Saturday, September 28, 2013

மதிமுக இளைஞர் அணி நடைபயணம்

கோவை மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி மதிமுக இளைஞர் அணி சார்பில் நாளை நடைபயணம் நடக்கிறது.

கோவை மாவட்டம் முழுவதும் சாலை போக்குவரத்து, ரயில்போக்குவரத்து, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப் பு வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மதிமுக சார்பில் பிரசார நடைபயணம் நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது. 

வாளையார் பகுதியில் இருந்து துவங் கும் இப்பிரசாரம், முக்கிய பகுதிகள் வழி யாக சென்று மதுக்கரையை அடைகிறது.மொத்தம் 15 கி.மீ தூரம் இந்த நடைபய ணம் நடக்கிறது.மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங் கு கிறார். மதுக்கரை ஒன்றிய செயலாளர் வெள்ளிங்கிரி, மாணிக்கவாசகம், ஜோதிபாசு, பேன்சி மணி, கண்ணன் ஆகியோர் முன்னிலைவகிக்கின்றனர். 

மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில் துவக்கிவைக்கிறார். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். பிரசார வாகனமும் உடன் செல்கிறது. வீதி வீதியாக பொதுமக்களுக்கு துண்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்படு கிறது.

இதுபற்றி மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் கூறியதா வது:

தமிழகத்தின் இரண்டாவது முக்கிய பொருளாதார மையமாக கோவை திகழ் 
கிறது. இந்திய அளவில் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிற நகரங்களில் கோவை யும் ஒன்று. இங்கு, மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு உள்கட் டமைப்பு வசதி உருவாக்கப்படவில்லை. உதாரணமாக, கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு துவக்கப்பட்ட வாளையார்மதுக்கரை தேசிய நெடுஞ்சாலை பணி இதுவரை முடிக்கப்படவில்லை. 

திண்டுக்கல்லில் துவங்கி, பொள்ளாச்சி, கோவை, சத்தியமங்கலம் வழியாக செல்லும் என்.எச்.209 தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படாமல் உள்ளது. மதுக்கரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோவைப்புதூர், பேரூர், வட வள்ளி, தடாகம் சாலை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல மேற்கு புறவழிச் சாலை திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதுவும் நிறைவேற் றப்படவில்லை. கோவை திருச்சி சாலையில் காங்கயம்பாளையம் முதல் மேட்டுப்பாளையம் சாலை வரை என்.எச்.67 புறவழிச்சாலை திட்டம் கைவிடப் பட்டுள்ளது. கோவைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியான காங் கயம்பாளையம்சிந்தாமணிபுதூர் வரை சாலை அகலப்படுத்தப்பட வில்லை. ஆத்துப்பாலம்ஈச்சனாரி சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படவில்லை. 

இது போன்ற காரணங்களினால், சாலைகளில் தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. சாலை மற்றும் சரக்கு போக்குவரத்தில் கோவை மாவட் டம் பின்தங்கியுள்ளது. இதை நிறைவேற்றக்கோரி இப்போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.


No comments:

Post a Comment