Thursday, September 12, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 10

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இந்தநேரத்தில் மகாத்மா காந்தி மீது அவர் அப்பாவுக்கு நல்ல மரியாதை. கொஞ்ச நேரத்தில் இதைப் பற்றிப் பேச்சு வருகிறது. பகத்சிங் நினைக்கிறான் அப்பாவை ஏன் கக்ஷ்டப்படுத்த வேண்டும், அவர் காந்தி மேல் ரொம்ப மதிப்பு வைத்து இருக்கிறார். அவரிடம் போய் ஏன் விவாதம் செய்ய வேண்டும் என்று , ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக் கு மகாத்மா காந்தி ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொன்னவுடன், அவர் அப்பா வுக்கு மகன் வாயால் இதைக் கேட்டேனே என்று மகிழ்ச்சி அடைகிறார்.

நேர்காணல் அறையில் அடுத்த காட்சி. பகத் சிங் ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றவுடன் தலைமுடியைக், கொண்டையை எல்லாம் எடுத்துவிட்டார் அல்லவா? தாடி கிடையாது. சிறையில் மீண்டும் கொண்டை வளர்ந்துவிட்டது. சீக்கியர்களுக்கே உரியது அல்லவா, அந்தக் கொண்டையை மேலே முடிச்சுப் போட்டு வைத்து இருக்கிறார். அம்மா பக்கத்தில் கூப்பிட்டு மார்போடு அணைத் துக்கொண்டு அந்தக் கொண்டையைத் தடவிக் கொடுக்கிறார்கள். என்னதான் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அவளை அறியாமல் கண்ணீர் பொங்கு கிறது.

அப்பொழுது பகத்சிங் சொல்கிறார்: ‘அம்மா நான் இறந்து போவேன் என்று பகத் சிங் தாயார் அழுதார் என்று வெளி உலகம் நினைக்கக்கூடாது. அவர் தாய் தைரி யமாக அதை ஏற்றுக் கொண்டார் என்று உலகம் போற்ற வேண்டும். நீங்கள் கண்ணீர் விட்டதாக இந்த உலகம் நினைக்கக்கூடாது’ என்று தன் தாயாரிடத் தில் சொல்கிறார்.

கடைசியாக விடைபெற்றுப்போகிறபோது பகத்சிங்கின் தம்பி குல்தாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவனுடைய தாயார் சொல்கிறார் உன் னைத் தூக்கில் போடும்போது, ‘நீ புரட்சி ஓங்குக என்று முழக்கம் செய்’ என்று அவனது அம்மா சொல்கிறாள்.

கடைசியாக விடைபெற்று வெளியேவருகிறபோது, ‘நான் போய்விட்டு வரு கிறேன். நீங்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருங்கள்’ என்பதுதான் பகத்சிங் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்.

இது மார்ச் 3 ஆம் தேதி நடக்கிறது. மார்ச் 24 ஆம் தேதிதான் தூக்கு என முதலில்
தீர்மானமாயிற்று. இதற்கு மத்தியில் இந்தப் பேச்சுவரும்போது,என்னமோ எப்ப விடுதலை வரும்? எப்ப நம் ஊரில் என்னென்ன நடக்கும்? என்று நாம் சிறை யில் பேசுகிற மாதிரி, அவர் எங்களை எப்பொழுது அப்பா தூக்கில் போடுவார் கள்? என்று கேட்கிறான். அவன் தந்தை சொல்கிறார், கராச்சியில் காங்கிரஸ் மாநாடு மார்ச் 29 ஆம் தேதி. அந்த நேரம் உன்னைத் தூக்கில் போட்டுவிடக் கூடாது என்று அதற்கு முன்னரே போட்டுவிடுவது மாதிரி சொல்கிறார்கள். மகாத்மா காந்திகூட, போடுகிறமாதிரி இருந்தால் அதற்கு முந்தி போட்டுவிடட் டும் என்று நினைக்கிறாராம் என்று பகத்சிங்கின் தந்தை சொல்கிறார்.

உடனே பகத்சிங் மகிழ்ச்சியாகச் சொல்கிறான் ‘நல்லவேளை, இந்த கோடை வெயிலில் வெந்து கொண்டு சிறையில் இருப்பதைவிட, வெயில் காலத்துக்கு முன்னரே எங்களுக்கு இப்பூமியில் இருந்து விடுதலை கொடுத்து விடுகிறார் களா? ரொம்ப மகிழ்ச்சி’ என்று பகத்சிங் சொல்கிறார்.

அந்த நேர்காணல் முடிந்த இரவு மார்ச் 3 ஆம் தேதி தன் தம்பி குல்தாருக்கு எழு திய கடிதம் பாசஉணர்ச்சி பொங்கும் மடலாகும்.

“அன்புள்ள குல்தார்.

இன்று உன் கண்களில் கண்ணீரைப் பார்த்து அளவு கடந்த வேதனை அடைந் தேன். இன்று உன் குரலில் ஆழமான வேதனை இருந்தது. உன் கண்களில் வழிந்த கண்ணீரை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தம்பி, மன உறுதியுடன் உன் படிப்பைத் தொடர். உன் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்.

கட்சியின் நண்பர்களே

என் உயிர் மூச்சுக்கு இருப்பது இன்னும் ஒருசில சுவாசங்கள் மட்டுமே அணை யப்போகும் விடியற்காலை விளக்கு நான். நாங்கள் போய்வருகிறோம்”

உனது அண்ணன்
பகத்சிங்.

தொடரும் ...........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment