Saturday, September 28, 2013

விருதுநகர் மாநாட்டைத் திறந்து வைத்து புலவர் சே.செவந்தியப்பன் உரை

தமிழகம், மாற்று அரசியலுக்கான தேடலில் #வைகோ வை அடையாளம் கண்டுள்ளது...

மாற்று அரசியலுக்கான நுழைவாயில்தான் இம்மாநாடு!

செப்டம்பர் 15 -பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - விருதுநகர் மாநாட்டைத்
திறந்து வைத்து புலவர் சே.செவந்தியப்பன் ஆற்றிய உரை....

“செந்தமிழை செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்க
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே”

அண்ணா எளிமையானவர். அதிகார பீடத்தில் அமர்ந்து ஊழலுக்கு உற்சவம் நடத்தாதவர்; மறந்தும் வாரிசு அரசியலை வளர்க்க விரும்பாதவர்; மாநிலங் களவையில் தன் வாதத் திறமையால் முத்திரை பதித்தவர். எளிமை, ஊழல் கறைபடியாத பொதுவாழ்க்கை, வாரிசு அரசியலுக்கு வளைந்து கொடுக்காத அரியதன்மை, தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை, நாடாளுமன்ற நடவடிக் கைகளால் தேசியத் தலைவர்களை வசீகரித்த ஆற்றல் ஆகியவற்றில் அண் ணாவின் உண்மையான வாரிசு “வைகோ” அவர்கள் நடத்துகின்ற அண்ணா
பிறந்தநாள் விழா மறுமலர்ச்சி தி.மு.க. விருதுநகர் மாநாட்டின் தலைவர் உயர் நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் அவர்களே, மாநாட்டு வரவேற்பாளர்
ஆர்.எம்.எஸ். அவர்களே, கழகப் பொதுச்செயலாளர், பூமிப்பந்தில் வாழும் 10 கோடி தமிழர்களின் ஒருபெரும் நம்பிக்கை, இலட்சியத்தலைவர் வைகோ அவர்களே, வணக்கம்.


“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும், தனிதலும் அவற்றோறன்ன”

என்று; உறவும் ஒற்றுமையும் பேசிய கணியன் பூங்குன்றனாரும் வாடிய முல் லைக்கு தனது தேரைத் தந்த பாரியும், மண்டிலம் பறிபோகும், சாவு நிச்சயம்,
என்ற பின்னும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடைக்கலம் தந்து அகிலம் புகழ் கொண்ட மருதுபாண்டிய மாமன்னர்களும்; வெள்ளையரிடம் இழந்த அரசு ரிமையை மீட்டுச் சரித்திரம் படைத்த வீரமங்கை வேலு நாச்சியும், பசும்பொன் தேவர் திருமகனாரும், நம்பிய தலைமைக்காக, ஏற்றுக் கொண்ட இலட்சியத் திற்காக உயிரையும் தரச்சித்தமான உலகின் முதல் மனித வெடிகுண்டு தோழி குயிலியும் உலவிய சிவகங்கைச் சீமையில் 20 ஆண்டுகளாக, வைகோவின்
படை நடத்தும் தம்பி என்ற பெருமிதத்தோடு நான் உங்கள் முன் நிற்கிறேன்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்க வரலாற்றின்நீட்சியாகவும், மீட்சியாகவும் இருக்கும், மறுமலர்ச்சி திமுகவின் “அண்ணா” பிறந்தநாள்விழா விருதுநகர்
மாநாட்டைத் திறந்து வைக்கிற வாய்ப்பினை வழங்கிய இலட்சியத் தலைவர் வைகோ அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், எனது உள்ள
மெல்லாம் பிரகாசம் எடுக்கும் நன்றியினைக் காணிக்கையாக்குகின்றேன்.

திராவிட இயக்க மாநாடுகளைத் திறந்து வைத்த, தீரர் களை எண்ணிப் பார்க் கிறேன். எளிய எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கி பெருமைப் படுத்திய தலை வர் வைகோ அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்கிறேன். என் மகன் சரவணன் திருமணத்தை தலைவர் வைகோ
நடத்திவைக்க நன்றியுரை நிகழ்த்துகின்றபோது எந்தமனநிலையில் அந்த மேடையில் நின்றேனோ அதே உணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நான் நிற் கிறேன்.

“நீ எதாக நினைக்கிறாயோ அதாகவே ஆக்கப்படுகிறாய்” என்ற கீதையின் பாதையில், விடுதலைப் புலிகளை ஆதரித்து திருமங்கலம் பொதுக்கூட்டத் தில் பேசியதற்காக நீங்கள் கைது செய்யப்பட்டபோது உங்களோடு நானும் கைது செய்யப்பட்டு 19 மாத காலம் சிறை இருந்ததை என் வாழ்வில் தவமாக வே கருதுகிறேன். அதை இங்கு மட்டுமல்ல, திருமங்கலம் நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களிடம், நாங்கள் எட்டுப்பேரும் பிறவிப்பயனை அடைந்து விட்டோம் என்று எங்கள் சார்பாக அண்ணன் கணேசமூர்த்தி சொன்னது எனது நெஞ்சில் நிழலாடுகிறது.

தமிழக அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில் விருதுநகரில் மாநாடு. அகில இந்திய அரசியலில் இரண்டு முறை பிரதமர்களைத் தீர்மானித்து, தமிழ் நாட்டில் ஒன்பதாண்டுக் காலம் முதலமைச்சராய் இருந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு, நீலத் திரைக்கடல் ஓரத்தில் கடல் நித்தம் தவம்செய்யும் குமரி முனையில் மணிமண்டபம் கட்ட அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி டம் அனுமதிவாங்கிக் கொடுத்த தலைவர் வைகோ நடத்தும் மாநாடு.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் இலட்சியப்பயணத்தில் 19ஆண் டுகளைக் கடந்து 20 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த இரு பது ஆண்டுகளில் நமது இயக்கத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிக் காட்டி இருக்கிறார். திராவிட இயக்க இலட்சியங்கள்
வெற்றி பெற தந்தை பெரியாரின் இலட்சியங்களையும், அண்ணாவின் கொள் கைகளையும் தோள்மீது சுமந்து ஓயாத கடல் அலையாக ஓய்வில்லாமல் உழைத்துள்ளார்.தமிழ் மொழியை, இனத்தை, தமிழனின் ஜீவாதார உரிமை களைக் காக்க களத்தில் நிற்கும் போராளியாக வைகோ பணியாற்றியதால், இன்று தமிழ்நாட்டு மக்களின் ஒருமாற்று அரசியலுக்கான தேடலில் தலைவர்
வைகோவே தனித்து நிற்கிறார். இந்த உயரத்தைப் பிடிக்க தலைவர் வைகோ தந்த விலை மிக அதிகம்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், அணை இடிக்கப்படாமல் காக்கவும் 1999 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகள் இடையறா மல் போராடியுள்ளார். பல்வேறு காலக்கட்டத்தில் உண்ணாவிரதம், மதுரை முதல் கூடலூர் வரை நடைப்பயணம், தேனி மாவட்டத்தில் 600க்கும் மேற் பட்ட கிராமங்களில் பிரச்சாரப் பயணம் என்று போராடியதால், கேரள அரசும், மலையாளிகளும் அணையை உடைத்துவிடாமல் தலைவர் வைகோ முல் லைப் பெரியாறு அணையைக் காப்பாற்றி இருக்கிறார்.

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட இடையறாமல் போராடியதாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்திய தாலும், இன்றும் வேதாந்தம் குழுமத்தின் சிம்ம சொப்பனமாக வைகோ நிற் கிறார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட வேண்டும் என்பதற்காக இடிந்த கரையில் நடக்கும் மக்கள் போராட்டத்தை, சமரசமில்லாமல் தலைவர் வைகோ ஆதரிக்கிறார்கள்.

பெருந்தலைவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்றான நெய் வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் 51 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்க
மத்திய அரசு முடிவெடுத்தபோது, அன்று வீராதி வீரர்களெல்லாம் முடிந்துவிட் டது என்று முகாரி பாடியபோது, தலைவர் வைகோ, 2002 இல் பிரதமர் வாஜ்பா யிடம் போராடி தனியாருக்கு விற்பதைத் தடுத்து நிறுத்தியதால், இன்றளவும், அது தமிழ்நாட்டு மக்களின் பொதுச்சொத்தாக, 35,000 தொழிலாளர்களின் உரி மையாக தலைவர் வைகோவின் போராட்டத்திற்கு கிடைத்த பரிசாக விளங்கு கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உறுதியில்லாத தலைவர்கள் மத்தியில்; உறுதிமிக்க தலைவராக,சமரசம் செய்து கொள்ளாத தலைவராக தாங்கள் இருக்கிறீர்கள்.அதனால்தான் 1995 இல் திருச்சி மாநில மாநாட்டில் தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று தீர்மானம் போட்டு இன்று வரை அதில் சமரசம் இல்லாத தலைவராக விளங்குகிறீர்கள். இதற்காக தாங்கள் தந்துள்ள விலைமிக அதி கம். முள்ளிவாய்க்கால் சோகத்திற்குப் பிறகு தனித்தமிழ் ஈழம் சாத்தியமா? ஈழத்தமிழர் எதிர்காலம் இனி என்னவாகும் என்ற காலகட்டத்தில்தான் பெல் ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என்றும் வாக்கெடுப்பில் உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் வாக்க ளிக்க உதவ வேண்டும் என்று முழங்கினீர்கள். அந்த முழக்கம் இன்று உலகெங் கும் வாழும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த திசை நோக்கி ஈழப்போ ராட்டம் நகர்ந்து கொண்டுள்ளது.

20 ஆண்டுகள் இப்படி இடையறாமலும், தடை இல்லாமலும் தாங்கள் இயங்கி யதன் விளைவு, தமிழகம் மாற்று அரசியலுக்கான தேடலில், வைகோவை
அடையாளம் கண்டுள்ளது.

அதிகார அரசியலை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்.ஆனால்,அதிகாரம் உங் களைத் தேடி அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முதுபெரும்
பத்திரிகையாளரான குல்தீப் நய்யாரின் ஆனந்தவிகடன் பேட்டிதான் சாட்சி.

அவரிடத்தில், இன்னாள் முதலமைச்சர் - முன்னாள் முதலமைச்சர் -இருவருக் கும் மாற்றாக தமிழ்நாட்டை வழி நடத்த உங்கள் தேர்வு யாரென்று கேட்ட போது,அந்த பழுத்த பத்திரிகையாளர் “ என்னுடைய தேர்வு வைகோ” என்று சொல்கிறார் என்றால் நாம் வெல்லுகிறகாலம் வரும் என்பதற்கு இந்த விருது நகர் மாநாடு சாட்சி.

மாநாடு நடைபெறுகிற இடம் விருதுநகர். மாநாட்டைத் திறந்து வைக்கிற நான் சிவகங்கை. சிவகங்கைக்கும், விருதுநகருக்கும் இடையே அரசியல் தொடர்பு உண்டு.இந்தியாவின் இரண்டு பிரதமர்களைத் தீர்மானித்த பெருந்தலைவர் காமராசர் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட தீரர் சத்தியமூர்த்தி எங்கள் செட்டி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சர் ஆனபோது தீரர்சத்தியமூர்த்தியின் மனைவி திருமதி பாலசுந்தரம்மாள், காம ராஜரின் இருபது ஆண்டுகால உழைப்பிற்கும், பொதுசேவைக்கும், தியாகத்திற் கும் கிடைத்த பரிசு என்று குறிப்பிட்டு வாழ்த்து அனுப்பியதாக வரலாற்றில் படித்து இருக்கிறேன்.

தலைவர் வைகோ அவர்களே மறுமலர்ச்சி திமுக இருபதாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிற பொற்காலத்தில் இந்தமாநாடு நடைபெறுகிறது. ஆம், இருபதாண்டு கால உங்கள் உழைப்பிற்கும், தியாகத்திற்கும், சேவைக்கும் கிடைக்கப் போகிற அங்கீகாரத்தின் அடையாளமாக, மாற்று அரசியலுக்கான நுழைவு வாயிலாக திகழ்கிற இந்த மாநாட்டைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணாவின் மனம் கவர்ந்த எங்கள் சிவகங்கைக் கவிஞர் மீராவின் இந்தக்
கவிதைவரிகளைச் சொல்லி என் உரையை முடிக்கிறேன்.

சாகாத வானம் நாம்
வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்
பெருமை வற்றிப் போகாத
நெடுங்கடல் நாம்
நிமிர்ந்து நிற்கும் பொதியம் நாம்
இமயம் நாம்
காலத்தீயில் வேகாத தத்துவம் நாம்
வெண்கதிர் நாம்
திங்கள் நாம்

அறிவை மாய்க்கும் ஆகாத
பழமையெல்லாம் அகற்றிப்பாயும்
அழியாத காவிரி நாம்
அருவியும் நாம்

தொல் வீரப் புகழ் வளர்க்கும்
சரித்திரத்தின் தொடக்கம் நாம்
வஞ்சத்தின் நெஞ்சம் தீர
வாள்வீரம் வர்ணிக்கும்
பரணிப்பாட்டின் வடிவம் நாம்

வாகைப்பூ மாலை சூட
ஆள்வீரப் பேரரசை அமைத்துக்காட்டும்
அடிப்படை நாம்
வெடிப்படை நாம்
புலிப்படை நாம்
உரிமைப் போர்ப்படை நாம்
கொடி மின்னல் நாம்
தென்றல் நாம்
காட்டுமர வேரறுத்துத்
தீர்த்துக்கட்டும் புயலும் நாம்
குளிர்ச்சியூட்டும் குன்றம் நாம்

பொல்லாத கொடுமை யழிக்கப்
பொங்குகின்ற எரிமலை நாம்
இலட்சியத்தின் பந்தம் நாம்
எதிரிகளை அடங்க வைக்கும்
மடங்கல் நாம்

எம் இனத்தை மீட்க
ஓரணியில் நின்றோம் நாம்
வென்றோம் நாம்

மாற்று அரசியல் களத்திற்கு நுழைவாயில் அமைத்துத்தர இருக்கிற அண்ணா பிறந்தநாள் விழா விருதுநகர் மாநாட்டைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாய்ப்புக்கு நன்றி.

புலவர் சே.செவந்தியப்பன் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment