Friday, September 27, 2013

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,மற்றும் நளினியை சந்தித்த வைகோ

வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன்,முருகன் மற்றும் நளினியை சந்திக்க, #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ இன்று (27.09.13) வேலூர் வந்தார்.

வைகோ செய்தியாளர்களிடம் பேசும் போது

‘‘குற்றம் செய்யாமல் பேரறிவாளன், முருகன் ,சாந்தன்,மற்றும் நளினி ஆகி யோர் சிறையில் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.இவர்களுக்காகசென்னை உயர் நீதிமன்றத்தில் உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதா டினார். ஆனால் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில், 'சென்னையில் வழக்கு நடந் தால் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என்று கூறி மாற்றினார்கள்.

தற்போது அக்டோபர் 22 ஆம் தேதி மரண தண்டனை கைதிகளின் விசாரணை 5 நீதிபதிகளைக் கொண்டு உச்சநீதி மன்றத்தில் தொடங்குகிறது. அதில் சாந்தன்,  பேரறிவாளன்,முருகனின் வழக்குகள் இடம் பெறவில்லை.அது இடம்பெறுமா? இல்லையா? என்பது 22 ஆம் தேதிக்கு பிறகு தெரியும். நிச்சயமாக நீதி வெல் லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தற்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கின்றது. அனை வரும் போர்க் குற்றங்ளை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத் தக் கூடாது என்றும், காமன்வெல்த் உறுப்பினர் அமைப்பில் இருந்து இலங்கை யை நீக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங் கையில் அமைதி நிலவுவதாக கூறி 25 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தேர்தலை நடத்தி நாடகம் ஆடுகிறார்கள். இலங்கையில் நடந்த தேர்தல் இந்திய-இலங் கை நாடுகளின் கூட்டுச் சதி. லட்சக்கணக்கான மக்களை அழித்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்துவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்’’ என்றார்.

No comments:

Post a Comment