Monday, September 23, 2013

முசாபர்நகர் மதக்கலவரம்

சங்கொலி தலையங்கம் 

“1947 பிரிவினையின்போது, எங்களை (முஸ்லிம்களை) ஜவஹர்லால் நேரு வும்,காங்கிரஸ் கட்சியினரும் பிரிந்து செல்லாதீர்கள், இங்கேயே இருங்கள் என்று கூறி ஏன் தடுத்தனர்? இப்போது பாருங்கள், சொந்த நாட்டிலேயே நாங் கள் அந்நியர்கள்ஆக்கப்பட்டுள்ளோம்.” மதக்கலவரங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில், இஸ்லாமிய மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள முகாமைப் பார்வையிட செப்டம்பர் 16 ஆம் தேதி பிர தமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா ஆகியோர் சென் றிருந்தபோது, சம்ஷத் செளத்ரி என்ற முஸ்லிம் பெரியவர் பிரதமரிடம் மேற் கண்டவாறு குமுறினார்.
நாட்டுப் பிரிவினை ஏற்பட்டு 66 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் இந்தியா வை தாய் மண்ணாக ஏற்றுக்கொண்டு, இந்துக்களை சகோதரர்களாக பாவித்து வாழ்ந்து வரும் இஸ்லாமிய குடிமகன் உடைந்து சிதறிய உள்ளத்தோடு கூறிய வார்த்தைகள் இந்திய நாட்டின் மதச் சார்பின்மை தத்துவத்தின் மீது விழுந்துள் ள பிரம்படிகள் ஆகும்.

சம்ஷத் செளத்ரி மட்டுமல்ல, அவருடைய பகுதியைச் சேர்ந்த 300 முஸ்லிம் களின் இப்போதைய முகவரி தவளி பகுதியில் உள்ள மதராசாவில் ஏற்படுத் தப்பட்டுள்ள நிவாரண முகாம்தான். இதே போன்று பல இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயிருக்குப் பயந்து தங்களின் வாழ்விடங் களை விட்டு வெளியேறி பலர் இத்தகைய முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள னர். இது குறித்து இந்து நாளேட்டின் செய்தியாளர் பிரசாந்த் ஜா, செப்டம்பர் 17 இல் வெளியிட்டுள்ள செய்தியில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“Over 40,000 Muslims have got displaced in the past 10 days in Western U.P.They are living in camps, at homes of relatives, in private farms of wellwishers, at police stations. As one of them put it. “The Country was partitioned once, Now our villages are getting partitioned.” None of them are willing to return home.”
-The Hindu, September 17, 2013

மேற்கு உத்திரபிரதேசத்தில் கடந்த 10 நாட்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். உயிருக் குப் பயந்து உறவினர்கள் இல்லங்களிலும், நண்பர்களின் வீடுகள், காவல் நிலையங்களிலும் இஸ்லாமிய மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். நாடுகள் அளவில் (இந்தியாபாகிஸ்தான்) ஏற்கனவே பிரிவினை நடந்துவிட்டது. அந்தப் பிரிவினை கிராம அளவில் இப்போது நிகழ்ந்து வருகிறது. முகாம்களில் தங்கி உள்ள மக்கள் மீண்டும் சொந்த ஊருக்குச் சென்று வசிப்பதற்கே அச்சப்படுகின் றனர். இந்து நாளேட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ள கருத்துகள் எந்த அள வுக்கு இஸ்லாமிய மக்கள் மனதில் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் அச்சமும் குடி கொண்டு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

‘பாசி’ என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ள குத்பா கிராமத்தைச் சேர்ந்த ஆஸியா என்பவரிடம், ‘இந்து’ ஏட்டின் செய்தியாளர் கேட்டார், “உங்கள் கிராமத்தைச்சேர்ந்த இந்துக்கள் உங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித் தால், திரும்பிச் செல்லத் தயாரா?” என்று. அதற்கு ஆஸியா, “அவர்கள்தான் எங்களின் வீடுகளுக்குத் தீ வைத்தவர்கள், கொள்ளையடித்தவர்கள். எங்களின் சொந்தங்களை கொன்றவர்கள்.அவர்கள் அளிக்கும் உத்தரவாதத்தை எப்படி நம்ப முடியும்?” என்று எதிர் கேள்வியை எழுப்பினார்.

மேற்கு உத்திரப்பிரதேச மாவட்டங்களான முசாபர் நகர், சாம்லி மாவட்டங் களில் மதக் கலவரங்களால் இதுவரை 48 உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். மாநில அரசின் இந்த புள்ளி விவரங்கள் உண்மையை மறைத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், பலியா னோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நிவாரண முகாம்களில் உள் ளோர் தெரிவிக்கின்றனர். கடந்த 20 ஆண்டு காலத்தில் உத்திரப்பிரதேச மாநி லத்தில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை மதக்கலவரம் முசாபர்நகர் மாவட் டத்தில் நடந்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள கவால்
கிராமத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரும், இந்து ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்த
இளம்பெண் ஒருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். காதல் ஒருமித்து அவர் கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஜாட் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முஸ்லிம் வாலிபர் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். கொலைவெறி தாக் குதலால் ஷாநவாஸ் எனும் இஸ்லாமிய சமூக இளைஞர் படுகொலை செய் யப்பட்டார்.

இந்து ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கவுரவ், சச்சின் ஆகியோர் வெவ் வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.இந்த மூன்று இளைஞர்கள் மதவெறிக்கு பலியான செய்தி, முசாபர் மாவட்டம் முழுவதும் பரவின. பற்றிக் கொண்டது “இந்து-முஸ்லிம் கலவரம்.” அண்டை மாவட்டங்களிலும் கலவரம் பரவியது. இந்த கலவரங்களில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மேற்குப் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 27 ஆம் நாள் தொடங்கி, 20 நாட்கள் நடைபெற்ற மத கலவரங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தவறிவிட்டார் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் புகார் கூறியுள்ளன. செப்டம்பர் 15 அன்று முதல்வர் அகிலேஷ் யாதவ் முதலில் கலவரம் தோன்றிய கவால் கிராமத்திற் குச் சென்றபோது, அவருக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து கறுப்புக்கொடி காட்டினர். கலவரத்தை அடக்குவதில் சமாஜ்வாதி கட்சி அரசு தோற்றுப் போய் விட்டது என்று மக்கள் முழங்கினார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் எதையும் வாங்காமல், முதல்வர் அகிலேஷ் சம்பிரதாய மாகப் பார்த்துவிட்டு மாலிகபுரம், காந்தலா உள்ளிட்ட இடங்களுக்கும் முதல் வர் சென்றிருந்தபோது இதுதான் நடந்துள்ளது.

இஸ்லாமிய மக்களின் இரட்சகராக தம்மை காட்டிக்கொள்ளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது மகனும் முதல்வருமான அகி லேஷ் யாதவ் ஆகியோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரவி வரும் இந்து-முஸ்லிம் கலவரங்களை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக் களிடையேயும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகள் மீது பழிபோட்டு பிரச்சினையை திசை திருப்புகின்றனர். மதக்கல வரங்களை ஆரம்பத்திலேயே அடக்குவதற்கு தவறி விட்டதாக முசாபர் நகர் மாவட்ட காவல்துறை அதிகாரி சுபாஷ்சந்திர துபே, மாநில அரசினால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் ஆதாயங்களுக்காக முலாயம்சிங் யாதவ், முதல்வர் அகிலேஷ் ஆகியோர் இந்த மதக்கலவரங்களை பயன்படுத்த முனைகின்றனர். ஆனால், சொந்த கட்சியிலேயே மதக்கலவரம் தொடர்பாக புகைச்சல் உருவாகி உள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு செப்டம்பர் 12 ஆம் தேதி ஆக்ராவில்
நடந்தபோது, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவருமான மாநில சிறுபான்மைத்துறை அமைச்சர் அசம் கான் புறக்கணித்தார்.முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களையும், படுகொ லைகளையும் தடுப்பதற்கு அகிலேஷ் யாதவ் அரசு எந்தவித துரித நடவடிக்கை களையும் மேற்கொள்ளவில்லை என்ற கடும் அதிருப்தியில் இருந்த அமைச்சர் அசம்கான் கட்சியின் செயற்குழுவில் பங்கேற்கவில்லை. ஆனால்,இதுகுறித்து சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளரும், முலாயம்சிங் யாதவ் சகோதரருமான ராம்கோபால் யாதவ், “முசாபர் நகர் கல வரத்தை அடிப்படையாக வைத்து கட்சி மேலிடத்தை யாரும் பிளாக்மெயில் செய்ய முடியாது. அசம்கான் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேற விரும் பினால் போய்விடலாம். முலாயம்சிங் யாதவ் தான் சிறுபான்மை மக்களின்
நம்பிக்கைக்கு உரிய தலைவர். அவர்களின் பாதுகாவலர்” என்று கடுமையாக சாடி உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாக்பெத் தொகுதி யில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சோம்பால் சாஸ்திரி, தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறி வித்துள்ளார்.முலாயம்சிங் யாதவுக்கு அவர் எழுதியுள்ள மடலில், “முசாபர் நகர் இனக் கலவரங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவு என்னை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.இத்தகைய ஒரு சூழ்நிலையில் நான் சமாஜ் வாதி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும்தார்மீக உரிமை எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

முசாபர் நகர் மதக்கலவரங்களை காரணம் காட்டி, இந்து-முஸ்லிம் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் சொந்தக் கட்சியின் மீதே நம்பிக்கையற்று விலகி நிற்கின்றனர். ஆனால், முலாயம்சிங் யாதவ் குடும்பத் தினர் எதிர்க் கட்சிகள் மீது பழிபோட்டு, தப்பிக்க நினைக்கின்றனர். 2012 மார்ச் மாதம் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பை ஏற்றபிறகு மாநிலம் முழுதும் இதுபோன்று 27 மதக்கலவரங்கள் சிறிதும், பெரிதுமாக நடந் திருக்கின்றன. அகிலேஷ்யாதவ் அரசு விழித்துக்கொள்ளாமல் தூங்கி வழிந்த தன் விளைவு, இன்று இந்து-முஸ்லிம் மதக்கலவரம் நெருப்பு பற்றி எரிந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிவிட்டன.

முசாபர் நகர் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் செப்டம்பர் 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதி கள் கலவரப் பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்து,தவித்து வருகிற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவந்து மறுகுடியமர்த்த வேண்டும். இதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண் டும் என்று உத்தரவிட்டனர். கலவரம் பாதித்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய அரசையும் ஈடுபடுத்த அகிலேஷ்யாதவ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதை நிராகரித்தனர். இந்த இனமோதல்கள் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்திட வேண்டும் என்று இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அதன் துணைத் தலைவர் மவுலானா அபுல்காசிம் நொமானி கருத்து தெரிவிக் கையில், “முசாபர் நகர் இன மோதல்கள் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத் தின் தோல்வியின் விளைவுதான். அவர்கள் சரியான நடவடிக்கைகள் எடுத்தி ருந்தால் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்காது. கலவரத்தால் கொல்லப் பட்டோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு தலா ரூ. 15 இலட்சம் வழங்க வேண் டும்” என்று வலியுறுத்தினார்.

முசாபர் நகர் கலவரத்தின் போது ஊடக பத்திரிகையாளர் (IBNI-TV) ராஜேஷ் வர்மா என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மேற்குப் பகுதியில் நிறைந்துள்ள இந்து ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்த மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து நல்லிணக்கமாகவே இதுவரை வாழ்ந்து வந்துள் ளனர். முன்னால் பிரதமர் சரண்சிங் ஜாட் மக்களின் நம்பிக்கைக்குரிய தலை வராக திகழ்ந்தபோது, இஸ்லாமிய மக்களையும் அரவணைத்து வந்துள்ளார்.

இந்து-முஸ்லிம் விவசாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக சரண்சிங்
உருவாக்கிய ராஷ்டிரிய லோக்தளம் கட்சி போராடி இருக்கின்றது. கிராமங் 
களில் இந்துக்களும்-இஸ்லாமியர்களும் ஒரு தாய் பிள்ளைகளாகவே 50 ஆண் டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இப்போது, இளம்பெண்கள்- இளைஞர்கள் காதல் இந்துமுஸ்லிம் கலவர விதைகளை விதைத்துவிட்டன. ஐம்பது ஆண்டு கால நல்லிணக்கம் பாழாகிவிட்டது. அயோத்தி போன்ற அரசியல் காரண‡கள் மட்டுமல்ல, இந்துமுஸ்லிம் காதலர்களாலும் வகுப்புவாத கலவரங்கள் பற் றிக்கொண்டு எரியும் என்பதற்கு முசாபர்நகர் கலவரங்கள் சான்று ஆகும். மத எல்லைகளைத் தாண்டி காதல் கூடாது என்று முசாபர்நகர் கலவரங்கள் உணர்த்துவதாக சிலர் கூறுவது மனித சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டது.

No comments:

Post a Comment