தமிழக உரிமைக்காகப் போராடும் எங்களிடம் நீதி, நேர்மை, நியாயம் இருக் கிறது...நம்பிக்கை உள்ள தோழர்களே, எங்கள் கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்!
தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தொடக் கவிழாவில் #வைகோ
தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச்சங்கத்தொடக்க விழா, 02.09.2013 அன்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நடைபெற்றது. தொழிற்சங்கக் கொடியேற்றி, பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றி னார்.விவரம் வருமாறு:
மராட்டியத்தினுடைய மாபெரும் தலைவர் பாலகங்காதர திலகரின் ஆசியுடன் வாங்கிய கப்பலை இந்தக் கடலில் செலுத்தி, கப்பலோட்டிய தமிழன் என்ற வர லாற்றுப் புகழைப் பெற்றாரே,அந்த வீர சிதம்பரம் அவர்கள் தொழிலாளர் களு டைய உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் போராடினாரே, அந்தத் தொழிலாளர்கள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக தன்னுடைய சொத்து களை,தன் அருமை மனைவியினுடைய தங்க நகைகளைக் கூட விற்று, அந்தப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களினுடைய போராட்டத்தை முன்னெ டுத்துச் சென்றாரே, அந்தப் பெருமகனார் வ.உ.சிதம்பரனார் உலவிய தூத்துக் குடி மாநகரில், இன்று தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன் னேற்றச் சங்கத்தினுடைய தூத்துக்குடி கிளையின் தொடக்கவிழா நடைபெறு கிறது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிற என் ஆருயிர்த் தம்பி தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் அவர்களே,
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கொப்ப வீரமுழக்கமிட்டு இருக்கின்ற கழகத்தின்
தலைசிறந்த சொற்பொழிவாளர் வழக்கறிஞர் அந்தரிதாஸ் அவர்களே, இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக் கின்ற இந்தத் தொழிற்சங்கத்தை முன்னின் று நடத்துகின்ற திட்டத்தின் தலைவர் சங்கரகோபால் அவர்களே, செயலாளர் எபனேசர்தாசன், பொருளாளர் டேவிட் ராஜ் அவர்களே, மாநிலத்தலைவர் இளங்கோ அவர்களே,
காற்று பலமாக வீசுகிறது. கடலின் அருகில் இருக்கக்கூடிய இந்த இடத்தில்
அனல்மின் நிலையத்தின் வளாகத்திற்கு எதிரே மறுமலர்ச்சிதொழிலாளர் முன் னணியினுடைய வண்ணமணிப் பதாகையை உயர்த்திவிட்டு, தொழிலாளர் களைச் சந்தித்து உரையாற்றக்கூடிய நல்ல சந்தர்ப் பத்தைத் தந்தமைக்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்.
ஒரு மாற்றத்துக்கு தமிழ்நாடு தயாராகிறது என்பது இந்தக் கூட்டத்தின் மூலம் தெளிவாகிறது. என்னதான் வைகோ பேசுகிறார். கேட்போம் என்று பலர் வந்தி ருக்கிறார்கள். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக நான் கருதுகிறேன்.அருமைச் சகோதரர் அந்தரிதாஸ் அவர்கள் கோரிக்கை களை வைத்தார்.
அரசாங்கம் புதிய ஓய்வுதியத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வரு கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் கிடைக்காது. 2014 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அரசு பணிகளில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக் காது. இதைவிட அநீதி வேறொன்றும் இருக்க முடியாது. நாம் இழக்கப்போவது எதுவும் இல்லை. நீங்கள் இழக்கப்போவது உங்கள் மீது பூட்டப் பட்டிருக்கின்ற விலங்குகளைத் தவிர வேறொன்றும் இல்லை. நீங்கள் காணப்போவது பொன் உலகம் என்று தான் அகிலம் எங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு மார்க்சும்,
ஏங்கல்சும் அழைப்பு விடுத்தார்கள்.
அவரசரச் சட்டத்தின் மூலம் திணிப்பு
மாறி வருகிற உலகத்தில்,தொழிலாளர்களுடைய உரிமைகள் ஏற்றுக்கொண்டு
இருக்கக்கூடிய உலகில், அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கக்கூடிய எதேச்
சதிகாரப் போக்கு எந்த தேசத்திலும் கையாளப்படவில்லை. ஆனால், ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு அவசரச் சட்டத்தின் மூலமாக அதைத் திணிக்கப்
பார்க்கிறது. நாடாளுமன்றத்தில் சட்டமாக உள்ளது. அதன்பிறகு அரசு ஊழியர் களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். 2002, 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த அந்தத் திட்டத்தையே தொடர வேண்டும். இது
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினுடைய தலையாய கோரிக்கை.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை அனைத்துத் தொழிற்சங்கங்களோ டும் பேசி அவர்கள் கோரிக்கையை ஏற்க அரசு முன்வர வேண்டும்.
அடுத்து வைக்கப்படுகின்ற கோரிக்கை இந்தப் பகுதியில் மிக முக்கியமான கோரிக்கை. தூத்துக்குடி அனல்மின் நிலையப் பகுதியில் நோயுற்றவர்களுக்கு
சிகிச்சை தருவதற்கு அவர்களுடைய உடல் நலனைக் காப்பதற்கு 24 மணி நேர மும் இயங்கக்கூடிய விதத்திலே மருத்துவமனையிலே மருத்துவர்கள் பணி யாற்ற வேண்டும்.
மருத்துவர்கள் ஒப்பந்த ரீதியாக வருவதும் போவதும் அதன் காரணமாகவே மருத்துவமனைக்குச் சென்று மக்கள் சிகிச்சைப் பெற முடியாமல் இருப்பதும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கும் உரிய விதத்திலே மருத்துவச் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் 350 ரூபாய் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்
என் பது ஒப்பந்தத் தொழிலாளர் களுடைய நியாயமான கோரிக்கை; அது மறு மலர்ச்சி தொழிலாளர் முன்னணியால் இங்கே முன்வைக்கப் பட்டிருக்கின்றது. இந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டும் என நானும் தெரிவித்துக் கொள்கின் றேன்.
இன்றைக்கு மின்வாரியத் துறையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள்
காலி இடங்களாகவே இருக்கின்றன.அந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண் டும். அப்படி நிரப்பப்படுகிறபோது,போராடிக் கொண்டே இருக்கின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண் டும். நீதியும் நியாயமுமான கோரிக்கை என்பதனால் இந்த முன்னேற்றச் சங் கத்தினுடைய கோரிக்கைகளை நானும் வலியுறுத்து கிறேன்.
தொழிலாளர்களும், கவிஞர்களும்
தொழிலாளர்களுடைய வாழ்க்கையில்,அவர்கள் போராடுகிறார்கள், இதோ இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும். ஆதவன் மலையடிவாரத்தை நோக்கி
விரைந்துகொண்டிருக்கின்றான்.இன்னும் சில நிமிடங்களில் கிரணங்கள்
சாய்ந்துவிடும். இருள் சூழ்கின்ற வேளையில் நிலாவின் வெளிச்சம் இல்லா விட்டாலும்கூட வானத்தில் மேகக் கூட்டங்கள் இல்லாமல் இருக்குமானால் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரியும். தாரகைகள் கண்ணுக்குத் தெரியும்.
நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிகின்ற போது, ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு விதமான கற்பனை கண்ணுக்குத் தெரியும். இங்கு பக்கத்து ஊரிலே பிறந்த
மாபெரும் கவிஞன் பாரதிக்கு அந்த நட்சத்திரங்களைப் பார்க்கின்றபோது, உள் ளத்தில் கண்ணம்மாவைப் பற்றி அவர் மனைவி கண்ணம்மாவின் கருநீல
பட்டுப் புடவையில் இருக்கக்கூடிய பூக்கள் போல நீல வானத்திலே நட்சத்தி ரங்கள் தெரிகின்றன என்று பாரதி சொன்னான். ஆகவே, வானத்து நட்சத்திரங் கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கற்பனையை ஏற்படுத்துகிறது.
இன்னொரு கவிஞன் சொன்னான், தாய் ஒருத்தி தன் குழந்தைக்கு அம்புலி யைக் காட்டி சோறு ஊட்டுகிறாள். அப்படி சோறு ஊட்டுகிறபோது அந்த வெள் ளித் தட்டில் அந்த சோற்றுப் பருக்கைகளை வைத்து, அந்த சோற்றை ஊட்டு கின்றபொழுது அந்தக் குழந்தை, சின்னக் குழந்தைகளுக்கே இருக்கக்கூடிய
இயல்போடு தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காலால் எட்டி உதைக்கிறது.
அந்த வெள்ளித் தட்டு கையிலிருந்து கீழே போய் விழுகிறது. வெள்ளித் தட்டில்
இருந்த பருக்கைகள் சிதறுகின்றன.அதைப்போலத்தான் அந்த வானத்திலே வீசி எறியப்பட்ட வெள்ளித் தட்டாக நிலா இருக்கிறது. தட்டில் இருந்து சிதறிய
பருக்கைகளாக நட்சத்திரங்கள் இருக்கிறது என்று அந்தக் கவிஞன் சொன் னான். ஆனால்,
“செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய்க் கருங்குயிலே”
என்று சொன்ன பாரதிதாசனுக்கு வேறு விதமான கற்பனை வந்தது. அவன் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங் களைப் பார்த்தான். மேனியை உழைத்துப்
பொன்னாக இருக்கக்கூடிய உழைப்பாளியைப்பற்றிய சிந்தனை வந்தது.“தொழி லாளரும், உழைப்பவரும் படும் வேதனை கண்டு விண்மீன்களாக வானம் கொப்புளங்கள் பெற்றது என்றார்.
கவியரசர் தாகூர் எங்கே அச்சம் என்பது இல்லையோ எங்கே அறிவு தலை நிமிர்கின்றதோ, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில் என் தாயகம் விழித்து எழுவ தாக என்று சொன்னானே. அந்த கவியரசர் தாகூருக்கு ஆண்டவர் எங்கே இருக் கிறார். உன் கடவுள் எங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். சாலை ஓரத்திலே சம்மட்டி எடுத்துக் கொண்டு கல்லை உடைக்கின்றானே அவன் மேனியில் இருந்து வழிகின்ற வியர்வைத் துளிகளிலே உன்னுடைய ஆண்ட வன் இருக்கின்றான். என்று கவியரசர் தாகூர் சொன்னார்.
தொழிலாளி இல்லாமல் எதுவும் இல்லை
அத்தகைய உணர்வோடு இந்தத் தொழிலாளத் தொழிலாளர் கள் வாழ்க்கை யிலே போராடிக் கொண்டு இருக்கிறார்கள். உலகத்திலே புரட்சிகள் வெடித்தி ருக்கின்றன. சீனப் புரட்சியா? குடியானவர்களும், தொழிலாளர்களும் ஏந்திய போர்க்கொடிதான். மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்றானே பாரதி. ரஷ்ய தேசத்தில் ஏற்பட்ட புரட்சி அது. பாட்டாளிகளின் புரட்சி. தொழிலாளர்களின் புரட்சி.தொழிலாளர்கள் இல் லாமல் எதுவும் இயங்காது.
என்னுடைய அருமைத் தோழர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் குறித்து
என்னைப் பாராட்டிச் சொன்னார்கள், என் கடமையை நான் செய்தேன். நெய் வேலி நிலக்கரி நிறுவனம் இங்கே அருகில் ஒரு அனல்மின் நிலையத்தை
அமைக்கின்றது. அந்த எல்லையிலும் கழகத்தினுடைய கொடியை ஏற்றிவிட்டு
இங்கே நான் வந்தேன். 2002 ஆம் ஆண்டினுடைய தொடக்கத்தில், ஒரு இரவுப் பொழுதில் சென்னை விமான நிலையத்தில் நெய்வேலியில் இருக்கக் கூடிய அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் வந்து என்னைச் சந்தித்தார் கள். என்னுடைய அருமைத் தம்பி செந்திலதிபன் அவர்களுடைய மனுவை என்னிடம் கொடுத்தார்.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 59 சதவிகித பங்கு கள் தனியாருக்கு விற்கப்பட முடிவெடுக்கப்பட்டு இருக்கின்றது. முப்பதாயிரம்
தொழிலாளர்கள் வாழ்வு பாழாகிவிடும்.இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என் று என்னிடத்தில் அவர்கள் கோரிக்கை மனுக்களைத் தந்தார்கள்.அனைத்துத் தொழிற்சங்கங்களின் கையெழுத்தும் அதிலே இருந்தது.
நாடாளுமன்ற மக்களவையில் அதைப் பற்றி பிரச்சினை எழுப்புகிறபோது,
அனைத்துக் கட்சியினரும் அதைப்பற்றி பேசினார்கள். தமிழ்நாட்டில் உள்ள
அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெய்வேலி
நிலக்கரி நிறுவனத்தை நீங்கள் தனியார் மயமாக்கக்கூடாது என்று பேசினார் கள்.நான் அதை மறுக்கவில்லை. இத்தகைய பிரச்சினைகளில் எவரும் பேசா மல் இருக்க முடியாது. இது தமிழகத்தின் வாழ்வாதாரப்பிரச்சினை. ஆனால்,
தடுத்து நிறுத்த வேண்டிய அளவுக்கு சக்திவாய்ந்தவர்கள் இதைத்தடுத்து நிறுத் த முற்படவில்லை. அமைச்சரவை யிலே பல கட்சிகளும் இடம்பெற்று இருந் தன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இடம்பெற்று இருந்தது.
நான் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர் அந்தத்
துறையினுடைய அமைச்சர்.எனக்கு நல்ல நண்பர்.இன்றளவும் என்னை நேசிக் கக்கூடிய நண்பர். ஈழத்தமிழர்களின் துயரத்திற்கு குரல் கொடுக்க வாருங்கள் என்று அழைத்தால், உடனே ஓடோடி வருகின்ற நண்பர்.அவர் என்னை அழைத் துச் சொன்னார், காரியம் கை மீறிப் போய்விட்டது. இனி எதுவும் செய்ய முடி யாது என்று கேபினெட்டில் முடிவெடுத்தாகி விட்டது. எனவே,இதைத் தடுப்ப தற்கு இனி வாய்ப்பில்லை.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டுவிடும். என்னால் எதுவும் செய்ய இய லா து. கடைசி கட்டத்தில் ஒருவேளை பிரதமர் இந்த முடிவை மாற்ற முடியுமா? எந்த அளவுக்கு முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உண்மை நிலையை உங்களிடம் தெரிவித்து விடுகிறேன்.இனி இதைத் தடுக்க முடியாது என்று சொன்னார்.
நான் அங்கே இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துக் குள்ளே பிரதமருடைய அலு வலகத்தில் இருக்கக்கூடிய செயலாளரைப் பார்த்தேன். பிரதமர் வீட்டுக்குப் போய்விட்டார். பிற்பகலிலே வரவில்லை என்று சொன்னார். நான் உடனடி யாக அவரை இன்று சந்திக்க வேண்டும் என்றேன். திடீரென்று சந்திக்க நீங்கள் நேரம் கேட்கிறீர்கள், அவர் யாரையும் சந்திப்பதாக இல்லை, வேறு வேலைகள் இருக்கின்றன. இன்றைக்கு எந்த அப்பாய்ண்ட்மென்ட்டும் கிடையாது என்றார். நான் அவர் தனிச்செயலாளரிடம் சொன்னேன், மிக மிக முக்கியம்.பிரதமரிடம் சொல்லி,பத்து நிமிடம் எனக்கு ஒதுக்கச்சொல்லுங்கள் என்றேன்.அடுத்த அரை மணி நேரத்தில் 7 மணிக்கு ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் பிரதமரை நீங்கள் சந்திக்கலாம் என்று சொன்னார்கள்.
பிரதமரிடம் கோரிக்கை
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை இரவு7 மணிக்கு ரேஸ்கோர்ஸ் இல்லத்தில்
சந்தித்தேன். தொழிற்சங்கத் தலைவர்கள் தந்த கோரிக்கை மனுவைப் பாருங் கள்.பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளி னுடைய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கையெழுத்துப்போட்டு இருக் கிறார்கள். எங்கள் நிலம், எங்கள் பூமி, எங்கள் மண், எங்கள் வியர்வை நெய் வேலி நிலக்கரி நிறுவனம்.நவரத்னங்களில் ஒன்று. இலாபம் ஈட்டுகின்ற தொழிற்சாலை. இதை ஏன் நீங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப் பார்க்கிறீர் கள்? என்றேன். அமைச்சரவை கூடி முடிவெடுத்த நிலையில் இதை எப்படி மாற்ற முடியும்?என்றார் அவர்.உங்களால் முடியும். நீங்கள் நாட்டின் தலைமை அமைச்சர். இது அநீதி. இது தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறியது மட்டு மல்ல, அவரிடத்தில் நான் உரிமை எடுத்துப் பேசக்கூடியவன்.
நான் தமிழ்நாட்டு மக்களுக்காக போராடு கிறேன். வைகோ மீது அலாதியான
வாஞ்சையை நீங்கள் வைத்திருப்பதாக நாட்டிலே நினைக்கிறார்களே, என் மேல் நீங்கள் எல்லையற்ற பிரியம் காட்டுவதாக மற்றவர்கள் எல்லாம் சொல் கிறார்களே,நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள்? அடல்பிகாரி வாஜ்பாய் வைகோ சொல்கிற நல்ல காரியங்களை எல்லாம் கேட்பார்கள் என்பார்களே, அவரும் உடன் இருந்து பார்க்கிறார் என்று என்னை பழிக்க மாட்டார்களா? இந்த
நல்ல காரியத்தை செய்ய வேண்டாமா? தமிழக மக்களுக்குச் செய்ய வேண்டிய
கடமை அல்லவா? நாட்டின் பிரதமர் நீங்கள். தமிழகத்துக்கு அநீதி இழைத்ததாக ஆகிவிடும். நீங்கள் இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்றேன்.
நான் எனக்கென்று எதையும் கேட்டது இல்லை.இதைத் தமிழ்நாட்டு மக்களுக் குக் கேட்கிறேன். இந்த நல்ல காரியத்தைச் செய்தால்தானே நானும் தமிழ் நாட் டில் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்று பிரதமரிடத்திலே வாதாடினேன்.தமி ழகத்திற்கான நீதியை நிலை நாட்டினேன் என்று பெருமையைப்பெற முடியும் என்றேன்.இன்னும் சிலவற்றைச் சொன்னேன்.பொதுவாழ்விலே போராடிக்
கொண்டிருக்கக்கூடிய எனக்கு இப்படி நியாயத்தைச் செய்வதற்காக முயன் றார் என்ற எண்ணத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? என்றேன். சற்று நேரம் அமைதியாக இருந்தார்.எனக்குப்பெரிய செல்வாக்கு இருப்பதாகச்
சொல்லவில்லை. நாங்கள் ஒன்றும் இருபத்தைந்து முப்பது எம்.பி.களைக்
கொண்டிருக்கவில்லை. ஆனால், என் குரலுக்குப் பின்னால் கோடிக்கணக் கான மக்கள் குரல் இருக்கிறது. உடனே வழக்கம் போல ஒரு புன்சிரிப்போடு
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயம் ஆக்கப்பட மாட்டாது என்றார்.
பிரதமர் ஒப்புதல்
ஆனந்தத்திலே துள்ளிக் குதித்த என் உள்ளம் நன்றிப் பெருக்கோடு திளைத்த
வேளையில் நான் கேட்டேன், நான் இந்த நன்றியை மறக்க மாட்டேன். இதை நான் பத்திரிகைகளுக்குச் சொல்லலாமா? என்று கேட்டேன். சிரித்துக்கொண் டே சொன்னார், தாராளமாகச் சொல்லலாம் என்று. பிரதமர் வீட்டில் அவரது அறைக்கு அடுத்த அறையில் இருந்து இந்து பத்திரிகைக்கு முதலில் சொன் னேன்.இந்து ஏடு மறுநாள் முதல் பக்கத்திலே நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயம் ஆகாது என்று பிரதமர் வைகோ விடத்தில் உறுதி அளித்திருப்ப தாக அந்தச் செய்தியை வெளியிட்டார்கள்.அந்தத் துறையினுடைய அமைச்சர்
அருண் செளரி, இலண்டனில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இரண்டு நாள்
கழித்துத்தான் வருகிறார். அவர் வந்த அன்று நாடாளுமன்ற மைய மண்டபத் தில் அமர்ந்திருந்த நான் எப்போது அருண்செளரி வருவார் என்று காத்துக் கொண் டிருந்தேன். அவரிடம் விரைந்து சென்று சொன்னேன்.அவர் இந்த பங்கு களை விற்பனை செய்யக் கூடிய துறையினுடைய அமைச்சர்.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினுடைய பங்குகளை விற்கின்ற முடிவை கைவிட்டுவிட் ட தாக பிரதம அமைச்சர் சொன்னார் என்றபோது, அப்படியா! எனக்கு இது தெரியாதே! என்றார்.
பிரதம அமைச்சர் சொல்லி இருக்கிறார்கள். இந்த முயற்சி கைவிடப்படுவதாக. இந்தத் திட்டத்தை விட்டு விடுவதாகச் சொல்கிறார் என்றேன்.அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரதான ஆசிரியருக்கு அடுத்த இடத்திலே இருந் தவர். அவர் நீதிக்காகப் போராடக்கூடியவர்.என்னிடம் மிகவும் நேசம் காட்டக்
கூடியவர். நல்ல நண்பர். நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். எதற்கும் நாளை பத்தரை மணிக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நான் அதற்கு முன் பிரதமரிடம் பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.
பத்தேகால் மணிக்கு நான் அவருடைய அலுவலக அறைக்குச்சென்றேன். வெளியில் இருக்கக்கூடிய உதவியாளரிடம் என் பெயரை எழுதிக்கொடுத்தேன். அடுத்த நிமிடம் அருண்செளரி அறையை விட்டு வெளியே வந்துவிட்டார். நண் பர் வைகோ அவர்களே, நான்தான் பத்தரை மணிக்கு உங்களுக்குத் தெரிவிக் கிறேன் என்றேனே, நீங்கள் ஏன் வந்து காத்திருக்கிறீர்கள்? என்றார். இது எங்க ளுக்கு உயிர்ப் பிரச்சினை. 30 ஆயிரம் தொழிலாளர்கள் பிரச்சினை.நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை.அதனால் இதை தொலைபேசியிலா கேட்பது? நேரில் உங்களிடம் அறிந்து கொள்ள வேண்டும் என்று வந்தேன் என்றேன். வாருங்கள் என்று என் கரத்தைப் பற்றியவாறு அவரது அறைக்குச் சென்றார். செயலாளர்,
இணைச் செயலாளர் என அனைத்து அதிகாரிகளும் இருந்தார்கள். அவர்கள்
முன்பாகவே சொன்னார், நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகள் விற்பனை
நிறுத்தப்பட்டுவிட்டது என்று பிரதம அமைச்சர் தெரிவித்துவிட்டார் என்று
சொன்னார்.
தமிழருக்காக உழைப்பேன்
இதன் பிறகு நெய்வேலியில் பல்வேறு தொழிற் சங்கங் கள், ஒன்றிரண்டு தொழிற் சங்கங்களுக்கு இதைச்செய்து கொடுத்தது வைகோதான் என்று தெரிந் தாலும், அவர்களது கட்சியின் தலைமை கண்டிக்கும் என்பதனால் அவர்கள் வரவில்லை. பொதுவுடைமை சங்கங்கள் உட்பட அனைத்துச் சங்கங்களும் என்னை அழைத்துக் கொண்டுபோய் பெரிய பாராட்டுவிழா நடத்தினார்கள். நான் பாராட்டுப் பெறுவதற்காகச் செய்யவில்லை. பேசும் சக்தி இருந்தால் தமிழர்களுக்காக பேசுவேன். உழைக்கும் சக்தி இருக்கின்ற வரை தமிழர்களுக் காக உழைப்பேன்.போராடுகின்ற வலிமை இருக்கின்றவரை தமிழ்நாட்டுக் காகப் போராடுவேன்.தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கப் போராடுவேன். அப்படித்தான் பணியாற்றிக் கொண்டு வந்திருக்கின்றோம்.
காமராஜர் மண்டபம்
அதனால்தான் 1999 இல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த போது, குமரி மாவட்டம் எரிமலையாக இருந்தது. தியாகச்சுடர் பெருந்தலைவர் காமராசர் மணி மண்டபத்துக்கு அனுமதி இல்லை என்று அவர்கள் அன்று பந்த் அறிவித்து இருந்தார்கள். குமரி மாவட்டம் மட்டும் அல்ல, தமிழக மக்களே கொதித்து எழுந்தார்கள். போராட்டம் அறிவித்துவிட்டார்கள், அடுத்து 48 மணி
நேரததில். நான் போய் பிரதமரைச் சந்தித்தேன். அவர் பிரதமர் பதவியை இழந்துவிட்டார் தற்காலிகமாக. நான் அவரிடம் சொன்னேன். காந்தியாருக்கு
மணி மண்டபம் இருக்கிறது. அந்தக் கடற்கரையிலே காமராஜருக்கு மணி
மண்டபம். நாட்டுக்கு உழைத்த தலைவர். எட்டு வருடம் சிறையிலே வாடிய தலைவர். தன்னலம் இல்லாமல் போராடிய மாபெரும் தலைவர். நாடு போற்று கின்ற தலைவர். அவருடைய மணி மண்டபத்துக்கா அனுமதியில்லை? தெற்கு சீமை மட்டுமல்ல, தமிழக மக்களே கொந்தளித்துபோய் உள்ளார்கள் என்றேன்.
