Wednesday, September 11, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 15

நாள் :- 24.11.2006

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

பார்வை :

இலங்கையில் வாழ் கின்ற ஈழத்தமிழ்  மக்களின் துயரங்கள் குறித்து, 30.08.2006, 6.11.2006 ஆகிய நாள்களில், நான் தங்களுக்கு எழுதிய கடிதங்கள். 

தாங்க முடி யாத வேதனையுடனும், மன உளைச்சலுடனும்,இந்தக்கடிதத்தைத் தங்களு டைய மேலான பார்வைக்கும், பரிசீலனைக்கும் கொண்டு வருகின் றோம்.

இலங்கையில் உள்ள சிங்கள இனவெறி அரசு, தமிழர்களுக்கு எதிராகச் செயல் பட்டு, கொடூரமான முறையில், பூண்டோடு தமிழ் இனத்தையே அழிக்கின்ற வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது, மறுக்க முடியாத, உறுதி செய்யப்பட்ட உண்மை ஆகும்.

கீழ் காணும் நிகழ்வுகள், இலங்கை அரசு, தமிழ்  மக்களின் மீது நடத்துகின்ற
வன்மையான தாக்குதல்களை வெளிப்படுத்துகிறது; உலக சமுதாயத்தையே
நிலைகுலையச் செய் து உள்ளது. இலங்கை அரசின் இத்தகைய தாக்குதல்கள்,
சகிக்க முடியாத, வஞ்சிக்கின்ற, கொலைவெறி பிடித்த கபட நடவடிக்கைகள்,
அங்கு உள்ள ஒட்டுமொத்தத் தமிழர்களையும் திட்டமிட்டு அடியோடு அழிக் கின்ற செயல் ஆகும். அழிந்ததுபோக எஞ்சி இருக்கின்ற தமிழர்களை,தங்களின் அடக்குமுறையின் கீழ் கொண்டு வருகின்ற சூழ்ச்சி ஆகும்.

1. 2006 ஆகஸ்ட் 14 ஆம் நாள், ‘செஞ்சோலை’ என்ற இடத்தில் அமைந்து உள்ள ஆதரவு அற்ற சிறார் இல்லம் மீது, இலங்கை இராணுவம் நடத்திய கொடூர மானத் தாக்குதலில் 61 பெண் குழந்தைகள் பலியானார்கள். 170 குழந்தைகள் கை, கால் மற்றும் உறுப்புகளை இழந்து படுகாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார் கள்.

2. 2006 ஆகஸ்ட் 2 ஆம் நாள் அன்று, ஃபிரான்ஸ்  நாட்டினர் அமைத்து இருந்த சுனாமி மறுவாழ்வு முகாமில் பணி ஆற்றிக்கொண்டு இருந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் உள்ளிட்ட 17 தமிழ் இளைஞர்கள் - தன்னார்வத் தொண்டர்கள், இரக்கமற்ற முறையிலே இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு
இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மன்றமும், இலங்கை போர்நிறுத்தக் கண் காணிப்புக் குழுவும், ‘இலங்கை ராணுவம்தான் இந்த படுபாதகச் செயலைச் செய் து உள்ளது’ என்று குற்றம் சாட்டி இருக்கிறது.

3. 2006 நவம்பர் 8 ஆம் நாள் அன்று, வாகறையில் இலங்கை ராணுவம் வான் வழியாகக் குண்டுமழை பொழிந்து, அகதிகளாக பள்ளிக் கட்டிடங்களில் பாது காப்பாகத் தங்கி இருந்தவர்களை, ஆறுமாதக் குழந்தைகள், பெண்கள் உட்பட 75 அப்பாவித் தமிழர்களை, ரத்தத்தை உறையச் செய் யும் வகையிலே கொன்று
குவித்து இருக்கிறது.

4. வாகறையிலே தமிழ் அகதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலை மை தாங்கிய, ஜனநாயக முறையில் தமிழர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நடராஜா ரவிராஜ், இலங்கை ராணுவத்தாலும்,
கூலிக்கு அமர்த்தப்பட்ட ஐந்தாம்படைக் கொலைகாரர்களாலும் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

யாழ் ப்பாணத்துக்குச் செல்லும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை அடைத்ததால்,
இலங்கை அரசின் திட்டமிட்ட பொருளாதாரத் தடைகளால், அப்பகுதியில் உள் ள தமிழ்  மக்கள் ஒட்டுமொத்தமாகப் பட்டினிச் சாவுக்கு ஆளாகின்ற நிலைக் குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களில், 600 தமிழ் இளைஞர்கள் குறிவைக்கப்பட்டு இலங் கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட நடவடிக்கை, இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளது என்பதற்குத் தெளிவான சாட்சி ஆகும்.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து இலங்கை அரசு, வாங்கிக் குவித்து இருக்கின்றது. குறிப்பாக, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து, நவம்பர் 12 ஆம் நாள் வைகோ அவர்களுக்குத் தாங்கள் எழுதிய கடிதத்துக்காக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

ஆகஸ்ட் 30, 2006 அன்று நாங்கள், தங்களிடம் நேரில் விடுத்தக்கோரிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, பால் பவுடர், மற்றும் மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்புவதாக உறுதி அளித்தீர்கள். அந்த உதவிகளை, பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம்  மூலமாக அனுப்பினால் தான், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாகச் சேரும் என்ற வேண்டு கோளையும் நாங்கள் விடுத்து இருந்தோம்.

12 நவம்பர் 2006 தேதியிட்ட தங்கள் கடிதத்தில், உணவு, பால்பவுடர், மருந்துப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்து உள்ளீர்கள். அவை, தமிழ் மக்களைச் சென்று அடையாது என்ற அச்சத்தையும் இதன் வழியாக வெளிப்படுத்தக் கடமைப்பட்டு உள்ளோம்.

பெரும்பான்மையான உணவுப்பொருள்களை, இலங்கை அரசு யாழ்ப்பாணத் தில் ஆக்கிரமித்து உள்ள சிங்கள இலங்கை ராணுவத்துக்குக் கொண்டு சேர்த்து விடும். ஏற்கனவே சிங்கள வெறியர்கள், தமிழர் பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பப்பட்ட உணவுப் பொருள்களை, இடையிலேயே வழிமறித்துச் சூறை யாடி உள்ளனர். இந்த நடவடிக்கை, இலங்கை ராணுவத்தின் துணையுடன்தான் நடந்து உள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, பன்னாட்டுச் சமூகத்தையும், குறிப்பாக
இந்தியாவையும் ஏமாற்றுகின்ற வகையில், பொய்யான அறிக்கைகளை வெளி யிட்டு, ஈழத்தமிழர்களை அழித்து ஒழிக்கின்ற அவர்களுடைய திட்டங்களை மறைத்து வருகின்றார்.

இலங்கை உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கி உள்ள தீர்ப்பில், ‘இலங்கை யின் வடக்கு-கிழக்கு மாநிலங்களின் இணைப்பு செல்லாது’ என்று அறிவித்து உள்ளது. 1987 இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் முதன்மையான கருத்துக்கு நேர்முரணான முடிவாகும்.

சிங்கள இனவெறிக் குழுமங்களான ஜெ.வி.பி., சிகல உறுமய, மற்றும் புத்தத்
துறவிகளின் தமிழ்  இன எதிர்ப்பு நடவடிக்கைளுக்கு வலுச்சேர்ப்பதாக இந்தத்
தீர்ப்பு அமைந்து விட்டது.

தற்போது உள்ள சூழலில், இலங்கை ராணுவத்துக்கும், தமிழர்களின் பிரதிநிதி யாக இருக்கின்ற விடுதலைப்புலிகளுக்கும் உள்ள பகை உணர்வு வளர்ந்து கொண்டே செல்வதால், எந்தநேரத்திலும் பெரிய அளவில் போர் வெடிக்கின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள ஏழு கோடித் தமிழர்கள் மட்டும் அல்லாது, உலகெங்கும்
வாழுகின்ற தொப்புள்கொடி உறவுள்ள தமிழர்கள் அனைவரும், ஈழத் தமிழரின் இந்தத் துயரமான நிலை கண்டு மனவேதனை அடைந்து உள்ளனர்.

எனவே,இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி உள்ள ரேடார் கருவிகளைத் திரும்பப் பெறவேண்டும்; இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவில் வழங்கப்படுகின்ற பயிற்சியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய அரசாங்கம் தங்களுடைய அரசு முறையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை அரசை வலியுறுத்தி, ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக் கச் செய் து, தமிழர்கள் மீது சுமத்தி உள்ள பொருளாதாரத் தடையை நீக்கும்படிச் செய்ய வேண்டும். மேலும், தமிழர்கள் மீது விமானத்தில் இருந்து குண்டுகள் வீசுவது, பீரங்கி போன்ற ஆயுதங்கள் மூலமாகத் தாக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈழத் தமிழர்களின் சொல்லொணத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அவர் களுக்கு ஆதரவு அளிக்கின்ற வகையிலும், தமிழர்களின் ரத்தக்கறை படிந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே அவர்களுடைய இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையிலும், எங்களுடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக்கழகம், நவம்பர் 27 ஆம் நாள் திங்கள்கிழமை அன்று, புதுதில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் உண்ணாநிலை அறப்போராட்டத் தில் ஈடுபட இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கோரிக்கை விண்ணப்பத்தில் கூறப்பட்டு உள்ளது.

‘தாயகம்’                                     
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment