Sunday, September 8, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 6

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

கல்கத்தா காங்கிரஸ் மாநாடு அங்கே நடக்கிறது. அதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அங்கே செல்கிறார் பகத் சிங். சலிப்புத் தட்டுகிறது. அங்கே உள்ள தீர் மானங்கள், நடவடிக்கைகள், சில பேச்சுகள் சலிப்புத் தட்டுகிறது. காங்கிரஸ் மாநாட்டைவிட்டு வெளியே வருகிறார்.அவர் சொல்கிறார்.அப்பொழுது எங்கே செல்வது என்று நான் கருதினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத் துயர வரலாற்றை விவரிக்கின்ற Uncle Toms Cabin என்கின்ற திரைப்படம் நடப்பதைக் கேள்விப்பட்டு, நான் அங்கே சென்றேன்’ என்று பகத்சிங் சொல்கிறார்.

இதற்குப்பிறகுதான், நாடாளுமன்றத்தில் குண்டு வீசுவது என்று முடிவு எடுக் கப்படுகிறது. யார் குண்டு வீசுவது என்று தீர்மானிக்கிறார்கள். முதலில் பகத் சிங் வேண்டாம் என்கிறான் சுகதேவ். பகத் சிங் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியவன், அவனைக் கொண்டுபோய் இந்தப் பரீட்சையில் ஈடுபடுத்தக் கூடாது என்கிறார்கள். வாதாடி, கடைசியில் தானே செல்வது என்று பகத்சிங் வற்புறுத்துகிறான். பகத்சிங், டட் என்ற இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்துக்கு உள்ளே, மத்
திய பாராளுமன்றம் நடக்கின்ற மண்டபத்தின் பார்வையாளர் அரங்கத்திற்கு பகத்சிங்கும், டட்டும் சென்று உட்காருகிறார்கள். 11 மணி அடிக்கிறது. சபை கூடுகிறது. மோதிலால் நேரு சபையில் உட்கார்ந்து இருக்கிறார். முகமது அலி ஜின்னா சபையில் உட்கார்ந்து இருக்கிறார். இரண்டு குண்டுகள் வீசுகிறார்கள். எதற்கு என்றால் இரண்டு மசோதா அங்கு நிறைவேற்றப்படுகிறது. ஒன்று, ‘விசாரணை இன்றிக் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம்’ என்கின்ற ஒரு மசோதா. இன்னொன்று தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை யைப் பறிக்கின்ற மசோதா.

இந்த இரண்டு மசோதாக்களையும், நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிமுகம் செய்கிறார். அப்பொழுது மேலே இருந்து குண்டை வீசுகிறான் பகத்சிங். குண்டு வீசும்போது எவர்மீதும் பட்டுவிடாமல், யாருக்கும் காயம் ஏற்படுத்தி விடாமல் நாடாளுமன்றத்தில் எது வெற்றிடமாக இருக்கிறதோ, அதைப் பார்த்துக் குண்டை வீசுகிறான். உடனே அங்கே எல்லோருக்கும் பதட்டம் ஏற்படுகிறது. ஆனால், மோதிலால் நேருவோ, ஜின்னாவோ அங்கு இருந்த மற்றவர் களுக் கோ பதட்டம் இல்லை. அவர்கள் சலனமற்று இருக்கிறார்கள்.

இதில் இன்னும் விநோதமான செய்தி என்னவென்றால் எந்த சைமனை எதிர்த் து லஜபதி ராய் குண்டாந் தடிக்கு ஆளாகிக் கீழே விழுந்து உயிர் இழந்தாரோ, எந்த சைமனை வெளியே போ என்றார்களோ, அதே சைமன் பார்வையாளர் மாடத்தில் உட்கார்ந்து இருக்கிறான். எல்லோரும் ஓடுகிறார்கள். காவலாளி களுக்கு பகத்சிங் அருகில் போவதற்கு அச்சம். நெருங்கவில்லை, மற்ற பார் வையாளர்கள் எல்லோரும் போய் விட்டனர். காலரியில் இவர்கள் இருவரும் நின்று கொண்டே இருக்கின்றனர். அருகில் செல்கிறபோது பயந்து கொண்டே நின்றவர்களிடம்,‘நாங்கள் இந்த பிஸ்டலை ஒப்படைக்கிறோம்’ என்றார் பகத் சிங்.

அப்பொழுதுதான் பகத்சிங் சொன்னான். ‘வெள்ளை அரசின் செவிட்டுக் காது களில் விழுவதற்காகத் தான் இந்த பலத்த சத்தத்தை இந்த சுதந்திரப் போராட் டத்தில் நாங்கள் ஏற்படுத்தினோம்’ என்றான். கைது செய்யப்பட்டார்கள். அவர் கள்மீது வேகவேகமாக விசாரணை நடைபெற்றது.

தொடரும் ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment