எத்தனை கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி வைத்தாலும் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று ஆரணியில் நேற்று (04.09.13) இரவு நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட மதிமுக சார்பில் ரூ.18 லட்சத்து 60ஆயிரம் தேர்தல் நிதியாக வைகோவிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைமாவட்டச் செயலர் ஆரணி டி.ராஜா தலைமை தாங்கினார்.
நகரச் செயலர் எஸ்.கே.ரத்தினகுமார் வரவேற்றார்.
மாநில பொருளாளர் இரா.மாசிலாமணி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என்.சுப் பிரமணி, வேலூர் மாவட்ட செயலாளர்கள் பி.என்.உதயகுமார், குடியாத்தம் என்.பன்னீர், மாநில தொழிற்சங்க பொருளாளர் பி.அருணகிரி, மாநில மாணவ ரணி துணை அமைப்பாளர் எஸ்.எல்.பாசறைபாபு ஆகியோர் கலந்துகொண் டனர்.
கூட்டத்தில் பேசியது வைகோ
தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக போராடும் ஒரே கட்சி மதிமுக என்பதால் பலர் நிதி வழங்கியுள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து போட்டி யிட் டாலும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுக்கத் தயாராகி விட்டனர்.
ஈழத்தமிழர்களை வஞ்சித்த மத்திய அரசு, நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், சோனியா மருமகன் வதேரா மீது பல கோடி ரூபாய் ஏமாற்றிய குற்றச்சாட்டு, தவறான பொருளாதார கொள்கையினால் ரூபாய் மதிப்பு பெரும் சரிவு. இவ்வாறு ஊழல்களுக்கு முடிசூட்டும் கட்சியாக திகழும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றார்.
படங்கள் உதவி:- .ராம பச்சையப்பன்
No comments:
Post a Comment