி செயல்வீரர் கள் கூட்டம் 27.08.2013 அன்று மதுரை அழகர்கோவில் சாலை, தமிழ்நாடு ஓட் டல் கூட்ட அரங்கில்,மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் புதூர் மு.பூமிநாதன் தலைமையிலும், மாநகர் மாவட்ட அவைத்தலைவர், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், மாவட்டக் கழக நிர்வாகிகள் தி.சுப்பை யா,எம்.மனோகரன், மாநகர் இளைஞர் அணித் துணை அமைப்பாளர்கள் பி.ஆர். முருகன், ஜி.பாக்கியம் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது. மாநகர்
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ரஞ்சித்குமார் வரவேற்றார்.
கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், இளைஞர் அணிச்செய லாளர் வே.ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலாளர் தி.மு. இராஜேந்திரன்,
தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, இளைஞர் அணித்துணைச் செயலாளர்கள் கராத்தே பழனிசாமி, வி.வேல்முருகன், மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் பி.சரவணன், மாநில தொழிற்சங்கச் செயலாளர் எஸ்.மகபூப்ஜான், இலக்கிய அணித் துணைச் செயலாளர் இரா.இளங்கோவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.டி.சி.சங்கையா, பெ.செண்பக மூர்த் தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கரு.தங்கவேலு, பி.எஸ்.சேகர் பி.மகாலிங்கம், மா.கருப்பையா, பகுதிக் கழகச் செயலாளர்கள் எஸ்.ராமர்,எஸ்.வேலு, பொன். பாலு,கே.முருகன்,செ.பாஸ்கரன், எஸ்.ஆர்.போஸ்,டி.எம்.கோவிந்தன், எம்.சீனி வாச சரவணன், அணிகளின் அமைப்பாளர்கள் வே.புகழ் முருகன், பா.பச்ச முத்து உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், இளைஞர் அணியினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்திய அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்க உள்ள
செப்டம்பர் 15 இல் விருதுநகரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா மறுமலர்ச்சி தி.மு.கழக மாநாட்டில் மதுரை மாந கர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக திரளான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது என்றும்; மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக தற்போதுள்ள 72 வட்டங்களிலும் 10,000 இளைஞர்களை புதிதாக சேர்ப்பது என்றும் தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டன.
நெல்லை மாநகர் மாவட்டம்
நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 25.08.2013 அன் று மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.பெருமாள் தலைமையிலும், மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் எ.அருள்வின் ரொட்ரிகோ, மாநகர் மாவட்ட அவைத்தலைவர் எஸ். என்.சுப்பையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் கராத்தே பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
நெல்லை மாநகர் மாவட்டத்தில் 1000 இளைஞர்களை புதிதாக கழக உறுப்பினர் களாக சேர்ப்பது என்றும்;இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மா நாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும்; விருதுநகரில் நடை பெற உள்ள செடம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் இளைஞர் அணியினர் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.
குமரி மாவட்டம்
குமரி மாவட்டக் கழக இளைஞர் அணியினர் கலந்துரையாடல் கூட்டம்,26.08. 2013 அன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஆர். அரிராமஜெயம் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் ஆர்.பெருமாள் வரவேற்பு உரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ந.தில்லைசெல்வம், இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், துணைச் செயலாளர் கராத்தே பழனிசாமி ஆகியோர் உரை ஆற்றினர். தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர் வாகிகள்,ஒன்றிய, நகர செயலாளர்கள்,செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணித்தோழர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் நடைபெறும் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு இளைஞர் அணி சார்பில் 50 வாகனங்களில் கலந்து கொள்வது என்றும்; பேரூர்க் கழகங்களில் இளைஞர் அணி அமைப்புகளை ஒரு மாதகால அவகா சத்திற்குள் ஏற்படுத்துவது என்றும்; ஒன்றிய, நகர பகுதியில் புதிதாக இளைஞர் களை சேர்த்து இளைஞர் அமைப்பை பலப் படுத்துவது. 3000 புதிய இளைஞர்
களை கட்சியில் உறுப்பினர்களாக இணைப்பது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் தலைமையில், 1.9.2013 அன்று திருவள்ளூர் நகரில் நடைபெற்ற இளைஞர் அணி கலந்துரை யாடல் கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் பூவை மு.பாபு, இரா.அருணா சலம்,டி.சி.ராஜேந்திரன், கே.எம்.வேலு, இராமாபுரம் கஜேந்திரன், அட்கோமணி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜெ.சிக்கந்தர் வரவேற்புரையாற்றினார்.
மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கழககுமார், கவிஞர் மணிவேந்தன், து.கந்தன், ஆகியோர் உரையாற்றினர். புலவர் சீதாராமன்,மு.ச.தமிழரசு, செங்குன்றம் ஆர்.செல்வகுமார், இல.கதிர வன் மற்றும் ஒன்றிய, நகர அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூர் நகரில் ஆமைவேகத்தில் நடந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக் கடைத் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்றும்; திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்; ஐயாயிரம் இளைஞர்களை புதிதாக கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ப்பது என் றும்; விருதுநகர் மாநாட்டில், மாவட்ட இளைஞர் அணி சார்பில் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட் டன.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 20.08.2013 அன்று,
விருதுநகரில் இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமையில்,
துணைச் செயலாளர் கராத்தே பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம்,மாணவர் அணிச் செயலாளர்
தி.மு.ராஜேந்திரன், அரசியல்ஆலோசனைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.ராஜேஷ், துணை அமைப்பாளர்கள் சிவகாசி ரவிஜி, மு.மாரிமுருகன், சித்துராஜபுரம் நடராஜ், நாட்டார்சாமி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் புதிதாக இளைஞர்களை அதிக அளவில் கழக உறுப்பினர்களாக
சேர்ப்பது என்றும்; செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெறும் மாநாட்டில்
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும், நகரத்தில் இருந்தும் இருநூறு இளைஞர் களுக்குக் குறையாமல்,5 ஆயிரம் இளைஞர்கள் பங்கு பெற வேண்டும் என்றும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்றும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment