மதுஒழிப்பில் ஈ.வெ.ரா. நாகம்மையார்!
ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் துணைவியார் பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு கொண்டவர். தந்தை பெரியார் அவர் கள், “நாகம்மையார் நான் காங்கிரசில் இருக்கும்போது நடத்திய பல்வேறு மறி யல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” எனக் கூறினார்.
வைக்கம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங் காற்றிய நாகம்மையார் கள்ளுக்கடை மறியலிலும் போராடினார். இவரது
போராட்டம் பெண்கள் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
நாகம்மையாரின் முதல் அரசியல் நடவடிக்கை கள்ளுக்கடை மறியல் போராட் டமாகும். 1921 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்ச்சி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெண்களின் பங்களிப்பில் முக்கியப் போராட்ட நிகழ்வாகும்.
மதுவிலக்குப் பிரச்சாரத்தைச் செயல் படுத்த காந்தியும், காங்கிரசுத் தலைவர்
களும் ஒன்று கூடிக் கள்ளுக்கடை முன் மறியல் செய்வது எனும் முடிவு ஈரோட்டில் பெரியாரின் இல்லத்தில் தான் எடுக்கப்பட்டது.
கள் இறக்கிட உதவிடும் மரங்களை வெட்டிவிட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார்.வடநாட்டில் பெரும்பாலும் ஈச்ச மரங்களில் இருந் துதான் கள் இறக்கப் பட்டது. எனவே காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்றுப் பல ஈச்ச மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் பெரும் சேதம் இல்லை.
ஆனால், தென்னாட்டில் தென்னை,பனைமரங்களில் இருந்து கள் இறக்கப்பட்
டது. தென்னை, பனை மரங்களின் பயன்பாடு மிக அதிகம்.ஆனால், பொருட் சேதம் பற்றி சிந்திக்காமல் தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஈரோட்டில் மிக வேக மாக நடந்தது. 144 தடை உத்தரவு பிறப்பித்த போதும் தொடர்ச்சியாக மறியலில்
ஈடுபட்டுக் கைதாகி சிறை சென்றனர்.
நாகம்மையாரும், ஈவெ.ரா.வின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன்
மறியலுக்குப் புறப்பட்டனர். மறியல் செய்பவர்கள் ஒருநாளில் ஆயிரக்கணக் கில் பெருகினர். நாகம்மையாரும் அவருடன் சென்றவர்களும் சிறைப்படுத்தப் பட்டால் பத்தாயிரத்திற்கு மேல் சிறை வைக்க வேண்டுமென்று அரசு அலுவ லர்கள் கருதிச் சென்னைக்கு தந்தி அனுப்பித் தடையுத்தரவை நீக்கினர்.
அவ்வேளையில் அரசு 144 தடை ஆணைக்கு மதிப்பளித்து ரத்தான நிகழ்வு இது ஒன்றுதான்.இந்நிகழ்விற்குப் பின் தமிழகம் எங்கும் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிவிட்டது.
அன்றைய காலகட்டத்தில் அரசு ஒத்துழையாமை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.இதற்காக மும்பை யில் ஒரு மாநாடு கூட்டப்பட்டபோது அதன் தலைவராக விளங்கியவர் சர்.சங் கரன் நாயர். இந்த மாநாட்டின் பெயர் மாளவியா மாநாடு.
இம்மாநாட்டின் நடவடிக்கை தொடங்கும் முன் மதன் மோகன் மாளாவியாவும் சர்.சங்கரன்நாயர் அவர்களும் மறியலை நிறுத்திவிட்டு நடவடிக்கையைத் தொடங்கலாம் என்று காந்தியை கேட்டுக் கொண்டனர்.அதற்கு காந்தியடிகள் மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் உள்ள இரண்டு
பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும் என்று கூறினார்.
கள்ளுக்கடை போராட்டத்தைக் காட்டுத் தீயாக பற்ற வைத்தவர்கள் நாகம்மை
யாரும், கண்ணம்மாளும். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பொது
வாழ்வில் பங்கேற்கத் தயங்கிய காலத்தில் கள்ளுக்கடை மறியலை தலைமை யேற்று நடத்தினர்.
தமிழ்நாட்டில் இவ்விரு பெண்கள்தான் முதன் முதலில் சிறை சென்றவர்கள்.
பெரிய குடும்பத்தினர் சிறை சென்றனர் என்று ஈரோடு நகரமே மலைத்தது என
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் 24.12.1973 அன்று “காண்டீபம்” பத்திரிகை யில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் நடத்திய பல போராட்டங்களில் தோழர் நாகம்மையார் முக் கிய பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாருக்குப்பின் வைகோ தலைமையில் நாகம்மையாரின் வழித்
தோன்றல்களாகிய நமது சகோதரிகள் மதுவை முற்றிலும் ஒழிப்பதற்காக
போராடுவது பார்ப்பதற்கே கம்பீரமாக உள்ளது.
வைகோ தமிழர் நலனுக்காக தொடர்ந்து போராடி வருவது பெண்கள் மத்தியில்
மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது.தமிழகத்தின் பல இடங்களில் பெண் களே மது ஒழிப்பிற்கு ஆதரவாக போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட னர். இதனால் மது தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்பது திண்ணம்
கட்டுரையாளர் :- உடுமலை இரவி
No comments:
Post a Comment