என் கவனத்துக்கு இந்தப் பிரச்சினை வரவில்லையே? என்றார். அங்கிருந்தவா றே அவருடைய தொலைபேசியில் அவரே அமைச்சர் சுரேஷ் பிரபுவை தொலைபேசியில் அழைத்தார்.காமராஜருடைய மணிமண்டபத்துக்கு அனுமதி இல்லையாமே? உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பை சுட்டிக் காட்டி, அனுமதி கொடுக்க இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள் என்று சுரேஷ் பிரபு சொன்னார்.
எதற்கும் விதிவிலக்கு உண்டு. எனவே,முதலில் முடிவெடுங்கள். அதற்குப் பிறகு இதைப் பற்றி ஆட்சேபனை வந்தால் அப்போது தெரிவித்துக்கொள்ள லாம்.என்னோடு தான் வைகோ இருக்கிறார்.இப்பொழுதே உங்களுடைய அலு வலகத் துக்கு அனுப்பி வைக்கின்றேன்.நீங்கள் மணி மண்டபத்துக்கான அனு மதியைக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் சொன்னார்.
நான் சுரேஷ் பிரபுவினுடைய அலுவலகத் துக்குச் சென்றேன். அதிகாரிகளை
அழைத்தபோது அவர்கள் முதலில் ஆட்சேபனை தெரிவித்தார்கள். இல்லை,
பிரதமர் சொல்லிவிட்டார் என்றார். சரி அனுமதி கொடுத்துவிடலாம் என்று
தெரிவித்தார்கள். அன்று மாலையே அனுமதி கிடைத்துவிடும் என்று நினைத் தேன். கிடைக்கவில்லை. இரவு 10 மணி அளவில் அமைச்சர் சுரேஷ் பிரபு என்னை அழைத்தார். இது நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை.தமிழக அரசி டம் இருந்து கோரிக்கை வரவில்லை என்று சொன்னார். அதிர்ச்சியடைந்தேன்
நான்.
ஏனென்றால் காமராஜர் மணி மண்டபத்திற்கு அனுமதி கொடுத்தே தீரவேண் டும் என்று பிரதம அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். நான் சாதா ரண நாடாளுமன்ற உறுப்பினர். ஏப்ரல் 1 ஆம் தேதி கன்னியாகுமரிக்குச் செல் கிறேன்.அங்கே நான் அறிக்கை கொடுக்கிறேன். மறுநாள் எட்டுகால பத்திரி கைச் செய்தி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காமராஜர் மணிமண்டபத் துக்கு அனுமதி கேட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் என்று. காலை யில் நான் கொடுத்த செய்தி அதே பத்திரிகையில் 12 ஆம் பக்கத்தில் பத்து வரி யில் வந்து இருக்கிறது. இப்படி செய்தி வருவது உளவுத்துறை மூலமாக முதல் வர் கவனத்துக்குப் போகும் அல்லவா? இவர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக் கிறார்,காமராஜருக்கு மணிமண்டபம் வேண்டும் என்று. அப்பொழுதெல்லாம் போராட்டம் நடத்தவில்லை குமரி மாவட்டத்தில், அது தொடக்கம். அனுமதி கேட்ட நேரம்.உடனே இவர், முதலமைச்சர் அனுமதி கேட்டுவிட்டார் என்று எட்டு காலச் செய்தி.
ஆனால், சுரேஷ் பிரபு என்னை அழைத்துச் சொன்னார், தமிழ்நாடு அரசிடமி ருந்து இந்த மணிமண்டபம் கட்டுவதற்கான அனுமதி கேட்டு கடிதம் வரவில் லை. இப்பொழுது இரவு தலைமைச் செயலாளரை அழைத்து உடனே ஒரு அனு மதிகேட்டு கடிதம் அனுப்பச் சொல்லியிருக்கிறோம். நாளை காலை பத்து மணிக்கு வாருங்கள்.உங்களுக்கு ஆணையின் பிரதியைத் தருகிறேன் என்றார். மத்திய அரசு ஆணை பிறப்பிப்பதற்கான பிரதியைத் தருகிறேன் என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எட்டு காலம் செய்தி வந்ததே? அப்படி யானால் அது நாட்டு மக்களுக்கான செய்தி. அப்படியென்றால், நாட்டு மக்க ளுக்கு ஒரு முகத்தையும், இன்னொரு பக்கத்தில் ஒரு முகத்தையும், ஈழப்பிரச் சினையில் எப்படி கையாளுகிறார்களோ, அதே முறையிலான முறையைத் தான் அப்பொழுதும் கையாண்டார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
மறுநாள் காலை பத்து மணிக்கு சுரேஷ் பிரபு என்னிடத்திலே மத்திய அரசினு டைய ஆணையினுடைய நகலைத் தந்தார். அப்பொழுது அலைபேசி இல்லை. மின்னல் வேக தொலைபேசி தொடர்பும் இல்லை.அங்கே போராட்டக் களம் இருக்கிறது.தகவல் தெரிவிக்க முடியவில்லை.பாலபிரஜாபதி அடிகளார், குமரி மாவட்டத்தினுடைய பல்வேறு அமைப்புகள், பல்வேறு கட்சிகள் அந்த
போராட்ட ஆலோசனைக் குழுவில் இருக்கிறார்கள். வழக்கறிஞர் வெற்றி
வேலுக்கு பகல் ஒரு மணிக்கு தகவல் சொன்னேன். கையில் ஆணை கிடைத் து விட்டது. பத்து மணிக்கே கொடுத்து விட்டார் மத்திய அரசினுடைய அமைச் சர் என்று தெரிவித்தேன். இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம், எந்த இடத்திலும் நான் தமிழக மக்களுக்காகவும், தமிழக மக்களுடைய உயர் வுக்காகவும் போராடக்கூடியவன். அந்த உணர்வோடுதான் மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராட்டம்
அதனால்தான் இந்த ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை அகற்ற வேண்டும் என்று பதினேழு ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கிறோம். இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கிலே மக்களைத் திரட்டிக் கொண்டுசென்று முற் றுகைப்போராட்டம் நடத்தினோம். வன்முறையிலே நாங்கள் ஈடுபடப் போகி றோம் என்று அபாண்டமான பழி சுமத்தப்பட்ட காரணத்தினால், நீதிமன்றத் திற் குப் போனேன். உயர் நீதிமன்றத்திலே ஆலையை மூடச் சொல்லி தீர்ப்பு கிடைத்தது. உச்ச நீதிமன்றத்தில் 33 அமர்வுகளில் நான் கலந்துகொண்டிருக் கிறேன். கடைசியாக தீர்ப்பு வந்தது, மக்களுக்கு விரோதமாக, ஆலைக்கு சாதக மாக. உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருக்கின்றேன்.
அதன்பிறகு தூத்துக்குடியில் இந்த நச்சாலையினுடைய நச்சுப் புகையைச்
சுவாசித்ததால், மக்களே கிளர்ந்து எழுந்தார்கள். தாய்மார்கள் கிளர்ந்து எழுந் தார்கள். அதனுடைய விளைவாக என்னுடைய அன்புக்குரியவர்களே, ஆலை யை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்துக்கு ஆலை நிர்வாகம் சென்றது. சென்னையில் விசாரணை. நான் நேரிடையாகச் சென்று அதிலும் போய் வாதா டினேன். பிறகு டெல்லி தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது. அங்கும் ஒவ்வொரு வாய்தாவும் போய் வாதாடினேன்.
ஆனால், இங்கு நீதி கிடைக்காது என்று கடைசி வாய்தாவில் தெரிந்துகொண்டு
வெளிப்படையாக பத்திரிகைகளுக்குச் சொன்னேன், இந்த பசுமைத்தீர்ப்பாயத் திலே என்ன தீர்ப்பு வரப் போகிறது என்று நன்றாகத் தெரிகிறது. எனவே நீதி அங்கே கிடைப்பதற்கு வழியில்லை என்று தெரிகிறது. ஆனாலும் நாங்கள் போராடுவோம் என்று சொன்னேன். ஆலைக்கு ஆதரவாக பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு தந்து இருக்கிறது. அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே வழக்குத் தொடுப்பதற்கு வழக்குக்கான மனுவை தயார் செய்துவிட்டேன். அநே கமாக இன்னும் நான்கு நாட்களிலே உச்ச நீதிமன்றத்திலே தாக்கல் செய்ய இருக்கிறேன்.
உலகக் கோடிசுவரன் வேதாந்தா குழுமத்துக்காரன். இன்றைக்கு ஒரிசா, ஜார் கண்ட் பழங்குடி மக்களின் வாழ்வை பாழாக்கிய உலக கோடிசுவரர்கள் வரிசை யில் இருப்பவன். ஆனால், இந்த நச்சுக்காற்றை சுவாசிக்கக்கூடிய நம்முடைய பகுதி மக்கள், குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரும் துன்பம் ஏற்படு கிறது. புற்று நோய் ஏற்படுகிறது. அதனால்தான் ஆய்வு செய்வதற்கு அறிவித்த குழுவில் என்னையும் அறிவித்திருக்கிறார்கள்.
மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் என்று. நான் அந்த மக்க ளைச் சந்திப்பதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்தக் குழுவில் நான் பணியாற்றுவேன்.ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பையும் சேர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறேன்.பசுமைத் தீர்ப்பாயத்தினுடைய தீர்ப்பையும் எதிர்த்து வழக்குத் தொடுத்து இருக்கிறேன். மக்கள் நலனுக்காகப் பாடுபடுகிறோம்.
தாய்மார்கள் கண்ணீரைத் துடைப் பதற்காகத்தான் மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டேன். நதிநீர் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்க நான் போராடி வந்திருக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படு கிறேன். உங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுகிறேன். உங்கள் வருங் கால சந்ததிகளைப் பற்றிக் கவலைப்படுகிறேன். தமிழகம் பாழாகி விடக் கூடா தே என்று கவலைப்படுகிறேன்.
நான் பிறந்த பொன்னாடு இந்த புண்ணிய பூமி. வீரத் தியாகிகளின் பெயரைச்
சொன்னேன். அவர்கள் பொதுமக்கள் நலனுக்காகவே பாடுபட்டார்கள். அந்த
விதத்தில் தான் தொழிலாளத் தோழர்கள் வியர்வைக் கொடியேந்தி வந்திருக் கின்ற வேளையில், நாங்கள் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் திலே பணியாற்ற வருகிறோம் என்று எபனேசர் தாசனும், கோபாலும், டேவிட் ராசும் மற்றுமுள்ள தோழர்களும் முன்வந்து இருக்கிறார்கள்.அவர்கள் முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருபது ஆண்டுகளாக இந்த இயக்கம் உதித்த நாள் முதல் போராடி வருகிறேன்.பட்டபாடுகள் ஒருபோதும் வீண்
போகாது.
மக்கள் மனதில் அது நிலைத்து நிற்கும்.இவர்கள் நாட்டுக்காக உழைக்கிறார் கள், நேர்மையாக உழைக்கிறார்கள், சாதி, மதம் இவர்களுக்குத் தெரியாது. தமி ழக மக்கள் நலனுக்காக லஞ்ச ஊழலற்ற அரசியலை நடத்தத் துடிக்கிறார்கள். நம் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். நாங்கள் வலுவாக இருந் தால் நாட்டுக்கு நல்லது என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் மேலும், மேலும் வலுப்பெற்றால் எதிர்காலத்துக்கு நல்லது. ஊழலற்ற அரசிய லை எண்ணுகின்ற உள்ளங்கள்,நடுநிலையாளர்கள், புதிய வாக்காளர்கள், மாற்றம் வேண்டும் என்று ஏங்குகிறவர்கள், அவர்கள் மனதில் எல்லாம் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. மாற்றம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. மாற்றம் இப்பொழுது அகில இந்திய அளவில் ஏற்பட்டுத் தீர வேண்டும்.
இத்தனைக்கும் கேடு செய்கிற தமிழக வாழ்வாதாரங்களை பாழாக்குகின்ற
செயல்களைச் செய்கிற, தமிழக உரிமைகளைப் பாழாக்குகின்ற, ஈழத் தமிழர் களின் வாழ்வையே அழிப்பதற்கு கொடியவன் ராஜபக்சேவுக்கு படை தந்த காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி பீடத்திலே இருக்க முடியாது.மக்கள் தூக்கி எறி வார்கள்.
எனவே, இந்தத் தருணத்தில் தொழிலாளத் தோழர்கள் இவ்வளவு ஆர்வத்தோடு இயக்கத்தினுடைய தொழிற்சங்கத்திலே இணைய முன் வந்ததற்கு நான் அவர் களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நம்பிக்கையோடு பணியாற்றுகிற என்னு டை ய அருமைத் தம்பிகளே, சகோதரர்களே, தொழிலாளத் தோழர்களே உங்கள் முயற்சிகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அருமைத் தோழர் கூறியதுபோல மே தினத்துக்கு விடுமுறை மத்திய அரசு
அறிவிக்கவில்லை. ஆனால், வி.பி.சிங் பிரதமராக இருந்தபொழுது நாடாளு
மன்றத்தில் 90 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி இந்தப் பிரச்சினையை
எழுப்பி நாளைய தினம் தொழிலாளர்களின் நாள்.மே தினம்.இதற்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அவரிடத்தில் வாதாடி பிற்பகல் இரண்டரை மணிக்கு அன்றைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வா னைக் கொண்டு அறிவிக்க வைத்தவன் அடியேன் வைகோ என்ற தகுதியோடு இங்கே நிற்கிறேன். மே தினத்திற்கு மத்திய அரசு விடுமுறை கொடுப்பதற்கு முழு முதற் காரணமாகத் திகழ்ந்தவன் என்ற உரிமையில் தொழிலாளர் நல னில் உரிமையில் சமரசம் செய்துகொள்ளாமல் நாங்கள் போராடுவோம்.
எங்கள் சுயநலத்திற்காக ஒருபோதும் தொழிலாளர்களின் உரிமையை எந்தக்
கட்டத்திலும், எந்த இடத்திலும், சமரசம் செய்ய மாட்டோம் என்ற முழுத்தகுதி யோடு மறுமலர்ச்சி தி.மு.க.இருக்கிறது. வாருங்கள் தோழர்களே, விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள்.எங்களிடம் நீதியும், நேர்மையும், நியாயமும் இருக் கிறது. தமிழக உரிமைக்குப் போராடுகிறோம் என்ற நம்பிக்கை உள்ள தோழர் களே வாருங்கள். எங்கள் கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். எங்கள் கரங் களைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து போராடுங்கள். மாலை வேளையில்
வேலை முடிந்து வீடு போக வேண்டிய இந்த நேரத்தில் இங்கு வருகை வந்து
சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்து, என் தொழிலாளத் தோழர்கள் எடுக்கின்ற
முயற்சிகள் வெற்றி பெறட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
No comments:
Post a Comment