Monday, September 2, 2013

உ.பா.ச அவசரத்தில்..

சங்கொலி தலையங்கம் 

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மீண்டும் ஒருமுறை தேசி ய உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங் கிரஸ் தலைவர் திருமதி சோனியா மூளையில் உதித்த திட்டம் என்று வெகு வாகப் புகழப்படும் உணவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 26 ஆம் தேதி மக்களவையில், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் உண வுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத மக் களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மசோதாவை அறி முகம் செய்த அமைச்சர் கே.வி.தாமஸ் குறிப்பிட்டார்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு பல்வேறு திருத்தங்கள் முன் மொழியப்பட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் தங்கள் எதிர்ப்பையும், மாநில அரசுகளின் நிதிச்சுமை உள்ளிட்ட பல பிரச்சினை களை யும் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினர். நடைமுறையில் உள்ள பொது விநியோகத் திட்டத்தை, மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவுப் பாது காப்பு மசோதா முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடும் என்று கவலை தெரி வித்தனர். ஆனால், இவை எதையும் காங்கிரஸ் அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நாடாளுமன்றத்தையே துச்சமாகக் கருதுகின்ற காங்கிரஸ் கட்சி, எப்படி மாநில முதல்வர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும்?நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கியது.

ஆனால், அதற்கு முன்பாகவே ஜூலை 5 ஆம் தேதி தேசிய உணவுப் பாதுகாப்பு
மசோதாவை அவசர சட்டமாக பிரகடனம் செய்தது மத்திய அரசு. அவ்வளவு அவசர அவசரமாகக் கொண்டுவர வேண்டிய காரணம் என்ன? தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவு 2011 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாநில அரசுகளின் பார்வைக்கும் அனுப்பப்பட்டது. 2013 பிப்ர வரியில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப் பட்டு, மே 2 ஆம் தேதிமீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் விவாதித்து, திருத்தங்கள் முன்மொழியப்பட்டால் அவற் றையும் உள்ளடக்கி ஒரு மனதாக மசோதாவை நிறைவேற்றாமல், ஜூலை 5
இல் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் மீண்டும் தற்போது நாடாளு மன்றத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்டு,
ஆகஸ்டு 26 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளும்,
மாநில அரசுகள் கொடுத்த திருத்தங்களும் ஏற்கப்படாமல், மசோதா மக்கள வை யில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி அரசின் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுதான் மசோ தா நிறைவேறியதேயொழிய, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப் புதலைப்பெற்று,ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை.எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முரளிமனோகர் ஜோஷி, “இந்த சட்ட மசோதா உணவுப் பாதுகாப்பு அல்ல, ஓட்டு பாதுகாப்பு மசோதா” என்று சாடியிருக்கிறார்.

மத்திய அரசை ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ்,
“தேர்தலை மனதில் கொண்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
மாநில அரசுகளை கலந்து பேசி, ஒருமித்த கருத்து உருவாகும் வரை இந்த
மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், “இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது, மாநில அரசு மீது சுமை எதையும் திணிக்கக்கூடாது” என்று கேட்டுக் கொண்டார். தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்தில்தான் இந்தச் சட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்படுகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கல்யாண் பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரபோத் பாண்டா கடந்த ஜூலை 5 ஆம்
தேதி இந்த மசோதாவை அவசர சட்டம் மூலம் பிரகடனம் செய்தது ஏன்? என்று
கேள்வி எழுப்பினார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013, இந்நாட்டின் ஏழை மக்களை வறு மைக் கோட்டுக்கு மேலே, வறுமைக்கோட்டுக்குக் கீழே என்று இரண்டாகப்
பிரித்து, இதில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு முன்னுரி மை கொடுத்து, இத்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என் று கூறுகிறது. இந்த வறுமைக்கோடு எவ்வாறு நிர்ணயம் செய்யப்படு கிறது?
அங்கேதான் சிக்கல் உருவாகிறது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைகள் மற்றும் செயலாக்க
நுகர்வுத் தேவைகளுக்கான திட்ட ஏற்பாடு குறித்த பணிப்பிரிவு (Task Force on
Projections of Minimum Needs and Effective Consumption Demand) கிராமப்புறத்திலுள்ள ஒரு தனி மனிதருக்கு ஒரு நாளைக்கு 2400 கலோரிக்கான உணவும், நகர்ப்புறத்தில் 2100 கலோரிக்கான உணவும் எடுத்துக்கொள்ளத் தேவையான மாதாந்திர செல வுகள் என்ற அளவின் அடிப்படையில், வறுமை என்பது வரையறுக்கப்பட்டது. ஆனால், திட்டக்குழு ஒரு நாளைக்கு ஒரு தனி மனிதருக்கு 1800 கலோரிக்கான உணவு போதுமானது என வரையறுக்கிறது.

இதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 27 ரூபாய்க்குக் கீழும், நகர்ப்புறங்களில் 33 ரூபாய்க்குக் கீழும் வருமானம் ஈட்டுபவர்கள்தான்
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைகள் என்று திட்டக்குழு அடையாளம்
காட்டுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, சலுகை விலையில் அரிசி அல்லது கோதுமை பெற தகுதி உடையவர்கள் என்று இச்சட்டத்தின் பிரிவு 3(2) வரையறுக்கிறது. இச்சட்டத்தின்படி பயன்பெறும் பயனாளிகள் எண் ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 68 சதவீத மக்களும், நகர்ப்புறங்களில் 32 சத வீத மக்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பத்தினர் என்று அடை யாளம் காணப்பட்டுள்ளது.

இக்குடும்பங்களில் உள்ள ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ அரிசி கிலோ 3 ரூபாய் விலைக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று இச்சட்டத்தின் பிரிவு 3(1)கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது
நடைமுறையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா அரிசி 20 கிலோ வழங்கப்பட்டு வருகிறது. அரிசி வேண்டாம் என்று கேட்டுக் கொள்பவர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை குறைந்த விலையில் வழங்கப்படு கிறது.

மத்திய தொகுப்பிலிருந்துதான் தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு
அரிசி வழங்கப்பட்டு வருகிறது. சந்தை விலை கிலோவுக்கு ரூ.20 என்று நிர் ண யம் செய்யப்பட்டு, அதில் ரூபாய் 12.50 மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. மீதி ரூ..5.50 தமிழ்நாடு அரசு மானியம் வழங்கி 20 கிலோ விலையில்லா அரிசி
விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வரையறைகளின்படி, வறு மைக்கோட்டுக்குக் கீழே உள்ள பயனாளிகளை அடையாளம் காணும் போது அதற்கு ஏற்ப, மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும்.

இச்சட்டத்தின் பிரிவு 3(2) இன் படி, தமிழ்நாட்டிற்கான மாதாந்திர அரிசி ஒதுக் கீட்டில் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் அரிசி வெட்டப்படும். இந்த ஒரு இலட்சம்
மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.20 என்ற விலையில் மத்திய அரசின் தொகுப் பிலிருந்து தமிழக அரசு வாங்கினால், ஆண்டிற்கு கூடுதலாக ரூபாய் 3,000 கோடி செலவு ஏற்படும். எனவேதான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்
பிரிவு 3(2) இல் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா வற்புறுத்தி வந்தார்.

ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி, தமிழகத்திற்கு ஆண்டொன் றிற்கு 36.78 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்றும், இதில் 21.88 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி கிலோ 3 ரூபாய்க்கு அளிக்கப்படும் என்றும், மீத முள்ள 14.90 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியின் விலையை மத்திய அரசு நிர்ண யிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் திருத்தம் செய்து தமிழ் நாட் டிற்கான 36.78 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3 விலையிலோ அல்லது குறைந்தபட்சம் வறுமைக் கோட்டிற்கு மேல் என
வழங்கப்படும் அரிசியின் விலையான கிலோ ஒன்றுக்கு 8 கூபாய் 30 காசு என்ற
வீதத்திலாவது 14.90 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண் டும் என்பதே தமிழ்நாடு அரசின் கோரிக்கை.

ஆனால், இந்த முக்கியமான திருத்தம் ஏற்கப்படாததால், தமிழக அரசின் நிதிச் சுமை அதிகரிக்கும். மத்திய அரசின் கொள்முதல் விலையான ஒரு கிலோ 19 ரூபாய் 11 காசு என்ற வீதத்தில் வழங்கினால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூபாய் ஆயிரம் கோடி செலவு ஏற்படும்.

மேலும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், மானிய விலையில் வழங்கப் படும் உணவுப்பொருள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும்,
அதன்பின்னர் கொள்முதல் விலைக்கு மிகாத விலை நிர்ணயம் செய்யப்படும்
செய்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மானிய விலையில் உணவு தானி யங்கள் வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையும் நிராக ரிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி வாரியான சமூக, பொருளாதார
கணக்கெடுப்பு ஆகியவை முடிவடைவதைப் பொறுத்தே உணவு தானியங் களைப் பெறத் தகுதியான குடும்பங்களை நிர்ணயிக்க முடியும். இதற்கு ஓராண்டு காலம் போதாது. எனவே, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

அரிசியையோ, கோதுமையையோ இதில் சொல்லப்பட்ட மானிய விலையில்
வழங்குவதற்கு முடியாத சூழலில், இதற்கான தொகையைப் பணமாகவோ, உணவு கூப்பன் முறையிலோ வழங்கப்படும் என்று இச்சட்டப்பிரிவு 12 கூறு கிறது. மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், நேரடியாக பயனாளிகளுக்கு (உங்கள் பணம் உங்கள் கையில்) திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று தேசி ய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தெரிவிக்கின்றது. இது அப்பட்டமாக மாநில அரசின் அதிகாரத்திற்குள் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதற்குத்தான் வழி வகுக்கும்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறைக்கு எதி ராக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வது காங்கிரஸ்
அரசின் உண்மையான நோக்கமாக இருந்திருந்தால், மேற்கண்ட திருத்தங்கள்
ஏற்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் ஒருமித்த ஆதரவுடன் தேசிய உணவுப் பாது காப்புச் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டு இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன்
என்ற பாணியில், அவசரத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள உணவுப் பாது காப்புச் சட்டத்தின் மூலம், ஏழை மக்கள் பயன்பெறுவது என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் போலவே இருக்கும்.

சிரோன்மணி அகாலிதளம் கட்சி உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர், நாடாளுமன்றத் தில் நடைபெற்ற விவாதத்தில் பேசும்போது, “ஏழை மக்களின் பசி மீது மத்திய அரசு அரசியல் நடத்துகிறது. ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை அவர்களே நிறைவு செய்து கொள்வார்கள்” என்று குறிப்பிட்டார். இதுதான் தொலைநோக்குப் பார்வை. ஆனால், காங் கிரஸ் கட்சி பழுதாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு இன்னொரு சான்று தான் ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013’ ஆகும்.

No comments:

Post a Comment