தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் #வைகோ மேல்முறையீடு!
வெளிநாடுவாழ் இந்தியரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா
நிறுவனங்களின் சார்பில், தூத்துக்குடி அருகில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை யை நிறுவிட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை உயிரினவாழ்
மண்டலத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலும், ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அகல பசுமை வளாகமும் இருக்க வேண்டும் என்ற இரு முக் கிய நிபந்தனைகளுடன் மறுப்பின்மைச் சான்று (No Objection Certificate) 01.08.1994 இல் வழங்கியது.
இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 250 மீட்டர் அகல பசுமை வளாகம், 25 மீட்டர் அகலத்திற்கு இருந்தால் போதும் என்று நிபந்தனை 18.08.1994 இல் தளர்த்தப்பட்டது.மத்திய அரசும் 16.01.1995 அன்று,இந்த ஆலை அமைவதால் சுற்றுச் சூழல் பாதிக்காது என்று சான்றிதழ் வழங்கியது.
பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்கின்ற கடல் பூங்காவான மன்னார் வளை குடாப் பகுதி அருகில் உள்ள தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்
பட்டால், சுற்றுப்புறச் சூழலை மிகவும் பாதிக்கும் என்று தூத்துக்குடியில் பல் வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அந்த மக்கள் போராட்டத்தை முன்னெ டுத்து நடத்தினார். அது மட்டுமில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ரிட் மனு W.P. No.. 5769/1997 தொடர்ந்தார். வழக் கில் வைகோ தானே ஆஜராகி நீதிமன்றத்தில் வாதாடினார்.பத்து ஆண்டுகளுக் கு நிலுவையில் இருந்த இந்த ரிட் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு முழு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
விசாரணையின் இறுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடம் மன் னார் வளைகுடா பகுதி அருகில், விதிக்கப் பட்ட நிபந்தனையை மீறி ஆலை
அமைக்கப்பட்டதும், பசுமை வளாகத்தின் அளவை 250 மீட்டர் அகலத்திலி ருந்து 25 மீட்டராக தகுந்த காரணம் இன்றி குறைத்ததும், வெளியேற்றப்பட்ட கழிவுகளால் ஆடு போன்ற உயிரினங்களும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்ப டுவதையும் சுட்டிக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட 28.09.2010-இல் தீர்ப்பு வழங்கியது.
ஆலையை மூடிட சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் 29.09.2010-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
அந்த வழக்கில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தானே நேரில் ஆஜராகி சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆலையை மூடிவிட பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு சட்டப்படி சரியானதும், நியாய மானதும் ஆகும் என்று வாதங்களை எடுத்து வைத்தார். 35-க்கும் மேற்பட்ட வாய்தாகளில் உச்ச நீதிமன்றம் வழக்கை விசா ரித்தது. அத்தனை வாய்தா களுக்கும் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தவறாமல் சென்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதாடினார்.
06.11.2012 இல் வழக்கின் இறுதி விசாரணை முடிவுற்றது. வழக்கு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் 23.03.2013 அன்று இரவு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மிக அதிக அளவில் கந்தகவாயு (Sulphur di Oxide) வெளியேறியது. அந்த வாயுவைச் சுவாசித்த தூத்துக்குடி நகரின் புது காலனி, கீழ சண்முகபுரம், மீளவிட்டான்,அண்ணா நகர், டி.வி.புரம், பிரை யண்ட் நகர் ஆகிய இடங்களில் வசித்து வந்த பொது மக்களில் பலருக்கு மிகக்
கடுமையான இருமல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை அழற்சி,
ஆஸ்துமா போன்ற உடல்நலச் சீரழிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் தூத் துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலமாகவும்,எழுத்து வடிவிலும் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக பார் வையிட்டு அறிக்கை தர மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளருக்கு உத்தரவிட் டார். 23.03.2013 அன்றே ஆலையைப் பார்வையிட்டு காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 31 A இன்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து, மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் அறிக்கை தர, அதன் அடிப்படையிலும், பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலும் ஸ்டெர்லைட் ஆலையை ஏன் மூடக்கூடாது, ஆலைக்கான மின் இணைப்பையும் ஏன் துண்டிக்கக்கூடாது
என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்காததால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 29.03.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலை யை மூடி விடச் சொல்லியும், அந்த ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக் கவும் உத்திர விட்டது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்சொன்ன இருஉத்திரவுகளையும் எதிர்த்து சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இரு மேல் முறையீடு களை 01.04.2013 இல் தாக்கல் செய்தது.இச்சூழ்நிலையில், சென்னை உயர் நீதி மன்றம் ஆலையை மூடிட 28.09.2010-இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 02.04.2013 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது என்ற செய்தி கிடைத்தது.
ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடிடச் சொல் லி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து அந்த ஆலை 01.04.2013 அன்று மூடப்பட்டது.இந்நிலையை உச்ச நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரிய வழக்கறிஞர் 01.04.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.பொதுச் செயலாளர் வைகோ அவர்களும் அப்பொ ழுது நீதிமன்றத்தில் ஆஜரானார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார் பில் ஆஜரான வழக்கறிஞர் அவர்கள்,29.03.2013 அன்று ஆலையை மூடிவிட
உத்திரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் வழங்க இருக்கும் தீர்ப்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஆலையை மூடிடவோ அல்லது வேறு தகுந்த நடவடிக்கை எடுக்கவோ தடை இருக்காது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் 28.09.2010 அன்று ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட காரணங்கள் சரியானதுதானா? என் பது குறித்துதான் இருக்கும் என்று கூறி வழக்கின் தீர்ப்பை 02.04.2013 அன்று வெளியிடுவதாகக் கூறினர்.
02.04.2013 அன்று உச்ச நீதிமன்றம்,இந்த வழக்கு நடைபெற்ற இரண்டு ஆண்டு களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சுட்டிக்காட்டிய குறைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சரி செய்துள்ளது; மன்னார் வளைகுடா பகுதி இதுநாள் வரை கடல் பூங்காவாக அறிவிக்கப்படவில்லை; பசுமை வளாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாற்றி அமைத்த நிபந்தனைக்கு உட் பட் டே உள்ளது என்றும், இருப்பினும் சுமார் 44 மாதங்களுக்கும் மேலாக காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் ஆகியவற்றின் கீழ் பெறப்பட வேண்டிய அனுமதியைப் பெறாமல் சட் டத்துக்குப் புறம்பாக ஆலையைச் செயல் படுத்தியதால் அதனால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பையும், இழப்பையும் சரிசெய்ய ஆலை நிர்வாகம் ரூ. 100
கோடியை மாவட்ட ஆட்சியரிடம் மூன்று மாத காலத்திற்குள் கட்ட வேண்டும்
என்றும், அந்தத் தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நிரந்தர
வைப்புத் தொகையாக ஐந்து ஆண்டு களுக்கு வைத்துக்கொண்டு அதில் கிடைக் கும் வட்டியைக் கொண்டு ஆலையைச் சுற்றிய பகுதிகளில் நிலம்,
காற்று, நீர் ஆகியவற்றில் ஏற்பட்ட மாசுகளை அகற்ற வேண்டும் என்றும்,
வட்டித் தொகை போதவில்லையென்றால் வைப்புத் தொகையில் இருந்து பணத்தை எடுத்து சுற்றுச் சூழலை மாவட்ட ஆட்சியர் மேம் படுத்தலாம் என் றும், எதிர்காலத்தில் மன்னார் வளைகுடா பகுதி கடல் பூங்காவாக அறிவிக்கப் பட்டால் ஆலையை தற்போது உள்ள சிப்காட் பகுதியிலிருந்து வேறு இடத்துக் கு ஸ்டெர்லைட் ஆலை மாற்றப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டனர்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உச்ச
நீதிமன்றத்தில் 10.04.2013 அன்று மறு ஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள் ளார். அந்த மனு சிவில் ரிவ்யூ பெட்டிஷன் எண்.1541/2013 என்ற எண்ணிடப்பட்டு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சென்னை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல் முறையீடுகளிலும் கழகப்பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தன்னை ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று 09.04.2013 அன்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம் கழகப் பொதுச் செயலாளரை வழக்கின் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள அனைத்துத் தகுதியும் மனுதாரரான வைகோ பெற்றுள்ளார். எனவே, அவரை ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள உத்திரவிட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பு வைகோ அவர்கள் ஒவ்வொரு வாய்தாவிலும் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.
சென்னை தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் 29.04.2013 அன்று நடைபெற்ற விசார ணையின்போது, இரு மேல் முறையீடுகளும் புதுடெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும்,அங்கு விசாரணை மேற்கொண்டு நடைபெறும் என்றும் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக் குகளின் விசாரணை நடைபெற்றது.ஒவ்வொரு வாய்தாவுக்கும் பொதுச்செய லாளர் வைகோ அவர்கள் புதுடெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகி தனது தரப்பு வார்த்தை எடுத்து வைத்தார்.
டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த 08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல் முறையீடுகளை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 29.03.2013 அன்று ஆலையை மூடிடவும், ஆலைக்குச் செல்லும் மின் சாரத்தை நிறுத்தி விடவும் பிறப்பிக்கப்பட்ட உத்திரவுகளை இரத்து செய்து ஆலை தொடர்ந்து செயல் படலாம் என்றும் தீர்ப்பளித்தது.
டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு 08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11.09.2013 அன்று வைகோ அவர்கள் சார்பில் இரண்டு மேல் முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த மேல்முறையீடு களில், முக்கியச் சட்ட வினாக்களை பொதுச் செயலாளர் எழுப்பி உள்ளார். அந்த பொதுவான முக்கிய சட்ட வினாக்கள் வருமாறு
1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு
வாரியம் ஆலையை மூடிட பிறப்பித்த உத்திரவை எதிர்த்து காற்று மாசு தடுப்பு
மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு
ஆணையத்தில் முறையீடு செய்யாமல் தேசியப் பசுமைத்தீர்ப்பாயத்தில் நேரடி யாக மேல் முறையீடு செய்திருப்பது சட்டத்தின்பால் ஏற்புடையதா?
2. டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு சென்னை தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ளமேல் முறையீட்டைத் தனது அமர்வில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ள அதிகாரம் தேசிய பசு மைத் தீர்ப்பாய சட்டம், 2010 இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதா?
3. வழக்கில் கட்சியாக உள்ளவர்களுக்கு முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல்
அவர்களது கருத்தைக் கேட்காமல் டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வழக் கை விசாரணைக்காக சென்னை அமர்விலிருந்து டெல்லி அமர்வுக்கு மாற்றிக் கொண்டது இயற்கை நியதிகளுக்கு (Principles of Natural Justice) உட்பட்டதுதானா?
4. தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள பசுமைத் தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 226 இன் கீழ் உயர்நீதிமன் றங்களுக்கும் அல்லது 136-இன்கீழ் உச்ச நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயங்களுக்கும் வழங்கப் பட்டுள்ளதா?
5. டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்,மாசைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத் தும் கடமையைக் கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்திர வு களை ரத்து செய்ய உகந்த காரணங்களை தனது தீர்ப்பில் சொல்லியுள்ளதா?
6. டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் ஓர் ஆய்வுக் குழுவை அமைத்து
அந்த ஆய்வுக் குழு ஆலையையும்,அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து அந்த அறிக்கையைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருப்பது இந்த வழக்கை முடித்து வைக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டி லேயே வைத்திருப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கதா?
இந்த மேல்முறையீடு உச்ச நீதி மன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment