Saturday, August 3, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 3

நான் உரை ஆற்றத் தொடங்கினேன்.காரணங்களைச் சொன்னேன்.எதனால், கொலைகாரன் இராஜபக்சே இங்கே வரக்கூடாது என நாங்கள் எதிர்க்கின் றோம்? என்பதைச் சொன்னேன். என் இருதயத்தைத் திறந்து பேசினேன்.அங்கே கொல்லப் பட்டது உங்கள் குழந்தைகளாக இருந்தால், உங்கள் மனம் என்ன
பாடுபடும்? என்று கேட்டேன்.

இந்திய அரசைக் குற்றம் சாட்டினேன். கொலைகாரன் ராஜபக்சே, காலையில்
குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தான். இன் றைக்கு அவர் குடியரசுத் தலைவராக இருக்கலாம். நான்,அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன். சிங்களவனுக்கு ஆயு தங்களும், பணமும் கொடுத்து, எங்கள் மக்களைக் கொன்று குவித்ததை நியா யப்படுத்த முயன்ற அந்தக் கொடிய காரியத்தைச் செய்த அந்நாள் பிரணாப் முகர்ஜியைக் குற்றம் சாட்டுகிறேன்.
நீங்கள் இன்றைக்கு வேண்டுமானால், குடியரசுத் தலைவராக இருக்கலாம்.
எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. சட்டம் எங்களை எதுவும் செய்ய முடி யாது. ஆனால், நாங்கள் உங்களை மன்னிக்கவே மாட்டோம்.உங்கள் பாவக் கறைகளை ஒருபோதும் நீங்கள் போக்கிக்கொள்ள முடியாது.மன்மோகன் சிங், சோனியா போக்கிக் கொள்ள முடியாது.


சேக்ஸ்பியரின் சீமாட்டி மேக்பெத் சொன்னதைப்போல, ஆயிரம் வாசனாதி
திரவியங்களைக் கொண்டு வந்து கொட்டினாலும், கொலை செய்த பாவத்தை என்னால் போக்கிக் கொள்ள முடியாது என்று சொன்னாள்.Even thousand perfumes of
Arabia, cannot sweaten this little hand.. “அரேபியாவின் ஆயிரம் வாசனாதி திரவியங் களைக் கொண்டு வந்து கொட்டினாலும், என்னுடைய களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடியாது” என்று, கொலை செய்த சீமாட்டி மேக்பெத் சொன்னாள்.

அதைப்போல, எங்கள் மக்களைக் கொன்று குவிக்க நீங்கள் திட்டமிட்டு ஆயு தங்களைத் தந்தீர்கள். முப்படைத் தளபதிகள் திட்டங்களை வகுத்துத் தந்தார் கள். சாட்டிலைட் நகர்வுகள், ஏழு அணு ஆயுத வல்லரசுகள் திரட்டிக் கொடுத்த ஆயுதங்கள், அத்தனையும் கொண்டு,எந்தக் களத்திலும் சிங்களவர்களால் எதிர் கொள்ள முடியாத அந்த மாவீரர் திலகம் பிரபாகரனின் புலிப்படையினரை
நீங்கள் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், போரில் பின்னடைவை ஏற்ப டுத்தினீர்கள். புலிகளைத் தாக்குவதாகச் சொல்லிக் கொண்டு, எங்கள் குழந்தை களை, ஆயுதம் ஏந்தாத வயது முதிர்ந்தவர் களைக் கொன்று குவித்தீர்கள். துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்தீர்கள்.

அலைகடலுக்கு அப்பால் இருக்கின்ற,தொப்புள் கொடி உறவுள்ள தமிழகம் எங் களைக் காப்பாற்றாதா? என்று துடித்து இருப்பார்களே? ஏங்கி இருப்பார்களே? எப்படி மன்னிக்க முடியும் உங்களை?

இராஜபக்சே, பிரதமரிடம் சொல்லி இருக் கின்றான். புத்தரின் ஈம எலும்புகளை அனுப்பியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் இங்கே வந்து இருக்கின்றேன். எங்கள் நாடே கடமைப்பட்டு இருக்கின்றது என்று பேசி இருக்கின்றான். டாக் டர் மன்மோகன் சிங் அவர்களே, வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக் காது.

அடுத்து, அவன் சாஞ்சியில் சொல்லி இருக்கின்றான். “நான் எங்கள் நாட்டின் சார்பில் நன்றி தெரிவிப் பதற்காகத்தான் வந்தேன்” என்று. நான் நாகபுரியில் படித்தேன். ஆனால்,இதை, தமிழகத்தில் எந்தச் செய்தி ஏடும் வெளியிடவில் லையே? 

எதற்காக அவன் நன்றி சொல்லுகிறான்? எங்கள் மக்களைக் கொல்ல இந்தியா உதவியதற்காகவா? வீரம் விளைந்த நிலம் தமிழகம். வேலும், வாளும் தாங்கி வடதிசைக்குப் படை எடுத்துச் சென்றான் சேரன் செங்குட்டுவன். அழும்பில் வேளும், வில்லவன்கோதையும் உடன் சென்றார்கள். நாங்கள் ஆயுதங்கள்
ஏந்திச் செல்லவில்லை. ஆனால், எத்தனை ஆயுதங்கள் எங்களை வந்து மறித் தாலும், நெஞ்சைத் தூக்கிக் காட்டுவோம் என்ற உணர்வோடு நாங்கள் சென்றோம்.

எங்களைத் தடுத்தீர்கள். உள்ளே நுழையக்கூடாது என்றீர்கள். ஆனால், போபா லுக்கு உள்ளே டாக்டர் மாசிலாமணி, இமயம் ஜெபராஜ், எங்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்ட வர்கள், போபாலுக்கு உள்ளே
நுழைந்து விட்டார்கள். அரசியல் ஆய்வு மையச் செயலாளர் செந்திலதிபன் ஒரு பட்டாளத்தோடு, சாஞ்சிக்கு ஐந்து கல் தொலைவு வரையிலும் சென்று விட்டார்.

கோவை மாவட்டச் செயலாளர் தம்பி ஈஸ்வரன் விதூசாவுக்கே சென்று  விட் டார், தோழர்களுடன். சாஞ்சியில் நின்று பயணிக்கும் எட்டு ரயில்களை, சாஞ்சி யில் நிறுத்தாமல் ரத்து செய்தது, எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி அல்லவா?

எங்களுக்குக் கிடைத்த வெற்றி. அல்ல, தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி; தமிழ்ச் சமுதாயத்துக்குக் கிடைத்த வெற்றி.Our mission is a spectacular success.

எந்தச் செய்தியை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தோமோ, அதை வட இந்திய மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றோம்.

எங்களைக் கைது செய்து, சாத்புரா மலைச்சிகரங்கள் வழியாக, சான்சர் நகரத் துக்குக் கொண்டு போனார்கள். வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று வர வேற்றார்கள். வியந்து போனேன்.நாங்கள் அங்கே வருகின்ற செய்தி, முன்பே பரவி விட்டது. பின்பு மாலையில் விடுதலையாகி, நாக்பூர் திரும்பி வந்த போதும், வரவேற்றார்கள். அதுமட்டும் அல்ல, நாக்பூரில் இருந்து ஆந்திர மாநி லத்துக்கு உள்ளே நுழைகின்ற வரையிலும், வழியில் உள்ள ஒவ்வொரு ஊரி லும்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மட்டும் அல்ல, இளைஞர் களும் சேர்ந்து, முரசு கொட்டி வரவேற்றார்கள். பல்லார்பூரில், அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கும், வீர சிவாஜி சிலைக்கும் மலர் தூவ அழைத்துக் கொண்டு போனார்கள்.எங்களுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.எங்களது குறிக் கோள் வென்றது.

எரிக் சோல்ஹைம் சொன்னார்; ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத் தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் சொன்னார்கள். இந்தி யாவில் 70 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றீர்கள். ஏழு கோடிப் பேர் இருக்கின் றீர்கள். உங்கள் உறவுகளும், இரத்த பந்தங்களும், ஈழத்தில் கொல்லப்பட்ட தற்கு, இந்தியா தலையிட்டுத் தடுக்க வேண்டும்; சிங்கள அரசுக்கு எதிர் நிலை எடுக்க வேண்டும். இதைக் கடந்து மேற்கு நாடுகள் வருவதற்குத் தயக்கம் ஏற் படுகின்றது என்று அவர்கள் சொன்னார்கள். அதைக் கடந்து, இன்றைக்கு உலகம் கவனிக்கின்றது.

இராஜபக்சேயை லண்டனில் அடித்து விரட்டினார்கள். பிரித்தானிய அரசு, நாம் தானே தமிழர்களை சிங்களவனின் நுகத்தடியில் பூட்டினோம்? என்ற குற்ற உணர்வோடு அதை ஆதரிக்கின்றது. உலகத்தின் கண்கள் திறந்து இருக்கின் றன. 

வடமாநிலத்தவரிடம் நான் இதைத்தான் கேட்டேன். நீங்கள் எங்கள் சக குடிமக் களா? நாங்கள் இந்தியாவின் குடிமக்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்கள் உறவுகள் கொல்லப் பட்டதற்கு நீங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். இல்லை யேல், இப்படி நிலைமை நீடித்தால், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியின் போக்கு நீடித்தால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்:

இந்திய சுதந்திரத்துக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றபோது,இன்றைக் கு இருக்கின்ற நிலப்பரப்பு ஒரே நாடாக இருக்காது; வடகிழக்கு மாநிலங்கள் உங்களோடு இருக்காது;காஷ்மீர் உங்களோடு இருக்காது;பஞ்சாப் உங்களோடு இருக்காது; தமிழகம் இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது. ஆகவே,
நீங்கள் எங்கள் கண்ணீரில் பங்கு எடுத்துக் கொள்ளுங்கள். share my tears. Share our agony... அப்போதுதான் நினைத்தேன், இதை மக்களிடம் உரிய முறையில் எடுத் துச் செல்ல வேண்டும். இரண்டு பிரகடனம் செய்து இருக்கிறேன்.

இது அண்ணாவின் சதுக்கம். எங்கள் நெஞ்சில் குடி இருக்கின்ற அண்ணனின் இடம். அண்ணா அவர்களே, நான் உங்களை என் நெஞ்சில் ஏந்திச் சென்றேன். எங்கள் நோக்கம் நிறைவேற வலுவைத் தாருங்கள் என்று உங்களிடம் கேட்டு விட்டுச் சென்றேன். இப்போது, ஆயிரம் மடங்கு பலத்தோடு, இங்கே உங்க ளிடம் திரும்பி வந்து இருக்கின்றோம்.

நான், பட்சிசோலாவில் இருந்து சாஞ்சியை நோக்கிப் புறப்படுவதற்கு முன்பு, ராஜபக்சே உருவப்படத்தைத் தீ இடுவதற்கு முன்பு பிரகடனம் செய்தேன்.

I would catuion the Prime Minister of India, If you dare to invite the killer of Tamils, if you dare to invite the butcher of tamils, who committed the massacre of thousands of thousands of tamils, our sisters, mothers and chldren, We would hold a siege in front of the residende of the Prime Minister of India in Delhi.
உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ, கொலைகாரன்  இராஜபக்சே வை மூன்று முறை அழைத்து வந்து விட்டீர்கள். ஐ.நா. மனித உரிமை கவுன்சி லில் உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற, நீங்கள் போட்டுக் கொடுத்த திட்டத் தைத் தானே அவன் நடத்தினான்; ஆதலால், நீங்கள் கூட்டுக் குற்றவாளிகள்;
அவனை நீங்கள் திரும்பவும் இந்தியாவுக்கு அழைத்து வந்தால், பிரதமர் அவர் களே, உங்கள் வீட்டை நாங்கள் முற்றுகை இடுவோம்.

இன்றைக்கு நாங்கள் எதிர்பார்த்தோமோ, இத்தனை ஆயிரம் பேர் இந்தச் சதுக் கத்துக்குத் திரண்டு வருவார்கள் என்று. அதுபோல, அவரவர்கள் திரண்டு வரு வார்கள். உணர்ச்சி பெற்றவர்கள் வருவார்கள். பத்தாயிரமா? இருபதாயிரமா?
இலட்சம் பேர் கூட வரலாம். நானே தலைமை தாங்கி வருவேன்.

அங்கே எங்களைக் கைது செய்தார்கள்.இடமோ மத்தியப் பிரதேசம்; சம்பல்
பள்ளத்தாக்கு; ஆர் எஸ் எஸ் கோட்டை. ஆனால், என் கண்மணிகள் கலங்க வில்லையே? 

இங்கே வந்து இருக்கின்ற புலவர் செவந்தியப்பன், பூமிநாதன், ஹேமா பாண்டு ரங்கன், வயது முதிர்ந்த புதுவை முத்து, உடல் நலம் கெட்ட நிலையிலும் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், ஆர்.டி.மாரியப்பன், ஆவடி அந்திரிதாஸ், ஆ.வந்தியத் தேவன், வழக்கறிஞர் அருணாசலம், தேனி சந்திரன், திண்டுக்கல் செல்வராக வன், பூவை கந்தன் இவர்கள் எல்லாம், இதையெல்லாம் அறிந்ததற்குப் பிறகு தான், இங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள்.

டாக்டர் மாசிலாமணி அவர்களும்,இமயம் ஜெபராஜ&ம் தோழர்களும், காவல் துறை முற்றுகையை உடைத்துக் கொண்டு நடு வீதிக்குச் சென்று ராஜபக்சே வின் உருவ பொம்மையை போபால் வீதியில் போட்டுக் கொளுத்தி இருக்கின் றார்கள். இது நடக்கின்ற காரியமா? 

வாதாபிக்குச் சென்றான் மாமல்லன் பெரும்படையோடு. என் தோழர்கள் மத்தி யப் பிரதேசத்துக்கு, விந்திய சாத்புரா மலைகளைக் கடந்து,கங்கைச்சமவெளிக் குச் சென்றார்கள். அங்கே பாரதிய ஜனதா அரசு ஆள்கிறது என்றபோதிலும், தீ இட்டுக் கொளுத்தக் கூடிய துணிவு இருக்கிறது என்றால், இமயத்தின் முடியில் கொடி பதித்தவனின் இரத்தம், எங்கள் தோழர்களின் நாடி நரம்புகளில் ஓடு கிறது.  (பலத்த கைதட்டல்).

நாங்கள் வன்முறையில் ஈடுபட வில்லை; ஆனால், எதற்கும் அஞ்சவில்லை. We are prepared to spill our blood. இனியும் அவனை நீங்கள் அழைத்து வந்தால், எங் கள் இரத்தத்தைச் சிந்தத் தயாராக இருக்கின்றோம். இது வசனம் அல்ல.இருத யத்தில் இருந்து வருகின்ற வார்த்தை. நிறுத்திக் கொள்ளுங்கள். இதுவே கடை சி முறையாக இருக்கட்டும். கள்ளத்தனமாக அவனுக்கு நீங்கள் செய்கின்ற
உதவிகளை எல்லாம், நாங்கள் ஊர் ஊராகச் சென்று அம்பலப்படுத்துவோம்.

அங்கே போராட்டக் களத்திலே கேட்டேன்: 570 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றானே, அவர்கள் இந்தியக் குடிமக்களா? இல்லையா? அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, கூட்டுக் குற்றவாளியாக இருக்கின்றது இந்தியக் கடற் படை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும். 

இந்தப் பிரகடனத்தைச் செய்தேன். அடுத்துச் சொன்னேன்.

Genocide of Eelam Tamils; Hearts Bleed;; ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தட்டை நான் ஏற்கனவே வெளியிட்டு இருக்கின்றேன். இனி அதை, அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, ஒவ்வொரு மாநிலத் தலை நகரிலும், மனித உரிமையாளர்களைத் திரட்டி, அங்கே நாங்கள் வெளியிடு வோம்.

முதலாவது கூட்டம் கொல்கத்தாவில் நடக்கும். அடுத்த கூட்டம், பஞ்சாப் மாநி லத்தில் சண்டிகரில் நடக்கும். ஸ்ரீ நகர், இலட்சுமணபுரி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் என அனைத்து இடங்களிலும் வெளியிடுவோம். இது எங்கள் கடைசிப் பரீட்சை.

எங்கள் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்டதை இந்திய மக்கள் எல்லோ ரும் கவலையோடு கவனிக்கின்றார்கள் என்ற உணர்வு,இந்தப் பயணத்தில் ஏற் பட்டது. அந்தப் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

இந்தப் போராட்டக் களத்துக்கு,எண்ணற்ற மாவட்டச்செயலாளர்கள்,என் சகோ தரிகள், கழகத்தின் கண்மணிகள் திரண்டு வந்தது மட்டும் அல்ல; தங்களை வருத்திக் கொண்டார்கள். 44 மணி நேரம், நட்டநடுச் சாலையில் அமர்ந்து நாங் கள் போராடி இருக்கின்றோம். 37 மணி நேரம் தொடர்ந்து பயணித்து அங்கே சென் றோம்; திரும்பவும் 34 மணி நேரம் பயணித்து இங்கே வந்தோம்.

நேற்று காலை 10 மணிக்குப் பிறகு,இன்று காலை 10 மணி வரை, எவரும் உணவு அருந்தவில்லை. ஆனால், ஒரு முணுமுணுப்புக் கிடையாது என்
தோழர்களிடம். இவர்கள், ஸ்பாட்டாவின் வீரர்களைப் போல இருக்கின்றார் கள். அதை அண்ணா சதுக்கத்தில் இருந்து சொல்லுகிறேன்.

எங்கள் கடமையைச் செய்து இருக்கின்றோம். தமிழரின் மான உணர்ச்சியை, வட திசையில் நிலைநாட்டி இருக்கின்றோம். இன்னும் ஏராளமான கடமை இருக்கின்றது.ஈழத்தின் விடியல். அதுவே எங்கள் இலக்கு. அது நடந்தே தீரும். அது காலத்தின், வரலாற்றுக் கட்டாயம். 

சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண்போகாது. சுதந்திர, இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசம், வரலாற்றுக் கட்டாயம். அது நடந்தே தீரும். அதைப் பெற்றுத்
தருவதற்கு, அனைத்து வழிகளிலும் போராடுவோம் என இங்கே சூளுரைக்கின் றோம்.

ஆனால்,நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம்;ஆயுதம் ஏந்த ஆள் திரட்ட மாட்டோம். தமிழ் ஈழ விடியலுக்கான பாதை, தானாக உருவாகும். தாயகமாம் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைக்காக்க எங்களை அர்ப்பணிப்போம்.நதி நீர் வாழ்வாதாரங்களைக் காக்க எங்களை அர்ப்பணிப்போம். மது அரக்கனை
ஒழிக்கப் பாடுபடுவோம்.

புரையோடி,புற்று நோயாகி விட்ட ஊழலை ஒழித்து,ஊழல் இல்லாத அரசிய லை வென்றெடுக்க, தன்னலம் இன்றி எங்களை அர்ப்பணிப்போம். ஜாதி, மத வேற்றுமைகளைக் களைவோம். அறிவாசான் தந்தை பெரியார் ஊட்டிய தன் மான உணர்ச்சியோடு, பேரறிஞர் அண்ணா தந்த உணர்வுகளோடு எங்களை
அர்ப்பணித்துக் கொள்வோம்.

அதுவே, அண்ணனின் நினைவு இடத்தில் நாங்கள் மேற்கொள்கின்ற சூளுரை! அண்ணனே, உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும்.

ஏழு நாள்களும், மருத்துவ ஊர்தியை உடன் அனுப்பி வைத்த டாக்டர் ரொஹை யா, எங்களோடு பயணித்து வந்த டாக்டர் சுப்புராஜ், டாக்டர் ரகுநாதன், உணவு சமைத்த தோழர்கள், ஒலிபெருக்கியை அமைத்துத் தந்த தோழர்கள், ஊடகத்
தொடர்புகளை மேற்கொண்ட தோழர்கள், இப்படி ஒவ்வொரு பணியிலும் தங் களை ஈடுபடுத்திக்கொண்ட தோழர்கள்,உற்ற நேரத்தில் வந்து உதவிய, எங்கள் தெற்குச் சீமையைச் சேர்ந்த புகாரி உணவு நிறுவனங்களின் குடும்பத்துப் பிள்ளை, கண்ணியத்துக்குரிய முராத் அவர்கள், துன்பமான வேளையில் எங் களோடு வந்து, அவர்கள் செய்து தந்த உதவிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக் கின்றோம். இந்தப் பயணத்துக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment