07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
முதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜ குரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்று அந்தத் தூக்குக் கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், இது எதுவுமே தெரியாமல் நாளைக்காலை யில் தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக ஒருதடவைப் பார்த்துவிடலா மா என்ற ஏக்கத்தில், பகத்சிங்கின் தாயும் தந்தையும் கிஷன்சிங்கும் வித்யா வதி கெளரும் சிறை வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது. ஏழரை மணிக்கே தூக்கில் போட்டு விட்டார்கள் என்பது தெரியாமல் அவர்கள் வாசலி லேயே நிற்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஒருமுறை மகனைப் பார்க்க முடி யுமா? என்று கேட்கிறபோது, ‘சிறை அதிகாரி அலுவலகத்தில் இல்லை. நாளை காலையில் வாருங்கள்’ என்று அவர்களை பகத்சிங்கைத் தூக்கில் போடுகிற அதே நேரத்தில் அனுப்பி விட்டார்கள்.
தூக்கில் போட்ட உடன் சிறைக்குப் பின்வாசல் வழியாக இந்த மூன்று பேரு
டைய உடலையும் வண்டியில் தூக்கிக் கொண்டு, மண்ணெண்ணெய் டின்னும், விறகுகளும் எடுத்துக் கொண்டு லாரியில், மதகுருக்கள் இருவர் நந்தா சிங் கிரஞ்சி என்ற சீக்கிய மதகுருவையும் ஜெகநாத ஆச்சர்யா என்ற இந்து மதகுரு வையும் அதிகாரிகள் உடன் அழைத்துக் கொண்டு சட்லஜ் நதிக்கரைக்குப் போ னார்கள். இருட்டி விட்டது இரவு எட்டரை மணி.
டைய உடலையும் வண்டியில் தூக்கிக் கொண்டு, மண்ணெண்ணெய் டின்னும், விறகுகளும் எடுத்துக் கொண்டு லாரியில், மதகுருக்கள் இருவர் நந்தா சிங் கிரஞ்சி என்ற சீக்கிய மதகுருவையும் ஜெகநாத ஆச்சர்யா என்ற இந்து மதகுரு வையும் அதிகாரிகள் உடன் அழைத்துக் கொண்டு சட்லஜ் நதிக்கரைக்குப் போ னார்கள். இருட்டி விட்டது இரவு எட்டரை மணி.
சட்லஜ் நதிக்கரையில் ஒரே சிதையில் மூன்று பேரின் உடலையும் வைக்கி றார்கள். அப்பொழுது சீக்கிய மதகுரு நந்தா சிங் கிரஞ்சா சொல்கிறார்; ‘எங்கள் சீக்கிய மத வழக்கப்படி இருட்டியபிறகு ஈமச்சடங்கு செய்யக்கூடாது, இருட்டி யபிறகு தகனம் செய்யக்கூடாது’ என்றவுடன், காவல்துறை அதிகாரி அவரைப் பார்த்து மிரட்டுகிறார்.‘வாயை மூடிக்கொண்டு இரு’என்கிறார்.பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுகிறார். அதற்குப்பிறகு சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள். எங்கள் மத வழக்கப்படி மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கக் கூடாது என்கிறார். அப்பொழுதும் மிரட்டுகிறார்.
மூன்றுபேரையும் ஒரேசிதையில் வைத்தவுடன், இந்து மதகுரு ஜெகநாத ஆச் சார்யா சொல்கிறார். ஒரு சிதையில் ஒரு பிரேதத்தைத்தான் வைக்கவேண் டும். மூன்று பிரேதத்தையும் ஒரே சிதையில் வைக்கக் கூடாது என்கிறார். அவ ரையும் மிரட்டுகிறார்கள். இரவு 11.45 தீயை வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் எரிகிறது. நள்ளிரவு கடந்து 2.15 மணிக்குப் பார்க்கிறார்கள். இன்னும் சில பகுதிகள் உடம்பு எரிந்தும் எரியாமலும் இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என் றால் எரியாமல் இருக்கின்ற பகுதிகளை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டுகிறார்கள். மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அதற்குப் பிறகு துண்டும் துணுக்குகளுமாகக் கிடந்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் சட்லஜ் நதியில் போடுகிறார்கள்.
இவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்டது. காலையில் போய் பகத்சிங் கை பார்க்கலாம் என்று அவன் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு இருக்கி றார்கள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், லாகூர் வீதிகளில், பிரிட்டிக்ஷ் அரசு காவல்துறையை வைத்தே ஒரு சுவரொட்டியை ஒட்டுகிறது எல்லா இடங்களிலும். ‘பகத் சிங் - ராஜ குரு - சுகதேவ் நேற்று இரவிலேயே தூக்கிலி டப்பட்டு அவர்களது அஸ்தி சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது’ என்று சுவரொட் டிகளை எல்லா இடங்களிலும் ஒட்டிவிட்டார்கள். இதை அறிந்த மக்களின் உள்ளம் எரிமலையாயிற்று. கிளர்ச்சி வெடித்தது. மக்கள் பொங்கி எழுந்தார்கள்.
இதை எல்லாம் நான் விவரிப்பதற்குக் காரணம். தன் வாழ்நாளில் கடைசி நிமி டம் வரையில் இலட்சியத்தை நேசித்து, மரணம் நிச்சயம் என்று தெரிந்ததற் குப்பிறகும் கூட எந்தக் கொள்கையை நேசித்தார்களோ அதற்காக வாழ்ந்த மா வீரன் அப்படிப்பட்ட மாவீரன் பகத்சிங். அந்த பகத்சிங்கின் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது நான் சொல்கிறேன். பகத்சிங்கின் வீரத்தை நான் ஏடுகளில் பார்த்தேன். பகத்சிங்கின் வீரத்தை நான் புத்தகங்களில் படித்தேன். இன்றைக் குப் பகத்சிங்கின் வீரத்தை வன்னிக் காடுகளில் பார்க்கிறேன்.
No comments:
Post a Comment