Friday, September 6, 2013

இளைஞன் உயிர்த் தியாகம்!

ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில்
ஈழத்தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்!

#வைகோ இரங்கல்

அனைத்துலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவைத்தட்டுவதற்காக, ஈழத்தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார். தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபா கரன் அவர்களின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.
இதே ஜெனீவாவில்தான் 2009- தொடக்கத்தில் முருகதாஸ் என்னும் ஈழத் தமிழ்
இளைஞரும் ஈழத் தமிழினப் படுகொலையைத் தடுக்க ஐ.நா. மன்றத்தையும் மனித உரிமை ஆணையத்தையும் ஈழத் தமிழருக்கு நீதி வழங்குங்கள் என்று தனது நெஞ்சில் வடிந்த இரத்தக் கண்ணீரை உருக்கமான வேண்டுகோளாக ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து மாண்டார். இன்று வரையிலும் ஈழத் தமிழருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. உலகத்தின் மனச்சாட்சியும் விழிக்கவில்லை. 

தன் உயிரை அழித்துக் கொள்வதன் மூலமாகவாவது உலகத்தின் கவனம் நீதி யின் பக்கம் திரும்பாதா? கொடியவன் இராஜபக்சேவின் கொட்டம் ஒடுங்காதா? என்று தன்னைத் தானே செந்தில்குமரன் அழித்துக் கொண்டான். உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.

தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீ வாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீரவணக் கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,

06.09.2013 மறுமலர்ச்சி தி.மு.க.,

No comments:

Post a Comment