Sunday, September 8, 2013

பள்ளிக்கு வராத ஆசிரியர்

#மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் வரதராஜன் மீது பொய் புகார் கூறிய தலைமை ஆசிரியர் , விசாரணையில் உண்மை வெளிப் பட்டு தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து தொடக்க கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்வடமலாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் அயன்வடமலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர்.

இவர் பள்ளி வேலை நாட்களில் தினமும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு மதியத்திற்கு மேல் மாற்றுப் பணி என்று கூறி சென்று விடுவ தாகவும், சங்க பொறுப்பில் இருப்பதால் தன்னை யாரும் கேட்க முடியாது என்று கூறுவதாகவும், இதற்கு ஒரு சில ஆசிரியர்கள் துணை போவதாகவும் கூறி கடந்த 8ஆம் தேதி எட்டயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் தலைமை ஆசிரிய ரை கண்டித்து மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் வரதராஜன் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.

இந்த பேனரை மறுநாளே எட்டயபுரம் போலீசார் அகற்றினர். இதற்கிடையில் வரதராஜன், தன்னை மிரட்டுவதாகவும், தனது பெயரை களங்கப்படுத்தியதாக வும் தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் புதூர் போலீசில் புகார் செய் தார். போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், சுதந்திர தினவிழா அன்று பள்ளியில் தேசிய கொடியேற் றவில்லை. அவர் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என கிராம மக்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு புகார் அனுப்பினர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தமிழ் செல்வி விசார ணை நடத்தினர். இதில் சுதந்திர தினத்தன்று தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் பள்ளிக்கு சென்று கொடியேற்றவில்லை என்பதும், பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. வெறும் அரசியல் லாபங்களுக்காக அல்லாமல், "மக்கள் நலனுக்கு" போராடும் இயக்கம் தமிழ்நாட்டில் ஓன்று உண்டு என்றால் அது "மதிமுகவே" என்பது மீண்டும் மீண்டும் தெளிவாகிறது........... இப்படிப்பட்ட மக்கள் நல போராட்டங்கள் தான் மதிமுகவின் உயிர்நாடி...........

    ReplyDelete